Jan 19, 2010
சாயும் துலாக்கோல்
மேகக் கூடல் உதறிய மழைத்துளியாய்
தொப்புள்கொடி அறுந்த நாள் முதல்
நெளிந்து வளைந்து ஓடுகிறேன்
வாழ்வினில் ஒரு மனிதத் துளியாய்....
தொண்டைக்குழிக்குச் சற்றும் கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகத் தொடர்ந்து படிந்திட....
அன்பு கனிவு காதல் காமம் கர்வம்
கோபம் குரோதம் செருக்கு பணிவு துரோகம்
எல்லாம் இயல்பாய் திணிக்கப்படுகின்றது
தேடித்தேடிப் பற்றுகிறேன் இன்னும் சில
விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
வேடம் மாற்றி மாற்றிப் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
எனினும் மேலுயுர்கிறது நல்லவன் தட்டு!
-
Subscribe to:
Post Comments (Atom)
முதியதோர் உலகு
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
33 comments:
அருமையான கவிதை கதிர்..
நம் வாழ்க்கைப் பயணத்தை எளிமையாக அழகாக..
கவிதை அருமை கதிர்.
கவிதை நன்று.
அருமை.... ப்ளஸ் யதார்த்தம்...
ம்ம்
மிக நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
//அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்//
கவிதை வரிகள் கலக்கல்..
பலமும் பலவீனமும் உள்ளது தான் மனித வாழ்க்கை .
vதொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
நட்சத்திரம் நடந்து காட்டுது.
//மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய் //
பாருங்க மாப்பு, இப்ப எல்லாம் மின்நிறுத்தல் பாவிக்கிற காலம்.... அதனால, மேல நிக்கிறவன்தான், ச்சீ, மேல நிக்கிறதுதான் மேல்னு நினைக்கிற காலம் இது! இஃகிஃகி!!
வணக்கம் கதிர்
கவிதை நல்லாயிருக்கு
nice kadir
கதிர், விதவிதமாய் முகமூடிகள் அணிந்துதான் ஆக வேண்டும்.
நன்றாக உள்ளது
அன்புடன்
சந்துரு
ஒரு நல்ல
self appraisal.
அது இருக்கிற வரைக்கும்
தீமை
உங்கள் கூடாரத்தை அனுகாது.
மனித மனதை துள்ளியமாய் எடைப் போட்ட கவிதை....இதாங்க உண்மை எதார்த்தம்....போர்வையை போர்த்திக்கிட்டு வாழ்வதென்பது நிர்பந்தம்......
நல்ல கருத்து வாழ்த்துகள்
மிக அருமையாக இருக்கிறது..
மூக்கு வழியாக தழுதழுத்த குரலில் 'தெரியலியேப்பா' என்று சிறுகுழந்தையிடம்பொய் சொல்வதை விட (நாயகன் கமல்), நல்லவன் தட்டு மேல் என்றுசொல்லுதலே மேல்!
கதிர், நீங்க ரொம்ப நல்லவருங்க!
/தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது/
வியந்தேன்.
ம்ம்ம்.அருமை.
நிதர்சமான கவிதை....
யதார்த்தத்தை அழகாக விளக்கி விட்டீர்கள் அண்ணா....
//மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய் //
அருமை !
நட்சத்திர வாழ்த்துகள் கதிர்
//ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....//
//மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்//
என்னதான் செஞ்சாலும் அத கீழ இறக்க முடியறதில்ல.
என்ன பண்றது நானும் உலகத்தோட ஓடனுமே...(இந்த நெனப்புதான் அந்த தட்ட கீழ எறங்கவிடாம செய்யிது)
///அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்///
மனித வாழ்வின் பரிமானம்....அருமை கவிதை வாழ்த்துகள் அண்ணே...
நன்றி @@ ச.செந்தில்வேலன்
நன்றி @@ முகிலன்
நன்றி @@ butterfly Surya
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ நசரேயன்
நன்றி @@ கமலேஷ்
நன்றி @@ Sangkavi
நன்றி @@ நிலாமதி
நன்றி @@ தாராபுரத்தான்
நன்றி @@ பழமைபேசி
நன்றி @@ T.V.Radhakrishnan
நன்றி @@ ஆ.ஞானசேகரன்
நன்றி @@ ஆரூரன்
நன்றி @@ தாமோதர் சந்துரு
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ தமிழரசி
நன்றி @@ உயிரோடை
நன்றி @@ Gowripriya
நன்றி @@ ஜெகநாதன்
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ அகல்விளக்கு
நன்றி @@ கோவி.கண்ணன்
நன்றி @@ க.பாலாசி
நன்றி @@ seemangani
:-)
அருமையான கவிதை :)
எனக்கு அப்பவே தெரியும்...
:--)))))
எளிமையான கவிதை
intha kavithai nallave illa
nu than solla poren....
nalla irukku nalla irukku nnu solli solli tired agi pochu:-))
but unmai ..... sooper ah irukkeeee:-)
அருமையான கவிதை.
அன்பின் கதிர்
அருமை அருமை கவிதை - சிந்தனை அருமை
எளிய சொற்களில் அழகுக் கவிதை
எத்தட்டு மேலே இருந்தாலும் - நாம் அடிப்படையில் நல்லவர்கள் தான் கதிர். இயல்பு வாழ்க்கிஅயில் இதெல்லாம் சகஜம்.
மழைத்துளி - மனிதத்துளி
தொண்டைக்குழிக்குக் கீழ் துலாக்கோல்
திணிக்கப்படுவதும் - தேடிப் பற்றுவதும்
வர்ணம் பூசி வேலம் மாற்றி
கற்பனை வளத்திற்குப் பாராட்டுகள் கதிர்
நல்வாழ்த்துகள்
அருமை அண்ணா
அருமை அண்ணா
Post a Comment