தீயாய்ப் பரபரக்கும் நகரத்துச் சாலை
ஒட்டி உரசிப் பறக்கிறது
உயர்வேக இருசக்கர வாகனம்
ஒரு கணம் பயமும் உடனே கோபமும்...
கருப்பு உடை, கத்தரிக்கப்பட்ட கூந்தல்
கனகச்சிதமான இளம்பெண்
இரு பக்கம் கால் பரப்பி
இளைஞனின் பின் படர்ந்து பரவி...
முளைத்த கோபம் முறிந்து போகிறது
முச்சந்தியில் பிரிகிறது சாலை
வலது பக்கம் பிரிகிறார்கள் அவர்கள்
இடது பக்கம் பிரிய வேண்டி நான்...
எனினும்
அவர்கள் பின்னே கொஞ்சம் தொடர்ந்துவிட்டு
தளர்ச்சியோடு திரும்புகிறது மனது
சாயம் அடிக்க மறந்துபோன
முன் பக்கத்து நரை முடியைச் சுமந்தபடி...
~
16 comments:
//கருப்பு சுடிதார், கத்தரிக்கப்பட்ட கூந்தல்
கனகச்சிதமாய் ஒரு இளம்பெண்
இரு பக்கம் கால் பரப்பி
இளைஞனின் பின் படர்ந்து பரவி...//
சார், இந்த தள்ளாத வயசுலையும் இதெல்லாம் தேவையா. டிசர்ட் போடாதிங்கன்னா கேட்டாதானே.
ஆனாலும் இந்த நிலை ஈரோட்டின் மிக குறைவென்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கொஞ்சம் பண்பாட்டுடன் வாழ்கிறார்கள். மிக நாகரீகமான சிலரே இவ்வாறு செல்கிறார்கள்.
வாழ்த்துக்கள் கதிர்.
அன்புடன் ஆரூரன்
வலது புறச் சாலையில் கொஞ்சம் துரத்திவிட்டு
மனது மட்டும் தளர்ச்சியோடு திரும்புகிறது
சாயம் அடிக்க மறந்துபோன கொஞ்சம்
முன் பக்கத்து நரை முடியைச் சுமந்தபடி...
யதார்த்தமான கவிதை
தலை நரை,
ஈரோட்டார்களுக்கே பொதுவான
பிரச்சனையோ?
//பாலாஜி said...
//சார், இந்த தள்ளாத வயசுலையும் இதெல்லாம் தேவையா. டிசர்ட் போடாதிங்கன்னா கேட்டாதானே.//
ஹி...ஹி
//மிக நாகரீகமான சிலரே இவ்வாறு செல்கிறார்கள்.//
ம்ம்ம்ம்.... என்னமோ சொல்றீங்க
நன்றி பாலாஜி
//arurs.blogspot.com said...
வாழ்த்துக்கள் கதிர்.
அன்புடன் ஆரூரன்//
நன்றி ஆரூரன்
//sakthi said...
யதார்த்தமான கவிதை//
நன்றி சக்தி
//அப்பாவி முரு said...
தலை நரை,
ஈரோட்டார்களுக்கே பொதுவான
பிரச்சனையோ?//
ஈரோட்டுக்காரங்க சாயம் பூசிறதுல கொஞ்சம் வீக்கு
நன்றி அப்பாவி முரு
//மனது மட்டும் தளர்ச்சியோடு திரும்புகிறது//
சந்தோசப்படுங்க..:))
நம்மால முடியாதத அடுத்தவங்க செய்யும்போது...:)))
வயசானாலும் உங்க ஸ்டைல்(writing) எனக்குப் புடிச்சிருக்கு..:)
//நிகழ்காலத்தில்... said...
சந்தோசப்படுங்க..:))
நம்மால முடியாதத அடுத்தவங்க செய்யும்போது...:)))//
க்கும்.. வேற என்னண்ணே செய்யமுடியும்
//நாகா said...
வயசானாலும் உங்க ஸ்டைல்(writing) எனக்குப் புடிச்சிருக்கு..:)//
வாங்க மைனர் நாகா
ஹி ஹி
சாயம் அடிக்க மறந்துபோன கொஞ்சம்
முன் பக்கத்து நரை முடியைச் சுமந்தபடி...
///
ஹ ஹா
நல்லா முடித்துள்ளீர்
இருப்பது ஈரோடா??
இந்தியா வரும்போதெல்லாம் நான் கண்டிப்பாக ஈரோடு வருவது வழக்கம்
அங்கே என் சகோதரி குடும்பம் உள்ளது
இப்ப ஈரோட்டில் புத்தக கண்காட்சி
என் மாமா எனக்காக 10 புத்தகங்கள் வாங்கிவைத்துல்ளார்
நீங்க சென்றீங்களா
//அப்பாவி முரு said...
தலை நரை,
ஈரோட்டார்களுக்கே பொதுவான
பிரச்சனையோ?//
ஈரோட்டுக்காரங்க சாயம் பூசிறதுல கொஞ்சம் வீக்கு
////
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு??!?!?!?!!??
வருகைக்கு நன்றி பிரபு
புத்தகத் திருவிழா அற்புதமாக இருக்கிறது..
நீங்கள் ஈரோடு வரும் போது சந்திப்போம்
கதிர்,
படித்து முடிக்கையில் ஒரு இளம் புன்னகையை களவாடுகிறது இந்தக் கவிதை.
//நாடோடி இலக்கியன் said...
படித்து முடிக்கையில் ஒரு இளம் புன்னகையை களவாடுகிறது இந்தக் கவிதை.//
மனசு களவாடப் பட்டது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது
நன்றி @@ பாரி
ha ha ha! :-)))))
ஹ..ஹா...சூப்பரு
Post a Comment