கீச்சுகள் - 8

காடுகளை அழித்து ஆறுகளைக் கொன்று நிலங்களை மலடாக்கி நீரைக்கெடுத்து காற்றைக்கெடுத்து, மனித இனம் இன்று எட்டியிருக்கும் சாதனை தன்னை 700 கோடியாக  உயர்த்திக்கொண்டது மட்டுமே!

***

சிலைக்கு மாலையிடுவதற்கு சிலையாய் நிற்பவரின்மேல் இருக்கும் மரியாதை மட்டும் காரணமில்லை, தானும் இருக்கிறேனென்று அடையாளப்படுத்தலும்தான்.

***

சிலரால் மட்டும் எப்படி இத்தனை அன்பாகவும், அக்கரையாகவும் இருக்க முடிகிறது. ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருக்கின்றது.

***
 
இருள் நிரந்தரம், அவ்வப்போது.... ஒளி வந்துபோகிறது!

***

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை - பாரதி
#
பாரதி வாழ்ந்தபோதே இந்தியாவுக்கு Pepsi & Coke வந்துடுச்சுபோல!

***
ஒன்றிற்கு அடிமையானபின், அடிமையாய் இருப்பதில் உணரும் சுகமே(!), அந்த அடிமைத்தனத்தை நீட்டித்து வைத்திருக்கிறது.

***

ஓரிரு மாத உணவுக் கட்டுப்பாடு, ஓரிரு நாட்களில் சிதைந்து போகிறது #விதி வலியது

***

மழைக்கால நாட்கள் குளுமையை, இனிமையை மட்டும் கொண்டுவருவதில்லை, ”இங்க செம மழை, கொஞ்சம் லேட்டாகும்எனும் பொய்க்கான வாய்ப்பையும் தருகிறது :)

***

இரண்டு முறை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது போலவே, இரண்டு முறை எழுதவும் பிடிப்பதில்லை,  மனதிற்குள் எழுதி மீண்டும் எழுதிட!  ஆனாலும் எழுதுகிறேன் # இதுதான் வாழ்க்கை :)

***

உணவு பணவீக்கம் 10.6% இருக்கும் நாட்டில்தான் ரூ.32 சம்பாதிக்கிறவன் வறுமைக்கோட்டைத் தாண்டி நகரத்தில் வளமாய் வாழ்கிறான் #இந்தியா :(

***

மியூஸிக் சானல்களில் யார் போன் பண்ணினாலும் கெக்கபிக்கனு சிரிக்கிற மாதிரியே எல்லோரும் சிரிச்சுப் பேசினா எப்படிய்ய்ய்யிருக்கும்!?

***

எப்படியோ போகட்டும் எனக்கென்ன என, கடந்துபோக முடியாத ஆட்கள் பலருக்கு கோமாளிகளாவும், உண்மையில் மாற்றத்தின் முதற்புள்ளியாகவும் இருக்கின்றனர்

***

எல்லாத் திருப்பங்களும் இடதுபக்கம் மட்டுமே இருப்பின் விபத்துகள் குறைந்து போயிருக்குமோ!?

***

ஆரவாரமாய்த் தேர்ந்தெடுக்கும் அருமைக்குரிய ஆட்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதான் அதிகம் இருக்கிறது

***

ஏய்... நேரமாச்சு எழுந்திரு!” என குழந்தைகளை எழுப்புவதில் தொடங்குகின்றன அன்றைய பொய்கள்! :)

***

இங்கே கிறுக்குபவை முழுக்க முழுக்க என்னுடையது, எனக்கானது மட்டுமே அல்ல, அதே சமயம் உங்களுக்கானது மட்டுமே அல்ல  # புரியலையா!? அட... எனக்கும்தான்!!! டோண்ட் வொரி, ப்பீ ஹேப்பி! :)

***

கொசு மருந்தைக் கண்டுபிடிச்சது, யாரா வேணா இருக்கலாமுங்க, ஆனா வீதியில மருந்தடிச்சு வீட்டுக்குள்ளே கொசுவை அனுப்புற தில்லாலங்கடி வித்தையைக் கண்டுபிடிச்சது நம்ம ஊரு முனிசிபாலிட்டி விஞ்ஞானிங்கதான்

***

எதன்மேல் கள்ளத்தனமான ஆர்வம், பாசம் வருகிறதோ, அது உரிமையற்றதாகவே இருக்கின்றது.

***

தோல்வி திணிக்கும் விரக்தியின் விளிம்பில் தள்ளாடும்போது, யார் எது பேசினாலும் அது அடங்க மறுக்கும் கோபத்தையே திணிக்கிறது

***

இணையக்கடலில் நீச்சல் அடிக்கலாம்னுதான் போறோம்... ஆனால், கொடுமை என்னன்னா.... மூழ்கிப்போய்டுறோம் #உன்னைப்போல் ஒருவன்! :)

***

எட்ட முடியாததின் மேல் ஏக்கம் கூடுவதுதான் வாழ்க்கையின் விந்தை!

***

நண்பர்களின் மனைவிகள் நட்பாவதைவிட தோழிகளின் கணவர்கள் நட்பாவதில் ஏதோ மனத் தடங்கல் இருக்கிறது

***

நண்பர்களோடு வாக்கு வாதம் செய்யும்போது அந்த கணத்தில் நட்பு தொலைந்து, ஏதோ ஒரு இனம் புரியா பகை நிரம்பிக் கொல்கிறது!

***

9 comments:

ராமலக்ஷ்மி said...

நன்று. தொடருங்கள்.

அமைதிச்சாரல் said...

எல்லாமே நல்லாருக்கு..

வானம்பாடிகள் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

ILA(@)இளா said...

//இணையக்கடலில் நீச்சல் அடிக்கலாம்னுதான் போறோம்... ஆனால், கொடுமை என்னன்னா.... மூழ்கிப்போய்டுறோம் //

அட்டகாசம். இது நம்ம எல்லாருக்குமே பொருந்தும் :)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அனைத்தும் அருமை. நன்று நன்று -

//நண்பர்களோடு வாக்கு வாதம் செய்யும்போது அந்த கணத்தில் நட்பு தொலைந்து, ஏதோ ஒரு இனம் புரியா பகை நிரம்பிக் கொ’ல்’கிறது!//

சூப்பர் கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

everestdurai said...

1964 லிலேயே வீட்டுக்கு வந்தவங்கள காபி குடிக்கக்கிரிகளா இல்லா பெண்ட குடிக்கக்கிரிகளா அப்படின்னு கேப்பாங்க அப்படினா அப்போவே பெப்சி கொக்க கோலா, பெண்ட இருந்துதில்ல

Mahi_Granny said...

அதென்ன மகா மொக்கை. மழை நாளின் பொய், காலை நேர பொய், தன்னை முன்னிலைப் படுத்த சிலைக்கு மரியாதை , சிதைந்து போகும் உணவுக் கட்டுப்பாடு போன்று எல்லாமே நல்லாவே இருக்கு.

சி.கருணாகரசு said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

எல்லாமே நல்லாருக்கு..