புவியியல் வரலாறு


வரிகொடுத்த சாமானியன்
குறைந்த காசுக்கு நிலம் இழந்தவன்

திட்டம்வகுத்த பொறியாளான்
கல்லுமண்ணெடுத்த சித்தாள்
கட்டிய ஒப்பந்தக்காரன்
எவர் பெயரும் வடிக்கப்படுவதில்லை
எந்தப் பாலத்தின் முகப்பிலும்

ஓரிரு இரத்தத்துளிகளோடு
ஓங்கியோங்கி அடிவாங்கும் உளிநுனியால்
பளபள கருங்கல்லில் வெள்ளிப்பூச்சில்
துரதிருஷ்டவசமாய் பொறிக்கப்படுகிறது
குறுக்கே பூட்டப்படும் வண்ணநாடாவை துண்டிக்க
கோலாகலமாய் வருபவர் பெயர் மட்டும் 

-0-

12 comments:

StatSurface said...

accidents!!! :(

Unmaithan Anna...

-Agalvilakku

arun guhan senthil said...

அற்புதம்!!

Anonymous said...

தலைப்பே அசத்தல்..

எந்த வரியை கோடிட்டு சொல்லனுமுன்னு தெரியலை கதிர் ஆனால் சில வரி கவிதையா இருந்தாலும் ஒரு கண்ணீர் கதையை படித்த உணர்வு இந்த வரலாறு

vasu balaji said...

விளம்பர உலகம்
வியர்வைக்குச் செய்யும் துரோகம்

கோகுல் said...
This comment has been removed by the author.
கோகுல் said...

கோகுல் said...
அதுவும் அடுத்தவன் நிலத்தை அடிச்சு புடுங்குறவங்க,பெறப்படும் வரியை தன்
பாக்கெட்டில் போட்டுக்கறவங்க வந்து வண்ண நாடா துண்டிக்கிறார்கள்.என்ன செய்ய?

RaThi Mullai said...

அஸ்திவாரங்கள் அறியப்படுவதேயில்லை

ஸ்ரீராம். said...

அட...!

கவிதை போலவே, வானம்பாடிகள் பின்னூட்டமும், RaThi Mullai பின்னூட்டமும் 'அட' போட வைக்கின்றன.

'பரிவை' சே.குமார் said...

ஆமாம் அண்ணா... இது கொடுமைதான்.

எல்லா இடத்திலும் அப்படித்தானே...

தாஜ்மகாலை கட்டியது யார் என்றால் ஷாஜகான் என்றுதான் நமக்கு தெரியும்... கட்டிய கொத்தனாரின் பெயர் தெரியுமா?

இதைவிட கொடுமை அதை திறப்பதற்கு அவர்கள் வரும் பந்தா இருக்கிறதே சொல்லி மாளாது.

VELU.G said...

நாட்டில அதுதாங்க நடக்குது

சத்ரியன் said...

அடுத்து இந்த திறப்பாளர்கள் பக்கம் திரும்ப போகிறது “குண்டாஸ்”!

வரலாறு வருத்தத்திற்குரியது தான்!

தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வரலாறு& புவியியல் - பட்டியல் இப்படித்தானே வரணும்.

புவியியல் வரலாறு - புதுசா இருக்கே!

vidivelli said...

/ஓரிரு இரத்தத்துளிகளோடு
ஓங்கியோங்கி அடிவாங்கும் உளிநுனியால்
பளபள கருங்கல்லில் வெள்ளிப்பூச்சில்
துரதிருஷ்டவசமாய் பொறிக்கப்படுகிறது/

அருமையான மனசை நெகிழவைக்கும் வரிகள்...
அற்புதமான கவிதை...




எனது பக்கம்..
ஆதிக்க அறிமுகங்கள்..
http://sempakam.blogspot.com/