ஈரோட்டில் பற்றியெரிந்த ஊழலுக்கெதிரான பெருநெருப்பு


அன்னா ஹசாராவின் உண்ணா நிலை அடைந்த வெற்றியை எல்லோர் மனதிலும் விதைக்கும் வண்ணம் ஈரோடு நகரின் பல்வேறு பொதுநல, வணிக, மருத்துவ, வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சார்ந்த நண்பர்கள், பள்ளிச்சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் ஈரோட்டில் நடந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைபாரதம், இமயம், ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம், ஈரோடு வாசிப்பு இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிறைய நண்பர்களைச் சென்றடைய தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவிய ஜெயமோகன்.இன்  ஈரோடு லைவ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். கலந்துகொண்ட ஊடகத்துறை நண்பர்களுக்கு எங்களது அன்புகள்.

தேர்தல் சமயம் என்பதால் அனுமதி, இடம் கிடைப்பதில் சிக்கல், குறைந்த கால இடைவெளியில் குறுந்தகவல்கள் மூலம் மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய நிலை என பல தடைகளைத் தாண்டி 6 மணிக்கு ஐம்பது பேர் எனக்கூடிய கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், குடும்பத்தலைவிகள், பொதுநல அமைப்பு சார் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஓங்கிய குரலில் எழுப்பிய சப்தம் ஊழல் அரக்கனை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. 

ஊழல் அரக்கனிடம் அடைப்பட்டு அழுத்தத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் மனித சமூகம், சுவர்களை உடைத்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தவிப்பது இவர்கள் வருகையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. 

இதோ இன்று மெழுகுவர்த்தியில் ஏற்றிய அக்கினிக்குஞ்சு பெருநெருப்பாய் பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூடியவர்கள் இறுதியாய் கலையும் போது மெழுகுவர்த்தியில் இருந்த நெருப்பை இதயத்தில் ஏந்திச் சென்றிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நெருப்பை அப்படியே அடைகாப்போம்… வளமான இந்தியாவிற்காக தகிக்கும் மனதோடு உழைக்கத் தொடங்குவோம்…







-0-
மேலதிகப் படங்களுக்கு....
-0-


15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அசத்திட்டீங்க மக்கா பாராட்டுக்கள் அண்ட் வாழ்த்துகள்...

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!

Unknown said...

சல்யூட்...

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - சமூகப் பிரச்னைகலீல் கவனம் செலுத்தி சேவை செய்து வரும் தங்களின் செயல்கள் பாராட்டுக்குரியவை. 80 புகைப்படங்கள். நன்று நன்று. முயற்சி வெற்றி பெறும். இணைந்து செயலாற்றிய மற்ற அமைப்புகளூக்கும் நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Mahi_Granny said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

பாராட்டுகள் கதிர்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஊரான் said...

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

ராமலக்ஷ்மி said...

ஏற்றப்பட்ட தீபம் அணையாதிருக்கட்டும் அனைவர் மனதிலும். வாழ்த்துக்கள்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல விஷயம்.பாராட்டுகள்.

ஓலை said...

அருமை. ஏதாவது பிரச்சனைன்னா யாராவது வீதிக்கு வந்து கேட்கிராங்கலான்னு. நீங்க கேட்டுருக்கீங்க. பாராட்டுகள்.

அன்னா ஹசாரே யின் போராட்டம் வெறும் ஒரு சட்ட வடிவத்திற்கானது மட்டுமே. அது முழுமை அடைந்து ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தைரியமாக அமுல் படுத்தக்கூடிய அளவுக்கு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உதவக் கூடியதாக மாறனும். இல்லாவிட்டால் பலனில்லை.

இன்னிக்கு சகாயம் IAS போன்ற நேர்மையான அதிகாரிகள் படும் அல்லல்களைப் பார்க்கும் போது, இது இன்னிக்கு சிறு துளி தான். அது பெரு வெள்ளமா மாறனும். மக்கள் வீதிக்கு வந்து ஆதரவு தெரிவிப்பது பெரும் ஆறுதல் தான்.

அரபு நாடுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கான் அறிகுறி இங்கும் சென்று அடைந்துள்ளது ஆறுதலான விஷயம்.

செ.சரவணக்குமார் said...

அருமையான நிகழ்வு. வாழ்த்துகள் கதிர் அண்ணா.

Rathnavel Natarajan said...

நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாராட்டுகள்.

தாணு said...

Hats-off to your efforts and thank u for making us a part of it.
dr.nancy