Feb 3, 2015
சபிக்கப்பட்ட வனமொன்று
வேர்களின் நுனிகளில்
பாவ நெருப்பு
பூக்கத் தொடங்கியிருக்கிறது
சபிக்கப்பட்ட இவ்வனத்தில்
விதைகள் எதுவும்
இனி விழப்போவதில்லை
மழைத்துளி வேண்டி
காத்துக்கிடந்த
கோரைப்புல் கிழங்கொன்று
இறுதியாய்
தம் கருமுட்டையை
வெளித்தள்ளியிருக்கிறது
மேய்ந்து பசியாறியவைகள்
விட்டுப்போன
பாதச்சுவடுகளில்
அழிந்துபோகும் நிலையில்
நினைவுகள் மட்டும்
மீந்து கிடக்கின்றன
எல்லாம் இல்லாமல் போன
ஒரு கணத்தில்
பேய் மழையொன்று வரலாம்
அதற்குள்
அந்த முன்னாள் வனத்திற்குச் சூட்டிட
பெயரொன்று
உருவாக்கிட வேண்டும்
-
Subscribe to:
Post Comments (Atom)
முதியதோர் உலகு
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...
5 comments:
சென்ற வார வனம்? :)
அருமை......
அருமை......kathir sir
அருமை நண்பரே
அருமையான கவிதை அண்ணா....
Post a Comment