மழை நாட்கள்



அந்தப் பருவத்தின் 
முதல் மழைத்துளி
சுமந்துவரும் வாசம்
அலாதியானது!

தாகத்தில் தவிக்கும்
மண்மீது மோதும்
நீர்த்துளி எழுப்புகிறது
மோகத்தின் வாசத்தை!

அன்றொருநாள்
மழையில் நனையாமலிருக்க
ஒதுங்கிய தனிமையில்
பற்றிய கைகளினூடே
பார்த்த விழிகளினூடே
படர்ந்த காதல்
மெலிதாய்க் கிளர்ந்து
கலந்திடத் துடிக்கிறது
முதல் மழைத்துளியின்
மோக வாசனையில்

உறங்கிக்கிடக்கும் நினைவுகளை
கிளர்த்திவிட்டுப் போவதில்
ஒருபோதும் தோற்பதில்லை
மழை நாட்கள்!

~

6 comments:

Kumaravadivel said...

அருமை, அண்ணா....!!!

இனியவன் என்றும் said...

தாகத்தில் தவிக்கும்
மண்மீது மோதும்
நீர்த்துளி எழுப்புகிறது
மோகத்தின் வாசத்தை......அருமை அண்ணா

Anonymous said...

கதிர் பார்த்தால் இது ஒன்னும் மழைக்கு சொல்லும் கவிதை மாதிரியே இல்லையே...சரி சரி... நடக்கட்டும் நடக்கட்டும்,,

vasu balaji said...

அண்ணா எப்புடிண்ணா இப்புடி:))

க.பாலாசி said...

என்னமோ சாமீ.. அது நெசந்தான்...

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மழை ஒரு வகையில் காதலர்களுக்கு உதவத்தான் செய்கிறது - நனைந்த உடைகள் - ஒரு குடையின் கீழ் இருவரும் - கைகள் பற்றிக்கொள்ள - விழிகள் கலக்க - காதல் மெலிதாய்த் துளிர்க்க - கலந்துடத் துடிக்க ---------------- வாழ்க வளமுடன்-நட்புடன் சீனா