இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"
இரண்டு வருடங்கள் இருக்கும், இந்தக் கொடுமையைப் பாருங்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட சுட்டியில் இருந்த சினிமாப்பாடலையும்,  நடனத்தையும் பார்த்துவிட்டு உபரியாக அந்தப் பாடலின் கீழ் இடப்பட்ட பின்னூட்டங்களையும் கண்டு அதிர்ந்துபோனது நிஜம். அதன் கீழ் இருக்கும் பின்னூட்டங்களைக் கண்டு வயிறு வலிக்கச்சிரித்தாலும் அதில் இருக்கும் அறுவெறுப்பு சகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. Youtube சுட்டிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதும் ஆச்சரியமாக இருந்தது. ”யாருக்கு யாரோ” புகழ் ”சாம் ஆண்டர்சனை” தமிழ் இணைய உலகம் தவிர்க்க இயலாமால் அவ்வப்போது பயன்படுத்தி சிரித்துச் சிரித்து சலித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பது புரிந்தது.


சென்ற வார ஆனந்தவிகடனில் வந்த சாம்ஆண்டர்சன் குறித்த ஒரு நகைச்சுவை பேட்டிதான், பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை மீண்டும் சாம் ஆண்டர்சனை எடுத்துச் சென்றது. அதுவரை அவர் ஈரோடு எனத்தெரிந்தாலும் அவரைக் கண்டுபிடிப்பது இயலாததாகவே இருந்தது அல்லது பெரிதாக முயலவில்லை. விகடன் பேட்டியில் இருந்த சதர்ன் கூரியர் என்ற வார்த்தைதான் மீண்டும் அவரைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

”யாருக்கு யாரோ படம்”

செவ்வாய்க்கிழமை (02.08.11) காலையில் வந்தவுடன் இன்று எப்படியாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று Youtubeல் ஒருவழியாய் வரிசையாய்ப் பார்த்து முடித்தவுடன், ”என்ன ஆனாலும் சரி இந்தாளை இன்னிக்கு எப்படியாச்சும் புடிச்சிடனும்”னு ஒரு கிறுக்குத்தனம் வந்தது. அப்போது நண்பர் கார்த்தியும் வந்து சேர, ஒரு வழியாய் சதர்ன்கொரியர் எண் பிடித்து அங்கிருக்கும் நண்பரிடம் சாம்ஆண்டர்சன் எண் வாங்குவது என முடிவு செய்து, உள்ளுக்குள் ஓடிய ஆயிரம் கேள்விகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, அந்த நண்பருக்கு போன் அடித்தேன். அவர் போனை எடுத்ததும் ”சாம்ஆண்டர்சன் உங்ககூடத்தான் இருக்கார!?” எனக் கேட்கும் போதே என் வார்த்தைகளை என் சிரிப்பே தின்று தீர்த்தது. ஒருவழியாய் அவரின் தொடர்பு எண்ணைப்பெற்று, அவரை அழைக்கலாமா வேண்டாமா என பல தயக்கங்களுக்குப் பிறகு ஒரு அசட்டுத்துணிச்சலில் அழைப்புவிடுத்தேன். 

வாகனத்தில் செல்லும் இரைச்சலோடு சாம்ஆண்டர்சன் போனை எடுத்தார். எனக்கு ”ஹலோ” சொல்லும் முன்னே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. சாம்ஆண்டர்சனா எனக் கேட்டு, அவர் ஆமாம் சொல்லுங்க என்று சொல்லும்முன்னே மீண்டும் எனக்கு சிரிப்பு கொப்பளித்து வந்தது. ஒருவழியாய் சமாளித்து பேச முற்பட, “என்ன விசயம், நீங்க யாரு சார்?” எனக்கேட்டார்.

கார்த்தியிடம் போனைக் கொடுத்து ”நீங்க பேசி சமாளிங்க” என்றுசொல்ல, அவரும் மறுத்து எஸ்கேப் ஆகிவிட, நான் டரியலாகி நின்றேன்

சட்டென “உங்கள் ரசிகன்” என்று அப்பட்டமாக அவரை ஓட்ட மனது வரவில்லை,

”இந்தமாதிரி இந்தமாதிரி விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன், நெட்ல உங்க படம் பார்த்தேன்” என ஒருமாதிரி சொதப்பி பேசத் துவங்கினேன்.

“நெம்பர் யாரு குடுத்தாங்க, நீங்க யாரு” என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் உளறி, ஒருவழியாய் “உங்களைச் சந்திக்கமுடியுமா, ஒரு பேட்டி எடுக்கனும்” என்றேன்.

அவரின் சந்தேகம் அப்போதுதான் அதிகரித்தது “நான் கூரியர் டெலிவரில இருக்கேன், எதுக்கு சார் பேட்டி எடுக்கனும், நீங்க யாரு, எங்கேயிருக்கீங்க,” என அவர் மடக்க.

என் பெயர் முகவரி எல்லாம் சொல்ல அவரே “சார் உங்க ஆபிஸ்க்கு வந்து நானே கூரியர் குடுத்திருக்கேன்” என்று சொல்லி பேச்சைக் கொஞ்சம் எளிதாக்கினார்.

உங்களை சந்திக்க முடியுமா என மீண்டும் கேட்க அவர் கூரியர் டெலிவரியில் திண்டல் பகுதியில் இருப்பதால், ”டெலிவரி முடிச்சிட்டு, சாப்டவே 4 மணிக்குத்தா வருவேன், நால்ர மணிக்கு உங்க ஆபிஸ்க்கே வர்றனே” என்றார்.

போனை வைத்த பிறகு, பேசியது நிஜம்தானா என்னை நானே ஒருநிமிடம் கேட்டுக்கொண்டேன். நண்பர் கார்த்தியிடம் ”சாம்ஆண்டர்சன் மாலை 4 மணிக்கு வர்றதா ஒப்புக்கொண்டார்” எனச் சொல்லிவிட்டு, சந்திப்பு குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, அவரைச் சந்திக்கும் தைரியத்துக்கு மக்களிடம் பாராட்டு வாங்கி காத்திருக்க ஆரம்பித்தேன். துணைக்கு லவ்டேல் மேடி, ஜாபர், கார்த்தி, கருவாயன் சுரேஸ் என ஆள் அம்போடு எப்போது 4 மணி ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம்.

மணி நாலைத் தாண்டியது, சாம்ஆண்டர்சன் மட்டும் வந்த பாடில்லை. மீண்டும் போன் அடிக்க, “சார் இப்போதா வீட்ல சாப்ட்டேன், ஒரு பத்து நிமிசம்” எனத் தள்ளிப்போட்டார். ஆவலோடு காத்திருந்த நண்பர்கள் காதில் புகைவழிய முறைக்க, 10……15….. 20 நிமிடம் ஆனது, அவர் வரவில்லை.

மீண்டும் அழைக்க இன்னொரு 5 நிமிடம் என்றார். ”வர்றேன்னு சொல்லிட்டு ஏமாத்துறாரோ” எனச் சந்தேகம் வந்தது. அதற்குள் லவ்டேல் மேடி “தல, சாம்ஆண்டர்சன் வராட்டி, இன்னிக்கு நீங்க தான் ட்ரீட்” என மிரட்ட ஆரம்பித்தார். ட்ரீட் என்பது ஒரு டீயும், க்ரீம் பன்னும்தான் என்றாலும் சாம்ஆண்டர்சன் வராமால் போனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உலகத்தில் எப்படி முகத்தைக் காட்டுவது என்ற குழப்பம்தான் (ங்கொய்யால இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)

ஒரு வழியாய் 5.15 மணிக்கு வந்து சேர்ந்தார், இணைய உலகம் பார்த்து ரசித்துக் கொண்டாடி, திட்டி மகிழ்ந்த ”ராசாத்தி ஏ ராசாத்தி” பாடல் நாயகன்.

PIT சுரேஷ் - சாம் ஆண்டர்சன்
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள், அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்து அந்தப் படம் தியேட்டரிலும், ஜீ தொலைக்காட்சியிலும் கூட ஓடியது என்றால். நேரில் பார்த்தபோதுதான் அடையாளம் புரிந்தது நானும் அவரை சில முறை பார்த்திருக்கிறேன் என்பது.

நாங்கள் ஐந்து பேர் குழுவாக அமர்ந்திருப்பதைக் கண்டவுடன் அவரிடம் ஒரு திடுக்கிடல் தோன்றியது. ஒரு வழியாய் அறிமுகப்படலம் முடிந்து அவரின் சினிமா, இப்போது செய்துவரும் பணி, சமீபத்தைய விகடன் பேட்டி குறித்து பல விசயங்கள் உரையாடினோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் அந்தப் படத்தின் இயக்குனர் அவரின் பெரியப்பா. மத்திய அரசு சார் நிறுவத்தில் இசைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்கு ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசை, அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது கதாநாயகன் கிடைப்பதில் ஏதோ சிக்கல் வர, இவரை நடிக்கச் சொல்லியிருக்கார். தயாரிப்பு அவர்கள் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு. 

சாம் ஆண்டர்சன், லவ்டேல் மேடி, ஜாபர்

நடிப்பு என்பது துளியும் வராத அவரை வைத்து ஒரு வழியாய் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் காட்சியில் கதாநாயகியின் கையை பிடிக்கும் போது, நம்ம ஆள் பயத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அது போன்ற பல சுவாரசிய சம்பவங்கள்

படத்தை வலிந்து சில திரையரங்குகளில் வெளியிட்டு ஓட்ட முயற்சி செய்து அதுவும் வெற்றியடையவில்லை. ஜீ டிவி அதை வாங்கியது ஒரு சிறு ஆறுதல். இரண்டு கதாநாயகி வேண்டும் என தீர்மானித்து வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய, அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போதே ஆயிரத்தெட்டு பந்தா செய்ய அவரை மாற்றி அவசர அவசரமாக வேறு பெண்ணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்

நண்பர் ஜாபர் கேட்ட சில கேள்விகளில் குறிப்பாக ”படத்தின் தவறுகள் என்ன”வென்று கேட்டபோது, வெள்ளந்தியாக அவர் சொன்னது ”எல்லாமே தவறுதான் சார், அதிலும் நடிக்கவே தெரியாத நான் நடித்ததுதான் பெரிய தவறு” என்றார்.

படம் எடுத்த செலவுகள் குறித்துப்பேசும் போது, அப்போது செலவிட்ட தொகைக்கு ஒரு ரூட் பஸ் வாங்கியிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. படத்தை சென்சாரில் மட்டுமே பாராட்டியிருக்கிறார்கள், பார்த்தவர்கள் பலரும் எப்படியாவது தொடர்புகொண்டு கிண்டலடித்திருக்கிறார்கள் அல்லது திட்டியிருக்கிறார்கள். அனைவருக்கும் அவர் சொன்னது, சொல்ல விரும்புவது “ஒன்னுமே தெரியாம ஒரு முயற்சி எடுத்தேன், அது சொதப்பிடுச்சு, எல்லோருமே எடுத்தவுடனே 100 மார்க் வாங்கிடமுடியுமா, அந்தப் படத்திற்குப் பிறகுதான் பலவிசயங்கள் கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திட்றவங்க திட்டிட்டுப்போறாங்க சார்,” என்பதுதான்.

அடுத்து விகடன் பேட்டி குறித்து கேள்விகள் திரும்ப, விகடனும் எங்கெங்கோ தேடி ஜீ டிவி மூலம் தொடர்பு கிடைத்து தன்னிடம் பேசியதாகவும். விகடனில் வெளிவந்த பேட்டியில் பெரும்பாலானவை அவர்களாகவே நகைச்சுவைக்காக எழுதிக்கொண்டதாகவும் அப்பாவியாகச் சொன்னார். ஆனால், விகடன் பேட்டி வெளிவந்த பிறகு அவர் கூரியர் கொடுக்கச் செல்லுமிடத்தில் புதிது புதிதாக மக்கள் அடையாளம் கண்டு பேசுவதாகக் கூறினார்.

இணையத்தில் YouTubeல் அவரின் படக் காட்சிகளை பல லட்சம் முறை பார்த்திருப்பது, கேவலாமாகத் திட்டி கருத்துகள் வந்திருப்பது, சாம்ஆண்டர்சன் ரசிகர் குழு என்ற பெயரில் ஆர்குட்டில் 1800 பேர் & ஃபேஸ்புக்கில் 400 பேர் இருப்பது, அவருக்கென விக்கிப்பீடியாவில் ஒரு பக்கத்தில் அவரைப்பற்றிய குறிப்பு என்று பொய்யான தகவல்கள் இருப்பது, அவருடைய ”யாருக்கு யாரோ” ராசாத்தி ஏ ராசாத்தி பாடல் ”ராமசாமி” குறும்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது…. என்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்துக் கேட்கும் போது “அப்படியா சார், இப்படியெல்லாம் இருக்கா, விக்கிப்பீடியானா என்ன சார்” என அப்பாவியாக் கேட்ட போது கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

இணையம் குறித்து மருந்துக்கும் தெரியாத மனிதனையா, இந்த இணைய உலகம் இவ்வளவு குத்திக் குதறுகிறது (அ) கொண்டாடுகிறது?. ஒரு வகையில் அவரைக் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளை அந்த மனிதன் பார்க்கவில்லையென்பதை நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கியதாகச் சொன்னார், ஆனால் அதன் பயனர்பெயர் கூட அவருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இன்னொரு படம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் எப்போது எப்படி என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யமுடியவில்லை என்றும் கூறினார்.

லவ்டேல் மேடி, நான், கார்த்தி, சாம் ஆண்டர்சன்
ஒரு சினிமாவில் நடித்திருக்கிறோம் என்ற பந்தா சிறிதும் இல்லாத வெகுளித்தனம் மட்டுமே நிறைந்த அவரைப் பார்க்கும் போது, சந்திக்கும் முன் வரை இருந்த கிண்டலும், குறும்பும், குறுகுறுப்பும் அன்பாக உருவெடுத்தது. சினிமாவில் நடித்துவிட்டோம் இனி எப்படியாவது சினிமாவிலேயேதான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் தினம் தினம் முகவரிகள் தேடித்தேடி கூரியர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முடிந்தவரை நல்லபடியாக செய்யவேண்டும் என்ன எண்ணமும் ஆவலும் இருக்கிறது!
 
நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அவரைச் சந்தித்து இரண்டு நாட்கள் கழிந்தபின்பு இன்று YouTubeல் அந்தப் பாடலை பார்க்கும்போது சிரிப்பு பொங்கிவரத்தான் செய்தது ஆனால், அதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்க மனம் விரும்பவில்லை!
-0-

80 comments:

செல்வமுரளி said...

உங்கள் பதிவே அவருக்கு ஊக்கமாய் அமையும்.

காலப் பறவை said...

நெகிழ்ச்சியை இருக்கிறது கதிர். நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள்

பேரரசன் said...

அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.


இது தான்ணே நச்ச் .. :))

வாழ்த்துக்கள் சாம்

Vel Kannan said...

வருத்தமாக இருக்கிறது. அவர் பேச்சிலிருந்து அவரின் தவறை அவர் உணர்ந்து விட்டதாக தெரிகிறது.

வானம்பாடிகள் said...

ஆடி போய் ஆவணி வந்தா புள்ள டாப்பா வருமுங்கறீங்க. சரிண்ணே:))

பலே பிரபு said...

இவரை பார்த்து சிரித்து விட்டோமே என்று தோன்றுகிறது. நல்ல மனிதர். நன்றி சார், ஒரு அருமையான பதிவுக்கு.

இனி இவரது வீடியோ பார்த்து வரும் சிரிப்பு பாடலுக்கானதாய் மட்டுமே.

Alter Ego said...

Superungo .... have to see "Yarukku yaro?" in uTube ;-)

ashokpriyan said...

நல்ல அருமையான பதிவு..... தொடரட்டும் வாழ்த்துக்கள் ...

சுபத்ரா said...

மனதை நெகிழச் செய்கிறது!

r.v.saravanan said...

ஒரு சினிமாவில் நடித்திருக்கிறோம் என்ற பந்தா சிறிதும் இல்லாத வெகுளித்தனம் மட்டுமே நிறைந்த அவரைப் பார்க்கும் போது, சந்திக்கும் முன் வரை இருந்த கிண்டலும், குறும்பும், குறுகுறுப்பும் அன்பாக உருவெடுத்தது.

ஆம் கதிர்

பந்தா எல்லாம் இல்லாமல் இவ்வளவு வெகுளியாய் அவர் இருப்பது இந்த பதிவு படிக்கும் போது தெரிகிறது

வாழ்த்துக்கள் சாம்

Jeyaseelan said...

படிக்கும் போது சாம் அன்டேர்சனை விட உங்கள் மேல் தான் அதிக மதிப்பு வருகின்றது... வாழ்த்துக்கள்.. உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படத்தை உங்கள் பதிவின் மூலம் கொஞ்சம் நேரம் பார்த்தேன். முடியல்ல... :)

கிறித்துவ மத போதகப் படம் மாதிரி இருந்துச்சு :)

பழமைபேசி said...

பாராட்டுகள்!

பேதையாக இருக்கும் வரையிலும் சுகம்... சிலவற்றை அறியாது இருப்பது வரம். அறிந்து விட்டால் வரும் துயரம். being innocent is a gift!

swejeni said...

When T Rajendar made his debute, he also received this type of reception.. who knows..sam will be another TR

மழை said...

ரசிகன் மாற வேண்டும்...படத்தை திரையில் கூட பார்த்திருக்க மாட்டான்.யாரோ ஒருவர் எடுத்த படத்தை கிண்டல் மட்டும் செய்வான்.
தமிழன் பேசலன்னா செத்துடுவான் அதுக்கு மட்டும்தான் லாயக்கு.

சத்ரியன் said...

//நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.//

கதிர்,

70 வரிகள்ள ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டிட்டு , “பஞ்ச்” வேற!

சேட்டைக்காரன் said...

// இரண்டு வருடங்கள் இருக்கும், இந்தக் கொடுமையைப் பாருங்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட சுட்டியில்//

பரிந்துரைத்தது யாரு, தெடாவூருக்காரர் தானே? :-))

//”யாருக்கு யாரோ” புகழ் ”சாம் ஆண்டர்சனை” தமிழ் இணைய உலகம் தவிர்க்க இயலாமால் அவ்வப்போது பயன்படுத்தி சிரித்துச் சிரித்து சலித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பது புரிந்தது.//

ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா கதிர்? ஒரு விதத்துலே சாம் ஆண்டர்சன்தான் எனக்கு(ம்) இன்ஸ்பிரேஷன்! :-)

//முதல் காட்சியில் கதாநாயகியின் கையை பிடிக்கும் போது, நம்ம ஆள் பயத்தில் மயங்கி விழுந்திருக்கிறார்//

ஹிஹிஹி!

//அதே சமயம் இன்னொரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முடிந்தவரை நல்லபடியாக செய்யவேண்டும் என்ன எண்ணமும் ஆவலும் இருக்கிறது!//

வருவார்! அவரை விட மோசமான நடிகர்கள் எல்லாரும் "அடுத்த முதல்வர்’ என்று போஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

//அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.//

நீங்கள் சொல்வது விரும்பத்தக்கது கதிர்! ஆனால், வகைவகையாய் ரசனைகளைக் கூறுபோட்டு இது ’ஏ-கிளாஸ், பி-கிளாஸ்,’ என்று தரம்பிரிப்பவர்களும், ஒரு இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு மொத்துகிற கூட்ட மனப்பான்மை இருக்கிற வரையிலும் சாம் ஆண்டர்சன் போன்றவர்கள் கேலிக்கு ஆளாகிக்கொண்டுதானிருப்பார்கள். பாவம்!

நல்ல பகிர்வு கதிர்! போட்டோவைப் பார்த்ததும் உங்களோட டீ குடிச்சது ஞாபகத்துக்கு வந்திருச்சு! :-)

mohan vista said...

even i too saw the film today morning & mocked him in my friends circle but i ashamed for the same. i am very sorry sam. dear sam when god is with you, nobody against you.

muththaraiyar king said...

கதிர் சார், உண்மையிலேயே சினிமா ஆசைகளோடு திரியும் என்னைபோன்றவர்களுடன் ஒப்பிடும்போது ஆண்டர்சன் பெஸ்ட். விஜய் தனுஷ் போன்றவர்களின் நடிப்போடு ஒப்பிடும்போது ஆண்டர்சன் உண்மையாக இயல்பாக நடித்திருந்தார். அதனால்தான் அவருடைய மொபைல் நம்பர் கேட்டேன். நீங்கள் தரவில்லை. நன்றி...

jalli said...

'nallapthivu nka kathir,yaaro orunadikarukku varrisa iruntha kaluthai kooda hero veasham kattalaam" athaan innikku koliwood nilamai.nammaerode thambikkum oru nearam kandippavarum.vaalththukkal.

jalli....

cuddalore bala said...

nall manasu kathi sir vallthukkal-JC.RM.BALA, CUDDALORE

Rathnavel said...

நல்ல நேர்காணல்.
நன்றி ஐயா.

குப்பத்து ராசா said...

இவரை பார்த்து சிரித்து விட்டோமே என்று மனம் வருத்தப்படுகிறது.

Chitra said...

He is so innocent. wow!

முத்து குமரன் said...

மன்னித்து விடுங்கள் சாம்.

sajjeev said...

400 fans? come on its over 5000!!!
https://www.facebook.com/pages/Sir-Sam-Anderson/15594243906?ref=ts

ஜாக்கி சேகர் said...

கதிர் எதுவுமே செய்ய துப்பில்லாமல் குற்றம் சொல்லும் மனிதர்களை விட சாம் சாதித்த மனிதர்தான்.. எதுவுமே செய்யயாமல் இருப்பதை விட எதையாவது செய் என்ற வரி ஞாபகத்துக்கு வருகின்றது..

நல்ல சந்திப்பு... நல்ல பதிவு கதிர்..
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

ILA(@)இளா said...

நம்புன்னா நம்புங்க கதிர். இவரை வெச்சி கண்டிப்பா ஒரு குறும்படம் எடுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஊருக்கு வரும் போது படம் எடுக்கலாம்னு இருக்கேன். முடியுமான்னு கேட்டு சொல்லுங்க. Full Script ready. கண்டிப்பா இது நக்கல் அடிக்கிற மேட்டர் இல்லே. குறும்படத்தோட தலைப்பே ”சாமி நாந்தான் ஆண்டர்சன்”

சேலம் தேவா said...

உங்க பதிவு மூலமா இந்த பச்சப்பயபுள்ளைய கிண்டல் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட வச்சிட்டீங்கண்ணே ..!!

Ratzzz said...

sigh! feeling bad for him... but thanks for all those laughs, Sam! thanks a lot indeed.

அகல்விளக்கு said...

அனுபவம் தானே வாழ்க்கை....

:-)

MULTI said...

like.....super sam andersan......

Dhanabal said...

உணர்வுபூர்வமான பதிவு வாழ்த்துக்கள்

மதி said...

மிக யதார்த்தமான பதிவு ! வெறும் வாயை மென்று லைக் வாங்கி லயித்துப் போய்க் கிடக்கும் ஒரு சாரார் இணையத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இணையத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு மேற்பார்வை இருந்தால் நன்றாக இருக்குமோ ?

Nag Ravi said...

He is better than J K Rithesh and RK

Prabhu Rajadurai said...

i am moved by this blogpost

தியாகு said...

அந்த சந்தித்தப்பிறகு அவர் இணையத்திலுள்ள பின்னூட்டங்களை படித்துவிடப்போகிறாரோ என்று மனம் பதறுகிறது

அருண்மொழித்தேவன் said...

சாம் பற்றி இதுவரை நான் நினைத்து எல்லாம் நொறுங்கிவிட்டது ...

SierrA ManiaC said...

Its been a long time since I read a blog. I always felt blogging is losing sheen these days but your blog makes me rethink again.

Keep up the good work....

cheena (சீனா) said...

அட - விடாப்பிடியாத் தேடிப் பிடிச்சி - பேடி கண்டு - பதிவும் போட்டாச்சு - பலே பலே ! நல்வாழ்த்துகள் சாம் ஆண்டர்சன்னுக்கு

bandhu said...

விகடனுடன் சேர்ந்து நீங்களும் தவறு செய்திருக்கிறீர்கள் கதிர், நோக்கம் சரியானதாக இருந்தாலும்! சாமிற்கு அனானிமசாக இருப்பதே நல்லது. உங்களைப்போல் ஓரிருவர் அவருக்கு ஊக்கமளித்தாலும் பெரும்பாலோர் தேடிப்போய் புண்படுத்துவார்கள்! ஏனென்றால், சாம் ஒரு ஈசி டார்கெட்!

ரா. ராஜ்குமார் said...

"நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்."

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இப்படி ஒரு நல்ல மனிதரை கிண்டல் செய்து விட்டோமே!.. ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு பக்கங்கள் இரண்டு வாழ்க்கைகள்... சாம் andersonnin மறுபக்கம் அருமையான பக்கம்... அருமையான வாழ்க்கை...

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லதுண்ணா, ஆனா அவரைத் தேடி இனி ஆட்கள் சென்றுகொண்டிருப்பதை விகடனாலும் தடுக்க முடியாது.

உங்க கட்டுரைக்கும் விகடனுக்கும் எவ்வளவு வித்தியாசம்! உங்கள் கட்டுரையைப்படித்து அவரை சந்திப்பவர்களை விடுங்கள், விகடனைப்படித்து அவரை சந்திப்பவர்களை, அவர்எப்படி ஹேண்டில் செய்கிறார், என்று கேட்டிங்களாண்ணா?

DRபாலா said...

நெஞ்சை தொட்ட பதிவு

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு.

க.பாலாசி said...

அந்த விகடன் பேட்டி படிச்சப்பவே நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு மாதிரி இருந்தது.. அதான் அப்பவே கேட்டேன்.. இது சீரியஸ் பேட்டியான்னு.. அடுத்தவன் உணர்வுகளோடு, அவன் புற செயல்களை கிண்டல், கேலி செய்து விளையாடுவது அதுவும் விகடனில் செய்தது உறுத்தலாகவே இருந்தது. எல்லோரும் பார்க்கிறோம் சிரிக்கிறோம் அதோடு கடந்துவிடுவது நல்லது.. யூட்யூபில் இருக்கும் கமெண்ட்டுகள் சகிக்க முடியவில்லை.. நல்ல பகிர்வு..

Anonymous said...

அருமையான பதிவு..

தமிழ்நதி said...

இணையம் அறிவுக் களஞ்சியமாகவும் அபத்தக் களஞ்சியமாகவும் தொழிற்படுகிறது. நாம்தான் சரியாகத் தெரிவுசெய்யவேண்டும். சாம் ஆண்டர்சனைப் பற்றி நான் இதுவரை அறியவில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி.

தமிழ்நதி said...

படத்தைப் பார்த்தேன். எவ்வளவு அப்பாவியாகத் “தோன்றி“யிருக்கிறார்.:)))

'பரிவை' சே.குமார் said...

நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

உண்மை அண்ணா... சந்திப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Manoj D said...

OMG u met Sam anderson :o :o you are so cool now... Hey thanks a lot for the blog.. after a very long time i came across a blog abt thalaivar,and its really nice to know abt him and the way u have honestly written is simply superb. we all should thank Sam anderson for entertaining us in YY.. After reading abt his innocence i felt a bit bad for mocking him but im very sure i will laugh again wen i see YY.. As u said in the last few lines i too feel bad abt the unwanted comments in youtube..

vel said...

நக்கலடிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ நாம் சந்திக்க வேண்டியது அவரது பெரியப்பாவைத் தானே தவிர சாம் அல்ல என்று ஏன் நமக்கு உறைக்க மாட்டேன் என்கிறது.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு கதிர்..

RAMG75 said...

நானும் சிரிப்பதற்கு அவரது பாடல்/படம் பார்ப்பதுண்டு. ஆனால் கேவலமான பின்னூட்டங்கள் தவறு.

சிவாஜி said...

நல்லதுங்க சார். எதார்த்தம் தான் எவ்வளவு நெருக்கத்தை கொண்டுவருகிறது.

rooto said...

//நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்//
இத வாசிச்ச பிறகு அவருடன் நட்பு பாரட்டாஆசையாக இருக்கிறது!! ஊரில எல்லாரும் வெட்டி பந்தாவில வாழேக்க இவரை பார்த்து நாம நிறைய கற்றுகொள்ளவேண்டும் (சினிமாதுறை சார்ந்து அல்ல, குணம் சார்ந்து!!)

shankar pirates said...

i felt very sorry for him after reading this.... im very sorrry sam... don bother about those fucking idiots who leaves comment on you tube and all those

Venkadesan said...

பகிர்வுக்கு நன்றி..

நானும் கூட என் நண்பர்களுடன் பார்த்து கிண்டல் அடித்து சிரித்திருக்கிறேன்.. இப்பொழுது வருத்தப்படத்தான் முடிகிறது....facebook-இல் பகிர்ந்து கொள்கிறேன் இந்த பதிவினை... என்னைப் போல் சிரித்தவர்கள் சற்று யோசிக்கவும் கூடும்...

UDHAYA said...

திட்டிய உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரின் முன்னேற்றத்துக்கும் உங்களின் பங்களிப்பை தாருங்கள்!

ஓவியன் said...

//நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.//

சாம் ஆண்டர்சனின் அடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Ananthu said...

கொஞ்சம் குற்ற உணர்சிய இருக்கு சாம் ... பரவா இல்ல... come on sam..

Anonymous said...

பதிவிற்கு நன்றி. இவருடைய உண்மையான கதைய தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன் அத இந்த பதிவு நிவர்த்தி செஞ்சது.

selvasankar said...

real he is innocent guy

Kathir Rath said...

உண்மையில் உங்கள் பதிவு மிக அருமை,"அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்". நான் இதை ஒத்துக்கறேன் சார்,எனக்கும் அவரை பார்க்கனும்னு தோனுது

journalist dhileepan said...

பவர்ஸ்டாருக்கு ஈரோட்டிலிருந்து ஒரு சவால்’’ என்கிறதலைப்பில் நீங்கள் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தால் பொருத்தமாயிருக்கும்

bochuman said...

andha aaloda oru mani neram selavazhichureengale adhuve periya achievement sir.. andha pundamairaan n adutha padam eppo nadikkaporaaanam

Chockalingam Sivakumar said...

ஒரு பதிவு எத்தனை மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை காணும்பொழுது வியப்பாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
நானும் இதுநாள்வரை Sam Anderson'ஐ கிண்டலாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் கண்டிப்பாக அவர்மனம் புண்படும் படி பேசும் குனமில்லாதவனாயினும், மனதில் ஒரு கிண்டல் இருந்திருக்கும். அதையும் துடைத்த உங்கள் பதிவுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி!

Karthik said...

If i get a chance to meet Sam, I will ask sorry and then i will wish him to get a good chance to prove himself.. all the best Mr.Sam

Naveankumar said...

தமிழில் பெயர் வைத்து தமிழில் ட்வீட் செய்தாலும் "பெயர்" said என்று தானே வருகிறது !!!

Naveankumar said...

தமிழில் பெயர் வைத்து தமிழில் ட்வீட் செய்தாலும் "பெயர்" said என்று தானே வருகிறது !!!

Phoenix dassan said...

கதிர் சார், உண்மையில் உங்கள் பதிவின் ஆரம்ப வரிகளை // வாகனத்தில் செல்லும் இரைச்சலோடு சாம்ஆண்டர்சன் போனை எடுத்தார். எனக்கு ”ஹலோ” சொல்லும் முன்னே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. சாம்ஆண்டர்சனா எனக் கேட்டு, அவர் ஆமாம் சொல்லுங்க என்று சொல்லும்முன்னே மீண்டும் எனக்கு சிரிப்பு கொப்பளித்து வந்தது.// படித்துகொண்டிருக்கும் போது எங்கே நீங்களும்

சாம் அன்டேர்சன் என்ற மனிதனை கேலி சித்திரமாக்கிவிடுவீர்களோ என்று என்னுள்ளே சிறு கலக்கம்

இருந்தது பதிவை தொடர்ந்து படித்தபோது தான் மனம் நிம்மதி அடைந்தது. ஊழல் செய்யாமல், அடுத்தவரை கெடுக்காமல், ஏதோ தனது ஆசையை நிறைவேற்றி கொண்ட அந்த மனிதனை மதித்து பேட்டி எடுத்த தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். அப்பப்பா! எவ்வளவு அவமானங்கள்

அந்த அப்பாவி மனிதனுக்கு?. அப்பாவிகளை எள்ளி நகையாடுவதில் தான் இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள்?

ஆரம்ப காலங்களில் சாம் அண்டர்சன் ஐ விட சொதப்பலாக படம் நடித்த இன்றைய நட்சத்திரங்கள் எத்தனையோ பேர் இன்று தமிழ் சினிமா வில் கொடிகட்டி பறக்கின்றனர்.

Sugi said...

oops..very touching story really..glad he realized that it was a mistake..nevertheless everyone makes mistake....


Tani
www.tanishkitchen.com
(south/north indian cousine recipes website)

bochuman said...

sir, please andha aala meendum oru padam nadikka sollunga sir, kalaignar tva nalaiya iyakkunar episodelsa oru short film act panniyirundhaan aanala adhula just oru glimpse madhiri kaatittaanunga,, please we expect a lot more from that man.. please try to convince that man to act in another movie

Kalai said...

Nice article. Sam has done very well in the following short film. Watch especially between 1:35 to 2:02. Excellent self critic.

http://www.youtube.com/watch?v=DOwK_eGeJJc

Kalai said...

Nice article. Sam has done very well in the following short film. Watch especially between 1:35 to 2:02. Excellent self critic.

http://www.youtube.com/watch?v=DOwK_eGeJJc

Kiruththikan Yogaraja said...

வணக்கம் நீங்கள் வெங்காயத்தில் சாம் அண்டர்சனின் பதிவுக்கு கொமெண்ட் இட்டதை தற்போதுதான் அவதானிக்க முடிந்தது தொழில் நுட்பக்கோளாறு காரணமாக கொமெண்டை அவதானிக்க முடியவில்லை மன்னிக்கவும்... சாம் நினைத்ததை விட வித்தியாசமானவராகத்தான் இருக்கிறார்..மிக்க நன்றிகள்..

kirthi said...

“அப்படியா சார், இப்படியெல்லாம் இருக்கா, விக்கிப்பீடியானா என்ன சார்” என அப்பாவியாக் கேட்ட போது கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

செம...நிஜமாகவே அப்பாவிதான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

nice blog and the short movie. all fingers are not same, so as the people and their views. accept the positives and observe the negative.. that could help to increase.

Gokula Krishnan said...

Excellent One Dear Kathir.