சபிக்கப்பட்ட பதில்கள்



பலநாளாக பணியாத படுக்கைக்கு
பழியாக இழுத்தடிக்கும் மேஸ்திரியிடம்
கிடைக்காத சம்பளத்தோடு
இழக்காத கற்போடு...

அடியெல்லாம் தேய்ந்துபோன
வாரறுந்த செருப்பை தைக்க
இரண்டு ரூபாய் கேட்டவனை
எக்காளமாய் ஏசிவிட்டு...

ஒடுங்கிய தூக்குப்போசியோடு
ஒட்டிப்போன வயிறோடு
சுருங்கிப்போன சதைகளோடு
கருகிப்போன கனவுகளோடு...

பசியோடு காத்திருக்கும்
பால் மறவாத பிள்ளைக்கு
சுண்டிப்போன மார்பின்
சுரக்க மறுக்கும் காம்புகளோடு...

கிடைக்காத சம்பளத்திற்கு
காத்திருக்கும் கந்துக்காரனுக்கு
மறந்து போன மானத்தோடு
தீர்ந்துபோன பதில்களோடு...

வற்றிப்போன காமத்திற்கு காத்திருக்கும்
வேலைக்கு போகாத கணவனுக்கு
உறைந்து போன மவுனங்களோடு
மறுத்துப் போன வடுக்களோடு...

எட்டுவைத்து ஓடுகிறாள்
எந்த விடையும் இல்லாத
எண்ணற்ற கேள்விகளை
இதயமெல்லாம் நிரப்பிக்கொண்டு...

39 comments:

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்....

பழமைபேசி said...

ஒரு கவிஞனுக்கு பொருள் என்னவென்றால் சமூகத்தின் மூலை முடுக்களையெல்லாம் பிரதிபலிப்பது என்பதுதான்.... அப்படி இருக்கும்பட்சத்திலேதான் அவன் கவிஞன்....

குளிர்சாதனப் பெட்டியின் உதவியோடு உற்பத்தி செய்யும் படைப்பர் மத்தியில் இதோ ஒரு கவிஞன்... வாழ்க, வளர்க!!

க.பாலாசி said...

படித்து முடிக்கையில் நானும் சுமக்கிறேன் செங்கல் சுமந்த செந்நிறத்தாள் வலிகளை.

உண்மைதான் வயிறருக்கும் வலியில்,
அவள் சுமந்த ஒன்றுக்கு உணவூட்ட,
குறைபட்ட குருதியை தவிர வேறோன்றுமில்லை அவளிடம். ஏனேனில் ஆண்கொன்ட காமத்தில் காய்ந்துபோன அவளது அதரங்களால் வெறென்ன செய்யமுடியும்.

ப்ரியமுடன் வசந்த் said...

கவிஞர் கதிர்..........

ப்ரியமுடன் வசந்த் said...

//பலநாளாக பணியாத படுக்கைக்கு
பழியாக இழுத்தடிக்கும் மேஸ்திரியிடம்//

ஈனப்பிறவிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//கிடைக்காத சம்பளத்தோடு
இழக்காத கற்போடு...//

கற் சுமக்கும் கண்ணகிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//அடியெல்லாம் தேய்ந்துபோன
வாரறுந்த செருப்பை தைக்க
இரண்டு ரூபாய் கேட்டவனை
எக்காளமாய் ஏசிவிட்டு...//

என்ன செய்வது கிடைப்பதே இரண்டு ரூபாய்........

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒடுங்கிய தூக்குப்போசியோடு
ஒட்டிப்போன வயிறோடு
சுருங்கிப்போன சதைகளோடு
கருகிப்போன கனவுகளோடு...//

சூப்பர்மா.....

ப்ரியமுடன் வசந்த் said...

//கிடைக்காத சம்பளத்திற்கு
காத்திருக்கும் கந்துக்காரனுக்கு//

கனவுகளை காவு வாங்குபவர்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//வற்றிப்போன காமத்திற்கு காத்திருக்கும்
வேலைக்கு போகாத கணவனுக்கு//

கையாலாகாத பிஸ்கோத்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//எட்டுவைத்து ஓடுகிறாள்
எந்த விடையும் இல்லாத
எண்ணற்ற கேள்விகளை
இதயமெல்லாம் நிரப்பிக்கொண்டு... //

வெற்றி நிச்சயம் என்று.........

ஈரோடு கதிர் said...

//சந்தனமுல்லை said...
ஹ்ம்ம்....//
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

ஈரோடு கதிர் said...

// பழமைபேசி said...
சமூகத்தின் மூலை முடுக்களையெல்லாம் பிரதிபலிப்பது என்பதுதான்//

சாலையில் நடக்கும் போது சராசரியாய்
கடந்து போகும் ஒரு சித்தாளைப் பார்த்தபோது மனம் நினைத்தது...

நன்றி பழமை..

உங்கள் அன்பிற்கும்
மனம் திறந்த பாராட்டிற்கும்
என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்

ஈரோடு கதிர் said...

//பாலாஜி said...
படித்து முடிக்கையில் நானும் சுமக்கிறேன் செங்கல் சுமந்த செந்நிறத்தாள் வலிகளை.

உண்மைதான் வயிறருக்கும் வலியில்,
அவள் சுமந்த ஒன்றுக்கு உணவூட்ட,
குறைபட்ட குருதியை தவிர வேறோன்றுமில்லை அவளிடம். ஏனேனில் ஆண்கொன்ட காமத்தில் காய்ந்துபோன அவளது அதரங்களால் வெறென்ன செய்யமுடியும்.//

வலிமை மிகுந்த வரிகள் பாலாஜி
பின்னூட்டம் கவிதையை விட அழுத்தமாக இருக்கிறது.

நன்றி நண்பா

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்.......வசந்த் said...//
//கவிஞர் கதிர்..........//
//ஈனப்பிறவிகள்//
//கற் சுமக்கும் கண்ணகிகள்//
//என்ன செய்வது கிடைப்பதே இரண்டு ரூபாய்........//
//சூப்பர்மா.....//
//கனவுகளை காவு வாங்குபவர்கள்//
//கையாலாகாத பிஸ்கோத்துக்கள்//
//வெற்றி நிச்சயம் என்று.........//

வரிக்கு வரி நீங்கள் அளித்திருக்கும்
இதமான வார்த்தைகளின்
தித்திப்பில் என் இதயம் மூழ்கி கிடக்கிறது...

என் வலைப்பதிவின் மகிழ்ச்சியில் வசந்த்-ன் பங்கு மிகப்பெரியது.

நன்றி வசந்த்

Anonymous said...

அன்புள்ள கதிர் அவர்களுக்கு,
வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் அனுபவிக்கும் சோதனைகள் தான். என்ன! இவர்கள் கொஞ்சம் அதிகமாக அனுபவிகிறார்கள்.

இப்படிக்கு உங்கள்,

தோழி.

Anonymous said...

எங்கு படித்தாய் நண்பா இந்த ஏழைகளின் வலியை....கண்ணீருக்கு அர்த்தம் இங்கு சிந்திய போது விளங்கியது....

ராமலக்ஷ்மி said...

//எந்த விடையும் இல்லாத
எண்ணற்ற கேள்விகளை//

உண்மைதான், நல்ல கவிதை கதிர்!

sakthi said...

மனதை நெகிழ வைத்த வரிகள்

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

கவிஞர் கதிர்....

வாழ்க!!!!!!!!!

sakthi said...

பசியோடு காத்திருக்கும்
பால் மறவாத பிள்ளைக்கு
சுண்டிப்போன மார்பின்
சுரக்க மறுக்கும் காம்புகளோடு...

அய்யோ

sakthi said...

உங்க்கிட்ட இருந்து கவிதை எழுத கத்துக்கனும்

நாகா said...

அண்ணே, கொஞ்சம் ஸ்டைல மாத்துங்க.. உங்க பக்கத்துக்கு வந்தா படிச்சுட்டு சும்மா சூப்பரு அட்டகாசம்னு சொல்லிட்டுப்போக முடியல.. ரொம்ப சங்கடமா/சோகமா இருக்கு. அதுனாலயே நெறய தடவ பின்னூட்டம் போடாமயே திரும்பி போயிடறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதை... உணர்ச்சிமிக்க வார்த்தைகள்! ஒரு சித்தாளை கண் முன்னே நிறுத்துகிறீர்கள்!

உங்கள் திறமை மேன்மேலும் வெளியே வரவேண்டும், பரவவேண்டும் என்ற ஆசை எனக்கு :)

ஈரோடு கதிர் said...

//Anonymous said...
//என்ன! இவர்கள் கொஞ்சம் அதிகமாக அனுபவிகிறார்கள்//

ஆமாம்.
தங்கள் வருகைக்கு நன்றி தோழி

ஈரோடு கதிர் said...

//தமிழரசி said...
எங்கு படித்தாய் நண்பா இந்த ஏழைகளின் வலியை....கண்ணீருக்கு அர்த்தம் இங்கு சிந்திய போது விளங்கியது....//

வீட்டை விட்டு வெளியே வந்தால்... எங்கு நோக்கினும் இந்த வலி தவிர்க்க முடியாத புகையாய்...

நன்றி தமிழ்

ஈரோடு கதிர் said...

ராமலக்ஷ்மி said...
//உண்மைதான்//

நன்றி ராமலக்ஷ்மி

ஈரோடு கதிர் said...

sakthi said...
//மனதை நெகிழ வைத்த வரிகள்//

//அய்யோ//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சக்தி

ஈரோடு கதிர் said...

// நாகா said...
அண்ணே, கொஞ்சம் ஸ்டைல மாத்துங்க..//

முயற்சிக்கிறேன், அன்பிற்கு நன்றி நாகா

//ரொம்ப சங்கடமா/சோகமா இருக்கு.//
புறந்தள்ள முடியாத சோகங்கள் நம்மைச் சுற்றி தவிர்க்க முடியாமல்

நன்றி நாகா

ஈரோடு கதிர் said...

//ச.செந்தில்வேலன் said...
உணர்ச்சிமிக்க வார்த்தைகள்! ஒரு சித்தாளை கண் முன்னே நிறுத்துகிறீர்கள்! //

ஆமாம் செந்தில்

தங்கள் மனம் நிறைந்த வாழ்த்திற்கு
நன்றி செந்தில்

தமிழ் said...

வார்த்தை இல்லை நண்பரே

ஈரோடு கதிர் said...

//திகழ்மிளிர் said...
வார்த்தை இல்லை நண்பரே//

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

Unknown said...

இவ்வளவு நாள்கள் உங்க பதிவை எப்படி தவறவிட்டேன்னு தெரியலை. இனி அப்படி விட விருப்பம் இல்லை, அதனால முதல் வேலையா என்னோட “அடிக்கடி படிப்பவை” லிஸ்ட்ல சேர்த்துடுறேன்

ஈரோடு கதிர் said...

//ராஜா | KVR said...
என்னோட “அடிக்கடி படிப்பவை” லிஸ்ட்ல சேர்த்துடுறேன்//

நன்றி ராஜா

குடந்தை அன்புமணி said...

கவிதை நல்லாருக்குன்னு சொல்றதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு தோழரே... வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.

இனி அடிக்கடி வருவேன்- இதை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

ஈரோடு கதிர் said...

//குடந்தை அன்புமணி said...
கவிதை நல்லாருக்குன்னு சொல்றதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு தோழரே... வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.

இனி அடிக்கடி வருவேன்- இதை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.//


பாராட்டிற்கு நன்றி தோழரே

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

நெஞ்சு வலிக்கிறது. இது மாதிரி தொழிலாளர்கள் படும் துயரத்தினை நினைத்தால் - கவிதை அருமை - வரிக்கு வரி பாராட்ட வேண்டும். வசந்த் செய்து விட்டார்

பணியாததால் பழி வாங்கும் மேஸ்திரி -
இழக்காததால் கிடைக்காத கூலி -
இரணடே ரூபாய் கொடுக்க இயலாத நிலை - கருகிய கனவுகள் - சுரக்க இயலாத ( மறுக்காத ) காம்புகள் - மறந்து போன மானங்கள் - வேறு வேலை இல்லாத கணவன் -

எல்லாவற்றையும் மறந்து விட்டு பணிக்கு ஓடும் பெண்

அற்புதமான எளிய சொற்களால் ஆன - எளிய மக்களுக்குப் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கவிதை. படிப்போர் நெஞ்சம் நெகிழும் படி எழுதப்பட்ட கவிதை.

பாராட்டுகள் கதிர்

நல்வாழ்த்துகள் கதிர்

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) said...

நெஞ்சு வலிக்கிறது. இது மாதிரி தொழிலாளர்கள் படும் துயரத்தினை நினைத்தால் - கவிதை அருமை - வரிக்கு வரி பாராட்ட வேண்டும். வசந்த் செய்து விட்டார்

பணியாததால் பழி வாங்கும் மேஸ்திரி -
இழக்காததால் கிடைக்காத கூலி -
இரணடே ரூபாய் கொடுக்க இயலாத நிலை - கருகிய கனவுகள் - சுரக்க இயலாத ( மறுக்காத ) காம்புகள் - மறந்து போன மானங்கள் - வேறு வேலை இல்லாத கணவன் -

எல்லாவற்றையும் மறந்து விட்டு பணிக்கு ஓடும் பெண்

அற்புதமான எளிய சொற்களால் ஆன - எளிய மக்களுக்குப் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கவிதை. படிப்போர் நெஞ்சம் நெகிழும் படி எழுதப்பட்ட கவிதை.//

மனம்திறந்த பாராட்டுகளுக்கு நன்றி சீனா

Unknown said...

இந்த மாதிரி பெண்களை பார்க்கும்போதெல்லாம்...'மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா...."பாடிய பாரதியிடம் ஏதாவது கேட்கவேண்டும் என்றே தோன்றுமெனக்கு...