கீச்சுகள் – 4

அம்மா கடித்துத் தருவதை பிள்ளை எச்சில் என புறந்தள்ளினாலும், பிள்ளை கடித்துத்தருவது அம்மாவுக்கு எச்சிலாய் இருப்பதில்லை!

-0-

ஒன்னுமில்ல... ப்ளீஸ் விடுஎனச் சொல்வதில் நிறைய இருக்கிறது என்று பொருள் # முரண்

-0-

சில நேரங்களில் நிஜங்களைச் சந்தேகப்படுவதும், பல நேரங்களில் பொய்களை நம்புவதுமாய் நகர்கின்றன நாட்கள்

-0-

கடுமையாக மெல்லும் சூயிங்கங்களில் யாரையோ, எதையோ மெல்கிறோம்!

-0-

எப்பவும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாய் இருக்கவே விரும்புகிறோம்

-0-

ஒட்டு மொத்த மக்களோடு தன்னையும் முட்டாளாக நினைக்கும் வல்லமை கை தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது

-0-

ஆண்டு முழுதும்வீடு வாடகைக்குஎன அட்டை தொங்க விட்டிருக்கும் வீட்டுக்காரர்களிடம் வாடகை விசாரிப்பவர்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள்

-0-

விளம்பரம் போடும்போதெல்லாம் ரிமோட் பொத்தான்கள் தேயத்தேய சானல் மாற்றுகிறோம் எனத்தெரிந்தும், ஏன் விளம்பரம் போடுகிறார்கள்?


-0-

இருக்கும் அதே உடலுக்குத்தான் வெவ்வேறு வர்ணங்களில் விதவிதமாய் ஆடைகள் பூணுகிறோம் அன்றாடம்!

-0-

வீட்டில் ரொம்ப அடங்கியிருக்கும் ஆண்கள்டூர்களில் கொஞ்சம் ஓவர் ஆட்டம் போடுகிறார்கள் # அவதானிப்பு

-0-

ஒற்றை பெண் குழந்தை வைத்திருக்கும் எல்லா தந்தைகளும் சொல்வது, “பெண் குழந்தைதான் வேணும்னு நினைச்சேன்!”

-0-

எல்லாக் குற்றங்களோடும், இலவச இணைப்பாக ஒரு நியாப்படுத்துதல்  இருக்கிறது !

-0-

சிலரைப் பிடிக்காமல் போவதற்கு, அவர்கள் மட்டுமே காரணம் அல்ல!


-0-

பொய்யைப் போல் எதுவும் சுவைப்பதில்லை # தற்காலிகமாக

-0-

சில இரவுகளை அழகாக்குவது நிலவு, பல இரவுகளை அழகாக்குவது இளையராஜா!

-0-

ஒரு காலத்தில் கனவாய் இருந்தவை இன்னொரு காலத்தில் பிணைக்கும் விலங்காய்!

-0-

நட்பாய் இருந்து எதிரியாய் இடம் பெயர்வோரிடம் இரட்டை மடங்கு ஆபத்து எப்போதுமே!

-0-

யுத்தம் வெறும் வெற்றி தோல்விகளை மட்டும் தருவதில்லை

-0-

நம்மை அழகாகக் காட்டுவதற்காக நம்முன் வைக்கப்படும் கேமரா படும்பாடு இருக்கே.... அப்பப்ப்பா...... # அந்தப்பாவம் சும்மாவிடாது!

-0-

செருப்பை சில இடங்களிலும், செருக்கை பல இடங்களிலும் கழட்டித்தான் ஆகனும் # முடியலத்துவம்!

-0-

அடுத்த நாளுக்காக பட்டியலிடும் வேலைகள் எதுவும் அதுபோலவே முடிவடைவதில்லை. இனிமே ஒழுங்கா இருக்கனும் # பட்டியல் எதும் போடாமல்

-0-

டிவியில் அவர் போலவே அதிகம் வேசம் கட்டப்படும் நடிகர் வடிவேலு. ஆனா என்ன, கொஞ்சநாளா, அவருதான் வேசமே கட்ட முடியறதில்ல! :)

-0-

விட்டதைப் பிடிக்கும் வீர விளையாட்டில்தான் இருப்பதும் புட்டுக்கிட்டு போறது # சூதாட்டம்

-0-


மழை பெய்யாத நேரங்களில் நனைய இருக்கும் ஆசை, மழை தூறும் நேரங்களில் இருப்பதில்லை # வாழ்க்கை

----------------

பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’.

-0-


6 comments:

settaikkaran said...

//கடுமையாக மெல்லும் சூயிங்கங்களில் யாரையோ, எதையோ மெல்கிறோம்!//

நான் சென்டர் பிரஷ் மென்று கொண்டிருப்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள் கதிர்...? ஞானதிருஷ்டியா...?

ஓலை said...

Aduththa thalaimuraikku ithellaam pazhamozhi aagidum.

Nalla avathaanippu kathir.

ஓலை said...

இவ்வளவு கீச்சுகளில் 5 சதவீதம் வீட்டில் use பண்ணா நம்மள கீச்சிருவாகளோ!

ஸ்ரீராம். said...

விளம்பரம், நிலாவும் இளையராஜாவும், வடிவேலு ஆகிய கீச்சுகளை சற்று அதிகமாகவே ரசிக்க முடிந்தது.

Anonymous said...

கதிர் எங்கியோ போயிட்டேள் போங்கோ...

மொத ஒன்னு இதையெல்லாம் தத்துவமா சொல்லக்கூடாது அப்பு..

அதென்ன கதிர் ஒவ்வொன்னுக்கும் நீங்களே 0 மார்க் போட்டுகிட்டீங்க..

சரி சரி திட்டப்படாது என்ன தான் கும்மியடிக்க நினைச்சாலும்

//”ஒன்னுமில்ல... ப்ளீஸ் விடு” எனச் சொல்வதில் நிறைய இருக்கிறது என்று பொருள் # முரண்//

இதை படிக்கும் போதே மனசால் பாராட்டாமல் இருக்கமுடியலை.

//சிலரைப் பிடிக்காமல் போவதற்கு, அவர்கள் மட்டுமே காரணம் அல்ல!//

உண்மையோ உண்மை..இப்படி பல கருத்துக்கள் அட எல்லாருக்கும் இப்படித் தான் தோன்றுமா என வியக்கவைக்கிறது இதில் பெரும்பாலான கருத்துக்கள் எனக்கும் தோன்றியவையே...

சத்ரியன் said...

//வீட்டில் ரொம்ப அடங்கியிருக்கும் ஆண்கள் ’டூர்’களில் கொஞ்சம் ஓவர் ஆட்டம் போடுகிறார்கள் # அவதானிப்பு//

கதிர்,

இது வெறும் அவதானிப்பு மாதிரி தெரியலையே ராசா.