என்ன சொல்ல?

உடல் முறுக்கி உயிர் வலிக்க
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்

===========




அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின்  வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…



===========



25 comments:

அன்புடன் அருணா said...

/எழுத்துகளில்லா பதில்களோடு…/
அருமை!

vasu balaji said...

ரெண்டாவது டாப்பு. முதலுக்கு முக்கியமான சரக்கு மூடு வேணுமில்ல?

க ரா said...

ரெண்டுமே சூப்பர்....

ராமலக்ஷ்மி said...

//துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…//

அழகு.

//வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//

மிகச் சரி:)!

dheva said...

முதல் கவிதையில் மயங்கிய மனம் இரண்டாவதில் ஸ்தம்பித்து நிற்கிறது...கதிர்.!

தேவன் மாயம் said...

ரெண்டு கவிதையும் அருமை கதிர்!!

க.பாலாசி said...

//பூக்கும் வியர்வைத்துளியில்//

அடடா வியர்வையக்கூட பூக்க வைக்க முடியுது உங்களால...

//இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//

அந்தக்கதைய ஏன் கேக்குறீங்க..

ரெண்டாவதுக்கு வார்த்தைகளற்ற வெறுமையே...

VELU.G said...

இரண்டு கவிதைகளும் அருமை

இரண்டாவது மிகவும் ஈர்த்தது

Anonymous said...

அடர்வீச்சம் நல்லாருக்கு

நாடோடி இலக்கியன் said...

முதலாவது : ஆமாங்க.

இரண்டாவது : அருமை.

நசரேயன் said...

அடர் வீச்சமாய் அடிக்கிறது
உன் உடலின் வாசம்
பூரித்து நீந்திய முடிகள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த சோப்பும்
தேடித்தேடி உறிஞ்சிய நீரும்
தண்ணியில்லா வாளியோடு

பவள சங்கரி said...

தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும் எழுத்துக்களில்லா பதிலோடு.......நன்றாக உள்ளது.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கதிர்...

||என்ன சொல்ல?||

நான் கேட்டேனா... ஸ்ஸ்ஸபா...

பனித்துளி சங்கர் said...

///////பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
///////

வார்த்தை ஜாலம் அருமை .

மதுரை சரவணன் said...

//வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//
கதிர் கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Chitra said...

இரண்டு கவிதைகளிலும் உள்ளம் பிரமிக்கத்தக்க கருத்துக்களையும், வார்த்தைகளை அழகாய் கோர்த்து இருக்கும் பாங்கினையும் ரசிக்கிறேன்.

தினேஷ்குமார் said...

வணக்கம் கதிர்
என்ன சொல்ல ? எனும் தலைப்பு கொடுத்து சொல்லிற் சொல்லாதவற்றின் சொற்கள் சொன்னது அருமை
http://marumlogam.blogspot.com

Unknown said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ...

பழமைபேசி said...

யே... யாராவது இவருக்கு, ”சிந்தனைக்கவி”ன்னு ஒரு பட்டத்தைக் கொடுங்கப்பா....

yeskha said...

//வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//

எல்லோருமே கணிப்பொறி தட்டிப் பழகிப்போனோமே... வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல் நினைவு வங்கியில் மட்டும் இப்போது...

Deepa said...

ரெண்டு கவிதையுமே ரொம்ப நல்லா இருக்கு!

செல்வா said...

//வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//
உண்மைங்க.

சத்ரியன் said...

//எழுத்துகளில்லா பதில்களோடு…//

என்னத்தை சொல்ல?

'பரிவை' சே.குமார் said...

//பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது//
என்ன வரிகள்.
அருமை கதிர் அண்ணா.

Thenammai Lakshmanan said...

ராமலக்ஷ்மி said...
//துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…//

அழகு.

//வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்//

மிகச் சரி:)!
//


ராமலெக்ஷ்மி சொன்னது சரி..
சொன்னதை விட சொல்லாததும் அதிகம் இதில் நிரம்பி இருக்கு