ஃபேஸ்புக்கில் அப்ரசண்டியாக இருக்கும் ஒருவரை, தெரியாத்தனமாய் நம்ம ஊர்க்காரர் ஆச்சே என நண்பராக இணைத்துக் கொண்டேன். இன்றைக்கு நியாயப்படி டீ கடையில் அவரைப் பார்க்காமலே இருந்திருக்க வேண்டும். விதி வலியது. சந்தித்தாகி விட்டது. பார்த்தவுடன் பரவசம் எய்தினார்.
அவர் தனியாகவாவது வந்திருக்கலாம். அங்கும் ’விதி வலியது’. ஒரு நண்பரை உடன் அழைத்து வந்திருக்கிறார். அவரிடம் அறிமுகப்படுத்தியும் வைத்தார். நண்பரின் நண்பரிடம் பேசியதில் எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமம் அவர் எனத்தெரிந்து, ’மாப்ள முறையாகுதுங்க’ என உறவு கொண்டாடி, சுவாரசியமாக ஊர் நாயம் பேசத் துவங்குகையில்....
நம்ம அப்ரசண்டி நண்பர் என்னைச் சுட்டிக் காட்டி... ரொம்பப் பெருமையாக(!)....
“ஒன்னு தெரியும்ங்ளா...... ஃபேஸ்புக்ல இவரு பெரியாளுங்க. 5000 ப்ரெண்டுங்க இருக்குதுனா பாருங்களேன்” என்றார். அந்த நொடி அது ஒரு அணுகுண்டு என நான் நினைக்கவில்லை.
அவரின் நண்பருக்கு ஃபேஸ்புக் குறித்து அளவுக்கு மீறி தினத்தந்தி புண்ணியத்தில் தெரிந்திருக்கும்போல, ”ஃபேஸ்புக் காதலில் ஓசூரில் நடந்த கொலை, ஃபேஸ்புக்கால் நடந்த விவாகரத்து, ஃபேஸ்புக் நட்பில் சென்னையில் ஒரு பெண் கருவுற்றது, லண்டலின் ஆசிரியையின் அந்தரங்கப்படங்களை மாணவர்கள் ஃபேஸ்புக்கில் போட்டது, ஃபேஸ்புக்கை காவல்துறை கண்காணிப்பது” என மனிதர் பொளந்து கட்ட ஆரம்பித்தார்.
நான் “ஷ்ஷ்ஷப்பா” என டரியல் ஆகி நின்றேன்.
நல்லவேளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் உளவு பார்க்கும் மேட்டர் இன்னும் தினத்தந்தியில் வரவில்லை போலும்.
டீ கடை அக்கா, என் நிலைமையைப் பார்த்து, முதலில் எனக்கு டீ தர....
கொஞ்சம் தெம்பாக இரண்டு வாய் உறிஞ்சியிருப்பேன்.
பொசுக்குனு ஒரு போடு போட்டார்,
”ஏனுங் மாப்ள, ஊர்ல உங்க குடும்பம் நல்ல குடும்பமாச்சுங்ளே, அப்பறம் நீங்க யேன் இந்த ஃபேஸ்புக்ல திரிறீங்க” என்றார்
அப்போது உறிஞ்சிய டீ உச்சத்தலைக்கு ஏறி எனக்குப் புரை போனது!
அடேய்... மார்க் சாமி!
“ஃபேக் ஐடிகளைக் கூட நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்...
பில்டப் கொடுத்து உசுப்பேத்தும் நண்பர்களிடமிருந்து மட்டுமாச்சும் காப்பாத்துடா சாமி”
-
14 comments:
அன்பின் கதிர் - அட இப்படியும் முக நூல் நண்பர்கள் இருக்கிறார்களா ? அது சரி - தப்பீப்போம் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
அவரு ரஜினி ரசிகர் தானுங்களே :)
ha,, ha,,, ha,,,
முகநூல் வலியது...
தொழிற்களம் வாசியுங்கள்
நல்லதைப் பார்ப்பவர்களுக்கு நல்லது மட்டுமே கண்ணுக்குத் தெரியும்...எல்லாம் பார்ப்பவர் பார்வையை பொறுத்தது...
ha ha... unganala dhan ipdilam ezudha mudium...nice
இப்படியும் சில நண்பர்கள் (?) வாய்ப்பது நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.
தலையிலடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே?
Nice! lol!
//* ”ஏனுங் மாப்ள, ஊர்ல உங்க குடும்பம் நல்ல குடும்பமாச்சுங்ளே, அப்பறம் நீங்க யேன் இந்த ஃபேஸ்புக்ல திரிறீங்க” *//
நெஜமா செம காமெடிங்க..
நண்பர் ரொம்ப ரொம்ப நல்லவருங்க அண்ணா !
அப்பா சாமி நீயெல்லாம் நல்லா வருவய்யா!
இஃகிஃகி
:-) இஃகிஃகி :-)
பில்டப் கொடுத்து உசுப்பேத்தும் நண்பர்களிடமிருந்து மட்டுமாச்சும் காப்பாத்துடா சாமி”
>>
நிஜம்தானுங்க ச்கோ! நானும் இந்த அவஸ்தை பட்டிருக்கேன்
ஹா..ஹா...
ஹா ஹா ஹா....இப்படி நாலு பேரு கிடைச்சா நீங்க வருங்கால எம் ஏல் ஏ.. நாப்பது பேரு கிடைச்சா நீங்க அமைச்சர் 400 பேரு கிடைச்சா நீங்க வருங்கால முதல்வரா வர சான்ஸ் இருக்குங்க
Post a Comment