ஆதலினால்....

தடுமனில் தவித்தவனிடம்
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!

-

மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!

-

விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!

-

மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!

-

பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!

-

படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!

-

11 comments:

SHAN Shylesh said...

எறும்பு மொய்க்கும் என்றேன் ! செம சார் :)

க.பாலாசி said...

//வேண்டாம் எறும்பு மொய்க்கும் என்றேன்! //

ஸ்ஸப்பா ஓவரா கண்ணகட்டுதே...

கிராமத்து காக்கை said...

அமைதியான காதல் கவிதை
அருமை

ஓலை said...

Appidi podunga.

வானம்பாடிகள் said...

/படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்! /

ஏன்? அப்பதான் குச்சி முட்டாய் சாப்டாகளோ?

Anonymous said...

படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!
...Honey ? -:)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - தடுமன் - வட்டார வழக்கா - எங்கள் பக்கம் வழங்கும் சொல் - கவிதை நன்று - புயலை உருவாக்குவது - இரசவாதம் - பூக்கள் உரசலில் நெருப்பு - எறும்பு மொய்த்தல்- கற்பனை வளம் - கொடி கட்டிப் பறக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விஜி said...

இப்படி ஆகிப்போயிடுச்சா நிலமை :))

நாடோடி இலக்கியன் said...

எல்லாமே நல்லாயிருக்கு.

2 கிளிஷே.

KSGOA said...

ரொம்ப நல்லா இருக்குங்க!!!!

lakshmi prabha said...

பூக்கள் உரச நெருப்பு மூளும் ... அருமை !