அறிந்த மனிதர்களை, அன்பாய் கை நீட்டும் உறவுகளைச் சந்திக்கும் போதேல்லாம் மகிழ்ச்சி வழிந்தோடுவது வழக்கமாகிப்போனது.
நேற்றும் அது போல் ஒரு வழக்கான தினம், ஆனால் மகிழ்ச்சி அதீதமாய் வழிந்தோடியதினம். காரணம் ஒன்றல்ல இரண்டல்ல பல. அதில்….
- நண்பர் பழமைபேசியின் புத்தகம் அறிமுகம்
- நண்பர் ஆரூரன் நடத்தும் விழா
- கோவையில் சட்டென எதிர்பாராமல் கூடிய பதிவர்களின் அருமையான எண்ணிக்கை
- மூத்த பதிவர்கள் மற்றும் பெண்பதிவர்களின் வருகை
- எழுத்தில் மட்டுமே பார்த்த, பதிவர்கள் தமிழ்மணம் காசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் ஆகியோரின் மிகத் தெளிவான உரை
- சேர்தளம் (திருப்பூர் பதிவர்களின்) குறித்த தினமலர் கட்டுரை
- முகப்புத்தக உறவுகளின் வருகை
என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பழமைபேசியின் ஊர்ப்பழமை அறிமுக விழா குறித்து முடிவானபோதே, எப்படியும் கோவையில் இருக்கப்போகிறோம், எனவே பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டால் என்ற எண்ணத்தில் ஒரு திட்டமிடாத திட்டமாக கோவையில் கூடுவோம் என்று இடுகையிட்ட போது, மிகக் குறைவான எதிர்பார்ப்புகள் மட்டுமே ஆட்கொண்டிருந்தது.
ஆனாலும் ஞாயிறு காலை முதல் மனதுக்குள் கொஞ்சம் சுவாரசியமும் பரபரப்பும் கூட ஆரம்பித்தது. மூன்று மணிக்கு மேல் பதிவுலக நண்பர்கள் ஓரு சிலராய்க் கூடி வட்டமாய் அமர… பின்னர் நிமிடத்திற்கு நிமிடம் வட்டம் பெரிதாகிக்கொண்டே போனது
தமிழ்மணம் காசி, லதானந்த, வானம்பாடிகள் பாலா, க.பாலாசி, சஞ்சய் காந்தி, முனைவர் கந்தசாமி, தாராபுரத்தான், வெயிலான் ரமேஷ், தமிழ்பயணி சிவா, மஞ்சூர் ராசா, வின்சண்ட், பால கணேஷ், மயில் விஜி, தாரணிப்பிரியா, வீட்டுப்புறா சக்தி, ஈரோடு கார்த்திக், லலிதா முரளி, கலாராணி, வடகரை வேலன், செந்தில் நாதன், ராமன் குட்டி, நிகழ்காலத்தில் சிவா, நந்தகோபால், பொன். கருணாநிதி, சுப்பையா வாத்தியார் (மன்னிக்கவும் இன்னும் மூன்று பதிவர்கள் பெயரை மறந்துவிட்டேன்) என பதிவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, பதிவர்கள் அறிமுகப் படலம் நிறைவேறி, முதலில் சந்திப்பவர்கள் ஆச்சர்யங்களில் திளைத்து, வழக்கம்போல் கலாய்த்துக்கொண்டிருக்க அரங்கு நிறைந்தது… விழா தொடங்கியது
மிக நேர்த்தியான விழாவிற்கு கூடுதல் பலம் சேர்த்தது நம் பதிவர்கள் ஆற்றிய உரை. எழுதுவது பலருக்கு எளிது, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கூட்டத்திற்கு முன்பு ஒலிவாங்கியில் பேச நிர்பந்திக்கும் போது பலரின் உயிரை ஒலிவாங்கி சுருட்டி இழுப்பது போல் தோன்றும். தமிழ்மணம் காசி அவர்களின் புத்தகம் குறித்த அறிமுகவுரை மிக நேர்த்தியாக தெளிவாக இருந்தது விழாவின் வெற்றிக்கு கனம் கூட்டியது. அடுத்து புத்தகம் குறித்து தங்கள் பார்வைகளை பகிர்ந்த வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி மூவருமே வேறு வேறு கோணங்களில் புத்தகத்தில் இருக்கும் ஆழ்ந்த எழுத்துக்கான வெகுமதியான வார்த்தைகளை மிக அருமையாக அள்ளித் தெளித்தனர். குறிப்பாக வெயிலானின் தயாரிப்பு மிக அற்புதம்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு.தங்க.விசுவநாதன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ், திரு.மருதால அடிகளார், திரு.சுப்பிரமணி, திருமதி. இந்திராணி சுப்பிரமணியம் ஆகியோர் சிறிதும் தடம் பிசகாமல் புத்தகத்தில் உள்ளவற்றையொட்டியே பேசியது விழாவின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்தது.
விழாவில் பதிவர் பழமைபேசி, அட்டைப் படங்களை அளித்த கருவாயன் (எ) சுரேஷ்பாபு ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேடையை அலங்கரித்த அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தினங்களில் நேற்றும் ஒன்று, இந்த இனிய விழாவிற்கு காரணமாய் இருந்த பழமைபேசி, ஆரூரன் மற்றும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.
45 comments:
அந்த கடைசிப் படம் கலக்கல்...
எங்க அண்ணனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஹை... மீ த ஃபர்ஸ்ட்டோய்....
வாத்தியார் அய்யா செல்லா போன்றவர்களை காணலையே ?
ராமராஜ்ல இருந்து விளம்பர காசு வந்தா பதிவுன்னு உங்களுக்கு சேருமா? பை வச்சிருக்கிற எனக்கு சேருமா?
நிகழ்ச்சி மிக அருமையாக வந்துள்ளது என்பது உங்களின் ஆனந்த எழுத்துகளில் தெரிகிறது. பழமைபேசிக்கு என் வாழ்த்துகள்.
விழா முடியும் வரை இருக்க இயலாமற் போய்விட்டது. மன்னிக்கவும்
:D...
படப்பகிர்வுக்கு நன்றி!
I Missed the Function....
லட்டு, மிக்ஸர், காபியை பற்றி சொல்லாமல் விட்டதை கண்டிக்கிறேன் :))
:(
i missed...
romba feel panna vachuteenga...
தேர்ந்த முறையில் விழாவைத் தொகுத்திருக்கீங்க கதிர். நன்றி!
நல்லா வந்துருக்கு கதிர்.
அருமையான படங்களும், அழகிய கட்டுரையும். பதிவர்கள் திருவிழா போலிருந்தது.
ஆமாங்க மாப்பு, சுப்பையா வாத்தியார் உள்ளிட்ட மேலும் பல பதிவர்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து நானும் நண்பர்களும் இன்னும் மீளவே இல்லை....
நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தவர் அனைவருக்கும் நெஞ்சார்த நன்றிகள்.
வெயிலான் உரை நான் இருந்த இடத்தில் எதிரொலியுடன் கலந்திருந்தது.... காணொலியில் அவரது உரையைக் காண காத்திருக்கிறேன்.
ஆமாம் எங்க அய்யாவ பைக்குல கூட்டிட்டு போறது யாரு?
பிரபாகர்...
உங்கள் மகிழ்வில் பங்குபெற இயலாமையை உங்கள் பதிவு தீர்த்து விட்டது!
பகிர்விற்கு நன்றி கதிர்.
படங்கள் சேர்த்தமைக்கும் நன்றி. அந்த கடைசிப் படம் :)
பகிர்விற்கு நன்றி !
தொகுப்பிற்க்கும், புகைப்படங்களுக்கும் நன்றி..........
மணி அண்ணனுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ...
கூடுதல் வேலை காரணமாக வர இயலாமல் போய் விட்டது.. எப்படியும் வந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. விஷா நல்லபடியாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி.. உங்களை எல்லாம் ஒரு சேர பார்க்க இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை..
கடைசி படம் கதிரின் additional touch to posting . நன்றி கதிர்
அன்பின் கதிர்
விழாவினிற்கு வருகிறேன் எனச் சொல்லி இருந்தேன் - ஆனால் ஆக்ஸ்ட் முதல் நாள் ஞாயிறு மாலை 4 முதல் 07:30 வரை எங்கள் பொது மேலாளர் தலைமையில் கிளை மேலாளர்கள் கூட்டம் நடை பெற்றமையால் வர இயலவில்லை. விழா வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
நல்லாத் தொகுத்திருக்கிங்க கதிர்.. மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் உங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் விட்டுட்டிங்களே.. அவையடக்கமோ..? :) உங்கள மாதிரி இயல்பாய் பேச எனக்கெல்லாம் வெகு காலம் ஆகும் சாமி..
கடைசி படத்தில் ராம்ராஜ் பேக் வச்சிக்கிட்டு இருப்பது நடிகர் மாதவனோ ???
ராம்ராஜ் பேக் வச்சிட்டு இருக்கிறவரா? அசீத்துக்கு அண்ணன் விஜய்க்கு தம்பி.. மாதவனுக்கு மச்சான்.. :))
பகிர்விற்கு நன்றி...
வழக்கம் போல வாழ்த்துகளும், நன்றிகளும்.. கூடவே ஒரு பெருமூச்சும், வர முடியாமைக்காக.!
சந்தோசமா இருக்கு கதிர்.
நல்ல கூட்டமாவுல இருக்கு. மண்டபம் நிறைச்சு!
முந்தில்லாம் பதிவர் சந்திப்புகள் என்ற தலைப்புகளில் வரும் புகைப் படங்களில், நாலஞ்சு நண்பர்களும் ஒரு காந்தி தாத்தாவும், ஒட்டி நாப்பது அம்பது பதிவுகளும், பார்த்த நினைவு. ஸ்ட்ராங் ஆகிட்டு இருக்கமோ? :-)
சுத்தி வைங்கப்பா. :-))
வாழ்த்துகள் நண்பர்களுக்கு!
சிறப்பாக விழா நடந்தேறியது என்று சொல்ல வேண்டியது இல்லை.. படங்களுக்கும் உங்கள்ப்திவுக்கும் மிக்க நன்றி
cablesankar
நல்ல பகிர்வு. படங்களும் அருமை. வாழ்த்துக்கள்!
கதிர்,
ஒரு சிறந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டது.
எல்லாப் படங்களும் அருமை.
கடைசிப்படம் “மிகமிக அருமை”.
(அந்தப் படத்தை மட்டும் ஏன் தனியா போட்டீங்க? விளக்கம் சொல்லியே ஆகனும்.)
பகிர்விற்கு நன்றி.
இது போன்ற நிகழ்வுகள் வாசிக்கும் போது மகிழ்வாய் உள்ளது. பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி!
Padangalukku keezhey peyar pottirunthal naala irunthirukkum.
அசத்தறீங்க. வாழ்த்துகள் அனைவருக்கும்.:)
--
பாலா சார் டூ வீலரிலும் சீட் பெல்ட் அணிந்துள்ளது ஏனோ? :))
பழமை பேசிக்கு வாழ்த்துக்கள்.. பகிவுக்கும் படங்களுக்கும் நன்றீ கதிர்..
congrats pazamaipesi.
thanks to kathir.
this is my first kathir.
I also lived in Erode.
www.vijisvegkitchen.blogspot.com.
வாமு.கோமுவின் தீடிர் வருகையால் விழாவுக்கு வர முடியாமல் போச்சு!
//தமிழ்மணம் காசி அவர்களின் புத்தகம் குறித்த அறிமுகவுரை மிக நேர்த்தியாக தெளிவாக இருந்தது //
ஹி ஹி... நல்லவேளை யாரும் இன்னும் வீடியோவைப் போடுல. இல்லாட்டி நம்ம இழுப்பு, கனைப்பு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.
//எழுதுவது பலருக்கு எளிது, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கூட்டத்திற்கு முன்பு ஒலிவாங்கியில் பேச நிர்பந்திக்கும் போது பலரின் உயிரை ஒலிவாங்கி சுருட்டி இழுப்பது போல் தோன்றும்.// நம்மளுக்கும் நேத்து என்னமோ அப்படித்தான் தோணுச்சுங்க கதிர்.
மேலும் திடீரென்று வீட்டுக்கு வந்த விருந்தினர்களால உடனே கிளம்பவேண்டியிருந்தது. ஆகவே மேற்கொண்டு பேசமுடியவில்லை. இன்னொரு முறை பார்ப்போம்.
//SanjaiGandhi™ said...
நல்லாத் தொகுத்திருக்கிங்க கதிர்.. மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் உங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் விட்டுட்டிங்களே.. அவையடக்கமோ..? :) உங்கள மாதிரி இயல்பாய் பேச எனக்கெல்லாம் வெகு காலம் ஆகும் சாமி..//
வழிமொழிகிறேன்.
ஆகா..நம்ம போட்டோவும் இருக்கு..
வாழ்த்துகள் கதிர்.. ஞாயிறு அன்று சந்திப்போம்..:-))
வாழ்த்துக்கள் கதிர்...எல்லா போட்டோவை விட வானம்பாடிகள் ஐயா பேக் மாட்டி பைக்-ல உட்கார்ந்திருக்கும் அந்த கடைசி போட்டோ சூப்பரு...........
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
பகிர்விற்கு நன்றி
பழமைபேசி அண்ணனுக்கு என் வாழ்த்துகள்.
Post a Comment