Nov 7, 2017
111% ஜிஎஸ்டி
கனரக வாகன ஓட்டுனராக தேர்ச்சி பெற்ற அந்த இளைஞர், தன் கனவாக “ஐபிஎஸ்” என்றார்.
“என்ன படிச்சிருக்கீங்க!?”
“பத்தாங்கிளாஸ்”
“வயசு?”
“25”
“மேல ஏன் படிக்கல?”
“குடும்பச் சூழல்”
“சரி... ஐபிஎஸ் எப்படி? எப்போ?”
“2018ல் நேரடியா +2 எழுதுவேன் 2021ல் டிகிரி முடிப்பேன். அப்புறம் மூனு வருசம் ப்ரிபேர் செய்து 2024ற்குள் ஐபிஎஸ் ஆகிடுவேன்”
-
வேறொரு சந்தர்ப்பத்தில் எம்.ஏ இறுதி ஆண்டு படிக்கும் மாணவரிடம்
“அடுத்து என்ன செய்யப்போறீங்க!?”
“ஐஏஎஸ்”
“என்ன காரணம்!?”
“அது ஒரு செம்ம கெத்து!”
“எப்போ!?”
“ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ!”
“ப்ரிப்ரேசன்!?”
“இனிமேதான்”
அதன்பின் கேட்ட எந்தக் கேள்விக்கும் பொருத்தமான பதில் வரவில்லை. இறுதியாகத் தான் ஒரு உண்மை தெரிந்தது 'TNPSC / UPSC' என்பவற்றைக்கூட அவர் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.
*
இங்கு பெரும் அச்சுறுத்தலைத் தரும் கேள்வி “அடுத்தது என்ன... எதை நோக்கி!?” என்பதுதான்.
வாழ்க்கைச் சாலைகளில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்தை அடைவதற்கான பயணம் என எந்தத் தீர்மானமும் இல்லாமல், தீரத் தீர பெட்ரோல் நிரப்பி்க்கொண்டு ஓடும் பென்ஸ் கார்களும், சென்னை (அ) பெங்களூர் என இடத்தைத் தீர்மானித்துவிட்டு இரண்டாம் முறை எஃப்.சிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பழைய ஃபியட் கார்களும் சென்று கொண்டிருக்கின்றன.
என் கவனம் அந்த ஃபியட் கார்கள் அடைய வேண்டிய இடங்களை அடைந்துவிட வேண்டும் அல்லது நெருங்கிவிட வேண்டும் என்பதுதான்.
அப்போ அந்த பென்ஸ் கார்கள்!? வேறென்ன அவைகளின் பெட்ரோலுக்கு மட்டும் 111% ஜி.எஸ்.டி போடச் சொல்ல வேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
பாட்டல் ராதாக்களின் கதை
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
2 comments:
என் கவனம் அந்த ஃபியட் கார்கள் அடைய வேண்டிய இடங்களை அடைந்துவிட வேண்டும் அல்லது நெருங்கிவிட வேண்டும் என்பதுதான்.
ஆமாம்... பென்ஸ் கார்களைப் பற்றி நமக்கென்ன கவலை.
அருமையான ஊக்கம் தரும் இதுபோன்ற சந்திப்புகள் சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக அமையும் அண்ணா.
Post a Comment