கனமாய், காதலாய், வலியாய்
சினமாய், மணமாய், காமமாய்
கலந்தடிக்கும் உணர்வுகளோடு
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்
எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத
இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்
எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,
கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்
உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்
_________________________________
Subscribe to:
Post Comments (Atom)
பாட்டல் ராதாக்களின் கதை
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
37 comments:
ம்ம்ம். நட்சத்திரத்தின் இன்னொரு முனை..காதல். அழகோ அழகு..எழுத்துகள் உதிராமல் கல்வெட்டாய் எங்கள் நெஞ்சில்..சபாசு.
அருமையான கவிதை கலக்கல்
அருமை அட்டகாசம்...
//உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன் //
ஓடி வந்துன் வதனம் வாசிக்க விளைகையில்... கரைகின்றன என் மெ(மை)ய்யெழுத்துகள் .. மையலிட்ட உன் புன்னகைக் கவிதையில்.. அட அட.. அசத்துங்க..
ஆமாங்க, நாமளே பொல பொலன்னு உதிர்ந்து போயிடறோம் அப்புறம் எங்க?
//இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்
எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,//
ஆமாம் அண்ணே...சிலநேரம் உலுக்கி விட்டும் உதிர்வதும் உண்டு...அழகாய் இருக்கு....ஆமா நட்சத்திரம்...நட்சத்திரம்...னு சொல்றாங்களே அது என்ன அண்ணே...???
அழகான வரிகள்...மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் வரிகள்
அன்பின் கதிர்
அருமை அருமை காதல் கவிதை அருமை
அனைத்து உணர்வுகளைம் ஒருங்கே சேர்த்து, எழுத்துகளைத் தேடி, அழகாய் சொல் செதுக்கி, கச்சித்தமாய்க் கோர்த்து, கடும் வெயிலில் வேம்பின் சுகமாய், வாசிக்கும் போது உதிர்கிறது எழுத்துகள் - அவள் புன்னகை கவிதையாய் சிந்தும் போது
நல்ல எளிய சொற்களைக் கொண்டு இயல்பாக வடித்த கவிதை நன்று
நல்வாழ்த்துகள் கதிர்
இண்டு இடுக்குகளில்...
ம்.. கலக்குங்க!
கடும் வெயிலில் கண்ட வேம்பு நிழல்...
ஆஹா, நல்ல கற்பனை.
எனக்காய் சிந்தும் புன்னகை, உன்னால் உதிரும் எழுத்துக்கள்...
அருமை கதிர்!
நட்சத்திர வாரம் மட்டுமல்ல! அறிவுறைகள் வாரம், ஆங்கிலம் கற்கும் வாரம் (தப்பா நினைச்சிக்காதீங்க, புதுப் புது வார்த்தைகள நாங்க, அவரால)
வாழ்த்துக்கள் கதிர்!
பிரபாகர்.
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்
சிக்காத எழத்துக்களையும் பதிவில் சிக்க வைத்த கவிதை.
உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத
கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்
அழகு.
ச்சே.. சிரிச்சே கவிழ்த்து விடுகிறார்கள்!!
//கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்//
நல்லா இருக்கு கதிர்.
அழகிய கவிதை.
அருமையான கவிதை.. எல்லா வாரமும் நட்சத்திர வாரமாய் இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கிறது..
அங்கே அவள் முன் உதிர்ந்தாலும் வார்த்தைகளை இங்கே அழகாய் கோர்த்து விட்டீர்கள்!
//உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன் //
பெண் ஒரு சிரிப்பு சிரிச்சா... நாம அவுட்டு....
//எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத//
ம்ம்ம்... என்னமோ போங்க...எழுத்துப்பின்னல்...அருமை...
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ அண்ணாமலையான்
நன்றி @@ seemangani
//நட்சத்திரம்...நட்சத்திரம்...னு சொல்றாங்களே அது என்ன அண்ணே...???//
தமிழ்மணம் திரட்டியில போன வாரம் நட்சத்திரம்ங்க சீமான்கனி..
நட்சத்திரம் முடிஞ்ச பிறகு கேக்குறீங்களே வட போச்சே...
நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்
நன்றி @@ cheena (சீனா)
நன்றி @@ பிரபாகர்
(எதுக்கு ராசா... இத்தன உள்குத்து)
நன்றி @@ தாராபுரத்தான்
நன்றி @@ நட்புடன் ஜமால்
நன்றி @@ ஜெகநாதன்
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ முகிலன்
//எல்லா வாரமும் நட்சத்திர வாரமாய் இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கிறது..///
ஏனுங்க முகிலன் இந்தக் கொலவெறி
நன்றி @@ K.B.JANARTHANAN
நன்றி @@ Sangkavi
நன்றி @@ க.பாலாசி
அழகான, இனிமையான,எளிய நடையில் தந்த கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கவிதையின் தாக்கம் பட்டறிவா,படிப்பறிவா.
அழகான, அருமையான கவிதை.
ஹை... தமிழ்மணத்துல மைனஸ் வந்திருச்சே!!!!
vaanampadigal kathir Priya pazamaipesi ezharai aruran prabhagar appanpalanisamy nathanjagk ktmjamal rajasurian mathavaraj velanss balasee
இதுவரைக்கும் யாரும் மைனஸ் ஓட்டு போடல
tamilnaducongress
imtiaz
இதுல ஒன்னுதான் மைனஸ் வந்திருக்கு..
நீங்க யாருங்க சார்
//tamilnaducongress
imtiaz
இதுல ஒன்னுதான் மைனஸ் வந்திருக்கு..
நீங்க யாருங்க சார்//
ஆமா தமிழ்நாடு காங்க்ரஸ்க்கு நீங்க என்ன துரோகம் பண்ணீங்க..??
தேடலையே கவிதையாக. அருமைன்னு சொல்லி சொல்லி சலிப்பாகிடுச்சு. வேற வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும்.
நன்றி @@ அபுல் பசர்
நன்றி @@ க.பாலாசி
//ஆமா தமிழ்நாடு காங்க்ரஸ்க்கு நீங்க என்ன துரோகம் பண்ணீங்க..??//
நான் மட்டும் இல்லை... இதுவரைக்கும் கேபிள், தண்டோர, வலைச்சரம் மூன்றுக்கும் போட்டிருக்குது பயபுள்ள
நன்றி @@ பின்னோக்கி
ஹைய்யா....
அடுத்த மைனஸ் விழுந்திடுச்சு
அந்த புண்ணியவான் பேரு tamilan
நல்ல ரசனையுடன் கூடிய எழுத்து.
வாவ்! அட்டகாசம்.
வழக்கம்போலவே கலக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
ஹைய்யா....
மூனாவது மைனஸ் விழுந்திடுச்சு
அந்த புண்ணியவான் பேரு dbydemand
டயர்டு ஆயிடுச்சுப்பா
...ம்ம்ம்ம் நாலாவது மைனஸ் போட்டது ceegobi
நன்றி @@ மஞ்சூர் ராசா
நன்றி @@ Deepa
நன்றி @@ குடந்தை அன்புமணி
ம்ம்ம்.:-))
நல்ல ரசனையுடன் கூடிய எழுத்து..அசத்துங்க
நல்ல கவிதை கதிர்..
புலனாய்வு வேலையெல்லாம் பலமா இருக்கு :)
இனி எல்லாரும் கதிர்னா டெர்ரர் ஆயிடுவாங்க :)
//உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன் //
அற்புதமாய் படைத்திருக்கிறீர்கள் கதிர். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.
//உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்//
என்ன சொல்வது?....
அழகு. பட் உங்களோட 'பினிசிங் டச்' எனக்கு பிடிச்சிருக்கு!
சூப்பர்
Post a Comment