தமிழ்கூறும் இணைய நல்லுலகுக்கு வந்த காலத்தில் இருந்து, தப்பித்துப்போக முடியாத ஒன்று இணையச் சண்டைகள். Blogல் நுழைந்து Facebook சென்று, அங்கிருந்து Twitter வந்து, கூடவே Google Group-ல் சேர்ந்து, பின் Buzz-ல் இணைந்து அங்கிருந்து Google Plusக்கு இடம் மாறி என, இணையத்தில் புழங்கும் ஒரு சாமனியனின் பயணம் என்பது படும்பாடு படக்கூடியது. (சாமனியன்னு என்னையத்தான் சொன்னேன், யாரு என்னது பெருசா ஒன்னும் நீங்க யோசிக்க வேணாம்..செரியா!?). இந்தப் பயணமும், பாடும் உருப்படறதுக்கானது இல்லைனுதான் இன்னும் புரியல.
பயணத்தின் பெரும்பாடு என்னனு கேட்டீங்ன்னா, இந்தமாறி இந்தமாறி… இணையப் பெருவெளியில, ஆங்காங்கே மக்கள் நடத்துற சண்டையைப் புரிஞ்சுக்கிறதுதான். முக்கியமாக எதெதுக்குத்தான் சண்டையை ஆரம்பிக்கிறாங்கன்னே முக்காவாசி நேரம் புரியறதில்ல. பெரும்பாலும் பாதிச் சண்டையில், அங்கன செமையா சண்ட நடக்குது தெரியுமான்னு நல்லவங்க சிலபேரு chat பெட்டியில் அல்லது மின்மடலில் சுட்டி போடும் போதுதான் எட்டியே பார்ப்போம்.
இப்பக்கூடப் பாருங்க google குழுமத்துல ஒரு சண்டை, Facebook குழுமத்துல ஒரு சண்டை, Twitter-ல ஒரு சண்டை, Google plus-ல ஒரு சண்டைனு…. ஒரே சண்டையா கெடக்குது. (அங்க யாருப்பாது, ஒரு சண்டைனு சொன்னதுக்கு திட்டுறது. செரி… செரி… பல சண்டைகள் நடக்குதுதான்…. அட விடுங்க, செரி நான் சொன்னது தப்புத்தான்… அய்யே எனக்கு ஒவ்வொரு சண்டைதானுங்க தெரியும். இப்ப என்னாங்குறீங்க…. பல சண்டை நடக்குதுன்னா எங்கே என்னானு சுட்டி போடுங்க, மேலே இருக்கிற ’ஒரு’ என்பதை இரு / ஐந்து / பலனு மாத்திக்கிறேன்… ம்ம்ம் காசா பணமா, கூல் கூல்… அட விடுங்க பாஸு… ச்ச்சே ச்சே உங்களச் சொல்லலைங்க என்னையே சொல்லிக்கிட்டேன்… ஆஆஆல்…ஈஈஈஸ்ஸ்..வெல்ல்ல்ல்)
நமக்கு சுட்டி கிடைச்சு, கூடவே நேரம்(!) கிடைச்சு என்ன ஏதுன்னு எட்டிப்பார்க்கிறப்போ, கண்டிப்பா அது பாதிச் சண்டையில் இருக்கும். அமெரிக்கா – ஆலத்தூர் – இங்கிலாந்து - ஈரோடு – உகாண்டா – ஊஞ்சலூர்… ’என’ பல இடங்களிலிருந்தும் அந்தச் சண்டையில் கனிணி விசைப்பலகையில் விரல்கள் மூலம் வார்த்தைகளைத் துப்புவார்கள் அல்லது சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள். (அதென்ன குறிப்பிட்ட சில ஊர் நாடுகள்னு பார்க்குறீங்களா, சும்மா அகர வரிசையில சில பேரு எழுதி ’எ’ வந்தவுடனே ’என’ என்று முடிச்சுக்கிட்டேன்.)
பாதிச் சண்டையில வேடிக்கை பார்க்கப்போற என்னை மாதிரி அப்புராணிகளுக்கு அது என்ன சண்டைனே புரியாது. சரி மொதல்லேருந்து என்னனு படிச்சுப்பார்த்துட்டு வரலாம்னு போனா, இங்கே ’டொடக் டொடக்’னு சண்டையின் புதிய வாள்வீச்சுகள், கையில விழுகிற மசால்வடை போல சூடா விழுந்துட்டே இருக்கும். சண்டையின் ஆரம்பம் ஆறிப்போன ரவை மாதிரி வழுவழுப்பா கெடக்கும். நீங்களே சொல்லுங்க, ஆறிப்போனத படிக்காட்டி சண்டை என்னாத்துக்குன்னே புரியாது, ஆனா புதுசா விழுகிற மசால் வடையை தின்னத்தானே மனசு அலைபாயும். ஒரு அப்புராணி என்னதான் பண்ணுவான். என்னமோ போங்க.
ஆங்ங்ங்… எங்க விட்டேன், ம்ம்ம்… அந்த சண்டைக்குள்ளே நொழஞ்சு வேடிக்கை பார்க்கிறதில. எப்படி இணைய உலகத்துல நீச்சல் அடிக்க வந்து மூழ்கிப்போனோமோ, அதேமாதிரி இங்கிட்டு சிலபேருக்கு வேடிக்கபார்க்க வந்தா, வந்த கையோடு நிக்கத்தோணாது, ’டுபுக்குடீர்’னு எதையாச்சும் சொல்லி சண்டையில குதிச்சிருவாங்க, சில பேரு, தனக்குப் பிடித்த ஆள் பக்கம் அல்லது கொள்ளை…. ஸ்ஸ்ஸ்ஸாரி டங்கு ஸ்லிப்பு…. கொள்கை பக்கம் கொடிப்பிடிச்சிட்டே குதிப்பாங்க. சில பேரு சண்டையை ஒரு புயல் மாதிரியோ, சுனாமி மாதிரி மாத்தலாமான்னு முயற்சி பண்ணுவாங்க, (பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்) இன்னும் சிலபேரு சண்டை போடுகிற ஆட்கள் அணிகளோடு இருக்கும் பழைய பகையை இதிலும் கோர்த்துக்கப் பார்ப்பாங்க, இந்த சில ‘சில பேர்களை’யெல்லாம் தாண்டி மிச்சம் இருக்கிற பல பல பல பல பேரு சுவாரசியமாகவோ, புரிஞ்சோ புரியாமலோ கண்ணுல வெளக்கெண்ணைய விட்டுக்கிட்டு மெனக்கெட்டு வேடிக்கை பார்ப்பாங்க. அப்புறம் அவங்கவங்களுக்கு கெடைக்கிற நேரம், இருக்கிற திறன் எல்லாம் சலிக்கும் வரைக்கும் சண்டை போட்டு முடி(க்கும்)யும் போது, ஒன்று அந்த சண்டைக்கான இடுகை, திரி அழிக்கப்பட்டிருக்கும் அல்லது முடக்கப்பட்டிருக்கும். சண்டை முற்றுப்பெறும்போது கட்டங் கடைசியா வர்ற ஆளு (வாசகன்) மட்டும், அடடா இன்னும் நாலு வரி சண்டை நடக்காதானு அந்த இணையப் பக்கத்தை Refresh பண்ணிப்பண்ணி கை வலி கண்டு விட்டுட்டுபோய்ருவான்.
மழை விட்டும் தூவாணம் விடாத மாதிரி, பெரிய சண்டைகள் ஓய்ஞ்சாலும், அதையொட்டிய கிளைச் சண்டைகள் அப்பப்ப நடந்துட்டுத்தான் இருக்கும். அதுவும் எது வரைக்கும்னா அடுத்த பெரிய சண்டை ஆரம்பிக்கிற வரைக்கும். என்ன ஒரு கொடுமைன்னா, இந்தப் பெரிய பெரிய சண்டைகள் எல்லாம் ஷங்கர் படம் மாதிரியோ, ரஜினி படம் மாதிரி விளம்பரத்தோடவெல்லாம் வர்றதில்ல. சும்மா அப்படியிப்படி ஆரம்பிக்கும், அங்கிட்டும் இங்கிட்டும் இருக்கிற ஆட்களோட இரத்த அழுத்தத்துக்கு ஏத்தமாதிரி அடிதடி நடக்கும். அதுல பரிதாபப்பட்ட ஒரே ஜீவன் யாருன்னா நம்ம கிட்ட வாக்கப்பட்ட கம்ப்யூட்டர் கீ போர்டுதான்.
செரி.. இப்ப என்னதான் சொல்ல வர்றேன்னு கேக்குறீங்களா…. (செரி செரி ஒன்னும் கேக்கலனு சொல்றதும் புரியுதுப்பா) இந்த மாதிரி சண்டைகள் நடக்குதுன்னு ஒரு இடுகை தேத்துறேன் அம்புட்டுத்தான்…. ம்ம்ம்ம்… இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, இப்படி வெட்டுக்குத்து நடந்த சண்டைகளின் வரலாறு புவியியல் எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுப் படிச்சுப்பார்த்தா செம மொக்கையா இருக்கும். செம மொக்கைங்கிறவிட படுபடு பாடாவதி மொக்கையா இருக்கும். கருமாந்திரம் என்னாத்துக்குடா இப்படி அடிச்சிக்கிட்டோம்னு இருக்கும். பொடனியில இரத்தம் சுர்ருனு ஏற, நெத்தி நரம்பெல்லாம் பொடைக்க, ’டொடக் டொடக்’னு கீ போர்டுல தட்டுனதெல்லாம் நியாபகத்துக்கு வரும்போது பப்பி ஷேமா இருக்கும்.
இப்படியெல்லாம் எழுதுறதுக்காக நானெல்லாம் சண்டையே போடாத சப்பாணினு யாரும் நினைக்கவேணாம். (அதென்ன சப்பாணி உவமைனு கேக்குறீங்களா.. அட சண்டைக்கு, சப்பாணி ’ச’-க்கு ’ச’.) நானும் blog சண்டையில ஒரு 400 பின்னூட்டம், Google Buzzல நூத்திச்சில்லற பின்னூட்டம், Facebookல 150 பின்னூட்டம்னு எப்பவோ ஆடினதுண்டு. என்ன கருமம் அதையெல்லாம் கல்வெட்டுல பொறிச்சு வைக்கலாம்னு பார்த்தா, அந்த எல்லாச் சண்டையையும் சண்டை போட்ட நாங்களே ஒன்னு சேர்ந்து டெலிட்டிட்டோம்…
செரி கடைசியா எதும் பன்ச் வைக்கனுமாமே…
அதாவது நான் பெரிசா நீ பெரிசான்னு இணையத்துல போடுற சண்டையில சண்டை போடுற ஆட்களோ / அணிகளோ இதுவரைக்கும் ஜெயித்ததாவோ தோற்றுப்போனதாகவோ சரித்திரம் பூகோளம் எதுவுமில்லை… (க்கும் இதுல சரித்திரம் வேறையாக்கும்…. ஸ்ஸ்ஸ்.. வாயமூடு…. சொல்லிமுடிக்கிற வரைக்கும் விடுங்கப்பா)… அப்போ யாருதான் ஜெயிக்கிறது தோற்பதுனு கேக்குறீங்களா…. சண்டையை நல்லாப் புரிஞ்சு ரசிச்சு அனுபவிக்கிறவன் ஜெயிக்கிறான். என்ன சண்டைனே தெரியாம, அய்யோ எப்படியாச்சும் புரிஞ்சுக்கனுமேன்னு மெனக்கெட்டும் புரியாதவன் தோற்கிறான்…
இதுல நாம ஜெயிக்கிறவங்களா, தோக்குறவங்களா இல்ல இரத்தத்தை பொடனி வழியா உச்சந்தலை வரை ஏத்தி சண்டையில் நாயடி பேயடி வாங்குபவர்களா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்… ஏன்ன்ன்னா அன்னிக்கே யாரோ சொன்னாங்க ”உன் வாழ்க்கை உன் கையில்”னு… ஸோ… ஆஆஆல்…ஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்ல்.
டொண்டடொய்ய்ங்!!
-0-
8 comments:
அப்படிப்போடுங்க... :-)
எதுனா சண்ட லிங்க் குடுக்கலாம்ல. டெமோக்கு
நானெல்லாம் ஒண்ணுமே புரியாம ஒருவாரம் வரைக்கும் ஒரு சண்டைய படிச்சிருக்கேன்.. இந்தப்பக்கம் ஒரு லிங்க்கு, அந்தப்பக்கம் ஒரு லிங்குன்னு அப்டியே போய்கிணேயிருக்கும்.. கடைசில பாத்தா ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது..
விடிஞ்சி எழுந்து வந்தா ஒரு இடுகையா?? நடக்கட்டு நடக்கட்டு!!
புரிஞ்சுக்கனுமேன்னு மெனக்கெட்டும் புரியாதவன் தோற்கிறான்… நாந்தாங்கோ!
Google aandavan soodaana sandaigalukku oru link koduththaa nallaa irukkum.
அன்பின் கதிர் - சண்டை பற்றிய சுட்டிகள் கிடைக்காத காரணத்தினால் - இப்பதிவினையே சண்டை மூட்டிய / தீர்த்து வைத்த பதிவாக எண்ணி - ஒன்றும் புரியாத நிலையில் - இன்று ஒரு பதிவு படித்து மறுமொழி இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........
தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.
தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)
தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!
நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!
அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???
சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........
சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.
நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.
விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...
Post a Comment