குற்றச் சுமை

பால் பேதங்கள் துறந்து
எல்லைகள் தகர்த்து
எதையும் பகிரும்
தோழி ஒருத்தியை
ஏதோ ஒரு இரவின்
நித்திரைக் கனவில்
கலந்து கூடியதை

சொல்லத்தவிர்த்து
மனம் உதறி
விழி கூசிப்பிரிகையில்
கூடுதலாய்ச் சேர்கின்றன
குற்றப் பத்திரிக்கையில் 
குறுகுறுக்கும் சில பக்கங்கள்!

-

2 comments:

பத்மா said...

:))

lakshmi prabha said...

ஒரு ஆணின் உச்சபட்ச நேர்மை குற்ற உணர்ச்சியாக வழிகிறது ..!