பத்துக்கு 10 பிடி (த்தவர், க்காதவர் – தொடர் இடுகை)

முதலில் இந்த தொடர் குறித்த இடுகையை மாதவராஜ் பக்கத்தில் படித்த போது... அவர் இதை விபரீத விளையாட்டு எனக் குறிப்பிட்டிருந்ததற்கு “விளையாடுங்க விபரீத விளையாட்டை, வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்” என் பின்னூட்டம் இட்டிருந்தேன்...

ஆனால் ஆதிமூலகிருஷ்ணன் என்னை களத்தில் இறக்கிவிட தமயந்தி, பிரபாகர், அரவிந்த், நாடோடி இலக்கியன் ஆகியோர் ஆதி உங்களை அழைத்திருக்கிறார் என உசுப்பேத்திவிட, அதனால் ஆடும் ஆட்டம்.

துவக்கிய மாதவராஜ், தொடர அழைத்த ஆதிக்கு நன்றிகள்

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி
பிடித்தவர் : நன்மாறன்
பிடிக்காதவர் : ஜெயலலிதா

எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன்
பிடிக்காதவர் : சாருநிவேதா

கவிஞர்
பிடித்தவர் : அப்துல்ரகுமான்
பிடிக்காதவர் : கனிமொழி

இயக்குனர்
பிடித்தவர் : சேரன்
பிடிக்காதவர் : பேரரசு

நடிகர்
பிடித்தவர் : கமல்
பிடிக்காதவர் : சரத்குமார்

நடிகை
பிடித்தவர் : ‘பூ’ பார்வதி
பிடிக்காதவர் : நமீதா

இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா

மாவட்ட ஆட்சியர்
பிடித்தவர் : உ.சகாயம் (நாமக்கல்)
பிடிக்காதவர் : கா.பாலச்சந்திரன்

பேச்சாளர்
பிடித்தவர் : பாரதிகிருஷ்ணகுமார்
பிடிக்காதவர் : சுப.வீரபாண்டியன்

விஞ்ஞானி
பிடித்தவர் : அப்துல் கலாம்
பிடிக்காதவர் : மயில்சாமி அண்ணாதுரை


அழைக்க விரும்புவது
1. வானம்பாடிகள்
2. செந்தில்வேலன்
3. பிரபாகர்

4. நாடோடி இலக்கியன்
5. ஜீவன்

42 comments:

சந்தனமுல்லை said...

:-) ரசித்தேன்!

Raju said...

நமீதாவை பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களே...! அரவிந்த் உங்களை சும்மா விட மாட்டார்...!
பீ கேர் ஃபுல். பாதுகாப்போடயே இருங்க எந்நேரமும்.

Rajasurian said...

என்ன்னானாது.... கனிமொழி அக்கா கவிஞரா? சொல்லவே இல்ல

கலகலப்ரியா said...

// ராஜு ♠ said...

நமீதாவை பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களே...! //

ஆமாம்.. பொய் எல்லாம் சொல்லப்டாது கதிர்... =))... உஙகளுக்கு பிடித்தது எல்லாம் பிடித்தது... பிடிக்காதது பல பிடிக்காதது.. மீதி தெரியாதது.. =)) ..

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல இடுகை நண்பரே ..பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் ....எப்போதுமே தாங்கள் பிடித்த பதிவர் எனக்கு

புலவன் புலிகேசி said...

நமீதாவை பிடிக்காதுன்னு சொன்னீங்களே பொய்தான???

பிரபாகர் said...

நம்மையும் கொத்து விட்டுட்டீங்க... வளர்க உம் தொண்டு... நிறைய ஒத்துப் போகிறது கதிர் இருவருக்கும்...

பிரபாகர்.

karuna4321 said...

நமீதாவை பிடிக்க முடியாதா.....

தமிழ்நாடே கொதிக்க போவுது பாருங்க.


அப்புறம் பேரரசு பற்றி நீங்க ஒருத்தர்தான் கவலைப்பட்டிருக்கீங்க....நல்ல விஷயம்.ஏதோ அவர் கலைச்சேவை செய்யறதாலதான் எங்களுக்கு பாக்கெட்டில் மணி மிச்சமாகுது.

நன்மாறன் அரசியல்வாதிகளுக்கான உதாரணதேர்வு.

அதே போல பேச்சாளரும் நல்ல தேர்வு.

மாவட்ட ஆட்சியர்களையெல்லாம் நம்ம ஆட்டத்தில் இழுக்க வேண்டுமா கதிர்..?

நிகழ்காலத்தில்... said...

//பிடித்தவர் : பாலகுமாரன்

பிடித்தவர் : இளையராஜா//

என்னுடைய ரொம்பப் பிடித்தவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் :))

நிகழ்காலத்தில்... said...

//Rajasurian said...

என்ன்னானாது.... கனிமொழி அக்கா கவிஞரா? சொல்லவே இல்ல//

அவ்வ்வ்வ்...

ஜெட்லி... said...

நமீதாவை பிடிக்காதா???

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ நிகழ்காலத்தில்

நன்றி @@ Rajasurian

நன்றி @@ வெண்ணிற இரவுகள்

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ karuna4321
(மாவட்ட ஆட்சியர் பற்றி மனதில் பட்டத்தைச் சொன்னேன், எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பதின் அடிப்படையே)

நன்றி @@ ராஜு

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ ஜெட்லி

(அடப்பாவி மக்கா.... நமீதாவுக்கு இத்தன ஆதரவா.... முடியலடா சாமீஈஈஈஈஈஈஈ
மச்சான்ஸ் எல்லாம்.... நல்லாயிருங்கப்பு)

vasu balaji said...

அவ்வ்வ்வ்வ்வ்வ். நெறைய அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி இருக்கே.

/நடிகை
பிடித்தவர் : ‘பூ’ பார்வதி
பிடிக்காதவர் : நமீதா/

ஓஓஓஓஓஓ ஹோ. நாம மாத்திப் படிச்சிக்கணுமோ.

ஏன்னும் போட்டிருக்கலாமல்லோ=))

க.பாலாசி said...

//நடிகை பிடித்தவர் : ‘பூ’ பார்வதி
பிடிக்காதவர் : நமீதா//

நமீதாவ பிடிக்காதா? என்ன கொடுமை இது. எத்தன தடவ மஜ்ஜான்...மஜ்ஜான்னு பாசத்தோட கூப்பிட்டாங்க...இப்டி சொல்லிட்டீங்களே....

மற்ற பதில்களில் நடிகர், இசையமைப்பாளர் ஆகியவற்றில் மட்டும் ஒற்றுப்போகிறோம்.

அகல்விளக்கு said...

//நிகழ்காலத்தில்... said...

//Rajasurian said...

என்ன்னானாது.... கனிமொழி அக்கா கவிஞரா? சொல்லவே இல்ல//

அவ்வ்வ்வ்...
///////


ரிப்பீட்டேய்.........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்................

ஆரூரன் விசுவநாதன் said...

நமீதா புடிக்காதா.......

ஆட்டோ அனுப்பறன் இருங்க......

ஊடகன் said...

//இயக்குனர்
பிடித்தவர் : சேரன்
பிடிக்காதவர் : பேரரசு//

நல்ல இருந்தது.............

//நடிகர்
பிடித்தவர் : கமல்
பிடிக்காதவர் : சரத்குமார்//


சரத்லாம் ஒரு நடிகனாவே ஏற்று கொள்ள கூடாது தலைவா .............

அமிர்தவர்ஷினி அம்மா said...

எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன்
பிடிக்காதவர் : சாருநிவேதா

என் சாய்ஸில் இருந்தவர்களும் இவர்களே!!!!!!!

அழகான பகிர்வு

S.A. நவாஸுதீன் said...

:-)ரசித்தேன்.

Unknown said...

//.. பிடிக்காதவர் : கனிமொழி ..//

நீங்க அவங்கள கவிஞர்னு சொன்னது எனக்கு புடிக்கல.. :-(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்... கதிர் நானும் எழுதனுமா? ரைட்டு..

எத்தனையோ மச்சான்ஸோட வம்ப விலைக்கு வாங்கீட்டீங்க.. ஹிஹி..

Ashok D said...

நமிதாவ பிடிக்காதா.. ஆச்சரியமே...

பாலகுமாரன்
சாருநிவேதா
எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும்.

அன்புடன் நான் said...

நல்ல துணிச்சல்... கதிரண்ணா.

பா.ராஜாராம் said...

நல்ல தேர்வு கதிர்.அது என்ன ஜெ.மேடம் எல்லோருக்கும் உங்களை-நானும் உட்பட?

பழமைபேசி said...

பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... ரெண்டுலயும் நம்ம பேர் இல்லை... தலை தப்பினது தம்பிரான் புண்ணியம், பிடி ஓட்டம்!

நேசமித்ரன் said...

நமீதாவை பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களே...!

:(

:-) ரசித்தேன்

நர்சிம் said...

//பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா
//

இவர் அவரின் அது தானே? அதனால் தான் பிடிக்கவில்லையா?

அ.மு.செய்யது said...

Intresting //பிடித்தவர் : ‘பூ’ பார்வதி //

ஹைய்,,,நீங்க நம்மாளு......வாங்க !!!!!!

பின்னோக்கி said...

//மயில்சாமி அண்ணாதுரை
// நன்மாறன்
//கா.பாலச்சந்திரன்
//பாரதிகிருஷ்ணகுமார்

இவங்களையெல்லாம் யாருன்னு தெரியலைங்க. பொது அறிவு கம்மிங்கோவ். நீங்களாவது அடைப்புக்குறிக்குள் அவங்களப்பத்தி ஒரு வரி எழுதியிருக்கலாம்

அமர பாரதி said...

கதிர்,

மனிதப் பன்பு அளவு கடந்திருக்கிறது. பிடிக்காதவர் என்று வெளிப்படையாக வெறுப்பைக் கக்குவதற்கு ஒரு பதிவு வேறா?

கண்ணகி said...

நல்லத்தான் விளையாடறீங்க ரெண்டுபேரும். கவனமாத்தான் விளையாடறீங்க. தெரிஞ்சுபோச்சு.

கிறுக்கல்கள்/Scribbles said...

It is a controversial thing. One can have one's own issues/bias to decide why one likes a person or dislikes. It may not be entertained by others. I still feel whether one should openly express about a person who one dislikes. Take care

தேவன் மாயம் said...

//பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா
//

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ பாலாசி

நன்றி @@ அகல் விளக்கு

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ ஊடகன்

நன்றி @@ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி @@ S.A. நவாஸுதீன்

நன்றி @@ பட்டிக்காட்டான்

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ D.R.Ashok

நன்றி @@ சி. கருணாகரசு

நன்றி @@ பா.ராஜாராம்

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ நேசமித்ரன்

நன்றி @@ நர்சிம்

நன்றி @@ அ.மு.செய்யது

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ அமர பாரதி

நன்றி @@ வாத்துக்கோழி

நன்றி @@ கிறுக்கல்கள்

நன்றி @@ தேவன் மாயம்

தங்கள் கருத்தை நகைச்சுவையாகவும், ஆழமாகவும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி....

இந்த தொடர் இடுகை ஆரம்பித்த போதே மாதவராஜ் சொன்னதுதான்.... இது குழந்தைதனத்தை மீட்டெடுக்கும் ஒரு விபரீத விளையாட்டு என்று...

எதையும் புனிதப்படுத்தாமல், கேள்விகளுக்குட்படுத்தப் படவேண்டும் என்ற அடிப்படையே பிடிக்காதவர்களை எழுத காரணம்....

அதே சமயம் பிடிக்காதவர் எனக் குறிப்பிட்டதில் வெறுப்பு எதுவும் என்னிடம் கசியவில்லை... ஏதோ காரணத்தால் பிடிக்கவில்லை... காரணங்கள் மனதோடு.. எனக்கு பிடிக்காதவர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற நியதி கிஞ்சித்தும் கிடையாது...

மாதவராஜ் said...

//என்ன்னானாது.... கனிமொழி அக்கா கவிஞரா? சொல்லவே இல்ல//
கொஞ்சம் ஓவர்தான். ரசித்தேன் நண் பரே!

//எதையும் புனிதப்படுத்தாமல், கேள்விகளுக்குட்படுத்தப் படவேண்டும் என்ற அடிப்படையே பிடிக்காதவர்களை எழுத காரணம்..//
ச்ரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி.

ரசித்தேன்....!

ப்ரியமுடன் வசந்த் said...

பிடிக்காதவர் : ஜெயலலிதா

இது ஓகே

ஆனா

பிடிக்காதவர் : நமீதான்றதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..

நாடோடி இலக்கியன் said...

ரசித்தேன்.

உங்களின் பிடிச்சிருக்கில் ஒன்று எனக்கு பிடிக்காது. :)

தமிழ் அமுதன் said...

நமீதாவ போயி புடிக்காதுன்னு சொல்லிடீங்க..!

அழைப்புக்கு நன்றி விரைவில் பதிவிடுகிறேன் ...!

வால்பையன் said...

பால்ச்சந்திரன் ரொம்ப நல்லவருன்னு சொன்னாங்களே!

.☼ வெயிலான் said...

எனக்கும் பிடித்த பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சுவரஸ்யமான தேர்வு..!! ரசிக்கும்படி இருந்தது.

தீபா நாகராணி said...

//எதையும் புனிதப்படுத்தாமல், கேள்விகளுக்குட்படுத்தப் படவேண்டும் என்ற அடிப்படையே பிடிக்காதவர்களை எழுத காரணம்....

அதே சமயம் பிடிக்காதவர் எனக் குறிப்பிட்டதில் வெறுப்பு எதுவும் என்னிடம் கசியவில்லை... ஏதோ காரணத்தால் பிடிக்கவில்லை... காரணங்கள் மனதோடு.. எனக்கு பிடிக்காதவர்கள் மற்றவர்களுக்கும் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற நியதி கிஞ்சித்தும் கிடையாது...// SUPER :)