பொய் முகங்கள்

குழந்தையாய்
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என

நினைவு தெரிந்த
நாள் முதலாய்

அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்

தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்

ஒருபோதும்
பொருந்தவேயில்லை

ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!

________________________________

61 comments:

Anonymous said...

கதிர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பும் பொருட்களும் மிக அருமை :))

வானம்பாடிகள் said...

நட்சத்திரப் பதிவின் மகுடம் என்பேன்!
/ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!/

அருமை அருமை!

பா.ராஜாராம் said...

அருமை கதிர்!

பிரபாகர் said...

என்ன சொல்ல... ஆசான் சொல்ல வந்ததை சொல்லிட்டாரே!

இதுக்கும் மைனசா? அந்த நல்லவன் இன்னும் ரெண்டு புள்ளங்கள சேர்த்து பெத்துகிட்டு சந்தோஷமா இருக்கனும்...

பிரபாகர்.

ramasamy kannan said...

நல்ல கவிதை.

கும்க்கி said...

சகிக்காதே...பரவாயில்லையா?

ரோஸ்விக் said...

ம்ம்ம்... நட்ச்சத்திரம் நல்லா மின்னுதுய்யா... :-)

நல்லாயிருக்கு மக்கா... (சித்தப்பு பா.ரா மன்னிக்க)

முகிலன் said...

வாவ் அருமையான கவிதை..

எனக்குக் கூட என்னை யாரோடாவது ஒப்பிட்டுப் பேசினால் கோபம் வரும். என் மனைவியிடம் பல முறை கடிந்துள்ளேன்.

ஆனால் நானே பலமுறை பலரை மற்றோரோடு ஒப்பிட்டிருக்கிறேன். திருத்திக் கொள்ளவேண்டும்.

நிலாமதி said...

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு.....அருமை அருமை!

||| Romeo ||| said...

சூப்பர் தலைவரே ....

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை அருமை

எப்பொழுதுமே நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் வழக்கம். தன்னை தன் தனித் திறமையை தன்னுடனேயே ஒப்பிட்டுப் பார்த்து மெருகூட்டி மேன் மேலும் வளர்க்க முயலுவதே இல்லை.

சிந்தனை நன்று - எண்ணும்-செல்லும் திசை நன்று

நல்வாழ்த்துகள் கதிர்

கமலேஷ் said...

அருமையான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

பழமைபேசி said...

GREAT

ஆரூரன் விசுவநாதன் said...

நிதர்சனக் கவிதைகள் கதிர்...வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்
//

இது போல் ஒப்பிட்டு ஒப்பிட்டு அவரவர் தனித்துவத்தை இழந்திருக்கிறோம்.

seemangani said...

//ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!//

அசத்தல் வரிகள் அண்ணே...ரெம்ப பிடிச்சிருக்கு....

Rajasurian said...

நட்சத்திர வாரம் அற்புதமாய் போகிறது.
ஒவ்வொரு பதிவும் கிளாசிக் என்றாலும் இந்த பதிவு குறிப்பாய் இந்த வரிகள்

//ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!//

கலக்கல்.
வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் said...

உருக்கறீங்க கதிர்.. கலக்குங்க :)

Baiju said...

Superb...

க.பாலாசி said...

தலைப்பும் கவிதையும் அருமை...மீண்டும் ரசித்தேன்...

சங்கர் said...

தலைப்பிற்கு ஏற்ற வகையில் வார்த்தைகளை அடுக்கி அசத்தலாக கொடுத்திருக்கும் இந்த பதிவு அருமை !
நட்சத்திர வாரம் இன்னும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் !

நட்புடன் ஜமால் said...

மிக அருமைங்க.

-------------

இதுக்கும் மைனஸ் ஓட்டா

ஏதோ இரண்டு உண்மையான முகம் கொண்டவர்கள் போல

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

Last two lines are illogical.

You say: "One should compare oneself with oneself."

Both are same persons. Where is the question of comparision here?

Further comments on the entire poem:

A child has no personality. If at all, it is inchoate, yet to blossom seeking nourishment.

Where is the question of it getting eroded or lost in comparision with others?

Comparision does have a positive side as well as negative side.

Your poem attempts to highlight only one side: negative.

As a student, I compared my papers with other students who scored better than me. And, I came to know about my grey areas: places where I could improve; places where they had some better knack.

I did not copy their knack entire. But I improved upon it to use in my papers. Result: I beat them consistently. At the same time, I never gave my papers to others; for, I kept my trade secret close to my chest in order to ensure they come only behind me - in school and college and CSE.

Similarly, after I got married, I found my wife grooved and fixed in the value system of her born family. According to me, it had many a flaw. I suggested she got friendly with housewives from across communities and castes. Being an extrovert and liking people to move with, she got along with them famoulsy; and compared her style of life with theirs. I suggested she took better things from them. She did. In every sphere of domestic life, like cookery, breeding of children, running of household, she improved a lot. My sons went on from success to success because of her efforts and smartness.

It is comparision which helped.

Similarly, I too went on improving myself although not fully succeeded in comparision and learning from others.

Learning is a life long process: comparision is a part of it also.

There is a negative side when you compare things which are not possible to realise in your life: for e.g if a person is born not suitable to academic life, he should not aspire to be one who excels in it. On the contrary, he may go where he can use his talent, i.e. non-academic sphere freely and fully, and excel there. But so many children who cant do well in academics, are forced by parents to excel.

Kamal Hasan is an excellent example here: He was unsuitable to acdemics. He was branded an idiot by his school master. He left school for cinema where book learning is not a qualification.

He excelled. (Or, at least, he did things to his heart content and never felt inferior to others!)

I have narrated both positive and negative effecgts of comparsion.

Your poem does not touch the positive side.

தாமோதர் சந்துரு said...

கலக்கறீங்க பாஸ். வாழ்த்துக்கள்
அன்புடன்
சந்துரு

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
I have narrated both positive and negative effecgts of comparsion.

Your poem does not touch the positive side.//

ஜோ...

என்னுடைய கவிதையின் உள்ளீடு..

ஒரு மனிதன் பிறந்தது முதல் பிறப்பது வரை ஒவ்வொரு கணத்திலும் இன்னொரு மனிதனோடு ஒப்பீடு செய்யப்படுகிறான்..

”ஒரு குழந்தையை ஏதோ ஒரு கணத்தில் அடச்சீ.. அந்த குழந்தைமாதிரி இல்லையேனு நினைக்கிறோம்”

”சாதாரணமாக படிக்கும் திறன் மட்டுமே உள்ளவனை அவன் பெற்றோர் அட நல்லாப் படிக்கிற மாணவன் மாதிரி படிக்கைலையேனு நினைக்கின்றனர்..”

இதுபோல் ஆயிரமாயிரம் ஒப்பிடுதல்கள் ஒவ்வொரு கணத்திலும் நிகழ்கிறது.... இது தவறென்று சொல்லவில்லை... தவறும் அல்ல

ஒப்பிடுதலில் இது போல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறோம் அது நிறைவேறுவதில்லை... அதுவே பொருந்தவில்லை என எழுதியிருக்கிறேன்

//Last two lines are illogical.//
ஹ ஹ ஹ... இது நல்ல நகைப்பு

கடைசி வரிகளின் அர்த்தம்... அவனை அவனோடு ஒப்பிடவில்லை என்பதே, அதாவது... அவனை அவனாகவே ஏற்றுக்கொள்வோம் என்பதே...

பின்னோக்கி said...

முகமூடிகளை கழற்ற நேரமிருப்பதில்லை :(

செ.சரவணக்குமார் said...

மிக அருமை கதிர் அண்ணா.

Anbu said...

அருமை கதிர் அண்ணா.

பிரேமா மகள் said...

ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!/

appadi nadanthu vittal, athan pin manithanukku ingu velai illai.

கண்மணி said...

வழக்கம் போல அருமையான சிந்தனை.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பு அருமை

கலகலப்ரியா said...

அருமை ..

திகழ் said...

அருமை

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

..//Last two lines are illogical.//
ஹ ஹ ஹ... இது நல்ல நகைப்பு..//

இதுதான் கவிதையின் வரிகள்:

அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!

என் கேள்வி:

எப்படி ஒரு பொருளை அதே பொருளுடனே ஒப்பிடமுடியும்.

Completely illogical.

But it gives you laughter, isnt?

ஒரு கவிதையின் வரிகளை வைத்த்துதான் அதைப் புரியவார்கள்.

உங்கள் வரிகள் அவை.

தற்போது சொல்லும் விளக்கம்.

அவனை அவனோடு என்றால், இரு வேறானவர்கள் என்கிறீர்கள்.

இது நகைச்சுவையா?

ஒருவேளை நகைச்சுவைதான்.

ஏனெனில், காமெடி சீன்களில், இப்படி ஒவ்வாததை ஒவ்வும் என வாதிட்டு நகைச்சுவை பண்ணுவார்கள். குறிப்பாக, கவுண்டமணி=-செந்தில் ஜோடியில்.

அவனை அவனோடு

அவனை - imaginary construct by others, esp. parents.
அவனொடு - his real self

இப்பொது ஒரே ஆள், இரு வேறாக ஆகின்றனர். இதுதான் உங்கள் பாயிண்டு.

அப்படியானால், அதை வேறுமாதிரியாகச் சொல்லியிருக்கவேண்டும்.

A better poet with a clever use of Tamil would have written it differently.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

'உனக்கு என கவிதையைப் புரிய முடியவில்லை எனச் சொல்லிட்டிபோ’ என திட்டாதீர்கள்.

முகிலனும், சீனாவும் அப்படித்தான் புரிகிறார்கள். அன்னார் பின்னூட்டங்களை நோக்கவும்.

தன்னைப்பிறரோடு ஒப்பிடுதல் என்பதாக.

ஆனால், நீங்கள் ஒருவனை மற்றவர்கள் ஒப்பிடுவதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். Of course, you are correct because 'ஒப்பிடப்படுகிறான்’ என்ற சொல் வருகிறது.

தன்னைப்பிறரோடு ஒப்பிடுவதில் ந்லமும் தீமையையும் பற்றி எழுதிவிட்டென்.

பிறர் நம்மை நோக்குவதைப்பற்றி.

இதிலும் நல்லதும் உண்டு; தீயதும் உண்டு.

ஒப்பிடும்போது, ‘You have done as compared to others' 'You made use of your scarce resources and came top, whereas others abused their rich resources and went down'

Will such comparisions have bad effect on you?

On the other hand, in the comaprision involving children or handicapped adults, comparision is odious and have bad effect as it disregards innate ability of each individual which is unique to him or her.

Nothing wrong at all if the comparision is between equal persons or person with equal resources and capabilities.

Read some sociology books. The subject deals with equality in society and in individuals.

Poets should read omnivorously, in more than two languages.

If not, they will commit logical errors.

பலா பட்டறை said...

உண்மை..:))
அற்புதமான வரிகள்..
வாழ்த்துக்கள் நண்பரே..:)

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

கவிதை நன்றாக எழுதப்படவில்லை. கவிதையில் வெறும் கருத்துமட்டும் இருந்தால் போதுமா? கவித்துவம் வேண்டாவா? சொற்களை அடுக்கிவிட்டால் கவிதையா?

சிலர் கவித்துவம் நிறைந்த கவிதைகளை எழுதுவார்கள். அவர்கள் கவித்துவத்தை இரசிக்கும்போது அவர்களின் கருத்துப்பிழைகள் கண்ணில் படா.

ஆனால், அப்படிப்பட்ட கவிஞரா கதிர் இருந்தால், நான் ஏமாந்து, ஆகா...ஒகோ என்றிருப்பேன்!

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//
எப்படி ஒரு பொருளை அதே பொருளுடனே ஒப்பிடமுடியும்.
//

பொருளை பொருளோடு போல்
அவனை அவனோடு
இப்படி புரிந்து கொள்ளாதீர்கள். ஜோ


//அவனை அவனோடு
அவனை - imaginary construct by others, esp. parents.
அவனொடு - his real self//

அவனை - அந்த மனிதனை

அவனோடு - அவனுக்குள் இருக்கும் அவனுக்கான இயல்போடு...
... இதுதான்

இதை புரிய அகராதியில் ஆங்கிலத்தில் வார்த்தைகள் தேடாதீர்கள் ஜோ....
நான் ஆங்கிலத்தில் சிந்திக்கவில்லை...

அவனை... அவனாகவே... அதாவது... அவனுக்கான இயல்பின் உடன் (அவனுடைய சொந்த அறிவோடு, குணத்தோடு, அழகோடு..இதுபோல்) ஒப்பிடவேண்டும் என்பதுதான் கவிதையின் வரி.....

//But it gives you laughter, isnt?//

why not

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
'உனக்கு என கவிதையைப் புரிய முடியவில்லை எனச் சொல்லிட்டிபோ’ என திட்டாதீர்கள்.//

திட்டும் புத்தி எனக்கில்லை ஜோ..

மீண்டும் மென்மையா சொல்கிறேன்.. உங்கள் புரிதலில் சிரமம் உங்களுக்கு இருக்கிறது

//தன்னைப்பிறரோடு ஒப்பிடுவதில் ந்லமும் தீமையையும் பற்றி எழுதிவிட்டென்.//

நன்மை தீமை குறித்தெல்லாம் கவிதையில் இல்லை... நீங்கள் எழுதியதும் கவிதைக்கு பொருத்தமில்லாத ஒன்று

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
கவிதை நன்றாக எழுதப்படவில்லை. கவிதையில் வெறும் கருத்துமட்டும் இருந்தால் போதுமா? கவித்துவம் வேண்டாவா? சொற்களை அடுக்கிவிட்டால் கவிதையா?
//

ஜோ... உங்கள் பார்வையில் அப்படிப் படுவது குறித்து எனக்கு வருத்தம் ஏதுமில்லை...

”அவனை.. அவனோடு..” இங்கு மட்டும்தானே ஜோ உங்களுக்கு குழப்பம்...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//அவனை - அந்த மனிதனை

அவனோடு - அவனுக்குள் இருக்கும் அவனுக்கான இயல்போடு...
... இதுதான்
//

இதைத்தான் நான் ஆங்கிலத்தில்,

அவனை - imaginary construct by others, esp. parents.
அவனொடு - his real self//


என்றேன்.

இதில் என்ன பிரசனை உங்களுக்கு?

ஆரூரன் விசுவநாதன் said...

ஜோ......

கதிரின் வரிகள் உங்களுக்கு புரியவில்லை என நினைக்கின்றேன்.

//ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!//

பல நேரங்களில் நாம் பயன் படுத்தும் சாதாரண வார்த்தை தான். மனிதனை மனிதனாக பார்ப்பது என்று சொல்லுவோம். மனிதனை வேறு என்னவாக பார்ப்பது ?

அவனை அவனோடு ஒப்பிடுவது என்பது, அவன் தகுதிகள், அவன் திறமை, அவன் அறிவு, அவன் ஆளுமை, அவன் வயது, அவன் வாழும் சூழல் இவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவனை அவனோடு ஒப்பிட்டு பார்த்தல் என்ற பொருளில் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//அவனை... அவனாகவே... அதாவது... அவனுக்கான இயல்பின் உடன் (அவனுடைய சொந்த அறிவோடு, குணத்தோடு, அழகோடு..இதுபோல்) ஒப்பிடவேண்டும் என்பதுதான் கவிதையின் வரி.....
//

இது விளக்கம்.

சரி.

கவிதைக்கு விளக்கம் சொல்வது சரி.

ஆனால், கவிதையை எழுதிவிட்டு அதை அவரவர் புரியும் வித்த்தில்தான் புரிவார்கள்.

அவர்களை நீங்கள் ஒன்னும் செய்ய முடியாது.

ஆரூரன் விசுவநாதன் said...

//joe//

"am talking with the man in the mirror, am asking him to change his way, "

போன்ற வரிகளை வானளாவப் புகழ்கிறோம். இதில் என்ன லாஜிக் இருக்கிறது..... இதன் உள்ளார்ந்த பொருள் புரிவதால் மட்டுமே அந்த பாடல் உலகளாவிய வெற்றியைக் கொடுத்தது.


அவர் எழுதியதில் பெரும் தவறேதுமில்லை என்றே நினைக்கின்றேன்.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//அவனை... அவனாகவே... அதாவது... அவனுக்கான இயல்பின் உடன் (அவனுடைய சொந்த அறிவோடு, குணத்தோடு, அழகோடு..இதுபோல்) ஒப்பிடவேண்டும் என்பதுதான் கவிதையின் வரி.....//

இதுவும் பிழை கதிர்.

அவனின் இயல்பான குணம். அதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்?

கற்பனையான எதிர்பார்ப்புகளுடன் வந்த ஒரு குணம். அதைத்தான் ஆங்கிலத்தில் imaginary construct by others, especially parents என்றேன்.

ஒரு உண்மையுடன் ஒரு கற்பனையை பிறர் ஒப்பிடுகிறாரகள் என்பதுதானே உங்கள் கவிதயையுன் சாராம்சம்.

ஆனால், முகிலன், சீனா போன்றோர் என்ன சொல்கிறார்கள்.

தாங்கள் தங்களை பிறரோட்டு ஒப்பிட்டதாகச்சொல்கிறார்கள். ஒரே ஆளைப்பற்றி நீஙகள் எழுதிகிறீர்கள். அவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட உண்மைமனிதர்களப்ப்ற்றிச் சொல்கிறார்கள்.

நான் ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறேன் என்றால், English clears confusion.

பிரபாகர் said...

நம்மை நம்மோடு ஒப்பிடுதல் இயலாதா என்ன?

தி.மு, தி.பி கேள்விப்பட்டதில்லையா?

அதாங்க, திருமணத்துக்கும் முன், பின்...

காலியில் பத்து மணிக்கு நான், 12 மணிக்கு நான் என கூட ஒப்பிடலாமே?

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
இதில் என்ன பிரசனை உங்களுக்கு?//

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஜோ...

உங்கள் பிரச்சனைக்கு விளக்கம் கூறிவிட்டேன்... புரியும் வரை படியுங்கள் அமைதியாக ஜோ..

அப்படியும் உங்களுக்கு புரியாவிட்டால்.... உங்களுக்கு புரியற மாதிரி எனக்கு எழுதத் தெரியலைன்னு நினைத்துக் கொள்ளுங்கள்... ஏதும் தவறில்லை...

அதற்காக முதல் பின்னூட்டத்தில் ஒப்பிடுதலின் நன்மை தீமை எழுதியது போல் இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை தயவுசெய்து தவிர்த்திடுங்கள்

நன்றி...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

A.Viswanathan!

You are entering into psychology here in your feedbacks.

It is true. But I am afraid Kathir does not keep all these in mind.

AV, all of us are born with true self. Using that basis, Hindu society divides human beings into people with distinct gunas, under varnashradharmam. Later on, the concept was abused and became castes.

In West too, such a concept existed in old times. Peopoe were divided into disinct gunas, they called it HUMORS.

One is introvert, other is extrovert etc.

This real self is always with us. But society comes with imaginary concepts and impose upon persons, like parents wanting their children to become doctors where the child is really suitable to be a teacher.

In Kathir poem, the same point is there.

My problem is Kathir is that he is not able to put up his core point as explained here, correctly.

I hope he writes another blog post - O no..in poetry - but in Tamil prose.

That will make his points quite clear.

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

இதுவும் பிழை கதிர்.

அவனின் இயல்பான குணம். அதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்?//

ஜோ... ஒரு உதாரணத்திற்கு உங்களை நான் சந்திக்கிறேன் என்றால்... ஜோ ஏன்... ’ஏ’ மாதிரி, ’பி’ மாதிரி, ‘சி’ மாதிரி என்று ஒப்பிட வேண்டாம், அப்படி ஒப்பிட்டால் பொருந்தவே பொருந்தாது...

நான் ‘ஜோ’வை ஜோவின் உண்மையான அறிவோடு, ஜோவின் உண்மை குணத்தோடு ஒப்பிட்டால் மட்டுமே பொருந்தவில்லை என்ற பிரச்சனை எனக்கு வராது, ஏமாற்றமும் வராது, உங்களையும் எனக்குள் அது சிதைக்காது...

இப்போது புரிகிறதா


//ஒரு உண்மையுடன் ஒரு கற்பனையை பிறர் ஒப்பிடுகிறாரகள் என்பதுதானே உங்கள் கவிதயையுன் சாராம்சம்.//

இல்லை... தவறான புரிதல்

//நான் ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறேன் என்றால், English clears confusion.//

உங்களுக்கு மட்டுமா!!!!

ஆரூரன் விசுவநாதன் said...

friend, still your diverting the issues. varnashirama is not basically describe ones guna'. even ancient days it define the people karma that is work or job.

if so, how a chatriya king viswamithra become brama rishhi?

in the same way palram a bramin become chatriya and won many wars///

issue is totally diverted. let us argue things in another separate place.....

கும்மாச்சி said...

ஒப்பிடுதல் தவறு என்றுத் தெரிந்தும் எல்லோரும் அதை ஓயாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

Kalilur Rahman said...

i read all the discussion above and would like to humbly place my comments too...i am really impressed by the poem..and my understanding about this is...there are two kind of comparisions..one which brings out productive results...a good example is an employer compares two candidates two choose the better one...now the second kind is..one which brings out unnecessary thoughts and results..for example comparing my son's skills against that of the neighbour's one and forcing him to follow the things which he doesnt like..each of us should compare how we are today and how were we yesterday..we should have been a better person today...I think thats what kathir meant...

ஞாலன் said...

மிக அருமை.

உங்கள் பதிவுகளின் யதார்த்தமும் எளிமையும் உள்ளம் தொடுகிறது.

வாழ்த்துக்கள் !

பிரியமுடன் பிரபு said...

மிக அருமை கதிர் அண்ணா.

(பின்னூட்டதில் விவாதமும் அருமை)

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//நான் ‘ஜோ’வை ஜோவின் உண்மையான அறிவோடு, ஜோவின் உண்மை குணத்தோடு ஒப்பிட்டால் மட்டுமே பொருந்தவில்லை என்ற பிரச்சனை எனக்கு வராது, ஏமாற்றமும் வராது, உங்களையும் எனக்குள் அது சிதைக்காது...

இப்போது புரிகிறதா//

அடிப்படை பிரச்னையே இதுதான் கதிர்.

எந்த் ஜோவை எந்த ஜோவுடன் ஒப்பிடுகிறீர்கள்?

உங்கள் வாக்கியத்தை மீண்டும் படியுங்கள்:

//‘ஜோ’வை ஜோவின் உண்மையான அறிவோடு//

இரு ஜோக்கள்.

இரண்டாவதான் ஜோ ‘உண்மையான அறிவோடு’

அப்படியென்றால் முதல் ஜோ யார்?

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

K.Rahmaan!]

Your points are shared by all. That is what I have also written:

Comparison can be both positive and negative.

But in the second example shown below, it is only negative. But kathir's poem (it shouldn't be called poem, but prose written line by line) highlights only the negative.

There are three situations:

1. A person compares him with other persons - their abilities, their achievements etc. If others are better endowed, he attempts to imitate them; and feels miserable if he fails in thes attempt. (This is found in the feedback of Mukilan and Cheena. Mukilan says he gets angry with such comparison; and he has done it himself and wants to reform himself. Cheena says this type of comparison blinds us from seeing our own worth as an individual)

2. A person compares himself with his own self (This is in the feedback of A.Viswanathan). This is mental case, according to psychiatrists. If he believes that the other self is true, and attempts to become that self, he is sliding into a false life. If he completely believes that the false self his own true self, and negates his own really true or original self, he begins to accept the imaginary false self, and lives the false life. This mental malady is called schizophrenia of one type. (There are various kinds in Schizophrenia) It leads to megalomania wherein the victim believes, for e.g, that he is the 10th avatar of Vishnu; or he is the President of USA; he truly believes and lives that self. This is curable.

3. A person is compared with others and rated accordingly, by others. (This is Kathir's thought in the poem. ஒப்பிடப்படுகிறான்) This will have a bad effect, according to you also. According to me, it can be positive too.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

For the second case A.Viswanathan quotes a poet and asks we accept the poet a genius.

The truth is, according to psychiatrists, that poets or men of letters, have different wavelength of intellect as compared to normal people. In fact, it is a sort of mild madness, which acts as a catalyst for them to achieve literary glory.

Subramania Bharati is a supreme example of such madness. His acts baffled so many. His poems too. So many lines from his poems can be quoted to prove that he believed in a larger than life self and believed in it.

'கிருஸ்ணா...நான் 400 ஆண்டுகளுக்கு முன் பிறக்கவேண்டிய்வன்’

It is what he told Kuvalai Kannan in a moment of realising who is he, really. A MISERABLE MISFIT IN THE CURRENT SOCIETY. What do we call a misfit among us: Mad!

So, artists may write:

I looked into mirror and hated myself.

We overlook such mild madness in the larger interests of literature. We don't call them mad. Because they will feel hurt and stop producing literature.

A.Viswanathan's example to justify Kathir's though is wide off the mark thus.

அன்புடன் அருணா said...

நட்சத்திர வாரம்...பதிவு அனைத்தும் மின்னுகிறது!

Anonymous said...

நான் ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறேன் என்றால், English clears confusion.//

Woah! "English" clears confusion! People! are you confused? Please talk in English? What? Don't you know English? Whaaaaaaaat? Idiot of the nonsense of the stupid of the.....................

இந்த லட்சணத்தில் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை கதிர்!

இது உங்க நட்சத்திர விளைவு என்று நினைக்கிறேன்.

பாரதி இன்னும் நிறைய வெள்ளைக்கார வாரிசுங்க இருக்குதுங்க, உங்களுக்கு எதிரியா!!!! வந்து பளாரென்று ஒரு கவிதை புனைந்துவிட்டு செல்ல மாட்டியா என்று ஏக்கமாகவுள்ளது!

And finally, here's a quote about madness!

“'But I don’t want to go among mad people,' Alice remarked.
'Oh, you can’t help that,' said the Cat. 'We’re all mad here. I’m mad. You’re mad.'
'How do you know I’m mad?' said Alice.
'You must be,” said the Cat. 'or you wouldn’t have come here.'”

Have a great evening Kathir!

by
mad-cat

Cable Sankar said...

arumai kathir

நேசமித்ரன் said...

//ஒருபோதும்
பொருந்தவேயில்லை

ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!//

நகுலன்
வாசனை கதிர்

//கண்ணாடி மீது தெளித்திருக்கும் நீர்த்துளி

எது எதனை பார்க்கிறது//

என்ற எனது பழைய கவிதை நினைவுக்கு வருகிறது

BTw:

"There are no facts, only interpretations."-Friedrich Nietzsche

:)

for fernando ....

இய‌ற்கை said...

ம்ம் .. வழக்கம் போல் கலக்கல்