கீச்சுகள் - 10

ட்விட்டரில் #wheniwasakid எனும் தலைப்பில் யதேச்சையாக கிறுக்கத் துவங்கியதில் கிட்டத்தட்ட 20 - 30 வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் பலவற்றைக் கிளறும் இனிதானதொரு வாய்ப்பு கிடைத்தது!#wheniwasakid .......வாசிங் பவுடர் நிர்மாதான் கலக்கலான விளம்பரம் 


-

எப்படா பெரிய பையன் ஆவோம்னு நினைச்சிருக்கேன் 


-


வாத்தியாருக்கு அகத்திக் கீரை பொறிச்சிட்டு வர்றதும்படிப்பின் ஒரு அங்கம் 


-

பள்ளிக்கூடம் போகும்போது முட்டாயி வாங்கிக்கனு ஊட்ல 5 காசு குடுப்பாங்க 


-

புள்ள புடிக்கிறவன் வந்து புடிச்சிக்கிட்டுப் போய்டுவான்னு பயப்படுவோம்


-

விடிய விடிய பேய் ஓட்டுறதை வேடிக்கை பார்ப்போம்


-

தண்ணிய பயமில்லாம நம்பி குடிக்கலாம் 


-

திருவள்ளுவரும் ஒரு குறிப்பிடத்தகுந்த எதிரி 


-

செல்போன்னு ஒன்னு வரும்னு நினைச்சதேயில்ல 


-

எம்ஜிஆர் சாவாரு, கருணாநிதி ஆட்சிக்கு வருவார்னெல்லாம் யாருமே நினைச்சதில்ல 


-

குருவி வளர்த்திருக்கேன் 


-

சாராயக்கடை, கள்ளுக்கடை எல்லாம் இருந்துச்சு


-

எட்டணா இருந்தா எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்


-

பொங்கல் வாழ்த்துதான் பெரிய பொக்கிஷம்


-

எங்க கிராமத்துல ஒரே ஒரு டிவிதான் இருந்துச்சு


-

எந்த திருவிழாவுல பார்த்தாலும்விதிபடவசனம்தான் ஒலிபரப்பாகும்!


-

பள்ளிக்கூடத்துக்கு போடுற காக்கி ட்ரவுசர்ல பின்பக்கம் அப்பப்ப போஸ்ட்பாக்ஸ் அமைஞ்சிடும் 


-

மைக்செட் கட்டிக்கிட்டு விளம்பர நோட்டீஸ் போட்டுக்கிட்டு போற கார் பின்னாடியே ஓடுவோம் 


-

சினிமா போஸ்டர் ஒட்ற ஆளையே ஹீரோ கணக்கா பார்ப்போம்


-

இப்படி ஆயிரம் கோடி லட்சம் கோடி யாரும் கொள்ளையடிச்சதில்ல


-

எம்ஜிஆர் முதலமைச்சரா இருந்தாரு 


-

ரேடியோ பெட்டிக்குள்ளே குட்டிக்குட்டி மனுசங்க இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணியதுண்டு 


-

டிவியில படம் தெரியறதுக்கு முன்ன புள்ளிபுள்ளியா ஓடுறத வாயத்தெறந்துட்டுப் பார்ப்போம் 


-

எழவெடுத்த செல்போனும், ஈமெயிலும் இருந்ததில்ல


-

வாய்க்கும் (ஊள)மூக்குக்கும் உதடு வழியா ஒரு பைபாஸ் ரோடு இருக்கும் 


-

முதநாள் பார்த்த சினிமாவுக்கு கிளாஸ்ல கதை சொல்வோம் 


-

மாட்டுவண்டி கடையாணிய கழட்டிஐஸ்க்காரருக்கு போட்ருவோம் 


-

கடிச்சுக்கடிச்சே சட்டைக் காலரு பிஞ்சுபோயிரும் 


-

ஈர மணல்ல தேங்காய் தொட்டியில இட்லி சுடுவோம் 


-

யாரு ரஜினி கட்சி யாரு கமல் கட்சினுதான் சண்டை


-

தலையில நிறைய முடி இருந்துச்சு


-


-0-

21 comments:

நட்புடன் ஜமால் said...

தண்ணிய நம்பி குடிக்கலாம்

தலையில மு...

இவ்விரண்டையும்

ரொம்ப இரசிச்சேன் ...

ILA(@)இளா said...

நம்மளது நாளைக்கு வரும்

ராமலக்ஷ்மி said...

/தண்ணிய பயமில்லாம நம்பி குடிக்கலாம்/

உண்மை உண்மை. எல்லாமே அருமை.

இதை அனைவரும் தொடரலாமே என சொல்ல வந்தேன். ஏற்கனவே இளா அறிவித்து விட்டார்:)!

பிரபாகர் said...

கதிர், நல்லாருக்கு. நான் இடுகையாவே எழுதப்போறேன்...

மோகன் குமார் said...

I have also done many things what you have listed here. Nostalgic.

சமுத்ரா said...

good ones..:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பின்னோக்கிய பயணம்...

நாடோடி இலக்கியன் said...

தண்ணிய நம்பி குடிக்கலாம்-சிரிக்கவும் வைக்கிறது..

தலையில நிறைய முடி இருந்துச்சு-ஹா ஹா..

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - பால்ய வயது - மலரும் நினைவுகள் - அசைபோட - ஆனந்திக்க - மகிழ - நல்ல நினைவுகள் - யாராலும் மறக்க இயலாதவை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

எனக்குப் பிடிச்சது :

சாராயக்கட - கள்ளுக்கட எல்லாம் அப்பவே இருந்துச்சி

காக்கி டவிசர்ல போஸ்ட் பாக்ஸ்

வாய்க்கும் மூக்குக்கும் உதடு வழியா பைபாஸ் ரோடு

தலையில நிறைய முடி இருந்துச்சு!


நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அட நானும் எழுதணுமா - எழுதிடுவோம் - அன்பான அழைப்பினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

KSGOA said...

எல்லாமே நல்லா இருக்கு.ரேடியோவுக்கு உள்ளே குட்டி மனுசங்க இருக்காங்கன்னு
நானும் நம்பியிருக்கேன்!!!!

Latha Vijayakumar said...

VERY NICE KATHIR. THANKS FOR TAKING ME TOO IN TO THE CHILDHOOD DAYS. YOU ALWAYS RACKS.

RAMYA said...

கதிர் எல்லா வரிகளுமே மிகவும் அருமை.. உண்மையோ உண்மை போங்க:)

கடந்தகால கதிரை அருமையான எழுத்தின் வடிவில் எங்க முன்னே நிறுத்தி விட்டீர்கள்.

//வாய்க்கும் (ஊள)மூக்குக்கும் உதடு வழியா ஒரு பைபாஸ் ரோடு இருக்கும் //

ஹா ஹா அசத்தல் ரகம்!

//மாட்டுவண்டி கடையாணிய கழட்டி ’ஐஸ்’க்காரருக்கு போட்ருவோம் //

என்னா வில்லத்தனம்:)

//கடிச்சுக்கடிச்சே சட்டைக் காலரு பிஞ்சுபோயிரும் //

கதிர், அதுக்காக வீட்டுலே அம்மாகிட்டே அடி வாங்கிநீங்களே அதையும் சொல்லுங்க:)

//ஈர மணல்ல தேங்காய் தொட்டியில இட்லி சுடுவோம் //

அந்த இட்லி சாப்பிட்டு பார்த்திங்களா அத மொதல்ல சொல்லுங்க:)

//தலையில நிறைய முடி இருந்துச்சு! //

ஹா ஹா!! ம்ம்ம்... ஓகே ஓகே...

அகல்விளக்கு said...

Golden Memories...

Nice Anna... :-)

க.பாலாசி said...

பல நினைவுகளை அசைபோட வைத்த இடுகை... எப்பாருட்ட வௌக்கமாத்து அடி வாங்கினதெல்லாம் மறுக்கா ரீவைண்டிங்...

RVS said...

அபாரம்! ஒவ்வொரு வரியும் திருவரிகள். :-)

சாதாரணமானவள் said...

//ரேடியோ பெட்டிக்குள்ளே குட்டிக்குட்டி மனுசங்க இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணியதுண்டு //
ஹஹ்ஹா... நீங்களுமா?


//டிவியில படம் தெரியறதுக்கு முன்ன புள்ளிபுள்ளியா ஓடுறத வாயத்தெறந்துட்டுப் பார்ப்போம் //

ஹை... நானும்தான்


//எழவெடுத்த செல்போனும், ஈமெயிலும் இருந்ததில்ல! //
- ரொம்ப நொந்துடீங்க போல

இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி said...

கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவதில் வேறுபாடுகள் உள்ளபோதும், பிள்ளைப்பருவ நிகழ்வுகளை நினைக்கும் போதெல்லாம் பிள்ளைகளாகவே மீண்டும் மாறிவிடுகிறோம்.தங்களின் இடுகையைப்படித்த நேற்றைய ஒரு நாள் இரவில் குழந்தையாக,பிள்ளையாக, இளைஞனாக பல பருவங்களையும் கடந்த போதுதான் வசந்த காலத்தின் அருமை தெரிந்தது.
ஆஹா...
சில மணிநேர குழந்தையாக்கியதற்கு நன்றிங்க சார்.

Rishvan said...

nalla irukku sir.. ithellaam enakkum thonum... neenga munthikkinga... www.rishvan.com

ஷர்புதீன் said...

கிளிஞ்சுது, நானும் உங்க வயசுக்காரனா? எல்லாமே எனக்கும் பொருந்துது, யாராச்சும் சின்ன பசங்க சீக்கிரம் எழுதுங்கப்பா, அவங்க கமெண்டுல மேல உள்ள முதல் வரியை சீக்கிரம் எழுதனும்