உங்களுக்கும் இப்படித்தானா!?


மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி குணாதிசயம் கொண்டவர்கள் என்பது பொய்த்துப்போகிறது. அதுவும் ஃபேஸ்புக் அரட்டைப்பெட்டியில் முதல் தடவை பேசும் புதிய ந(ண்)பர்கள் ஒரே மாதிரி கேள்விகள்தான் வைத்துள்ளனர்.

He : Hi
Me : hi
He : How r u
Me : fine
He : Enna pannreenga
Me : (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்ப்ப்பா – மனசுக்குள்)
Me : எதுக்கு கேக்குறீங்க?
.
.
.
அம்புட்டுத்தான்…. அத்தோடு எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

புதுசா அரட்டையில் வர்றவங்களும், வந்த வேகத்தில் எஸ்கேப் ஆகுறவங்களுக்கு சற்றும் குறையவில்லை!

அரட்டைப் பெட்டியில் பெயர் மின்னுவதைப் பார்த்தவுடனே முதல் அரட்டையில் hi சொன்ன பிறகு how r u / what u do போன்ற பல கேள்விகளை அடுக்குறாங்களே.....
இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சு என்ன பண்ணுவாங்களாயிருக்கும்.

-----x-----

சில நாட்களுக்கு முன்பு gmail அரட்டைப் பெட்டியில் வந்தார் அவர்.

“நீங்க கணக்குல பெயிலானவர்தானே” என்றார்.

ஓரளவு புரிந்தது. ஆனாலும்….. ”ஏன் கேக்குறீங்க” என்றேன்

இந்த இடுகையைப் படித்தாராம்.

”அதில் ’வகை’னு தலைப்பு பக்கத்தில் இருக்கும் பாருங்க” என்றேன்

புனைவு, மரணமொக்கை போட்டிருக்கீங்க”

நான் மௌனமாக இருந்தேன்

”சாரி….. முதல்ல நான் அதைப்படிக்கல”

அப்பவும் நான் மௌனமாகவே இருந்தேன்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (நான் இல்ல அவருதான்)

இரண்டு நாள் கழித்து மீண்டும் வரே ….

திடீரென....
“தமிழில் மட்டும் எழுதுங்க” என்றார்

”எனக்கு தமிழ்லதாங்க எழுதத் தெரியும்” என்றேன்

”நோம்பினு எழுதியிருக்கீங்க, அது தமிழா?” என்றார்

”வேற என்ன மொழி” என்றேன்

”அது கலோக்கியல் லேங்குவேஜ்” என்றார்

அந்தக் கட்டுரையை படிச்சீங்களா, நோம்பினா என்னனும் எழுதியிருக்கேன்” கேட்டேன்

”இல்ல, தலைப்பு மட்டும்தான் படிச்சேன்”

நற நற நற….. (இல்ல பல்லை கடிச்சப்போ இப்படி சத்தம் வரல, வேற மாதிரி வந்தது, எனக்கு அந்த சப்தத்தை எழுத்தில் கொண்டு வரத் தெரியவில்லை)

“எங்க ஊர் வட்டார வழக்குங்க அது, நீங்க எந்த ஊர்” என்றேன்

“ஈரோடுதான்” என்றார்

அப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே…. (இப்போ நானு)

-----x-----

அவர் தென் தமிழகத்தைச் சார்ந்த, வளைகுடாவில் இருப்பவர்….

He : வணக்கம்
Me : வணக்கம்
He : எப்படி இருக்கீங்க
Me : நல்லாருக்கேங்க
He : ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?

அப்படியே இடி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சு, ஈரோட்ல இருக்கிற மக்கள் எப்படியிருக்காங்கன்னு கேக்குற பாசத்த நினைச்சு ஒரு விநாடி திக்னு ஆயிடுச்சு…

மனச திடமாக்கிட்டு

Me : ஈரோட்ல இருக்கிற எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?

He :  ஈரோட்ல எதும் அசம்பாவிதம் நடக்கலன்னா, எல்லாரும் நல்லாருக்காங்கன்னு அர்த்தம்

பல படங்களில் அழும் காட்சியில்வரும் கமலின் அழுகை நினைவிற்கு வந்தது.

Me : சன் நியூஸ்ல ஒன்னும் சொல்லலைங்க

இந்தத் தடவை நான் ஃபேஸ்புக்கை மூடிவிட்டு ஓடத்துவங்கினேன்

-----x-----


24 comments:

சேலம் தேவா said...

Hi... How r u... Enna pannreenga...
ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?


:) இது மட்டும்தான் பாஸ் என்னுது..!! :)

vasu balaji said...

ஆஹா. இப்படியெல்லாமா டார்ச்சர் குடுக்கிறாய்ங்க. அதான் நான் பஸ்ஸோட நிப்பாட்டிக்கிர்ரது:))

நட்புடன் ஜமால் said...

ரொம்ப கம்மி உங்களுக்கு ...

நட்புடன் ஜமால் said...

கல்யாணம் ஆயிடிச்சா

சம்பளம் எவ்வளவு

ஊரு விட்டு ஊரு வந்து தனியா இருக்கியே - எப்படி !@##$&(*&^


------

இதுவும் கொஞ்சமாத்தான் போட்டிருக்கேன் ...

முனைவர் இரா.குணசீலன் said...

எங்களுக்கும் இப்படித்தான் நண்பரே..

ஓலை said...

யாரப்பா அது ! மேயர் கிட்ட ஒரு அளவா பேசணும்னு தெரியாது ? என்னமோ கலைஞர் கிட்ட பேசற மாதிரி எங்க மேயர் கிட்ட பேசறீங்க!

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க பதிவுல அடக்கிற முடியாது.

(எதயெல்லாம் எழுதி பதிவ தேத்தறாய்ங்க! எப்பூடி தான் யோசிக்கிறாய்ங்களோ?)

பழமைபேசி said...

ஈரோடுல அல்லாரும் எப்படி இருக்காங்க மாப்பு??

ப.கந்தசாமி said...

நம்ம ஊட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?

நிகழ்காலத்தில்... said...

மாப்பு நல்லா இருக்கறீங்களா:))

settaikkaran said...

இதுனாலே தான் இப்பல்லாம் நானு invisible mode-லெயே இருக்குறது. தப்பித்தவறி யாராவது பச்சைவிளக்கோட காத்திருந்தா என்னோட இங்கிலீஷ் வலைப்பதிவோட சுட்டியை ஸ்டேட்டஸ் மெஸேஜாப் போட்டுர்றது. அவ்வளவுதான், துண்டைக்காணோம், துணியைக் காணோமுன்னு அல்லாரும் அப்பீட்டாயிருவாங்க! :-)

கண்ணாமூசான் said...

உங்களது நாமக்கல் M.G.R பேட்டி விரைவில் வருமென ஆவலோடு காத்திருக்கிறேன். அவர் யாருனு கேட்டீங்கனா உங்க மீது மீடியம் குண்டாஸ் பாயுமென அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

மூர்த்தி

Kumky said...

ரொம்ப குஷ்டம்தான்...

இதனால் அறியப்படும் நீதி: இன்விசிபிள் மோடே சாலச்சிறந்தது.

'பரிவை' சே.குமார் said...

அட... விடுங்க அண்ணா...
அவங்க அப்படி கேட்டதுனாலதானே ஒரு பதிவு ரெடியாயிருக்கு...

Romeoboy said...

செம காமெடி அண்ணா.. நல்லவேளை நான் டைரக்டா மேட்டருக்கு வந்துடுறேன் :))

ஈரோடு கதிர் said...

@ சேலம் தேவா
நல்லாயிருங்க பாஸ் :))))

@ வானம்பாடிகள்
ஏன் ஃபேஸ்புக் பக்கம் வந்து பாக்குறது :)

@ நட்புடன் ஜமால்
என்ன இருந்தாலும் நீங்க சீனியருங் ஜமால்! :)

@ முனைவர்.இரா.குணசீலன்
முனைவரே உங்களுக்குமா!? :)

@ ஓலை
அதானே பாருங்க, ஒரு பிரம்பு எடுத்துட்டு வாங்க சேது சார்! :)

@ சத்ரியன்
அடுத்தவாட்டி ஊருக்கு வரும் போது கண்ணை நோண்டுறேண்டி :)

@ பழமைபேசி
மாப்பு எப்படியோ தமிழ்ல ரெண்டு செய்யுள் சொல்லி தப்பிச்சுக்றீங்க? :)

@ DrPKandaswamyPhD
வாங்கண்ணே!!!

@ Rathnavel
//நல்ல பதிவு.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
@ நிகழ்காலத்தில்...
மாப்பு நலம், நலம் அறிய அவா!!! :)

@ சேட்டைக்காரன்
செமையா சேட்டை பண்றீங்க!

@ கண்ணாமூசான்
கொஞ்சம் செலவாகுமே!!!, பரவாயில்லைங்ளா மூர்த்தி :)

@ கும்க்கி
எப்பப்பாரு செவப்பு வெளக்கு போட்டுக்கிட்டு, பேச்சப்பாரு பழமையப்பாரு! :)

@ சே.குமார்
அதுசெரி!

@ அருண்மொழித்தேவன்
ரோமியோ ஆல்வேஸ் குட்பாய்!!! :))

puthiyavan said...

unga mela ulla pasam than sir .

தாராபுரத்தான் said...

பேசுனாலே வம்பாவுள்ள இருக்குது..

துளசி கோபால் said...

ஆமாங்க. எங்களுக்கும் இப்படித்தான்:-)))))

அம்பாளடியாள் said...

இதே துன்பம்தானையா எல்லாருக்கும்....

Anonymous said...

கதிர் இப்படியெல்லாம் பதிவு போட்டு இதுக்கு ஒரு லேபில் போட்டு பதிவு எண்ணிக்கை கூட்டப்படாது சொல்லிபுட்டேன்...கேக்க மறந்துட்டேன்

hru kathir? nenga work panrengala illai bussiness? hehehe

Anonymous said...

சத்ரியன் said...
போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க பதிவுல அடக்கிற முடியாது.

(எதயெல்லாம் எழுதி பதிவ தேத்தறாய்ங்க! எப்பூடி தான் யோசிக்கிறாய்ங்களோ?)

அட சத்ரியன் கூட என்னைய மாதிரி யோசிச்சி இருக்கார்.. கரீட்டுங்க..கதிர் பதில் சொல்லுங்கோ...

ஈரோடு சுரேஷ் said...

ஏற்கனவே உங்களுக்கும் அவங்களுக்கும் வாய்க்க தகராறு..... :)