கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி


(இந்தக் கடிகாரத்தை வடிவமைத்த கணக்குப் புலிக்கு எழுதிய கடுதாசி)




அனுப்புதல்,

பெயர்  : கணக்குல 35 எடுக்க மூச்சுத் திணறியவன்
வகுப்பு : கணக்குப் பாடம் வெச்சு கடுப்பேத்தும் வகுப்பு
பள்ளி  : சமச்சீர் இல்லாத பள்ளி + டூசன் + டுட்டோரியல் காலேஜ்
இடம்  : உலகத்துல இருக்கிற எல்லா ஊரும்தான்


பெறுதல்,

பெயர்  : கணக்குல பெரிய வெண்ணை!
வகுப்பு : கணக்குல கண்டதெல்லாம் படிப்போர் கல்விக்கூடம்
பள்ளி  : தலைக்குள் கால்குலேட்டர் இருப்போர் பள்ளி
இடம்  : அதே உலகத்துல எதோ ஒரு ஊர்



திப்பில்லாத ங்கொய்யா, (உன்ன ஐயானு வேற நொட்டனுமோ)

பொருள்: ஒன்பதாம் நெம்பர் - கெடியாரம் - கணக்கு ரவுடித்தனம் - தொடர்பாக – 

நான் இங்கு நலம், நீ அங்கு நல்லாயிருக்கக்கூடாது!

நான் நேரடியாவே கேக்குறேன், நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? கணக்கு பாடத்துல முப்பத்தியஞ்சு மார்க் எடுக்க நான் பட்டபாடு தெரியுமாய்யா உனக்கு? பெருசா கணக்குப் போடத் தெரிஞ்சுட்டா, நீ என்ன வேணா ரவுடித்தனம் பண்ணுவியா!?

நீயென்ன என்ன மாதிரி டூசுனுக்குப் போனியா?, பள்ளிக்கூடத்துல பாஸாவாம டுட்டோரியல் காலேஜ் போனியா?, இல்ல, கணக்குல பாஸாயிட்டா கருப்புச்சாமிக்கு கோழிச்சாவல் அறுக்குறதா தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கிட்டியா?

ஒரு நாளாச்சும் பிதாகரஸ் தியரி தெரியாம, கிளாஸ்ல புள்ளைங்க முன்னாடி முட்டிபோட்டு நின்னுருக்கியா? என்னமோ தெரியாத்தனமா கடவுள் உன்னோட தலைக்குள்ளே ஒரு கால்குலேட்டர மறந்து வெச்சுட்டா, நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆய்டுவியா?   

அட..... ஒரு கடியாரம்.... அதும் செவுத்துல மாட்ற கடியாரம்…… அது என்னய்யா பாவம் பண்ணுச்சு. உன்ன வந்து கடிச்சா வெச்சுச்சு?. அது பாட்டுக்கு பேட்ரிசெல் போட்டாக்க, ”டொக் டொக்”-னு அமைதியா புள்ளப்பூச்சி மாதிரி 1,2,3ன்னு 12 வரைக்கும் சுத்திக்கிட்டு இருந்துச்சு. எப்பாயச்சும் உன்னை காச்மூச்சுன்னு அலாரம் அடிச்சு எழுப்புச்சா? இல்ல என்னிக்காச்சும் உன்னை சீக்கிரம் தூக்கத்துல இருந்து எழுப்பியுடனும்னு ராத்திரியெல்லாம் பி.டி.உஷா கணக்கா வேகவேகமா ஓடுச்சா? என்னதான் பாவம் பண்ணுச்சு அந்த கெடியாரம்…. பாவி பாவி….. வர்ற கோவத்துக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… சரி விடு கோவத்த அடக்கிக்கிறேன், மேட்டருக்கு வருவோம்!

நீ பாட்டுக்கு இப்போ பெரிய வெண்ணை மாதிரி ஒம்பதாம் நெம்பரவெச்சு என்னமோ பில்லி சூனியம் பண்ணியிருக்கியே… அந்த மூனு முள்ளும் எந்தப்பக்கம் போவும், என்ன  பண்ணும் பாவம். மூனும் மூளை குழம்பி, இரத்தம் கக்குனதுல, நடுவே கருப்பா பட்டைபட்டையா இரத்தம் ஒறைஞ்சு கெடக்குது பாரு. அடியேய்…. கடியாரமுள்ள கருப்பு இரத்தம் கக்கவெச்ச பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் சும்மா விடாதுடியோய்! நீ எல்லாம் எங்கே போய்டுவே! நானும் பாக்குறேன்.

   அட கடியார முள்ள விடு, கடியாரத்துல மணி பாக்குற எங்கள நெனைச்சுப் பார்த்தியாய்யா? கடியாரத்துல ஒம்பதாம் நெம்பர் படுறபாட்டக் கண்டு எங்க எளகின மனசு துடிக்கிறது தெரியுதா உனக்கு? கடியாரத்த இந்தப்பாடு படுத்தி எங்கள மணி பாக்கவுடமா பண்ணிட்டியே, கணக்குல பாடர்ல பாஸ்(!) பண்ணுன என்ன மாதிரி உறவுகள்(!) பாவம் சும்மா விடுமாய்யா உன்னை.

   எலேய்... உனக்குத்தான் எல்லாம் தெரியும்னு ஒம்பதாம் நெம்பர வெச்ச இந்தத் தில்லாலங்கடி வேலை பண்றியே, உனக்கு நேருக்கு நேரா (காந்திக்கு நேராவும் கூட) சவால் விடுறேன், நோட் பண்ணிக்கோ…   

  •  ஒம்பதாம் நெம்பர வெச்சு தில்லாலங்கடி வேலை பண்ணின நீ, 0 – சைபர் நெம்பர வெச்சு இதே மாதிரி பண்ணு பார்ப்போம் # நாங்கெல்லாம் எத்தன தடவை சைபர் மார்க் வாங்குனோம்ம்ம்ம்ம்…. மவனே இப்போ நீ சிக்கினியா!

  • நீ பெரிய கணக்குப் புலிதானே, உன்னால நூத்துக்கு நூறுதானே எடுக்க முடியும், திரும்பியும் வா ரெண்டு பேரும் கணக்குப் பரிச்ச எழுதலாம், நீ நிஜமாவே அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தா கரெக்டா 35 மார்க் மட்டும் எடுத்துக்காட்டுய்யா பார்க்கலாம் # அதும் சரியா 35 எடுத்தறக் கூடாது 33.5 எடுத்து, பேப்பர் திருத்துற வாத்தியார் பாவபுண்ணியம் பார்த்து ஒன்னரை மார்க் சேத்துப்போட்டு, நீ 35 எடுத்திருக்கனும்!

இந்த சவால் ரெண்ட்லயும் நீ ஜெயிச்சா இந்தக் கெடியாரத்த போனப் போகுதுன்னு நானே வெச்சுக்கிட்டு தெனம் தெனம் மணி பார்க்கும் போதெல்லாம் உன்னை திட்டுறதோட விட்டுடுறேன்!

மவனே நீ மட்டும் தோத்துப்போய்ட்டீன்னு வை ஒழுக்கமா உன்னோட தலைக்குள்ள இருக்குற கால்குலேட்டர கழட்டி போட்டுட்டு, இதுல எத்தன ஒம்பது இருக்கோ, அத்தனையும் பெருக்கி, மொத்தத்துக்கும் தோப்புக்கரணம் போடனும்…. சவாலுக்கு ரெடியா……………………!?


அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல!

நன்றியெல்லாம் கிடையாது


ஏகப்பட்ட எரிச்சலுடன்,
அப்பா அம்மா வெச்ச அதே பேர்தான்
-----------------------------
பொறுப்பி :  
* கடிகார வித்தியாசத்துக்காக மட்டுமே எழுதப்பட்ட கடுதாசி
* படஉதவி மின்மடல் வாயிலாக வானம்பாடிகள் தந்தருளியது
* ஐஸ்: அந்தக் கடியாரத்தைக் கண்டுபிடிச்ச கணக்குப் புலி பொறுத்தருள்வாராக!

-0-

15 comments:

settaikkaran said...

கதிர் அவர்களே, இப்படியெல்லாம் எழுதி என்னை மாதிரி ஆசாமிங்க பொழப்புலெ மண்ணப் போடுறதுலே என்ன சந்தோஷமுண்ணேன்...?

settaikkaran said...

ஒரு நகைப்பானைப் போட்டிருக்கணும். இல்லாட்டிப்போனா பின்னூட்ட சாஸ்திரம் படிச்சவங்க சண்டைக்கு வருவாங்க!

:-)
:-)))

vasu balaji said...

ம்ம்ம்ம்ம்முடியல=)))))))). செம...

அகல்விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்......

முடியல....

கும்மாச்சி said...

கதிர், கணக்கு வாத்தியாருங்க இந்நேரத்துக்கு அம்பேல் ஆயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

என்னதான் சொன்னாலும் 'ஏழு'க்கு கொடுக்க வேண்டிய மதிப்ப தந்திருக்கலாம்.. கொஞ்சம் கொறைச்சிட்டீங்க..

-- இப்படிக்கு எதையுமே கணக்கு பண்ணி பார்ப்போர் சங்கம்..

Anonymous said...

கதிர் கணக்குன்னு நான் படிக்ககூட விரும்பலை மீ த எஸ்கேப்...

அமர பாரதி said...

என்னாச்சு? நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு.

க.பாலாசி said...

அதுக்குத்தான் என்னாட்டமாதிரி பிஎஸ்சி மேத்ஸ் படிச்சிருக்கணும்றது.. ஆனாலும் இந்த ஸ்கொயர் ரூட்டெல்லாம் மறந்திடுச்சி. லொல்...

ILA (a) இளா said...

அட, இப்படி நகைச்சுவையான பதிவு படிச்சே ரொம்ப நாள் ஆவுதே

ஓலை said...

இப்பிடி தன்னோட வாத்திக்கே வேட்டு வைச்சா ..... மவனே! சிங்கம்லே!

அப்பாடக்கரு பதிவு. தூள்.

அன்புடன் அருணா said...

அச்சச்சோ நான் கூட கணக்குலே வீக்!:)

'பரிவை' சே.குமார் said...

அப்பாடக்'கரு' பதிவு.
தூள்...தூள்.

ராமலக்ஷ்மி said...

கணக்குப் புலிக்கு பூனை எழுதிய புலம்பல் கடுதாசி:)!

சாந்தி மாரியப்பன் said...

//அதும் சரியா 35 எடுத்தறக் கூடாது 33.5 எடுத்து, பேப்பர் திருத்துற வாத்தியார் பாவபுண்ணியம் பார்த்து ஒன்னரை மார்க் சேத்துப்போட்டு, நீ 35 எடுத்திருக்கனும்!//

சரியான சவால் :-)))))))