சபிக்கப்பட்ட வனமொன்றுவேர்களின் நுனிகளில்
பாவ நெருப்பு
பூக்கத் தொடங்கியிருக்கிறது

சபிக்கப்பட்ட இவ்வனத்தில்
விதைகள் எதுவும்
இனி விழப்போவதில்லை

மழைத்துளி வேண்டி
காத்துக்கிடந்த
கோரைப்புல் கிழங்கொன்று
இறுதியாய்
தம் கருமுட்டையை
வெளித்தள்ளியிருக்கிறது

மேய்ந்து பசியாறியவைகள்
விட்டுப்போன
பாதச்சுவடுகளில்
அழிந்துபோகும் நிலையில்
நினைவுகள் மட்டும்
மீந்து கிடக்கின்றன

எல்லாம் இல்லாமல் போன
ஒரு கணத்தில்
பேய் மழையொன்று வரலாம்

அதற்குள்
அந்த முன்னாள் வனத்திற்குச் சூட்டிட
பெயரொன்று
உருவாக்கிட வேண்டும்

-

5 comments:

Muhammed Jailani said...

சென்ற வார வனம்? :)

Muthusamy Venkatachalam said...

அருமை......

sivakumarcoimbatore said...

அருமை......kathir sir

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

-'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை அண்ணா....