இளம்காலை நேரம் கோவை செல்ல வாகனத்தில் நண்பரோடு கிளம்பினேன். அவிநாசியை கடக்கும் போது ”இங்கேயே சாப்ட்றலாம்” என நண்பர் பேருந்து நிலையம் தாண்டி, ஒரு டீக்கடையோரம் நிறுத்தினார் . ”என்ன இங்கியா” எனக் கேட்க, ”நிக்கிற கார் எல்லாம் பாருங்க, அப்புறம் சாப்ட்டுச் சொல்லுங்க, எப்படின்னு” என்றார்
முன் பக்கம் கூரை வேய்ந்த உள்ளே பனிரெண்டுபேர் மட்டும் சாப்பிடும் அளவுக்கு ஒரேயொரு அறை. அதுவும் நிரம்பியிருக்க, காத்திருப்பு பட்டியலில் ஏற்கனவே நிற்கும் மனிதர் பின்னால் ஒரு மாதிரி கூச்சத்தோடு நிற்கத் துவங்கினோம். சில நிமிடங்கள் கழித்து வந்த மனிதர் வரிசையைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சடசடவென உள்ளே போய் சாப்பிடும் ஒரு ஆள் பக்கத்தில் இடம் பிடிக்க நின்று கொண்டார், நாங்கள் இருவரும் இயலாமையில் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ள மட்டும் செய்தோம்.
அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குப் பின் கூட்டம் அதிகமானது, நண்பரிடம் கேட்டேன் “இப்படி நின்னு வேற சாப்பிடனுமா”ன்னு. ”இல்ல, ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்க” என்றார்.
சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிப்பது போல் தெரிய, உள்ளே சென்று வழக்கமான இந்தியக் கலாச்சார முறையில் இடம் பிடித்தோம். அப்போதுதான் கவனித்தேன் இலை போட்டு தண்ணீர் தெளித்து, வைத்து, பரிமாறி, கடைசியாய் இலையடுத்து, காசு வாங்குவது வரை அறுபது வயது மதிக்கத் தக்க ஒரே ஒரு ஆள் மட்டும் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்.
நான் வழக்கம் போல் “என்ன சொல்லலாம்” என்று நண்பரைக் கேட்க, “ஒன்னும் சொல்ல முடியாது, முதல்ல இட்லி வரும் அப்புறம் தோசை குடுப்பாங்க, அவ்வளவுதான்” “அடப்பாவி மக்கா இதுக்குத்தான் இந்தப் பில்டப்பா, அதுதான் தினமும் வீட்ல போடறாங்களே”ன்னு நினைச்சிக்கிட்டேயிருக்கும் போது இட்லி வைக்கப்பட்டது, பரபரப்பாய் சாம்பார், சட்னி ஊற்றப்பட்டது.
இதற்குள் அந்த சிறிய அறைக்குள் இன்னும் சிலர் வந்து இடம் பிடிக்க நின்று கொள்ள கிடைத்த இடைவெளியில் மிக லாவகமாய் அந்த நபர் புகுந்து புகுந்து பரிமாறினாலும் சாப்பிடும் அனைவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
சாப்பிடுவோருக்கோ சட்னி போதவில்லை, சாம்பார் போதவில்லையென கை காய்ந்து கொண்டிருக்க, நிற்கும் நபர்களுக்கு சாப்பிடுவோர் சீக்கிரம் எழ வேண்டும், பொறுத்துப்பொறுத்த பார்த்த சாப்பிட வந்து காத்திருந்த நபர் அருகில் இருந்த சட்னி, சாம்பார் வாளியை எடுத்து காய்ந்த கையோடு இருக்கும் இலைக்கு பரிமாற ஆரம்பித்தார், இதைப் பார்த்த காத்திருக்கும் இன்னொரு நபர் “சார் உங்களுக்கு என்ன வேணும் (மனசுக்குள் ”யோவ் சீக்கிரம் எந்திரிய்யா”)” எனக் கேட்டு தட்டில் இருந்த தோசை, இட்லியை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பசியோடு வந்து கால் கடுக்க நின்று, காத்திருந்து, ஒரு கட்டத்தில் யாருக்காகவோ யாருக்கோ பரிமாறி, யுக்தியோடு இடம் பிடித்து தன் பசியாறிச் செல்லும் அந்த நபர்கள் வந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 3 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.
உணவின் சுவையோ, அவர்களின் நண்பர்கள் பெருமையாக அல்லது மிகைப்படுத்திச் சொன்னதோதான், அந்த மனிதர்களை அவ்வளவு தியாகங்களைச்(!) செய்து, காத்திருந்து சாப்பிடத் தூண்டியிருக்கலாம், அதேசமயம் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற உலகத்தில் பணக்காரர்களை சட்டினியும், சாம்பாரும், இட்லியும், தோசையையும் முன்பின் தெரியாத ஒரு நபருக்கு பரிமாற வைத்த சனநாயகத்தை ஒரு நிமிடம் சிரிப்போடு வணங்கவே தோன்றியது
சுவையின் பொருட்டோ, பெருமையின் பொருட்டோ இவ்வளவு தூரம் இறங்கி வரும் ஒரு (பணக்கார) மனிதனின் நாணல் மனோ நிலையில், இதே வேறு ஒரு சராசரியான உணவுவிடுதியில் இவ்வளவு பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவது ஏன்?
ஏதோ கவனக்குறைவில் தனது பணியில் தடுமாறும் உணவு விடுதிப் பணியாளனை ஆங்காங்கே இன்னும் அடித்தோ, திட்டிக் கொண்டுதானே இருக்கின்றோம்.
தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்?
இதற்கு முழுக்க முழுக்க மனிதனின் மனோநிலை மட்டுமே காரணமா, வாய்ப்புகள் மட்டுமே காரணமா? விடை தெரியாத கேள்வியோடு சற்றுக் கட்டிப்புரள்வோம்..
_____________________________________________________
43 comments:
நிஜமாகவே நல்ல விசயம்....
இப்படியாவது சனநாயகம் மிச்சம் இருக்கிறதே.....
ஒவ்வொருவரின் மனநிலையும் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது என்பது தற்போதைய சூழலில் மிக எளிதான காரியமாகிவிட்டது! அது மற்றவர்களை புண்படுத்துமோ என்ற எண்ணத்தினை சுத்தமாக அழித்துவிட்டது ! சகிப்பு தன்மை என்பது தேடிப்பார்க்கும் விசயமாக மாறிவிட்டது!
/தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா இடங்களிலும் நிகழாமல் போவது ஏன்?//
தன் தேவையும் வேறு வழியின்மையும்தான்.
அப்படின்னா இந்த வாரம் அவினாசி வழியா வீட்டுக்கு போகும்போது போய் சாப்பிட்டுப் பார்த்திடலாம்..!!
இது எல்லா இடத்திலும் நடப்பது தான்.. அது தானே நம்ம ஜனநாயக உரிமை... :))
பட் தலைப்பே கவிதை மாதிரி இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.
//மனிதனின் மனோநிலை மட்டுமே காரணமா??//
ஆமா...ஆமா...
//விடை தெரியாத கேள்வியோடு சற்றுக் கட்டிப்புரள்வோம்//
கட்டிப் புரண்டது போதும்... எழுந்திருங்க...
பார்க்கிற இடமெல்லம் பகிர்வுக்கு பொருளும் அதில் ஒரு பாடமும் கதிருக்கு மட்டும் கிடைக்கிறதே எப்படி. வாழ்த்துக்கள் தம்பி
நல்ல பகிர்வு கதிர்.
//பார்க்கிற இடமெல்லம் பகிர்வுக்கு பொருளும் அதில் ஒரு பாடமும் கதிருக்கு மட்டும் கிடைக்கிறதே எப்படி//
பெரிய ரிப்பீட்டு
கதிர் சார்....
அந்தக்கடையின் 10 வருட வாடிக்கையாளர் நான்... காலை உணவைப்பற்றி தான் குறிப்பிட்டு இருக்கறீங்க... அடுத்த முறை இரவு உணவு சாப்பிட போங்க இன்னும் நிறைய அனுபவங்கள் உங்களுக்காக காத்திருக்கு....
உணமையில் சொன்னால் எல்லா மனிதனும் எல்லா சூழ் நிலையோடும் ஒத்து வாழ முடியும் கதிர். பணக்காரன் என்பது எல்லாம் மனம் ஏறபடுத்துக் கொள்ளும் மமதை....
கால் நீட்டும் வரை நீட்டிக்கொள்கிறோம்....சுவர் இடித்து இடம் இல்லை என்றால் காலை மடக்கித்தானே ஆகவேண்டும்...!
நாணலுக்கு நன்றி கதிர்!
டேஸ்ட் பத்தி ஒன்னும் சொல்லலியே...?
சீக்கிரமே ஏதாவது ஆன்மீக க்ளாஸ் போகக்கடவது..
கடையோட சுவை கண்டிப்பாக கடைக்கு வந்து சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருப்பது ஒரு தனி ட்ராக்.......
செவிக்குணவு கொடுத்து வயிற்றுகுணவைத் தேடச்சொல்லி இருக்கீங்க கதிர்...சூப்பர்...ஹா...ஹா...ஹா!
மனிதர்கள் மிக மிக வித்தியாசமானவர்கள். நல்ல விசயம்.
வாழ்க சனநாயகம் :)
நல்ல பதிவு கதிர். அந்த வயதானவரின் உழைப்பு, அவர்களது வாடிக்கையாளரைத் திருப்திப் படுத்தும் (நல்ல சுவையான உணவளித்தல்) பாங்கு தான் காரணம் என்று நினைக்கிறேன்.
இதுவே பிரபல உணவகம் என்றால், ஒரு தட்டு இட்லிக்கு 16 ரூபாயை வாங்கிக் கொண்டு அவர்கள் அலட்சியமான சேவை தான் அங்கே கோபப்பட வைக்கிறது.
நானும் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன்.ஆழ்ந்த சிந்தனை. மக்களே அடிக்கடி நிறம் மாறும் தன்மையுடையவர்கள் தானே?
அந்தப் பக்கம் போகும்போது கண்டிப்பா சாப்பிட்டுப் பார்க்கிறேன்
கதிர் அண்ணே,
உங்களுக்கு மட்டும் எதப்பாத்தாலும் , எப்படி இத்தன “ஏன்” கேக்கத்தோணுது?
ஆனாலும், நெறைய யோசிக்க வெக்கறீங்கண்ணே. அந்த ஸ்டைல் எனக்கு புடிச்சிருக்கு.
என் கேள்விக்கொரு பதிலச் சொல்லுங்க. தொடர்ந்து “ நாணல்” தொடர் பாக்கறீங்களோ?
// Mahi_Granny said...
பார்க்கிற இடமெல்லம் பகிர்வுக்கு பொருளும் அதில் ஒரு பாடமும் கதிருக்கு மட்டும் கிடைக்கிறதே எப்படி. வாழ்த்துக்கள் தம்பி//
அக்கா சரியா சொல்லி இருக்காங்க கதிர்.
இந்த மனநிலை சிலசமயம் உறவினர் வீட்டு பந்தியிலும் வரும். அங்கே இவர்களும் நம் உறவினன் என்ற நினைப்புகூட காரணமாயிருக்கும்.. இங்கே அதுவே கொஞ்சம் சுயநலம் பூசப்பட்டு நாணலாகிறது... அவ்வளவே...
நல்ல கட்டுரை...
கதிர்...பசிக்குது இட்லி !
இப்படியாவது சனநாயகம் மிச்சம் இருக்கிறதே ...
நல்ல பகிர்வு.
பாராட்ட பட வேண்டிய விடயம் . பதிவுக்கு நன்றி.
அன்பின் கதிர்
நல்லதொரு நிகழ்வு - இடுகையாக மலர்ந்திருக்கிறது - சுய நலம் என்று வரும்போது இவை எல்லாம் இயல்பு தான் - என்ன செய்வது .....
நல்வாழத்துகள் கதிர்
நட்புடன் சீனா
Thanks. I will appreciate if you provide the address. Will enjoy the delightful food one day. Thanks.
Nanber kathiruku ,nanbaray ithupol pala unavu viduthikalil nadapathai parthirukirayen ,Anaal avarkal mulumanathudan than parimarukirarkal
சுவையின் பொருட்டோ, பெருமையின் பொருட்டோ இவ்வளவு தூரம் இறங்கி வரும் ஒரு (பணக்கார) மனிதனின் நாணல் மனோ நிலையில், இதே வேறு ஒரு சராசரியான உணவுவிடுதியில் இவ்வளவு பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவது ஏன்?
அதானே ஏன் ஏன் ஏன் ???
வாழ்க ஜன நாயகம்!!!!!
//தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா இடங்களிலும் நிகழாமல் போவது ஏன்?//
தான் விரும்பியது கிடைக்க விழுந்தாலும் புரண்டாலும் துடைத்துகொள்ளும் மனோபாவம் மனிதர்களுக்கே உரித்தனதுதனே அண்ணே...அருமையான பகிர்வு...ஒவ்வொருமுறையும் புதுசு இன்னும் புதுசா கதிர் அண்ணே....வாழ்த்துகள்...
இதில் ஆச்சரிய பட ஒன்றுமே இல்லை .. அங்கு வரிசையில் நின்ற எல்லோருக்கும் ஏற்கனவே நிலமை தெரிந்து தான் காத்து இருந்தார்கள்... அதற்கான நேரமும் ஒதிக்கி இருந்தார்கள்... யாருக்கும் எந்த எதிர்பாப்பும் இல்லை சுவையத்தவிர...இது ஒரு வகை slow food concept...
வித்தியாசமான, நல்ல பகிர்வு.
Kadisiya neenga sappiteengala illaya..........
Can't read legibly the address of the Thirumurthi Tea Stall by Image blowup. Will appreciate for your response. Thanks.
நல்லா பரிமாறி இருக்கீங்க... :o)
//தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்?//
சந்தர்ப்பவாதம்..
தனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்?
////
theriyalae
ஒரு சாதரண சப்பாட்டு செய்தி, இதில் என்ன இருக்கமுடியும், என்கிற கேள்விக்கு நிறைய்ய பதில் இருக்கிறது.கட்டிப்புரளத்தான் ஒன்றும் இல்லை. மஹி சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். வணக்கம் கதிர்.
sir,
sariana locationyum sollirundeenganna nalla irrukkum
Begger has NO CHOICE.
When, there is NO CHOICE,
then every one is a BEGGER
very nice sir..people forget humanity now a days
மனோநிலைதான் காரணமாக இருக்குமோ.........அதுசரி உங்களுக்கு எங்கு போனாலும் ஒரு பதிவிற்கான களம் தயாராகவேயிருக்கு
Post a Comment