ரயில் பயணங்களில்





உறக்கத்தின் துவக்கத்தில்
கிழக்கு நோக்கி தொடங்கிய
தொடர்வண்டிப் பயணம்
இடவலமாய் மாறிமாறி நிறைகிறது
இடையிடையே விழிக்கும் மனதில்
இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்


<><><><><><><><>


பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி


<><><><><><><><>

எல்லாப் பயணத்தின் நிறைவிலும்
இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
இறங்கியபின் இறங்கவேண்டும் 
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்தில்


<><><><><><><><>



32 comments:

vasu balaji said...

/இருக்கையின் மேல்துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்பற்றுதலும் பிரியமும்/

பஞ்சத்துல அடிபட்டவன் கூட அப்புடி பறக்கமாட்டான்ல. முன்பதிவு பண்ணாலுமே முண்டியடிச்சி ஓடினாத்தான்.

/இறங்கும் போதுமுற்றிலும் நீர்த்துப்போகிறதுஎந்தச் சலனமுமின்றி//

ஒரு சன்னியாசி குடுத்தனத்த உட்டு போறா மாதிரில்ல பிஸ்லேரி பாட்டில உட்டுட்டு பெருமையா பார்த்துட்டு போறது.

/எல்லாப் பயணத்தின் நிறைவிலும்இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்/

அதெப்டிங்ணா ஊருக்கு முன்ன ஒரு கதவை தொறந்து எட்டி பார்த்துட்டிருக்க மத்த பக்கம் ப்ளாட்ஃபார்ம் வரும் தப்பாம?

/சங்கல்பம் நினைவிற்கு வருகிறதுவழக்கம்போல் முட்டி மோதி இறங்க யத்தனிக்கும் நேரத்தில்
/

வாஸ்தவம்:)

க.பாலாசி said...

ஒவ்வொரு பயணத்திலும் உண்டாகும் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..

ஆமாம் ஆரம்பத்தில் உட்கார ஏங்கும் மனது இறுதியில் கசப்பதுதான் ஏனென்று தெரியவில்லை..

அவதிப்புடிச்ச காலுக்கு மட்டும் புரியவே மாட்டுது, கொஞ்சம் பொறுமையா இறங்கணும்னு...

Unknown said...

Classic. Thanks Kathir.
Train or Flight the same.

"ஒரு சன்னியாசி குடுத்தனத்த உட்டு போறா மாதிரில்ல பிஸ்லேரி பாட்டில உட்டுட்டு பெருமையா பார்த்துட்டு போறது" - Attakaasam Sir.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை மிக அருமை ..........

காமராஜ் said...

அப்படியே ..பிசிறில்லாத ஒரு ரயில் இலக்கணம்.

பாலாண்ணா
கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே மைதானம் போட்டாச்சா? ஆடுங்க ரெண்டு பேரும்.எங்கே பிரபாவை இன்னும் காணல?.

பவள சங்கரி said...

அருமையா இருக்குங்க உங்க கவிதையும், நம்மோட ஜங்ஷன் போட்டோவும். இருந்தாலும் உங்களுக்கு ஊர்ப்பற்று கொஞ்சம் அதிகந்தானுங்கோவ்....

க ரா said...

இதுக்கு எதிர்கவுஜ வருமா :)

அன்புடன் அருணா said...

இன்னும் நிறைய இருக்கிறது ரயில் பயணங்களில்!

sakthi said...

அழகானதொரு ரயில் பயணக்கவிதை

எப்படியெல்லாம் யோசிக்கறீங்கண்ணா

நடத்துங்க

நடத்துங்க

VELU.G said...

//
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி

//
உண்மையான வரிகள்

மிகவும் ரசித்த வரிகள்

'பரிவை' சே.குமார் said...

உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..

Chitra said...

பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி

...... ஹையோ...... சான்சே இல்லை! ரொம்ப சரிங்க!!! ரயிலில் மட்டும் அல்ல, flight travels ல கூட. :-(

பழமைபேசி said...

//நசரேயன் said...
ம்ம்ம்
//

தளபதி... கொஞ்சம் வாய் திறங்களேன்...

கலகலப்ரியா said...

||இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்||

ஏன் விரும்பினீங்களோ...? இல்ல வெள்ளி.. குரு திசை ஏதாவதா..?

கலகலப்ரியா said...

||வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்தில்||

அப்போவாவது ப்ரேக் போடறதுதானே...

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...
ஒவ்வொரு பயணத்திலும் உண்டாகும் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க.. ||

||சே.குமார் said...
உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கீங்க..||

அட என்னோட போஸ்ட்லதான் இன்னைக்கு பாலாசியைக் காப்பி பண்ணி இருக்காய்ங்கன்னு நினைச்சேன்.. ஆனா..மவனே பாலாசி... இன்னைக்கு சே.குமார் உன்னைக் குறி வச்சு காப்பி அடிக்கிறாய்ங்கடா சாமீ... என்ன கொடுமை சரவணா... அவ்வ்வ்வ்..

vasu balaji said...

பழமைபேசி said...
//நசரேயன் said...
ம்ம்ம்
//

தளபதி... கொஞ்சம் வாய் திறங்களேன்...//

இல்லீங்க. இது புது டெம்ப்ளேட்டு. மொய் பின்னூட்டம்:))

ராமலக்ஷ்மி said...

ஒன்று அற்புதம்.

இரண்டு வாழ்க்கை தத்துவம்.

மூன்று யதார்த்தம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ரயில் பயணங்களில் என்னென்ன உணர்வு ஏற்படும் என்பதை அழகாக வடித்துள்ளீர்கள்.. கவிதையாய்..

Mahi_Granny said...

பயணத்தில் நாமே உணர்ந்ததை கதிர் கவிதையாய் சொல்லும் போது ஆஹா என்ன அழகாய் சொல்ல முடிகிறது என ரசிக்கிறேன்

மதுரை சரவணன் said...

ரயில் கவிதை ... அருமை.. வாழ்த்துக்கள்

dheva said...

//உறக்கத்தின் துவக்கத்தில்
கிழக்கு நோக்கி தொடங்கிய
தொடர்வண்டிப் பயணம்
இடவலமாய் மாறிமாறி நிறைகிறது
இடையிடையே விழிக்கும் மனதில்
இறுதிவரை நிகழவேயில்லை
திசை மாற்றம்//


பிறந்து வளர்ந்து பல வித கற்பிதங்கள் கொண்டு நகர்ந்தாலும் வாழ்க்கைப் பயணம் ஒரே திசையில்தான்.

//பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி//

பிறந்தது முதல் எவ்வளவு பிடிப்பு வாழ்வில்...மரணிக்கும் தருவாயில் எல்லாம் நீர்த்துதன் போகிறது.

//எல்லாப் பயணத்தின் நிறைவிலும்
இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
இறங்கியபின் இறங்கவேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம்போல் முட்டி மோதி
இறங்க யத்தனிக்கும் நேரத்தில்//

எதேதோ எண்ணி அள்ளிக் கட்டிக் கொண்டு அகங்காரத்தோடு மனிதன் ஓடினாலும், யாரேனும் மரணித்த பொழுதுகளில் வருகிறது ஞானம்....அப்போது எடுக்கிறோம்...ஆயிரம் சங்கல்பங்கள்....ஆனால் வழக்கம்போல மீண்டும் மீண்டும் மறந்து போகிறோம் நிலையமையை....!


இரயில் பயணம் கற்பிப்பதும் வாழ்க்கைப் பயணத்தை தானே கதிர்!

வாழ்த்துக்கள் கதிர் எதார்த்ததை கை பிடித்து அழைத்து வந்ததற்கு!

a said...

//
பயணத்தின் துவக்கத்தில்
இருக்கையின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
இறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
எந்தச் சலனமுமின்றி
//
ரொம்ப அருமையான வரிகள்...

Unknown said...

யதார்த்தமான ரயில் பயணத்தில் நானும் ...

ஸ்வர்ணரேக்கா said...

இரண்டாவது கவிதை நன்று....

சிவராம்குமார் said...

Amazing one!

Anonymous said...

ஒவ்வொரு ரயில் பயணமும் எதாவது ஒன்றை சொல்லித்தரும் :)))

பழமைபேசி said...

//Sivaramkumar said...
Amazing one!//

I second this...

rajasundararajan said...

முதலில் பாராட்டுகிறேன், எளிமையான தெளிவான மொழியில் எழுதியமைக்காக.

dheva இட்டுள்ள பின்னூட்டத்தில், உள்ளுறை தேடி வாசிக்க முயலும் அவருடைய ஆர்வம் ஊக்கப்பட வேண்டிய ஒன்று. ஆம், அப்படியும் பொருள்கொள்ளலாம்தான், ஆனால் 'கிழக்கு நோக்கி' என்பது 'தெற்கு நோக்கி' என்றிருந்தால் அந்தப் பொருளுக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் (நமது பண்பாட்டு வழக்கத்தின் படி).

'கிழக்கு நோக்கி' என்பது விடியலை நோக்கி என்றுதான் பொருள்கொள்ளப்பட வேண்டும். 'உறக்கத்தின் துவக்கத்தில்' என்பதால் இது கனவுக்கான எடுப்பு என்று நான் வாசிக்கிறேன். 'பயணத்தின் துவக்கத்தில்' என்பதும் அதற்குப் பொருந்தி வருகிறது. 'பயணத்தின் நிறைவில்' பிடிப்பும் பற்றுதலும் நீர்த்துப் போதலும், அதன்படி, இயல்புதான்.

கவிஞர் யோசித்தாரா தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க வாசகருக்கு உரிமை உண்டு. அந்த வகையில் dheva அவர்களது பார்வையும் ஒரு பொருள் என்று கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

அல்லது, 'போக ஈடுபாடு' பற்றிய கவிதையாக இருக்குமோ?

prabhu bharathi said...

really wonderful kavithai
athuvum kadaiseee stationaa iruntha innum kodumai. antha "sanyasi bisleri bottle" feed back supero super

ஈரோடு கதிர் said...

கருத்துக்களைப் பகிர்ந்த பாராட்டிய அனைவருக்கும் நன்றி

@@ தேவா...
உங்களுடைய புரிதலின் ஆழம் ஆச்சர்யப்படுத்துகிறது


@@ rajasundararajan

||யோசித்தாரா தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க வாசகருக்கு உரிமை உண்டு. ||

அய்யா.. நிச்சயமாக நான் அப்படியேதும் யோசிக்கவில்லை
மிக இயல்பாக ஒரு பயணத்தை ஒட்டிய மன அலைகளை பகிர்ந்தேன்.

அதே சமயம் வாசிப்பவருக்கு யோசிக்க உரிமை உள்ளதென்னபதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்..

வாசிப்பவர்கள் தன் போக்கில் வித்தியாசமாக யோசிப்பது ஒரு பக்கம் மிகுந்த மகிழ்ச்சியையும், ஒரு பக்கம் எழுத்தில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது

நன்றி

Unknown said...

அட போட வைக்கிறது இந்த எதார்த்த கவிதை...super