எங்கே வெளையாடிக்கிட்டிருந்தாலும்
”மலர்ர்ர்ரூ”னு கூப்பிட்ட கொரலுக்கு
போவாட்டி மண்ட வீங்கிப்போயிடுது
படீர்னு கொட்ற கொட்டுல
தங்கக்கட்டி என் செல்லக்கட்டின்னு
அம்மா பாசமா இருந்ததும்
அப்பா அம்மாவும் சேர்ந்து சிரிச்சதும்
எப்போன்னு மறந்தே போச்சு
குடிச்சுப்போட்டு வர்றன்னிக்கு மட்டும்
போத மாதிரியே அப்பனுக்கு மீறுன பாசம்
சவுக்காயித்தில சுருட்டின கார முறுக்க
தின்னு தின்னுனு வாயில திணிப்பாரு
குப்னு அடிக்கிற நாத்தத்துல
கொமட்டிக்கிட்டு வந்து வேணாம்னு சொன்னா
அட தின்னுன்னு இடிக்கிற கன்னத்துல
வெடியவரைக்கும் நிக்கிறதில்ல எரிச்சல்
பாழாப்போறவனெ இன்னிகாச்சும்
காசு கொண்டாந்தியா இல்ல
எவகிட்ட வுட்டுட்டு வந்திட்டியான்னு
ஒடுங்குன போசிய தூக்கி வீசுவா
எச்சி ஒழுக தொங்குன தலையோட
திண்டாடுற அப்பன் விருட்டுன்னு
எட்டி ஒதைக்கிற ஒதையில
ஓரத்துல பொத்துனு வுழுவுறா
ஒதைக்க வர்ற அப்பங்காலப் புடிச்சு
பொத்துன்னு வுழுந்த அம்மாவ இழுத்து
வுழுந்து பொறண்டதுல கசங்கிக்கெடந்த
பொஸ்தக பைய அவசரமா சரிபண்ணி
தமிழ் பொஸ்தகத்த தடக்குனு உருவி
முப்பதேழாம் பக்கம் தொறந்தா
முருகேசன் கொடுத்த மயில் எறகு
அழாகாத் தூங்குது கொழந்தையாட்டம்
இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம…..
_____________________________
32 comments:
//குடிச்சுப்போட்டு வர்றன்னிக்கு மட்டும்
போத மாதிரியே அப்பனுக்கு மீறுன பாசம் //
தெனமுந்தானே குடிக்கிறாரு.
ஒரு குடும்பம்....!
உள்வாங்கி உணரும்போது ரொம்ப வலியைத் தருகிறது கவிதை.
ம்ம். ஒரு பிஞ்சு மனசு நஞ்சு போற ஏக்கம்..பாசமும் வலியாய் மாறும் சோகம்..மயிலிறகு குத்திக் கிழிக்குது..
:)
ம்... சத்ரியனும் அய்யாவும் சொல்லிட்டாங்க சொல்ல வந்தத!
பிரபாகர்...
//அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம….. //
உள்வாங்கி உணரும்போது ரொம்ப வலியைத் தருகிறது.
nice........ but painful one....
1972 க்கு முன் இது போன்ற கவிதைகள் தோன்ற
அதிகச் சாத்தியமில்லை.
'கவிஞர்களை அதிகமாய்
உருவாக்கிய கலைஞர்'
பட்டம் சாலப் பொருந்தும்.
வாழ்க பல்லாண்டு, பல பல பட்டம் கொ(க)ண்டு.
வலி சுமந்த கவிதை...
பல குடும்பங்களில் குழந்தைகளின் நிலையிதுதான்... பேச்சுப்போக்கில் வலியை இறக்கியது கவிதை...
லேசான இறகை முன்வைத்து கனமான கவிதை...........
மனதை கனமாக்கும் வரிகள்... பல குடும்பங்களின் நிதர்சனம்...
கதிர் அண்ணா வட்டார வழக்கில் அமைந்த கவிதை
குடியால் பாழாகிகிடக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்தஒரு குழந்தையின் மன உளைச்சலின் அழகிய வெளிப்பாடு கனத்த மனத்தை தருகின்றது இக்கவிதை!!!
ரொம்ப நல்லாயிருக்கு.. எத்தன பேரு வீட்டுல இப்பிடியோ..
கவிதையில் உள்ள சோகம் மனதை தொடுகிறது.
சோகம் சுமந்த கவிதை. தினசரி குடும்பவாழ்வுகள் இப்படித்தான். சில பேருக்கு. பாராட்டுக்கள்
மயிலிறகு இங்கு சாட்டையாய்..!
மயிலிறகா இது .ஈட்டிங்க இது ...
மனச வலிக்கிது
//இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம…..//
ஒற்றை மயிலிறகை தாங்கி குடைசாய்ந்த மனது...மீள்ச்சிக்காய்...ஏங்கி...கிரேட் கதிர் அண்ணா...
கவிதையின் மொழி வாசனை மிக அருமைங்க.
கனமான கவிதை..
மயிலிறகால் வருடிக்கொண்டே போய் பசக்குண்ணு உலுக்கி விடுகிறது கவிதை.பிசைகிற வார்த்தைகள் பேசுமொழியாயிருந்தாலென்ன,எழுத்து மொழியாயிருந்தாலென்ன.க்ரேட் கதிர். க்ரேட்.
அட்டகாசம் கதிர்.....கவிதை சிறகு விரித்து பறக்கிறது
வீடு இப்படி இருக்கும் போது பாவம் குழந்தை என்ன செய்யும் . மயில் இறகு கனமாகி விட்டது இங்கே .
ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்
சவுக்காயிதம், போசி - கொங்கு நாட்டு நாட்களை நினைவூட்டுகிறது...அருமையான பதிவு
// இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம்
எந்தக் கவலையும் இல்லாம
குட்டியும் போடாம…..//
romba nallaarukku kathir!!
அருமையான பதிவு...வாழ்த்துகள்
நல்லாருக்கு.:-))))))
மயிலிறகு மாதிரியே...!
// இந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா
முருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா
இன்னேரம் பொஸ்தகத்துள்ள தூங்கியுமிருக்கலாம் //
குழந்தை மனதின் வலியைத் தாங்கியக் கவிதை! மனது கனக்கிறது.
Post a Comment