சகாயம் குறித்த எழுத்தாளர் பெருமாள்முருகனின் “இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்” என்ற வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த போதுதான் ஊடகங்களின் பார்வை சகாயம் அவர்கள் மேல் விழத்தொடங்கியது. அதன்பின்னரே அதுவரை அவர்கடந்து வந்த பாதையில் அவருடைய நேர்மையும், அதற்காக அவர் தாண்டி வந்த இடர்களும் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஆட்சித்தலைவராக இருந்த காலத்தில் அரசு பள்ளிகள் மேல் செலுத்திய கவனம், சுற்றுச்சூழல் காக்க நட்ட பல லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளை நோக்கி கிராமம் கிராமமாக ஒவ்வொரு இரவுகளில் தன் பரிவாரங்களோடு புயலாய் புறப்பட்டு நல்ல ஆட்சியை வழங்கிய விதம், நள்ளிரவுகளில் நெடுஞ்சாலைகள் மேற்கொண்ட சோதனைகள், கிராமங்களில் கணினி நிறுவி இணையத்தில் புகார்களைப் பெற்று உடனே தீர்வுகண்ட வேகம் என, இப்படித்தான் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.
கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராம எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் இட்ட கட்டளைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ய, அதுகண்டு மக்கள் வெகுண்டெழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளை விரட்டியடித்த வரலாறும் உண்டு.
நேர்மை எப்போதும் ஆள்வோருக்கு பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆட்சித்தலைவர் பதவியிலிருந்து சகாயம் விலக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பணிக்கு அனுப்பப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அதுவரை காணாத ஒரு கொந்தளிப்பை மக்கள் மூலம் கண்டது, ஆனாலும் எல்லாக்கொந்தளிப்பு போல அதுவும் கரைந்து போனது கூடவே சகாயம் ஆற்றிவந்த மக்கள் சார் நற்பணிகளும் கரையத் தொடங்கியது.
காலங்கள் கரைந்ததில், இதுவரை இந்தியா காணாத புரட்சியாக தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலைச் செம்மையாக நடத்த புதிய புதிய யுக்திகளை வகுத்து வந்தநிலையில், தேர்தலை நேர்மையாக நடத்த சரிவராது என நினைத்த அதிகாரிகளை (மாநில காவல்துறைத் தலைவர் உட்பட) ஒரே இரவில் மாற்றியமைத்ததில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தூக்கப்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் நியமிக்கப்பட்டார்.
திருமங்கலம் சூத்திரத்தை பயன்படுத்த நினைத்த மதுரையை மையம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சகாயத்தின் நேர்மை சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதிர்ந்த ஆளும்கட்சி தேர்தல் ஆணையத்தை எதிரியாக பாவிக்கத் துவங்கியது, மக்கள் நேசிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ”நெருக்கடி நிலை” என பிரகடனப்படுத்தச் செய்தது. ”சகாயம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று” பேசுகிறார் என பொய்யாக அலறியது. ”சகாயம் மிரட்டுகிறார்” என கீழே பணிபுரியும் அதிகாரியைவிட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சொன்னது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
பாரபட்சமின்றி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையாக செயல்படுத்த நினைக்கும் ஒரு மிகச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவரை நாளொரு புகார் பொழுதொரு புலம்பல் என தங்கள் சொந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறது ஆளும்கட்சி!
இதுவரை சகாயம் குறித்த புகார்களை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அவர்கள் தள்ளுபடி செய்திருக்கிறார். கூடுதலாக சகாயம் மீது பொய்ப் புகார் கூறிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருக்கிறது.
இதோ இப்போது மதுரையில் இருக்கும் பல பொதுநல அமைப்புகள் ஒட்டுமொத்தமாக சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை ஆதரித்து குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன.
எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும்.
ஆனால்
எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.
நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்…
-0-
-0-
43 comments:
திரு.சகாயத்திற்கு எனது முழு ஆதரவும் ஓட்டும் கண்டிப்பாக. வாழ்க அவரது வெற்றிப் பயணம்.
என் ஒட்டும் அவருக்கே ஹே ஹே ஹே ஹே...
எனது பொன்னான வாக்குகளை அண்ணன் சகாயத்திற்கே சகாய விலையில் வழங்குகிறேன்..!
நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்.
உண்மையான அஞ்சா நெஞ்சன் இவர்தான் :-))
எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும்.
..... Absolutely true. :-)
கதிர் சார் ..,
சகாயத்தை பத்தி தேடி தேடி படிக்கிறேன் ..,என் முழு ஆதரவு அவருக்கு தான்
@ சகாயம் சார்
பட்டைய கிளப்புங்க ..,
சார் ..,
தேர்தல் ஆணையத்தின் வானாலாவியா அதிகாரங்கள் என்ன என்று ஒரு பதிவு தட்டி விடுங்களேன் # நேயர் விருப்பம்
///// சகாயத்திற்கே சகாய விலையில் வழங்குகிறேன்.. //////
அண்ணே வாழ்த்துவதுலிம் விலையா ?
எனது பிளாக்கில் சகாயத்தின் போட்டோவை ஏற்றி விட்டதன் மூலம் என் ஆதரவைத் தெரிவிக்கிறேன்.
நம் ஓட்டும் மதுரை ஆட்சியருக்கே.
மிக்க நன்றி
ஒட்டுமொத்த தமிழகத்தின் வாக்குகளையும் பெறக்கூடிய தகுதிபடைத்த மிகச்சிலரில் சகாயம் இஆப வும் ஒருவர். வீரம் என்பது குறைந்த பயம். நேர்மைச்செருக்கு கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும். இங்கே மட்டும் தான் ரவுடித்த்னத்தை வீரம் என்று சொல்லுகிறோம்.
திரு சகாயம் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
போண்டாகிரி ய சுளுக்கு எடுக்க இவர் மாதிரி ஆட்கள் தான் தேவை.
நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்
மேன்மைமிகு சகாயம் இ.ஆ.ப உள்ளிட்ட, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் அத்துனை அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள். தமிழகத்தின் 14வது சட்டமன்றத் தேர்தல் செயல்பாடுகள் வரலாற்றில் ஒரு மைல் கல்!!
தமிழகத்தின் 14வது சட்டமன்றத் தேர்தல் செயல்பாடுகள் வரலாற்றில் ஒரு மைல் கல்!//
உண்மைதான். மக்கள் சுயமாய் சிந்திக்க வாக்களிக்க அவகாசம் தரும் இது போன்றவர்களின் பணி சிறக்க வாழ்த்துவோம்!
நேர்மைக்கு எனது ஆதரவு
சகாயம் அவர்கள் போன்ற ஒரு சிலராலேயே இன்னும் நேர்மை, சத்தியம், மனச்சாட்சி போன்றவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
என் ஆதரவினைத் தெரிவித்து தேர்தல் முடியும் வரை எனது வலைப்பதிவில் வேறு இடுகைகளை வெளியிடாமல் அமைதி காக்கிறேன்.
அனைவருக்கும் இந்தச் செய்தி சென்று சேர வேண்டும்.
இருந்தாலும் அழகிரி பொய் சொல்லுவார் என்பதை என்னால் உண்மையாக நம்ப முடியவில்லை..ஹேர்ஸ் ஆஃப் சகாயம் சார்..
அவங்களுக்கு எல்லாம் சகாயமா கிடைக்கணும் ..கொஞ்சம் கணக்குகள் மாறியிருந்தால் சோனியா பற்றி அவர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்பது தெரியாதா?
நண்பர் சஞ்சய்...அழகிரி விஜயகாந்தை அன்புள்ளத்தோடு நண்பர் என்று குறிப்பிட்டதாக சொல்லியிருந்தார் ..பஸ்சில்
இன்று வடிவேலு பேசும்போது அழகிரி அடித்த கமெண்ட்..அவரின் அன்பை காட்டுகிறது
திரு.சகாயம் அவர்கள் இந்த போரில் வெல்லவேண்டும் என்பதே நேர்மையை, உண்மையை விரும்பும் அனைவரின் விருப்பமும்.
திரு.சகாயம் அவர்களுக்கு எனது முழு ஆதரவு நிச்சயம் உண்டு.
திரு.சகாயம் அவர்களுக்கு என் ஆதரவு.
சகாயம் தும்மிட்டாரு. அ.தி.மு.க கொடி ஆடுச்சுன்னு ஒரு கேஸ். ஒரு மத்திய மந்திரி வெண்ணைக்கு அரசுத் துறை அதிகாரி மேல கேஸ் போடணும்னா மத்திய அரசு அனுமதி வாங்கணும்னு கூடவா தெரியாது?இந்த ரெய்டு எலக்ஷன் முடிஞ்சும் தொடரணும். நாம ஒரு லட்சம் டெபாசிட் போட்ட இன்கம்டாக்ஸ் காரனுக்கு மூக்கு வேர்க்குது. இவ்ளோ காசு தோட்டத்துலயா நட்டு வச்சிருப்பானுவோ. எல்லா பேங்க்ல இருந்தும் ஹெவி வித்ட்ராயல், டெபாஸிட் கணக்கெடுத்து ஆப்பு வச்சா சரியாயிடும்:)
பதிவுலகம் உமாசங்கருக்கு தந்த ஆதரவு மாதிரி இன்னும் பதிவுகள் வருவதை ஆதரிக்கிறேன்.
உங்களின் துவக்க முயற்சிக்கு நன்றி.
பின்னூட்டம்தான் என் முன்னுரிமை.ஓட்டுப் போடலாமுன்னு பார்த்தா ஓட்டுப்பொட்டிய எங்கே மறைச்சு வச்சிருக்கீங்க:)
ஓ!வாசகர் பரிந்துரைக்கு வந்துடுச்சில்ல.அப்ப வாரேன்.
என் ஒட்டும் அவருக்கே
என் ஒட்டும் அவருக்கே..
bcz he is an real life hero............................
என் ஓட்டை அவருக்கு போடமுடியாது என்பதால் தமிழ்மணத்தில் போட்டுட்டேன் :))
நல்ல மனிதர்... இதுபோன்ற தூசிதுரும்புகளையும் அவர் கடந்து வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுரை மக்களும் அவருக்காக குரல் கொடுப்பார்கள்.
என்னோட வாக்கும் அவருக்குத்தான்.
நேர்மையின் பக்கத்தில் நிற்கும் திரு.சகாயம் மற்றும் இதர அலுவலர்களுக்கும் என் ஆதரவு.
தம் பணியைச் சிறப்பாகச் செய்திட வாழ்த்துகள்.
நல்ல மனிதருக்கு என்வாழ்த்துக்கள்,அவர் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் !
nallavarkalukku... kadavul uthuvuvam...
மக்கள் மனதில் படு காயம் ஊழலால்....
ஆறுதல் கிடைத்தது சகாயம் என்னும் சீலரால்....!!
இளம் புலி படை உங்களுடன் இருக்கிறது சகாயம்......கலக்குங்க...!!
நான் சகாயம் அவர்களோட சொற்பொழிவ ஈரோடு புத்தக கண்காட்சியில்ல கேட்டிருக்கிறேன் .
சிறந்த சொற்பொழிவாளர்......
அவர் சொற்பொழிவுள்ள இருந்தே அவருடைய நேர்மையை புரிந்து கொள்ளலாம் .
God will be with his people, who does His will off Honesty and Truth.
Bravo Mr Sagayam.
may God bless you sir.
எனக்கு வாய்ப்பூ கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து என்னுடைய முழு ஆத்ரவையும் தெரிவிப்பேன்.
திரு.சகாயத்திற்கு எனது முழு ஆதரவும் ஓட்டும் கண்டிப்பாக. வாழ்க அவரது வெற்றிப் பயணம்
எனது பொன்னான வாக்குகளை அண்ணன் சகாயத்திற்கே சகாய விலையில் வழங்குகிறேன்
உண்மையான அஞ்சா நெஞ்சன் இவர்தான்
நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்
சகாயம்.I A S
நேர்மையாக நடக்க் முயலும் அரசு அதிகாரியை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறார்கள் சுயநல அரசியல்வா(ந்)திகள்?!
இவருக்கு பெயர் வைக்கும் போதே.. ஒரு முடிவோடதான் வைச்சிரிக்காங்க போல. “ஆகாயம்” உள்ளவரை திரு. “சகாயம்” அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்
Post a Comment