பெருநதிப் பயணம்





ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி


நன்றி: திண்ணை

~

9 comments:

vasu balaji said...

நதியோட்டம் கவிதையோட்டம்

பிரபாகர் said...

ம்.... நல்லாருக்கு கதிர்!...

பிரபாகர்...

Vijayashankar said...

Nice.

Who is this? http://erodekathir.blogspot.com/

சத்ரியன் said...

நைஸ் நதி.

settaikkaran said...

சலசலவென்று கரைபுரண்ட கவிதை!

ஓலை said...

Nice.

'பரிவை' சே.குமார் said...

கரை புரண்ட கவியோட்டம்...

ராமலக்ஷ்மி said...

நதியின் துள்ளல் வரிகளில்...

ஸ்ரீராம். said...

நதி சொல்லும் பாடம்.