கேமரா! சாக்கிரதைங்கோ

அன்னைக்கு ஒருநாளு... பாப்பா வெளையாடணும்னு சொல்லுச்சேனு, பூங்காவுக்கு கூட்டிட்டுப் போனேனுங்க... அதென்னடானு பார்த்தா நெம்ப பிசியா இருக்குற பூங்காவா போச்சுங்க... எங்க பாத்தாலும், திமு திமுனு ஒரே கூட்டம்.

எங்க பார்த்தாலும் கொழந்தைக, பெரிய புள்ளைக, கல்யாணம் ஆன பொம்பளைங்கனு ஒரே கூட்டம்னா கூட்டம். நானும் பாப்பாவ ஒரு எடத்துல வெளையாட விட்டுப்போட்டு, ஓரமாக உட்கார்ந்து வலையில என்னத்த எழுதலாம்னு ஓசனை பண்ணிகிட்டுருந்தேன்...

கொழந்தைகளுக்கு செரி சமமா... வயசு வந்த புள்ளைகளும், பெரிய பொம்பளைங்களும் சந்தோசமா ஓடியாடி வெளையாடிட்டு இருந்தாங்க... பரவாயில்லையே பெருசுகளும் கொழந்தைகளாட்ட வெளையாடுதுகளேனு ஆச்சரியமா பாத்துகிட்டிருந்தேன்..

இன்னொரு ஓரமா பார்த்தா ரெண்டு சில் வண்டு பசங்க ஒக்காந்திருந்தாங்க. மஞ்ச சட்டை போட்டவன் சுத்தி பராக்கு பாத்துகிட்டுருந்தான், நீலக் கலர் சட்டை போட்டவன் தலைய நட்டுக்கிட்டே இருந்தான். அந்த பராக்கு பார்த்தவன் மட்டும் ஏதோ அப்பப்போ தலை நிமிராம ஒக்கார்ந்திருந்தவங்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தான், இவன் அடிக்கடி கையில வச்சிருந்த செல்போனை மெதுவா மெதுவா ஒவ்வொரு பக்கமா திருப்பிகிட்டிருந்தான், ஆனா தல மட்டும் நிமிரவேயில்லீங்க...

அவனுங்களை பார்த்தா என்னுமோ தப்பு பண்ற ராஸ்கோலுவ மாதிரியே தெரிஞ்சுதுங்க. நானும் பெரிய இவனாட்டம் அவனுங்கள நோட்டம் உட ஆரம்பிச்சேன்...

அப்போதான் ஒன்ன கவனிச்சேன், அந்த நீலச் சட்டைக்காரன் செல்போன் வச்சிருந்த தெசையில பார்த்த.. அங்கே கொழந்தைங்க வெளையாடற சறுக்கல் பலகையில பெரிய பொண்ணுங்க செல பேரும், கனகாம்பரம் வச்சிருந்த நாலஞ்சு பொம்பளைங்களும் போட்டி போட்டுக்கிட்டு ரொம்ப சந்தோசமா சறுக்கல் உட்டுகிட்டிருந்தாங்க....

திடீர்னு மண்டையில என்னமோ பளிச்சுனு தோணுச்சு, அட இவனுங்க அந்த பொம்பளைங்களும், பொண்ணுகளும் சறுக்கி விளையாடறத செல் போன் கேமராவுல வீடியோ புடிப்பானுங்க போல இருக்கேனு... ஒரு நிமிசம் மனசு திக்னு ஆயிப்போச்சு.

நெசமாவே அப்படிப் பண்ணுவானுங்களானு ரொம்ப ஓசனையோட அவனுங்களையே உத்துப் பார்த்தா, அந்த மஞ்ச சட்டக்காரன், என்னையே ஒரு நிமிசம் பார்த்தான், டக்னு எந்திரிச்சு நீலச் சட்டக்காரன இழுத்துக்கிட்டு வேகவேகமா என்னை ரெண்டு வாட்டி திரும்பிப் பார்த்துட்டே ஓட்டமும் நடையுமா போக ஆரம்பிச்சுட்டான். எனக்குன்னா கொழப்பம்னா கொழப்பம், நெசமாவே அவனுங்க கேமராவுல படம் புடிச்சிக்கிட்டி இருந்துருப்பானுங்களா, அப்படியில்லீனா நான் பாக்குறதப் பாத்தவொடனே ஏன் அங்கிருந்து ஓடிப்போனானுங்கனு...

இங்க பார்த்தா அந்த பொம்பளைங்க சும்மா சிரிப்பும் கும்மாளமுமா சறுக்கறதும், ஓடிப்புடிக்கறதுமா வெள்ளந்தியா வெளையாடிக்கிட்டு இருந்தாங்க...

வலையில சில தளங்களுல ஹிடன் கேமார பிக்சர்னு போடற கருமாந்திரம் இப்படித்தான் பொது எடத்தில, அவங்களுக்கே தெரியாம, அசாக்கிரதையா இருக்குறப்போ எடுப்பானுங்க போல இருக்குங்க...

பஸ்லெ, பொது எடத்துல ”திருடங்க சாக்கிரதை”, ”பிக்பாக்கெட் திருடங்க சாக்கிரதைனு” எழுதியிருக்குறது கூட்வே “செல் போன் கேமரா சாக்கிரதைனு” எழுதி வெக்கவேணும் போல இருக்குதுங்க...

அதுதான்.. ரோட்டோரம் பால் குடுக்குற பொம்பள, தடுப்பு மறைவுல குளிக்கிற பாவப்பட்ட பொம்பள, பஸ்லே கைதூக்கி நிக்கிற பொம்பள, ரயில்ல கீழ் சீட்ல உக்காந்திருக்குற பொம்பள, நடக்கிறப்ப மாராப்பு வெலகின பொம்பள, எதையாவது குனிஞ்சு எடுக்குற பொம்பளைனு பரதேசி பொறுக்கிங்க விதவிதமா செல்போன் கேமராவுல எடுத்து வலையேத்தி வுட்டுடறாங்களாமே...

இத கண்டுபுடிச்சு தடுக்குறதுக்கு தனியா போலீசு கூட பெரிய பெரிய ஊர்ல இருக்குதுனு சொல்றாங்க, ஆனா இவனுங்க தங்களத்தான் வீடியோ எடுக்குறானுங்கனு பாவம் முக்காவாசிப் பேருக்கு தெரியறேதேயில்லீங்களே....

ச்சேரி.... வேற என்னங்க பண்றது.. நம்பு மானம் வலையேறாம இருக்கோனும்னா நாமதானுங்க சூதானமா இருக்கோனும், இந்த நாறப்புத்தி இருக்குறவனுங்கள அவ்வளவு சுளுவா திருத்தவா முடியும்?

_________________________

37 comments:

வானம்பாடிகள் said...

அவசியமான இடுகை. இப்புடி படம் புடிச்சி வலையேத்துறது மட்டுமில்ல. இஸ்கோல் படிக்கற பையனுங்கதான் குறி. அப்பப்ப இங்க புடிபட்டாலும் நடந்துகிட்டுதான் இருக்கு. பசங்க செல்லுல இந்த படத்த போட்டு குடுத்து காசு பாக்குறது.

/இத கண்டுபுடிச்சு தடுக்குறதுக்கு தனியா போலீசு கூட பெரிய பெரிய ஊர்ல இருக்குதுனு சொல்றாங்க/

செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் இதுக்குன்னே சுத்திகிட்டிருப்பாங்க. கப்பு கப்புன்னு புடிப்பாங்க. காமெரா போயிடும்னு கொஞ்சம் தொல்லை இல்லை.

க.பாலாசி said...

பார்க்ல உங்க கண்ணுக்கு இந்தமாதிரி நல்லவிசயங்களா பட்டிருக்கு...பரவாயில்ல. ஆனா நான் போன ரெண்டு தடவையும் சில கண்றாவிகளை பாத்துட்டு அந்த பக்கம் போறதையே விட்டுட்டேன்.

என்னதான் பொம்பளைங்க சூதானமா இருந்தாலும், நாரப்பயலுங்க விடமாட்டானுங்க...

goma said...

நோகியாவின் ஆரம்பகால விளம்பரமே இப்படித்தானே வந்துச்சு....மிடி அணிந்த பெண் ஒரு ஹோட்டலில் கால் மேல் கால் போட்டவாறு டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்.நோகியா மொபைல் ஃபோன் விளம்பரவாசகம்,கால்களை சூம்,ஃபோகஸ் பண்ணியபடி “மிகவும் அருகில் “பார்க்கலாம் ...
இவர்களை என்ன பண்ணினால் தகும்

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க......ஆமாங்க மக்களே.....சாக்கிரதை.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\goma said...
நோகியாவின் ஆரம்பகால விளம்பரமே இப்படித்தானே வந்துச்சு....மிடி அணிந்த பெண் ஒரு ஹோட்டலில் கால் மேல் கால் போட்டவாறு டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்.நோகியா மொபைல் ஃபோன் விளம்பரவாசகம்,கால்களை சூம்,ஃபோகஸ் பண்ணியபடி “மிகவும் அருகில் “பார்க்கலாம் ...
இவர்களை என்ன பண்ணினால் தகும்//

என்ன செய்யமுடியும் உண்மையில் மனக்கோணல் இருக்கும் வரை..

மந்திரன் said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..
அப்படின்னு பொதுவா சொல்லிட்டு போக முடியலை ..
ஏனெனில் அந்த கமெராவில் என் தங்கையின் உருவம் இருந்தால் எப்படி தாங்குவது ?

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

ச.செந்தில்வேலன் said...

நல்ல விழிப்புணர்வு இடுகை கதிர். கவனமாக இருக்க வேண்டியது தேவையான ஒன்றாகிவிட்டது.

நிலாமதி said...

என்ன செய்யமுடியும் உண்மையில் மனக்கோணல் இருக்கும் வரை..இவர்களை என்ன பண்ணினால் தகும்

butterfly Surya said...

நன்றி..

கலகலப்ரியா said...

நற நற நற....

கலகலப்ரியா said...

good post...!

குடுகுடுப்பை said...

என்ன கொடுமை சார் இது.

சரண் said...

சுற்றிலும் வில்லங்கங்கள் இருக்கும்போது நம்மிடையே எச்சரிக்கை மிக அதிகமாகவே தேவை.

பிரபாகர் said...

சரியான இடுகை கதிர். டெக்னாலாஜி சில காலிகளின் கையில் இது போன்ற தவறான விஷயங்களுக்காக பயன்படுவது மிக வேதனையாய் இருக்கிறது...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

தேவையான இடுகை.

//நம்பு மானம் வலையேறாம இருக்கோனும்னா//

உண்மைங்கோ..மலையேறுற காலம் போய் வலையேறுற காலமிது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சிவாஜி said...

நல்ல எச்சரிக்கை! நன்றி.

அகல்விளக்கு said...

அவசியமான இடுகை...

Anonymous said...

இப்படி இன்னும் எதுஎதுக்கெல்லாம் பயந்து வாழனுமோ இந்த ஜனநாயக நாட்டில்.....

Anonymous said...

வேற வழி?? :(( கவனமாகத்தான் இருக்கணும்

seemangani said...

தேவையான பதிவு அண்ணே....அண்ணே இதப்பத்தி பி கே பி அண்ணே ஒரு பதிவு போட்டு இருந்தாரு அத படிச்சா இன்னும் கொடுமையா இருக்கு அண்ணே சொந்த மனைவியவே....ஐயோ சொல்லவே முடியல...என்னத்த சொல்ல...பகிர்வுக்கு நன்றி அண்ணே.... கண்டிப்பா வழிப்புணர்வு தேவை.

முகிலன் said...

தொழில்நுட்ப வளர்ச்சியை எதுக்கெல்லாம் உபயோகப் படுத்துரானுக. நாமதான் சாக்கிரதயா இருக்கோணும்.

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

200 பாலோயர்களுக்கு நன்றி

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ பாலாசி
(அப்போ இடுகைக்கு ஒரு மேட்டர் தயாரா இருக்கு)

நன்றி @@ goma

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ முத்துலெட்சுமி
(மனக்கோணல்தான் மிகப்பெரிய வியாதியா இருக்குங்க)

நன்றி @@ மந்திரன்

நன்றி @@ உலவு.காம்

நன்றி @@ செந்தில்வேலன்

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ butterfly Surya

நன்றி @@ கலகலப்ரியா
(எதுக்கு நற நற நற)

நன்றி @@ குடுகுடுப்பை

நன்றி @@ சரண்

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ சிவாஜி

நன்றி @@ அகல்விளக்கு

நன்றி @@ தமிழரசி

நன்றி @@ மயில்

நன்றி @@ seemangani
(பி கே பி சுட்டி குடுங்க சீமான்கனி)

நன்றி @@ முகிலன்

சி. கருணாகரசு said...

நாமத்தான் எச்சரிக்கையா இருக்கனும்.... அந்த நாய்கள் குணத்தை திருத்தவா முடியும்?

பொங்கல் வாழ்த்துகள் கதிரண்ணா.

பட்டிக்காட்டான்.. said...

அவசியமான இடுகை..

நீங்க அவனுகள என்ன பண்ணுனிங்க?
ஒன்னும் பண்ணலைன்னு சொன்னா எனக்கு உங்க மேல வருத்தம் தான்.. :-(

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

ஆ.ஞானசேகரன் said...

//“செல் போன் கேமரா சாக்கிரதைனு”//

உண்மைதாங்க கதிர்.... நானும் பார்த்துள்ளேன்.... திருத்தமுடியாத ஒன்னு இது...

வணக்கம் கதிர்
பொங்கல் தின வாழ்த்துகள்

ஸ்ரீ said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பிரியமுடன் பிரபு said...

அவனுங்களை பார்த்தா என்னுமோ தப்பு பண்ற ராஸ்கோலுவ மாதிரியே தெரிஞ்சுதுங்க.
////

ஓஒ

பிரியமுடன் பிரபு said...

பஸ்லெ, பொது எடத்துல ”திருடங்க சாக்கிரதை”, ”பிக்பாக்கெட் திருடங்க சாக்கிரதைனு” எழுதியிருக்குறது கூட்வே “செல் போன் கேமரா சாக்கிரதைனு” எழுதி வெக்கவேணும் போல இருக்குதுங்க...
///
ஆமாங்க

VELU.G said...

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க நல்ல அறிவுரை. நன்றி.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

ம்ம்ம்ம் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் - அரசும் காவல்துறையும் செய்வதை விட நாம் கவனமாக இருந்து தடுக்க முயலலாம். ம்ம்ம்ம்ம்ம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

ஜோதிஜி said...

நாரப்பயலுங்க விடமாட்டானுங்க

இதுதான் உண்மை கதிர். சமீபத்தில் ஒரு பையன் கைபேசியில் பார்த்துக்கொண்டுருந்த படங்கள் திகைக்க வைத்து விட்டது?

ச.செந்தில்வேலன் said...

200 :))

resh said...

mistake is not only on the boys but also on both sides. Especially nowadays in cities the ladies wear the dress is always too bad that you can't escape from it. They are the main reason for these activities that we can accept due to foreign culture and development of i.t sector .Womens are the major cause for these things........... there is no negotiation in this matter

இய‌ற்கை said...

mmmmmm:-(

சே.குமார் said...

அவசியமான இடுகை.