பகிர்தல் (13.07.2011)


வெற்றி பண்பலைக்கு நன்றி:

இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் வெற்றி வானொலியின் விடியல் நிகழ்ச்சியில் ”நாள் ஒரு தளம்” என்ற தலைப்பில் பல தரப்பட்ட இணையதளங்களை, வலைப்பக்கங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்! 
 

அதில் ”கசியும்மௌனம்” வலைப்பக்கத்தை 10.06.2011 அன்று அறிமுகப்படுத்திய இனிய நண்பர் பதிவர் லோஷன் அவர்களுக்கும் வெற்றி வானொலிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.


படம் காட்டலில் உதவி : வானம்பாடிகள்

அழகாய்ச் சிறப்பித்த அரிமா சங்கம்:

நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து சற்று வித்தியாசமாக ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து செய்துவருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிகிருஷ்ணகுமார், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பெருமாள்முருகன், ச.தமிழ்செல்வன், கண்மணி குணசேகரன், லஷ்மணப்பெருமாள், ஆதவன்தீட்சன்யா என படைப்பாளர்களையே முன்னிருத்தும் எங்கள் சங்கம் இந்த முறை எழுத்தாளர் பவா. செல்லத்துரை அவர்களை அழைத்திருந்தது.

நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை தவிர, வேறு யாரையும் இதுவரை மேடைக்கு அழைப்பதில்லை என்பதிலும், திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலில் எதன்பொருட்டும், சமரசம், மாற்றம் செய்துகொள்வதில்லை என்பதிலும் உறுதியாக நிற்கும் சங்கம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சு,வெங்கடேசன் அவர்களின் உரையை கேட்க திடீரென, விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியரைக்கூட முன் வரிசையில் மட்டுமே இருக்கை ஒதுக்கி அமரவைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்சியரும் அதை மிக நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு, உரை முடிந்தவுடன் சென்றுவிட்டார்.



இந்த முறை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த பவா.செல்லத்துரை தனது மனைவி கே.வி.சைலஜா-வுடன் வருகை தந்திருந்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பவா.செல்லத்துரையை மேடைக்கு அழைக்கும்போது, அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து அமர வைத்து பெருமைப்படுத்தினர். "ஏன் தம்பதிகளாக மேடைக்கு அழைத்தோம்" என்பதை தனது உரையின் போது முன்னாள் ஆளுநர் அரிமா தனபாலன் விளக்கினார். எங்கள் அரிமா சங்கம் குறித்து பெருமையும், பெருமகிழ்வும் அடைகிறேன்.

பாடாய்படுத்தும் பாதாள சாக்கடைகள்:

ஈரோடு நகரின் குடியிருப்புப் பகுதி வீதிகளை, பாதாளச் சாக்கடைக்காக தோண்ட ஆரம்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இப்போதைக்கு அது நிறைவடைவதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா வீதிகளுமே வயிற்றைக் கிழித்து கடனே என்று தையல் போட்டது போல் காட்சியளிக்கின்றன. தோண்டி மூடப்பட்டவைகளில் 99% வீதிகள் இன்னும் தார் போடப்படாமல் இருக்கின்றன. எந்த வீதியிலும் தைரியமாக திரும்ப முடிவதில்லை, பெரும்பாலான வீதிகளில் பாதிவரை சென்றுவிட்டு வேறு வழியில்லாமல் திரும்பி பின்னால் வந்து, வேறு எந்தவீதி வழியாக  தேவையான இடத்தை அடைவது என பட்டிமன்றம் நடத்தும் ஆட்களை ஆங்காங்கே வீதிகளின் பிரிவுகளில் காணலாம்! இந்தக் கொடுமை எப்போது முடியுமென்று தெரியவில்லை!


நேரலைக் கொலை:

”சண்டையில் கிழியாத சட்டை உண்டா” என்பது போல, ”போதையில் நிகழாத கொலைகள் உண்டா” என்பதை சமீபத்திய கோவைக் கொலை நிரூபித்திருக்கிறது. சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் முன்பு நடுச்சாலையில் நிமிடநேரத்தில் நான்கு பேரால், நிகழ்த்தப்பட்ட கொலைத்தாக்குதல், இறந்தவரோடு சேர்ந்து ஐந்து குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வன்மத்தை கீழே கிடப்பவனின் மேல் கல்லைத் தூக்கிப்போடுவதில் தெரிகிறது.


எதேச்சையாக சிக்னலில் இருக்கும் காவல்துறை கேமரா வழியே இந்தக் கொலைக்காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:

பதவி விலகல் அதிர்ச்சியோடு தயாநிதிக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை. எதிர்பாராத விதமாக விமான நிலையத்திலேயே சக்சேனா கைது, அதோடு குவியும் அடுக்கடுக்கான புகார்கள். விசாரணைக்கு கலாநிதி மாறன் அழைப்பு என தின்ற உப்புக்கு கொஞ்சமாய் தண்ணி குடிக்கத் துவங்கியிருக்கிறது சன் நெட்வொர்க் குழுமம்.

இந்நிலையில், வீடியோ ஒளிபரப்புக்குப் பிறகு ஊர் ஊராய் ஓடி ஒளிந்த நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சன்டிவிக்கு எதிராக புகார் கொடுக்கும் மொக்கைத் தருணமாகவும் மாறியிருக்கிறது. கதவைத்திற காற்றுவரும் என்று சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?

குறுந்தகவலில் வந்தது:

சராசரியாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 பொய் சொல்கிறோம். வருடத்திற்கு 1460. அதில் அதிகமாகச் சொல்லும் பொய் “I am fine” 


-0-

14 comments:

சேலம் தேவா said...

//கதவைத்திற காற்றுவரும் எனச்சொன்னவனுக்கு ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது புரியாதா என்ன?//

"நச்" விமர்சனம்ண்ணே..!! :)

ராமலக்ஷ்மி said...

வெற்றி வானொலி அறிமுகம்... வாழ்த்துக்கள்!

குடி இப்படியும் உயிரை எடுக்கிறது:(!
ஊர்சனம் நின்று அதையும் பார்க்கிறது!!

Ahamed irshad said...

என்ன‌ தைரிய‌ம் க‌ல்லால் அடித்து கொல்ல‌ அதுவும் ப‌ட்ட‌ப்ப‌க‌லில்.. வேடிக்கை ம‌ட்டும் பார்க்கிறாய்ங்க‌ பாருங்க‌ அது ம‌கா அநியாய‌ம்.. சுய‌ந‌ல‌த்தின் உச்ச‌ம் ந‌ம் ம‌க்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ ஊறிருச்சு... வேடிக்கை பார்த்த‌து போய் ம‌னித‌ன் ர‌சிக்கும் த‌ன்மைக்கு வ‌ந்துவிட்டான் என‌ எண்ணுகிறேன்..


:((((((((((((

CS. Mohan Kumar said...

Congrats for being introduced in Vetri Radio.

I am also considering for a while to join in Lions club. Need to get a good club like yours.

ஓலை said...

Adap paavigalaa! Ippidi kolraanunga, nippaatti vedikkai paarkiraanga. Kodumaida!!

ஓலை said...

Oru medaikku oru pechchaalar yenru sollittu, pakkaththila ambuttu sanangalam kunthiyirukkaanga. Meyare! Padaththa maaththip pottuvitteengala!

vasu balaji said...

நல்லாருக்கீங்களாண்ணே. (இன்னைக்கு இன்னும் 4 முடியலையே). ரெம்ப நாள் கழிச்சி பகிர்ந்தாலும் விருந்து:)

ஓலை said...

"ரெம்ப நாள் கழிச்சி பகிர்ந்தாலும் விருந்து:)"

கல்லால் அடிச்சி கொல்றதை இப்பிடி சொல்றீங்களே!
கோவைக்காரங்க கோவக் காரங்களா மாறி ஆட்டோ அனுப்பிரப் போறாங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

வானொலி அறினுகத்துக்கு வாழ்த்துகள் கதிர்..

பவா.. என்ன பேசினார்? பதிவேத்துங்களேன்..

நிலாமதி said...

போதை காட்டிய பாதை ...........பகிர்வுக்கு நன்றி .
பிரிவால் தவிக்கும் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

Anonymous said...

vazhthukkal kathir..elangai vaanoliku nandri nanbarin valai thalathai arimugapaduthiyadhu engalukum perumaiye..1.12 nimidamgalil miga azhagana arimugam thaguthiyana valaithalathai thaan arimuga paduthi ullanar... meendum vazhthukkal..

katrullapothey thutrikol uppa thinnavan thanniya kudikattum...

kovai sambavam onnum parithapada thonalai avan sagattum mucham moonu peru kali thinnutu ulla irukattum urupadama poravanunga enga iruntha enna..aarbattam seiyum kudumbathar ivangalai sollanum....

க.பாலாசி said...

பவா மீட்டிங் மிஸ்.. ப்ச்ச்.. சரி அடுத்தமுற சேதி சொல்லுஙக.. வானொலி நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

ரேவதி மணி said...

வெற்றி வானொலியில் அறிமுகம்...வாழ்த்துக்கள் கதிர் .வாழ்க வளமுடன். இந்த கோவை கொலை பற்றி நானும் எழுதி இருக்கிரேன்.

ஸ்ரீராம். said...

வெற்றி வானொலி அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
கோவைக் கொலையை விட வேடிக்கை பார்த்த ஜனங்கள் தான் அதிக அதிர்ச்சி கொடுத்தார்கள்.