உதடுகளின் போர்க்களம்



எதைக்கொண்டும்
நிரப்பிட இயலுவதில்லை
முத்தம் பதிந்(த்)த சுவடு(க்)களை!

(..)

நெருப்பைத்
தூண்டிடும் முரண்
முத்த ஈரத்தில் மட்டுமே!

(..)

இறைவனும் வெட்கிக் கிறங்கி
இமை மூடுகிறான்
முத்தமிடும் கணங்களில்!

(..)

உமிழ்நீரும் அமுதமாய்
உருமாறும் இரசவாதம்
முத்தங்களில் மட்டுமே!

(..)

நெருப்பையும் குளிரையும்
உயிருக்குள் ஒரு சேர
ஏற்ற வல்லது ஒற்றை முத்தம்


(..)

வெற்றியும் தோல்வியுமில்லா
உதடுகளின் போர்க்களத்தில்
வெல்கிறது முத்தம்!

(..)


10 comments:

vasu balaji said...

உச் உச் உச்..அட ரசிச்சனுங்ணா. நீங்க வேற.

குடந்தை அன்புமணி said...

மு(மொ)த்த கவிதைகளும் நன்று...

பழமைபேசி said...

நடவடிக்கைக சரியில்லையே? போடுறா தங்கச்சிக்கு ஒரு தாக்கலை!!!

SATYA LAKSHMI said...
This comment has been removed by the author.
Madumitha said...

ஈர வெப்பம்!

Anonymous said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.அப்ப்பபபா மவுத் அல்சர் இந்த நேரம் பார்த்தா இந்த பக்கம் வரணும்.. நான் கெளம்பரேன் சாமி

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அட என்ன இது முத்த ஆராய்ச்சி - நல்லாவே இருக்கு - உமிழ்நீரும் அமுதமாய்உருமாறும் இரசவாதம்முத்தங்களில் மட்டுமே! - ரொம்பப் பிடிச்சிது - முத்தங்களுடன் வாழ வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஓலை said...

Nadakattu. Nadakkattu !

Unknown said...

சொல்லாத இடம் கூட குளிரும் உணர்வு படிக்கும் போதே ..!

Unknown said...

இந்த போர்களத்தில் இருவருக்கும் வெற்றி....5வது கவிதை செம