கீச்சுகள் - 5

சில நேரங்களில் தானாகக் கிடைக்கும் தனிமை, எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் போன்று இனிமையானது.

***
எல்லாம் நானே, எவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதில்லை”  எனச் சொல்பவர்களிடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது!.

***
தேய்க்கமுடியாத அளவுக்கு கரைந்த சோப்பை புது சோப்பில் ஒட்டிப் பயன்படுத்துறீங்களா? கடையில் இருந்து நீங்கதான் சோப் வாங்கிட்டு வர்றீங்கங்றத ஒத்துக்குறேன் :).

***
மௌனங்களில்தான்  தேடவும் முடிகிறது,  தொலையவும் முடிகிறது.


***
அண்டை வீட்டு நாய் அடங்காமல் குரைப்பது அதன் சுதந்திரம். பதிலுக்கு குரைக்கவோ, காதைப்பொத்தவோ மட்டுமே சுதந்திரம். அதை அடிக்க அல்ல #முடியலத்துவம்.

***
நாயகனாகவோ, வில்லனாகவோ இருப்பதை அவன் மட்டுமே தீர்மானித்துவிட முடிவதில்லை!

***
நம் தவறுகள், பல சமயங்களில் மற்றவர்கள் சுட்டும் முன்பே நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஒத்துக்கொள்வதில் மட்டும்தான் எப்போதுமே சிக்கல்!.

***
எல்லாவற்றுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லும் நபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருப்பது நிகழ்காலத்திற்கும் நல்லது!.

***
ஆரம்பப் பள்ளி நாட்களில் அதிகம் திட்டு வாங்கியவர்களில் முக்கியமானவர்திருவள்ளுவர்”.

***
தேவதைகளுக்கு தங்களைத் தேவதைகளெனத் தெரிவதில்லை, ஆராதிப்பவர்களுக்குத்தான் தெரிகிறது.

***
விடுமுறைக்கு அடுத்து வரும் எல்லா நாட்களும் திங்கட்கிழமை இல்லை என மனசுக்குப் புரியவைக்க நான் படுற பாடு இருக்கே!!! #அப்ப்ப்பப்பா!


***
சில மரணங்களை கடவுள் தடுப்பதுமில்லை.  சில மரணங்களை அவ்வளவு எளிதில் பரிசளித்துவிடுவதுமில்லை!.

***
பிடிக்காத உணவுக்கு எத்தனை நேரமானாலும் பசிப்பதில்லை. பிடித்த உணவுக்கு எந்த நேரமெனினும் பசிக்கிறது # குழந்தைகள்.

***
இன்னும் போதாமல் இருப்பதுஅன்பு”.

***
தங்கம் விலை உயர்வால் மக்கள் அவதி - அடப் பாவமே காத்தால பழைய சோத்துக்கு தங்கத்தைத்தான் தொட்டுக்குவாங்களோ?

***
பல பொண்ணுங்க ஆண்களை, அண்ணான்னு கூப்பிடறது பாசத்துல இல்ல, பாதுகாப்புக்கும்தான் #தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி.... :)

*** 

அழகாய் இருக்கும் அபத்தங்கள் சில நேரங்களில் கவிதையாக மாறிவிடுகிறது.

***

அதீதமாய் நேசிக்கும் ஒன்று குறித்து பேசும்போது கூடுதல் நாடகத்தன்மை வந்துவிடுகிறது. 

*** 

எந்தச் சூழலில் ஆழ்ந்திருந்தாலும், சில பாடல்களால் அதிலிருந்து மீட்டெடுத்துவிட முடிகிறது # இசை.

***
மனதுக்கு உகந்த நண்பர்கள் உடன் இருக்கும் பொழுதுகளில், ஒரு திருவிழாவிற்குரிய கொண்டாட்டம் மனதில் நிலைகொள்கிறது!.

***

மாங்குமாங்னு கல்யாணத்தை போட்டோ எடுத்துக்கொள்ளும் பலர் (முழுதாய் பணம் கொடுத்து) ஆல்பம் வாங்குவதற்குள் பசங்க புள்ளைக பள்ளிக்கூடம் போய்டுது.

***


பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’.

13 comments:

SivaG said...

Nice collection and wonderful thoughts.

மச்சவல்லவன் said...

ஒவ்வொரு வாக்கியமும் உண்மையானது,அனைத்தையும் முத்தாக பதித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் சார்.

KSGOA said...

எல்லாமே நல்லா இருக்கு.

ஸ்ரீராம். said...

நாயகன் வில்லன் கீச்சும், நம் தவறுகள் கீச்சும் அருமை.

வானம்பாடிகள் said...

/எல்லாவற்றுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லும் நபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருப்பது நிகழ்காலத்திற்கும் நல்லது!. /

கோயமுத்தூர் குசும்ப விட ஈரோட்டு கொசும்பு அநியாயம் தலைவரே:))

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை. நல்லாவே சிந்திக்கிறீங்க:)!

ஓலை said...

anne! thaththuva mazhai p(i)ramaatham.

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

அச‌த்த‌ல் சிந்த‌னைக‌ள்.எல்லாமே ந‌ல்லாயிருக்கு.

//பிடிக்காத உணவுக்கு எத்தனை நேரமானாலும் பசிப்பதில்லை. பிடித்த உணவுக்கு எந்த நேரமெனினும் பசிக்கிறது # குழந்தைகள். //

அப்ப‌டின்னா நானும் குழ‌ந்தை.

கோமாளி செல்வா said...

/// அண்டை வீட்டு நாய் அடங்காமல் குரைப்பது அதன் சுதந்திரம். பதிலுக்கு குரைக்கவோ, காதைப்பொத்தவோ மட்டுமே சுதந்திரம். அதை அடிக்க அல்ல #முடியலத்துவம்.

//

இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :))

சத்ரியன் said...

அந்த மூனாவது விசயத்தை எப்படி மோப்பம் பிடித்தீர் ஓய்ய்ய்ய்!?

சத்ரியன் said...

//பல பொண்ணுங்க ஆண்களை, அண்ணான்னு கூப்பிடறது பாசத்துல இல்ல, பாதுகாப்புக்கும்தான் #தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி.... :)//

எலக்‌ஷன் -ல நிக்கிறதுக்கு அடி போடுறா மாதிரி தெரியுது.

தமிழ் நாட்டுல ஆண்களோட எண்ணிக்கை தான் அதிகமாம். ஸோ, வசனத்தை மாத்தி எழுதுங்க. இல்ல டெபாசிட் காலி.

அசோக்ப்ரியன் said...

//மாங்குமாங்னு கல்யாணத்தை போட்டோ எடுத்துக்கொள்ளும் பலர் (முழுதாய் பணம் கொடுத்து) ஆல்பம் வாங்குவதற்குள் பசங்க புள்ளைக பள்ளிக்கூடம் போய்டுது//


ஹி ஹி ஹி நம்ம லைப்லேயும் இது தாங்க ஆச்சு.....