இந்த ஆட்டம் போதுமா

தொலைக்காட்சியில் சினிமா பாடல்களுக்கான நடனங்களை பாடலின் சப்தம் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா...? ஒலி இல்லாத பாடல்களில் கதாநாயகனும், கதாநாயகியும் ஆடும் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாகவே பெரும்பாலும் இருக்கிறது. பாடலோடு கேட்கும் போது பாடல் வரிகளில் மனம் லயிக்கும் போது இந்த ஆபாசம் மட்டுப்பட்டே தெரிகிறது.

  • அதென்னவோ... இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட படி கட்டிப்பிடிச்சு கசக்கி பிழிஞ்சு வெறிநாய் மாதிரி மொச்மொச்னு முத்தங் கொடுக்க பாயறது...


  • அந்தப் போண்ணு பாதி இருட்லயும், பாதி வெளிச்சத்திலயும் இரையெடுத்த மலைப்பாம்பு மாதிரி நெளிய, இவரு அரையிருட்ல கடற்கரையில நடந்து எங்கியோ இருக்கிற பாலத்து மேல பட்டன் கழட்டின சட்டைய ஸ்டைலா ஒதுக்கிட்டு இடுப்பு கை வச்சி போஸ் கொடுக்கிறது

  • ஹீரோயினோட ஆடிட்டிருக்கும் போதே, திடீர்னு சில அடி தூரம் குடுகுடுனு ஓடிப்போய் ஹீரோயின் ஒரு பக்கம் பார்த்து ஆட, இவரு மறு பக்கம் பார்த்துக்கொண்டு, சில அடிகள் தூரம் காற்றில் குதித்து, நிலத்தில் கால் ஊன்றி கொச்சையாக இடுப்பை முன்னுக்கு பின்னா ஆட்டி, பக்கவாட்டில் திரும்பி சற்றே முழங்கால், இடுப்பை மடக்கி, கைகளைக் கோர்த்து பக்க வாட்டில் இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறையென சரக்சரக்னு இழுப்பது...

  • ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலத்தில் ஒதுங்க ஒரு இடம் இருக்குமே, அங்க ‘கெக்கபிக்க’னு பல்லைக்காட்டிக்கிட்டு இடுப்ப வளைச்சி நெளிச்சி குதிப்பது...

  • மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறுமாறா விலுக் விலுக்னு குதிப்பது...

  • உடற்பயிற்சி கணக்கா வேகவேகமா கைகளையும், கால்களையும் ஒரே மாதிரியாக பத்து பத்து முறை ஆட்டுவது...

  • ரெண்டு பேரும் ஒரே மாதிரி, காக்கா வலிப்பு வந்த மாதிரி கையை காலை மடக்கி மடக்கி இழுத்து, சட்டென நேருக்கு நேர் பார்த்து கை விரல்களை குவித்து பாம்பு படமெடுப்பது போல, கொத்துவது போலக் காட்டுவது...

  • அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...

  • கூட்டத்தோடு மூனு அடிதூரம் ஓடிவந்து, இடப்பக்கம், வலப்பக்கம் ஓரோரு அடி ஆடிவிட்டு முன்னால ஒருத்தன் குனிய வச்சித் தாண்டறது...

  • திரும்பி அந்தக் கூட்டத்துக்குள்ளேயே பலசமயம் பைத்தியகாரன் மாதிரி சுத்திச் சுத்தி ஓடுறது..

இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...

ம்ம்ம்... இப்படி ஒன்னா ரெண்டா... பல நேரங்களில் ரசித்து பார்த்த பாடல்களின் நடனம்(!!!) கூட காமெடி பீஸ் மாதிரி ஆகிப்போச்சு. பார்த்தது கையளவு, பார்க்காதது கடலளவு (..க்ஹூம் பெரிய தத்துவமாக்கும்)

ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//அதென்னவோ... இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட படி கட்டிப்பிடிச்சு கசக்கி பிழிஞ்சு வெறிநாய் மாதிரி மொச்மொச்னு முத்தங் கொடுக்க பாயறது...//

வயசாயிடுச்சுல்ல அப்பிடித்தான் தோணும்..

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்தப் போண்ணு பாதி இருட்லயும், பாதி வெளிச்சத்திலயும் இரையெடுத்த மலைப்பாம்பு மாதிரி நெளிய, இவரு அரையிருட்ல கடற்கரையில நடந்து எங்கியோ இருக்கிற பாலத்து மேல பட்டன் கழட்டின சட்டைய ஸ்டைலா ஒதுக்கிட்டு இடுப்பு கை வச்சி போஸ் கொடுக்கிறது//

ஸ்டைல்மா..ஸ்டைல்...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹீரோயினோட ஆடிட்டிருக்கும் போதே, திடீர்னு சில அடி தூரம் குடுகுடுனு ஓடிப்போய் ஹீரோயின் ஒரு பக்கம் பார்த்து ஆட, இவரு மறு பக்கம் பார்த்துக்கொண்டு, சில அடிகள் தூரம் காற்றில் குதித்து, நிலத்தில் கால் ஊன்றி கொச்சையாக இடுப்பை முன்னுக்கு பின்னா ஆட்டி, பக்கவாட்டில் திரும்பி சற்றே முழங்கால், இடுப்பை மடக்கி, கைகளைக் கோர்த்து பக்க வாட்டில் இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறையென சரக்சரக்னு இழுப்பது...//

எப்பிடியெல்லாம் கவனிச்சுருக்கீங்க..வளர்க தங்கள் கலையார்வம்...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலத்தில் ஒதுங்க ஒரு இடம் இருக்குமே, அங்க ‘கெக்கபிக்க’னு பல்லைக்காட்டிக்கிட்டு இடுப்ப வளைச்சி நெளிச்சி குதிப்பது...//

பல்லைமட்டும் காட்டுனாங்கன்னு வருத்தமா இருக்கு நீங்க என்னடான்னா?

ப்ரியமுடன் வசந்த் said...

//மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறுமாறா விலுக் விலுக்னு குதிப்பது...//

கிகிகிகி

ப்ரியமுடன் வசந்த் said...

//உடற்பயிற்சி கணக்கா வேகவேகமா கைகளையும், கால்களையும் ஒரே மாதிரியாக பத்து பத்து முறை ஆட்டுவது...//

காலையில ஜிம்முக்கு போக மறந்துருப்பாங்க அதான்..

ப்ரியமுடன் வசந்த் said...

//ரெண்டு பேரும் ஒரே மாதிரி, காக்கா வலிப்பு வந்த மாதிரி கையை காலை மடக்கி மடக்கி இழுத்து, சட்டென நேருக்கு நேர் பார்த்து கை விரல்களை குவித்து பாம்பு படமெடுப்பது போல, கொத்துவது போலக் காட்டுவது...//

கிகிகிகி...

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...//

ஆம்பளை சிங்கம்ல அப்டித்தான் குதிச்சு காட்டுவாரு..

ப்ரியமுடன் வசந்த் said...

//வகூட்டத்தோடு மூனு அடிதூரம் ஓடிவந்து, இடப்பக்கம், வலப்பக்கம் ஓரோரு அடி ஆடிவிட்டு முன்னால ஒருத்தன் குனிய வச்சித் தாண்டறது...//

கபடி கபடி கபடி...

ப்ரியமுடன் வசந்த் said...

//திரும்பி அந்தக் கூட்டத்துக்குள்ளேயே பலசமயம் பைத்தியகாரன் மாதிரி சுத்திச் சுத்தி ஓடுறது..//

மாதிரியில்ல...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//

விழியே விழியே உனக்கென்ன வேளைன்னு பாட்டு கேக்குறதவிட்டுப்போட்டு இந்தகால பாட்டு கேட்டா இப்டித்தான்..

ரசிக்குற மாதிரி பாட்டு கேக்குறதும் இருக்கு கதிர்...

நாம செய்ய நினைக்கிற குரங்கு சேட்டையெல்லாம் நிஜத்தில முடியுறதில்லை அட்லீஸ்ட் திரையில செய்றதையாவது பார்த்து ரசிச்சுட்டு போவோமே...

ப்ரியமுடன் வசந்த் said...

http://www.youtube.com/watch?v=k43DB4UHIgo&feature=fvw

இந்த சுட்டி பாருங்க கதிர் நிச்சயமா சிரிப்பு வரலாட்டி நீங்க சொல்றது கேக்குறேன் நான்...

Ashok D said...

:)

நிகழ்காலத்தில்... said...

நான் கொஞ்சநேரம் பார்த்தாலும் இப்படித்தான் பார்ப்பேன், டிவி பார்க்கும் ஆர்வம் தானாக குறைந்துவிடும்:))

சுஜாதாவின் விருப்பமும் இதுதான்:))

க.பாலாசி said...

//இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...//

சும்மா கதவிடாதீங்க. நைட்டு யாருக்கும் தெரியாம சவுண்ட மியூட் பண்ணி மசாலா பாத்திருக்கீங்க. இல்லன்னா இவ்ளோ அழகா (!!) வர்ணிக்க முடியமா?.........

//பக்கவாட்டில் திரும்பி சற்றே முழங்கால், இடுப்பை மடக்கி, கைகளைக் கோர்த்து பக்க வாட்டில் இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறையென சரக்சரக்னு இழுப்பது...//

ஆனாலும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது.

vasu balaji said...

எல்லாரும் தூங்கிட்டாங்கன்னு ப்ராக்டிஸ் பண்ணா மாதிரியில்ல தெரியுது:)).

/ம்ம்ம்... இப்படி ஒன்னா ரெண்டா... பல நேரங்களில் ரசித்து பார்த்த பாடல்களின் நடனம்(!!!) கூட காமெடி பீஸ் மாதிரி ஆகிப்போச்சு./

ஓஓஓ. அப்புடி வேற இருக்கோ!!

எல்லாத்தையும் சொல்லிபோட்டு முக்கியமா, வயக்காட்டுல கண்டாங்கியோட ஒரு வரி பாடிட்டு, அடுத்து சல்லாத்துணியோட ஆல்ப்ஸ்ல உருண்டு, அடுத்த வரிக்கு ஆஸ்ட்ரேலியா கடலுக்குள்ள (தண்ணிக்குள்ள பாடினா சத்தம் வருமான்னெல்லாம் யாருப்பா கேக்குறது) அடுத்த அடியில ஹீரோ சர்டு பாக்கடுள்ள இருந்து அம்முனி பாடுறதெல்லாம் வராமலா போயிருக்கும்.

/வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க.../

அடப்பாவி மனுஷா. விடிய விடிய மூட்ல போட்டு ஆடிட்டு அடுத்த நாள் ஆளக்காணமே என்னான்னா ஒரே உடம்பு வலின்னு சிக்கன் குனியா மேல பழிய போட்டது இப்பல்ல தெரியுது!

ஊடகன் said...

க.பாலாசி சொன்னா மாதிரி தான் நடந்த்திருக்கும்னு தோனுது...,

இருந்தாலும் எனக்கும் இந்த குமுரல் இருந்திருக்கிறது...

Priya said...

//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...//
இதை நானும் பலமுறை கவனித்ததுண்டு.

படிக்க interesting ஆக இருந்தது!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))

நிலாமதி said...

ஆட வரலாம். ஆடவர் எல்லாம் ஆட வரலாம் .ஆடும் பொழுதே பாட வரலாம் ....
.....இந்த சினிமா பாடல் நினைவு வருகிறது. உங்கள்பதிவு பார்க்க.

நசரேயன் said...

வயசு பசங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா ?

சீமான்கனி said...

//ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துடுச்சி... வேற வழி தெரியாம போர்வையை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிக்கிறேன். வெடிய வெடிய என் மூடுன கண்களுக்குள் ஹீரோ, ஹீரோயின் கூட குரூப் டேன்ஸர்னு கும்முகும்முனு குதிச்சி ஆட்டம் போட்டு என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//
இதுக்குத்தான் பாட்டு சீன் வந்தாலே..பவுன்ஸ் ஆயடுவோம்லே....

ஏன் தான் இவங்களுக்கு இந்த கொலைவெறியோ??
தொடரட்டும் சரவெடி....

ஹேமா said...

கதிர் இவ்வளவு கவனிச்சு ரசிச்சு எழுதிட்டு சரில்லன்னு சொன்னா எப்பிடி !

thiyaa said...

//

பிரியமுடன்...வசந்த் said...
//அந்தப் பொண்ணு ஒரு கல்லுமேல உட்கார்ந்திருந்தா, நம்மாளு நாலு தடவையாவது பக்கத்துல இருக்கிற பாறை மேல ஏறி ஏறி குதிப்பது...//

ஆம்பளை சிங்கம்ல அப்டித்தான் குதிச்சு காட்டுவாரு..

November 20, 2009 3:33 PM

//

இதுதான் நல்லாயிருக்கு

நல்ல இடுகை

Unknown said...

//.. இந்த ஜீரோ...... சாரிங்க ஹீரோ, ஹீரோயினை கண்ட படி கட்டிப்பிடிச்சு கசக்கி பிழிஞ்சு வெறிநாய் மாதிரி ..//

அது எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே அப்படித்தான்..

நீங்க எம்.ஜி.ஆர் பாட்ட சத்தம் இல்லாம கேட்டதுண்டா..?? நான் நிறைய தடவ பார்த்துட்டு எப்படி இந்தாள ஒரு முதலமைச்சரா உட்காரவச்சாங்கனு யோசிச்சுருக்கேன். இத நாம சொல்லப்போனா நாய் மாதிரி சண்டைக்கு வர்றாங்க..

கலகலப்ரியா said...

//தொலைக்காட்சியில் சினிமா பாடல்களுக்கான நடனங்களை பாடலின் சப்தம் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா...? //

fast forward...!

கலகலப்ரியா said...

//கண்டு மிரண்ட காட்சிகள்...//

இப்டி ஒரு மூவ்மெண்டு விடாமா பார்த்துப்புட்டு... புட்டு புட்டு வைக்கிறதுக்கு... இதுக்குப் "பேசா"ம அந்த டான்சே போட்டிருக்கலாம்...! இது ரொம்ப ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்..!

கலகலப்ரியா said...

//என்ன பழிதீர்த்துக்கிட்டாங்க...//

தோடா... இவுக நம்மள பழி தீர்த்துப்புட்டு... அவுகள சொல்லுறாய்ங்க...

//இந்த ஆட்டம் போதுமா..//

போதும்டா சாமி... இனிமே தாங்காது... யப்பே...! ரொம்ம்மம்ம்ம்ப தேவையான இடுகை சாமியோ..! (சமூக அக்கறை கொண்ட இடுகைல இது டாப்புன்னு நான் சொல்லணுமாக்கும்... "*ç%&/()=?`°+"* << கன்னாபின்னான்னு திட்டுஃபை..)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உண்மை தாங்க கதிர்.. ஒலியை மட்டும் நிறுத்திவிட்டால் நகைச்சுவை விருந்திற்குப் பஞ்சமில்லை நம் தமிழ் பாடல்களில் :))

//க.பாலாசி said...
//இதெல்லாம்... சில நாட்களுக்கு முன் உறக்கம் வராத நடு இரவில் ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு சேனலில் பாடல் வரியை விடுத்து வெறும் ஆட்டத்தை மட்டும் பார்த்தபோது போது கண்டு மிரண்ட காட்சிகள்...//

சும்மா கதவிடாதீங்க. நைட்டு யாருக்கும் தெரியாம சவுண்ட மியூட் பண்ணி மசாலா பாத்திருக்கீங்க. இல்லன்னா இவ்ளோ அழகா (!!) வர்ணிக்க முடியமா?.........//

I LIKE THIS ;)

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை கதிர்

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

இரை விழுங்கின பாம்பு மாதிரி..... ஆமாம் பணம் எங்கிற மகுடியை உடைத்தால் போதும் கதிரண்ணா.

பழமைபேசி said...

மாப்பு நல்லா இருக்கீங்களா? சிரிப்பா இருக்கு உங்க இடுகை! இஃகி!!

ஆ.ஞானசேகரன் said...

//மக்கள் நடமாட்டம் இருக்கும் வெளிநாட்டு ரோட்ல தாறுமாறா விலுக் விலுக்னு குதிப்பது...//


ம்ம்ம்ம்... நல்லாயிருக்கு இடுகை

பின்னோக்கி said...

பாலைவன மண்ணுல அவுங்க ஆடுற டான்ஸ் பத்தி சொல்லையே. எதிர்க்க எதிர்க்க முட்டிக்கால் போட்டு, ரெண்டு நரி சண்டைக்கு ரெடி ஆகிற மாதிரி, மணல எடுத்து தலைல போட்டுக்குவாங்களே. பார்க்க நல்லாயிருக்கும்.

---

வசந்த்க்கு கடுமையான கண்டனம். கதிர் அவர்களுக்கு வயசாயிடுச்சுங்குற உண்மைய எல்லாருக்கும் தெரியுற மாதிரி பின்னூட்டத்துல எழுதுனத்துக்கு.

தீபா நாகராணி said...

இவற்றை எல்லாம் தொடர்ந்து சில மாதங்கள் செய்து வர வாக்கிங், ஜிம், என்று எதுவும் போகாமலே, ஸ்லிம் ஆக இருக்கலாம். :P