தினமும் கனிணியிலும், இணையத்திலும் புழங்கும் மாணவர்கள் கூட, இணையம் அளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை பல சமயம் ஏதோ சில காரணங்களால் தவறவிட்டு விடுகின்றனர். இதைச் சற்றே மாற்றவும், மாணவர்களை வலைப்பூக்களை பயன்படுத்த வைக்கவும் நடத்திய ”வலைப்பூக்கள் துவங்குதல் – கருத்தரங்குகள்” நிகழ்வையொட்டி, மாணவர்களிடம் வலைப்பக்கங்களை எடுத்துச் செல்லும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெருந்துறை கொங்கு கல்லூரியில் வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் திறனை முழுதும் வெளிப்படுத்த வலைப்பக்கங்களை எப்படி பயன் படுத்துவது என்பது குறித்தும்…..
வலிமை வாய்ந்த வெகு ஜன ஊடகங்கள் தொடர்ந்து தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டொதுக்கும், நம்மைச் சுற்றி நடக்கும் அரிய விசயங்களை வலைப்பக்கங்கள் மூலம் ஆவணப்படுத்துவது குறித்தும்…
இணையத்தில் தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளை வாசிப்பதும், அதுகுறித்த வெட்டி, ஒட்டி வரும் கருத்துக்களைப் பதிவு செய்வது குறித்தும்….
இணையத்தில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மனதிற்குள் தோன்றும் கருத்துக்களை இணையத்தில் பயன்படுத்துவது குறித்தும் நாற்பது நிமிடங்களை உரை நிகழ்த்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, Power Point உதவியுடன் வலைப்பக்கம் துவக்குதல், இடுகைகள் எழுதுவது, பின்னூட்டம் இடுவது, திரட்டிகளை பயன்படுத்துதல், தமிழ் எழுதிகளை நிறுவுதல் ஆகியவை 50 நிமிடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டது.
பல்வேறு தளங்களில் சமூகத்திற்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு வரும் வலைப்பக்கங்கள் உதாரணத்துடன் விளக்கப்பட்டது.
மிக ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களைக் காணும் போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
மாணவர்களுக்கு நல்ல விசயங்களை பகிர வாய்ப்பளித்த துறைத்தலைவர் முனைவர். பிரியகாந்த், மூத்த விரிவுரையாளர்கள் திருமதி.கலைச்செல்வி, திரு.வெங்கடேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த துணையிருந்த மாணவியர்கள் பிரிவு செயலர் செல்வி.பவித்ரா அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கத்திற்கு மாறான கூடுதல் குளுமையோடு விடிந்த இன்றைய பொழுது, நாள் முழுதும் மகிழ்ச்சியை மனதிற்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேயிருந்தது. அந்த விடியலின் குளுமையை நிகழ்வு நிறைந்த போது இன்னும் கூடுதலாக இதயத்திற்குள் உணர முடிந்தது.
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.
மேலும் நன்றிக்குரியவர்கள் பதிவர்கள் பழமைபேசி, ச.செந்தில்வேலன், கார்த்திகை பாண்டியன் மற்றும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்.
___________________________________
40 comments:
பாராட்டுகள் கதிர். மேன்மேலும் உங்கள் பங்களிப்பு தொடர வேண்டும்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
//இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.//
உண்மை தான்.
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கதிர்.
//மாணவியர்கள் பிரிவு செயலர் செல்வி.பவித்ரா அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//
கண்டிப்பாக அவரின் ஆர்வமே இத்தனை மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. நானும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மென்மேலும் விதைகளை ஊன்றுவோம் விருட்சங்கள் உண்டாக...
தங்களின் இதற்கான உழைப்பிற்கும் என் வந்தணங்கள்.
பாராட்டுகளும், வாழ்த்துகளும் கதிர்.
தொடரும் உங்கள் சீரிய முயற்சிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அண்ணா...
:)
பாராட்டுகளும், வாழ்த்துகளும்
அருமையானதொரு முயற்சிக்கு பாராட்டுகள்!
எடுத்துக்கொண்ட தலைப்பு குறித்தும் சற்றும் முழுமையாக தெரியப்படுத்துங்களேன்!
இனி வரும் இது போன்ற சூழல்களில் சமுதாயம் மட்டுமின்றி தாம் படிக்கும் கல்வி தொடர்பான துறை சார்ந்த பதிவுகளும் கூட மிக குறைவே அது குறித்தான விழிப்புணர்வினையும் இதை போன்ற இனி வரும் கருத்தரங்குகளில் செயல்படுத்தலாம்!
மாப்பு, மகிழ்வாய் உணர்கிறேன். இது போன்ற ஆக்கப்பூர்வ நிகழ்வுகள் தொடரவும், தொடர வைக்கவும் தங்களை வாழ்த்தி, வேண்டுகிறேன்!!!
பாராட்டுகள்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள். இன்னும் முயற்சிகள் தொடரட்டும்...
பாரட்டுக்கள் கதிர் :)
மாப்பு, மக்கள் தொலைக்காட்சியில் வெளியான தங்கள் உரை நன்றாக அமைந்தது... வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!
Great wishes.. kathir..! Nice to see the photos!
மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் பணிகள் சிறக்கட்டும்
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
99430-94945
சிறப்பாகச்செய்திருக்கிறீர்கள்!!பாராட்டுகளும் வாழ்த்துகளும் கதிர்!
வாழ்த்துகள் கதிர் அண்ணா. இந்த சீரிய பணி தொடரவேண்டும்.
mikka nanri Kadir
We appreciate your great service to Tamil cause.
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள்
(மரங்கள்)நம்மை சுற்றி நிற்கும்.
-
தமிழர்களின் எதிர்காலம் ஒளிர இது ஒரு பொன்னான வாய்ப்பு.
உங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள். முனைவர் மு. இளங்கோவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டுகிறேன்.
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு (1991)
அமெரிக்கா.
www.worldthamil.org
பொறாமையா இருக்குன்னே....
பாராட்டுக்கள் கதிர்...
கொங்கு கல்லூரிலதாங்க நான் படிச்சேன்..
நானும் ஒருமுறை 'Future job opportunities for CS' ங்கற தலைப்புல உரையாற்றியது நினைவுக்கு வந்தது..
//மாப்பு, மக்கள் தொலைக்காட்சியில் வெளியான தங்கள் உரை நன்றாக அமைந்தது... வாழ்த்துகளும் பாராட்டுகளும்!//
காணொளித் தொடுப்பு ஏதாவது கிடைக்குங்களா?
வாழ்த்துகள்...
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.
கண்டிப்பாக. வாழ்த்துக்கள், கதிர்.
Congrats....
வாழ்த்துக்கள் கதிர். முயற்சிகள் தொடரட்டும்..
வாழ்த்துகள் கதிர்.
மிக மிக மகிழ்ச்சியாக உணருகிறேன்.
மேலும் மேலும் தொடரட்டும்.
பாராட்டுகள்
அருமையான முயற்சி பாராட்டுகள் அண்ணா
தல! ஏற்கனவே இங்க காம்பெடிஷன் ஜாஸ்தியா இருக்கு!
பதிவுலக அரசியல் பத்தியும் விளக்கியிருக்கலாம்-;))
நல்ல முயற்சி . கதிர்.. வாழ்த்துக்கள்
உங்க ஈடுபாடு பெரிய விஷயம் அண்ணா!!
மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கு பெரிதும் பயனுள்ளதாய் அமைந்திருக்கும்
நன்றி :))
பகிர்வுக்கு நன்றிங்க கதிர்... நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்
Hi, I am alumini of KEC. Appreciating your work.
valaipathivu padri karutharangam.payanulla nikazchi-muyarchi-meerapriyan
இன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்////
நல்ல முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்களது தொடரும் முயற்சிகளில் மிகுந்த மகிழ்ச்சி ... தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நமது பதிவுலக தோழர் பிரின்ஸ் என்ராசு பெரியார் அவர்கள் அண்மையில் வலைப்பூவுலகம் குறித்து எடுத்துரைத்ததாக அங்குள்ள மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். அவருக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
"யாம் பெற்ற இன்பம்..பெருக இவ்வையகம்.."
எனும் தங்கள் முயற்சிக்கு..அடுத்த தலைமுறையை அழைத்து வருவதற்கு..
இணையத்தில் இன்னும் நிறைய இளைய சமுதாயத்தை இணைப்பதற்கு..
மென்மேலும் தங்கள் முயற்சியை தொடர்வதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..
அன்பு(த்தொல்லையு)டன்,
படைப்பாளி
www.padaipali.wordpress.com
விதைகளை விதைக்க உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் போது வயதான விருட்சங்கள் கூட நன்கு துளிர் விடும் அல்லவா கதிர் .வாழ்த்துக்கள்.
Post a Comment