மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்களின் தாயார் சவுரியம்மாள் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தில் செவ்வாய்கிழமை தனது 87வது வயதில் இயற்கை எய்தினார்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
“இறுதி நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டம் இருந்ததாகவும்” அஞ்சலி செலுத்தச்சென்ற தன் நண்பர்கள் கூறியதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் தெரிவித்தார். பெருமாள்முருகன் அவர்கள் தற்சமயம் திரு.சகாயம் குறித்து ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்பது கூடுதல் தகவல்.
கடந்த ஆண்டு ஈரோட்டில் நாங்கள் அழைத்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த திரு.சகாயம், வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தார். அதற்கான காரணமும் கூட அன்று அவர் நாமக்கல்லிருந்து புதுக்கோட்டை சென்று தனது வயதான தாயாரை சந்தித்துவிட்டு பின்னர் ஈரோடு வந்ததுதான் என்பதை பின்னர் அறிந்தோம்.
திரு.சகாயம் தன் நேர்மை குறித்து பேசும்போது அது, தன் தாய் புகட்டியது என அடிக்கடி சொல்வார். ”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்னவார்த்தையே அவருடைய நேர்மையின் அடிப்படை.
நாடு போற்றும் ஒரு நேர்மையாளனை ஈன்றெடுத்த அந்தத் தாயின் வாழ்க்கைப் பயணம் இனிதே நிறைவடைந்திருக்கிறது. தன்னை நெறிப்படுத்திய தாயை இழந்து வாடும் திரு.சகாயம் அவர்களுக்கு கூடுதல் மன பலம் கிடைக்கவும், தன் மகனை சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்த அந்த தாயின் ஆன்மா அமைதியடையவும் மனமுருகி வேண்டுகிறேன்.
-0-
13 comments:
அந்த அன்னையின் ஆத்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்
ஒரு நேர்மையான அதிகாரியின் துன்பத்தையும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றிகள் கதிர்
அஞ்சலிகள் :-((
அஞ்சலிகள்
ஆழ்ந்த அஞ்சலிகள்..
தாயாரின் ஆத்மா அமைதி பெற வேண்டுவோம்.
:(. என் வணக்கங்களும்
”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது. Very very honesty. May her soul be rest in peace
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திரு சகாயம் அவர்களின் தாயார் மறைவுக்கு எங்களின் இதயபூர்வமான அஞ்சலியையும் காணிக்கையாக்குகிறோம்.
சகாயம் என்ற சான்றோனைப் பெற்ற தாய்க்கு எனது அஞ்சலிகள்.
அஞ்சலி...
Post a Comment