ஆனந்த விகடன் - என் விகடன் “வலையோசை”யில் நான்!

என் விகடன் - கோவை அட்டைப் படம்ஒருவேளை சாப்பாடு ஒரு ரூபாய் - கட்டுரை குறித்து
சாம் ஆண்டர்சன் - கட்டுரை குறித்து
அதீத நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் வார்த்தைகள் தொலைந்து போய்விடுகின்றன அல்லது தீர்ந்து போய்விடுகின்றன.  
 கவிதை, கட்டுரை, சிறுகதை, உலகப்படங்கள் என எதுகுறித்தும் எந்தவித அனுபவமுமின்றி, திட்டமிடலின்றி, இலவசமாகக் கிடைக்கிறதே, அதுவும் தமிழில் எழுதமுடிகின்றதே என்ற எண்ணத்தில் மட்டுமே வலைப்பக்கத்தை எட்டினேன். அதுவும், எதையோ தேட, எதுவோ கிடைக்க, கிடைத்தை வாசித்து நேசிக்க.... நேசித்த நெகிழ்ச்சியில் நாமும் எதையாவது எழுதுவோமே என்று தொடங்கிய வலைப்பக்கத்தின் மூலம் எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது வார்த்தைகளில் அளவெடுக்க முடியாதது.


ஒரு கிராமத்து சாமானியனின் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தாங்கிச்செல்கிறேன். வலைப்பக்கத்தில் எழுதத் துவங்கியபின், எழுதும் நோக்கத்தோடு நான் இதுவரை சந்தித்த நபர்கள் எனக்குள் நிகழ்த்திய மாற்றங்கள் அளப்பரியது. 


மிகுந்த நேசிப்புக்குரிய ஆனந்தவிகடனில் அதுவும் நான் அதிகம் புழங்கும் எங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்கள் அடங்கிய ”என் விகடனில்” எனது வலைப்பக்கத்திற்கு சிறப்பானதொரு அறிமுகத்தை அளித்திருக்கும் விகடனுக்கு கோடானுகோடி நன்றிகள்.


ஒவ்வொருகட்டத்திலும் என்னைத் தட்டிக்கொடுத்து, ஊக்கப்படுத்தி, செம்மைப்படுத்தி வரும் அனைத்து இணைய நண்பர்களுக்கும் நன்றிகள்.


ஒரு வலைப்பதிவராக எனக்கு கிடைத்திருக்கும் இந்த மகிழ்ச்சியை எனது “ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமத்”திற்கு சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எய்துகிறேன்.


இந்த வாரம் வலையோசைப் பகுதிய அலங்கரித்திருக்கும் பதிவர்கள் அதிஷா, கேவிஆர், புதுகைத் தென்றல், டக்ளஸ் ராஜூ ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

-0-

24 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:)!

guna thamizh said...

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அன்பரே..

வாழ்த்துக்கள்..

Avargal Unmaigal said...

வாழ்த்துக்கள் சகோதரா

krishna said...

வாழ்த்துக்கள் நண்பரே ..:-)

கும்மாச்சி said...

கதிர் வாழ்த்துகள்

தெய்வசுகந்தி said...

வாழ்த்துகள் கதிர்!!

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்ணே:)

சே.குமார் said...

சகோதரா... மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...

ILA(@)இளா said...

போக வேண்டிய தூரம் இன்னும் இருக்குன்னு சொல்ல நினைச்சாலும், இனிமேல் என்ன இருக்குன்னு ஒரு கேள்விவருதே. தொகா, வாரப்பத்திரிக்கை, அடுத்து? வெறுமை வராம இருக்கனும்..

வாழ்த்துகள்!

பொன்மலர் said...

வாழ்த்துகள் சார்.

தேவ் | Dev said...

வாழ்த்துகள் கதிர்!!!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் அண்ணே..

ஈரோடு கதிர் said...

@ ராமலக்ஷ்மி

@ guna thamizh

@ Avargal Unmaigal

@ krishna

@ கும்மாச்சி

@ தெய்வசுகந்தி

@ வானம்பாடிகள்

@ சே.குமார்

@ பொன்மலர்

@ தேவ் | Dev

@ செ.சரவணக்குமார்

@ ILA(@)இளா

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்! :)

ஈரோடு கதிர் said...

இளா,

//வெறுமை வராம இருக்கனும்..//

வரும் ஆனா வராது!!! :)))
நன்றிங்க இளா!

தமிழரசி said...

பெருமையும் மகிழ்ச்சியுமா இருக்கு கதிர்.வாழ்த்துக்க்ள்..

r.v.saravanan said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கதிர்

gowri said...

விகடனில் உங்கள் பதிவு...மிகப் பெருமையான விசயம்.. உங்களுக்கும், உங்கள் தோழமையைக் கொண்டாடும் எங்களுக்கும்... இன்னும் எழுத்துத் துறையில் மிக உயரம் செல்ல நல்வாழ்த்துக்கள்....

Vetrimagal said...

விகடனில் பதிவா? பெருமையான செய்தி.
வாழ்த்துக்கள். மேன்மேலும் எழுதுங்கள், நாங்கள் படித்து மகிழ்வோம்!

வணக்கம்.

ஈரோடு கதிர் said...

@ தமிழரசி

@ r.v.saravanan

@ gowri

@ Vetrimagal

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்! :)

விஜி said...

வாழ்த்துகள் :))

வீடு K.S.சுரேஸ்குமார் said...

மீண்டும் வாழ்த்துகிறேன்...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வாழ்த்துக்கள் நண்பரே !

Saravanan TS said...

வாழ்த்துக்கள் கதிர் சார், தொடரட்டும் உங்கள் பயணம். பின் தொடர்வோம் நாங்கள்........

Saravanan TS said...

வாழ்த்துக்கள் கதிர் சார், தொடரட்டும் உங்கள் பயணம். பின் தொடர்வோம் நாங்கள்........