தொடர்ந்து தொலையும் நேர்மை?


வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பின், முன்னாள் காதலனோடு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உறவால் கணவனை 26 தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து காதலன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்து, உடலை ஆந்திரமாநிலத்துக்கு கடத்தி சென்று வீசிய கும்பலைப்பற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கூடுதலாக காவல் நிலையத்தில் குனிந்து அமர்ந்திருந்த பெண்ணின் தலையை ஒரு பெண் அதிகாரி தடவி விட்டுக் கொண்டிருந்தார். உடலை எடுத்துச்சென்ற வாகனம் காட்டப்பட்டது. காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக, தொலைக்காட்சிக்கு விபரமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.


இதெல்லாம் சகஜம் என்ற மனநிலைக்கு ஏற்கனவே தள்ளப்பட்டிருந்த நான் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்

மகள் அருகில் வந்தாள் “அப்பா... உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?”

“என்ன குட்டி?”

“இதையெல்லாம் நம்மகிட்ட ஏம்ம்ம்ப்ப்ப்பா சொல்றாங்க?”

குழந்தைகளின் கேள்விகளில் ஒருபோதும் ஒளிவு மறைவு, சூது வாது இருப்பதில்லை, எப்போதுமே நேர்மை நிரம்பியிருக்கும்...

அன்று என்னுடைய பதிலில் நேர்மை இல்லவே இல்லை.

என்னுடைய பதிலில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரத்திலும் கூட...


34 comments:

இய‌ற்கை said...

ம்ம்..என்ன சொல்ல..நேர்மையைத் தொலைப்பதுதான் வாழ்க்கை எனப் பழகி விட்டது.:-(

வானம்பாடிகள் said...

இதுக்கு இருக்கிற துணிவு நேர்மையா அய்யா சாமி, எனக்கு இப்படி வாழ விருப்பமில்லைன்னு போக இல்லாம போச்சே.

ஊடக சுதந்திரம்னு கேட்டாலே எரிச்சலா வருது. இவனுங்க வசதிக்கு பயன் படுத்திக்கறதா? பயனாளர் உரிமைன்னு ஒன்னும் இல்லையா?

பாப்பா கேட்டா மாதிரி இத ஏன் நமக்கு சொல்றாங்க? சொல்ல வேண்டிய கொலைகளை, கொள்கைகளை ஏன் சொல்லல.

இதுக்காவது பதில் சொல்லுங்க
ஆமாம் நேர்மைன்னா என்னாங்க:((

காவிரிக்கரையோன் MJV said...

நீங்கள் சொன்னது ஆயிரம் விழுக்காடுகள் உண்மை கதிர். பதில் சொல்லப் முடியாத நிலைதான். ஊடகங்கள் பற்றி கேட்கவே முடியாது. ஐயோ ராஜா ஆறு ராணி யாரு போன்ற முற்போக்கான நிகழ்ச்சி நடத்த இருக்கும் சுதந்திரம்.... மிகவும் வேதனைதான்......

இராகவன் நைஜிரியா said...

சரியான இடுகை... என்ன பதில் சொல்வது என்று நீங்கள் முழித்த மாதிரித்தான் நானும் பல சமயங்களில் முழிக்கின்றேன்..

பரிசல்காரன் said...

மகளுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கள்!

பரிசல்காரன் said...

வானம்பாடிகளின் கேள்வியும் சிந்திக்க வைக்கிறது! பதில்தான் இல்லை!!!

பா.ராஜாராம் said...

முகத்தில் அறையும் உண்மை!

கலகலப்ரியா said...

:)..

பிரபாகர் said...

கதிர்,

இத்தோடு மட்டுமல்ல, வெகு விரைவில் ‘நடந்தது என்ன?’ என விலா வாரியாய் சொல்லுவார்கள், சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடு.

குழந்தைகளின் நிலையை எண்ணி மிக வேதனையாய் இருக்கிறது. இந்த பரதேசிகள் எப்போது விடுவார்களோ இந்த சமுதாயப் பாழ்ப்படுத்துதலை...

எனது இடுகை ஒன்று இதைச்சார்ந்து...

http://umaprabhu.blogspot.com/2010/01/blog-post.html

பிரபாகர்.

butterfly Surya said...

நேர்மை = தமிழ் ஊடகங்கள். அதுவும் அந்த பிரதர்ஸ்..

முகிலன் said...

//இதுக்காவது பதில் சொல்லுங்க
ஆமாம் நேர்மைன்னா என்னாங்க:((
//

ஐயோ ஐயோ இந்த மாமாக்கு இது கூடத் தெரியல. நேர்மைன்னா ஹமாம்.

புலவன் புலிகேசி said...

ஊடகங்களில் எல்லாம் வியாபாரம்..என்ன செய்வது

seemangani said...

சரியாய் சொன்னிங்க அண்ணே...பல கேள்விகளுக்கு பதிலே தெரியாமல் போவது கூட உண்டு...நல்ல பகிர்வு...

Anonymous said...

நிஜங்களின் முன் நேர்மை என்ன செய்யும்?

// வானம்பாடிகள் said...
இதுக்கு இருக்கிற துணிவு நேர்மையா அய்யா சாமி, எனக்கு இப்படி வாழ விருப்பமில்லைன்னு போக இல்லாம போச்சே. //

ஆமாம் உண்மை தான் ஒரு உயிரையும் அழித்து தன் வாழ்க்கையும் தொலைத்து அடைந்தது தான் என்ன? இன்னும் இப்படி எத்தனை உதாரண நிகழ்வுகள் வேண்டும் இப்படி பட்டவர்கள் திருந்த..?

T.V.Radhakrishnan said...

//இதுக்கு இருக்கிற துணிவு நேர்மையா அய்யா சாமி, எனக்கு இப்படி வாழ விருப்பமில்லைன்னு போக இல்லாம போச்சே//

Repeateyy

அகல்விளக்கு said...

ஊடக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா (??!!!)

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு. ஊடங்ககள் கட்டுப்படுத்த இருக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். நன்றி.

KaveriGanesh said...

சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com

ரோஸ்விக் said...

நேர்மைனா .... ஹமாம்னு தான் நம்ம ஊடக அம்மாக்களும் சொல்றாங்க...:-)

நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு.... நம் ஊடகங்கள் விதைக்கும் விஷ விதைகள் ஏராளம் என்பதில் ஐயமில்லை. மிகுந்த மனவருத்தங்கள் தான் கதிர். :-((

S.A. நவாஸுதீன் said...

இப்பெல்லாம் ஊடக சுதந்திரமென்பது பிசினஸ் ரிலேட்டட் தான்.

உண்மை முகத்திலறைந்தது போல் இருக்கு.

க.பாலாசி said...

//அன்று என்னுடைய பதிலில் நேர்மை இல்லவே இல்லை. என்னுடைய பதிலில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரத்திலும் கூட...//

உண்மை...

Rathinasami said...

வரிக்காசுல நடக்கும் நிர்வாகம் அதனாலே வரி செலுத்துபவன் செய்தி தெரிஞ்சிக்கனும் எனும் அடிப்படை பதில் கூடவா உங்களுக்கு சொல்லத் தெரியவில்லை

இப்படி கழிவிரக்கமான வாக்கியங்களுடன் பதிவுகள் அமைத்து நீங்க ஏன் எங்களிடம் சொல்கிறீர்களோ அதே காரணம் தான்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இய‌ற்கை

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ காவிரிக்கரையோன் MJV

நன்றி @@ இராகவன் நைஜிரியா

நன்றி @@ பரிசல்காரன்

நன்றி @@ பா.ராஜாராம்

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ butterfly Surya

நன்றி @@ முகிலன்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ seemangani

நன்றி @@ தமிழரசி

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ அகல்விளக்கு

நன்றி @@ பித்தனின் வாக்கு

நன்றி @@ KaveriGanesh

நன்றி @@ ரோஸ்விக்

நன்றி @@ S.A. நவாஸுதீன்

நன்றி @@ க.பாலாசி

நன்றி @ Rathinasami

ஆரூரன் விசுவநாதன் said...

யாரு வாரிசு???????????

பவானி சொம்பைன்னா சும்மாவா?

ஹி.....ஹி.....


குட்டிக்கும் தெரியும் அப்பா பொய் சொல்லப் போறார்ன்னு.......

சங்கர் said...

{{{{{{ மகள் அருகில் வந்தாள் “அப்பா... உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?”

“என்ன குட்டி?”

“இதையெல்லாம் நம்மகிட்ட ஏம்ம்ம்ப்ப்ப்பா சொல்றாங்க?” }}}}}}}}}}}}

சிந்திக்கவேண்டிய விசயம்தான் . பகிர்வுக்கு நன்றி !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

நசரேயன் said...

ம்ம்..

Anonymous said...

The media is publishing these incidents , So that we dont commit the same mistakes and suffer later.

வால்பையன் said...

உங்க பொண்ணு கேட்டது தப்பு!

டீவீகாரங்க எதை வேணும்னாலும் காட்டுவாங்க, அதையெல்லாம் நீங்க ஏம்பா பாக்குறிங்கன்னு கேக்கனும்!

எங்க வீட்ல டிஸ்கவரி, சுட்டி டீவி, கார்டூன் நெட்வோர்க் தவிர வேற சேனல் ஓடாது!

Chitra said...

“இதையெல்லாம் நம்மகிட்ட ஏம்ம்ம்ப்ப்ப்பா சொல்றாங்க?”.....................மிகவும் யோசித்த வைத்த கேள்வி. நம்மூர் டிவி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் மன நிலைக்கு எந்த அளவு மதிப்பு தருகிறது?

வினோத்கெளதம் said...

சில செய்திகள் அளவுக்கு அதிகமாக எல்லை மீறி போகும் பொழுது அசிங்கமாக தெரிகின்றன..!

முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பரே..

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்றும் ஒரு செய்தி. ஒரு அடாவடிக்கணவனை தூங்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியிருக்கிறார் ஒரு மனைவி.

இதுபோன்ற செய்திகளால் மனம் கொடுஞ்செய்திகளுக்குப் பழக்கப்பட்டுப்போய் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். ஒருவகையில் இவை பொதுவில் வைக்கத்தேவையில்லாத செய்திகள் என்றே நானும் கருதுகிறேன். ஆனால் ஊடகங்களின் தேவை.?

'ஒருவர் விபத்தில் இறந்தார்' என்று சொல்வ‌தற்குப்பதிலாக, 'ஒருவர் லாரி மோதி உடல்நசுங்கி, மண்டை உடைந்து பரிதாபமாக செத்தார்' என்று சொல்லி இன்னும் வக்கிரத்தேவையை (அவர்களது+மக்களது) பூர்த்திசெய்துகொள்வதாக‌த்தான் எழுதுகிறார்கள். என்ன செய்ய.?

T said...

Until we have censorship for TV in India, we can not stop our channels to do this. Until that time, I would say turn off your TV and spend quality time with family.

rohinisiva said...

PAA என்ற ஹிந்தி படத்தில் அரசியல் வாதியாக வரும் நடிகர் சொல்வது போல ஒரு கேமரா, ஒரு மைக்,அதை ஒலிபரப்பு செய்ய ஒரு விண்கலம் நீங்க செய்யறது எல்லாம் ஒரு பரபரப்புக்காக மட்டுமே!
எல்லாத்தையும் செய்தி ஆக்கணும் எவன் செத்தாலும் சரி பொழச்சாலும் சரி !