வணக்கத்திற்குரிய மனிதர் பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் இறந்த தீ விபத்தையொட்டி இயக்கிய என்று தணியும் ஆவணப்படம் குறித்து ஏற்கனவே என்று தணியும் என்ற இடுகையில் எழுதியிருந்தேன்.
அந்தப்படத்தின் தொகுப்பு YouTubeல் இருப்பதை இன்று FaceBookல் ஒரு நண்பர் பகிர்ந்ததையொட்டி, அந்தப் படங்களின் தொகுப்பை இங்கு பகிர விரும்புகிறேன்.
-0-
இவ்வளவு இழிவுகளையும் கண்டு ப்ச் என்ற ஒற்றைச் சப்தத்தோடோ அல்லது அதுகுறித்த சில கோபமான இயலாமை வார்த்தைகளோடு கடந்துபோகும் போது, சின்னச் சின்ன விசயங்களுக்கு வெகு விமர்சையாய் கோபம் கொண்டாடியது மனதைக் குத்தத்தானே செய்யும்!
படம் குறித்து பாரதிகிருஷ்ணகுமார் சொன்ன வரிகள் “மிகுந்த துன்பத்தைத் தந்து பாதியிலேயே நிறுத்தி விடலாமா என்று நினைத்த படம் அது . கண்ணீரோடு தான் படம் வளர்ந்து முடிந்தது”
சில கண்ணீர்த் துளிகளுக்கு தீர்வுகள், விடைகள் கிடைத்துத் தொலைப்பதில்லை. அதுதான் சமகாலச் சூழலின் சாபக்கேடு என்றும் சொல்லலாம்!
-0-
15 comments:
அதைவிடக் கொடுமை, அந்த நிகழ்வுக்குப் பிறகும் பள்ளிகளின் கட்டிடங்கள் இன்னும் முறைப்படுத்தப் படவில்லை.
என்று தணியும் இந்த அவலம்..
இளங்கோ சொன்னது நூறுசதம் சரி:(. இன்னமும் படிப்பினை கற்றுக் கொள்ளவில்லை நாம்.
பகிந்தமைக்கு நன்றி கதிர்.
Itha paarkka thairiyam venum. Nithaanamaa paarkkiren.
நான் முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன், பள்ளி திருமண மண்டபங்கள் திரைப்பட வளாகங்கள் மற்றும் இன்ன பிற பொதுமக்கள் கூட்டமாகக் கூடக் கூடிய குறுகிய எக்சிட் கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் ஃபயர் அலாரம் வைப்பதே இதற்குத் தீர்வாக முடியும்.. இதைச் சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும்..
நிச்சயம் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். இனி இப்படி ஒன்று எப்பொழுதும் நடக்க கூடாது.
கொடுமை கதிர்.
ஏற்கனவே பர்த்ததுதான் திரும்பவும் வலிக்கிறது.
ம்ம்ம்ம்ம்.... வலியுடன் இருக்கின்றது, இது தணியுமா என்ற ஏக்கமும் இருக்கு
பகிர்வுக்கு நன்றிங்க கதிர்
சுயநலக்கார, ஆசைக்கார தனிமனிதர்களே இதற்குப் பொறுப்பு. எங்கள் ஊர் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஊர் ஓரத்தில், பெரு வெளியில், மரங்கள் சூழ நல்ல சூழலில் அமைந்திருக்கிறது.
ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை போதாமல் மூடும் அபாயம்!!
நடைமுறைப்படுத்த முடியாத சில விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டமாகப் போராடுவோம்.இப்படிச் சில நிகழ்வுகளுக்குப் பின்னும் கண்மூடிக் கொண்டு அமைதியாகக் குமுறிக் கொண்டிருப்போம்.நாம எப்பவுமே இப்படித்தானே!:(
அன்பின் கதிர் - மீண்டும் வலி - பார்க்கும் போது பழைய நிகழ்வுகளை நினைத்து மனம் வலிக்கிறது. இன்றைய நிலை என்ன - ம்ம்ம்ம்ம் - பகிர்வினிற்கு நன்றி கதிர்
பாக்கவே முடியல..
கொடுமைங்க... அந்த தீவிபத்து நடந்த பள்ளிக்கூடத்த ஒரு 2 மாதம் கழித்து உறவினர் வீட்டுக்கு செல்லும்போது பார்த்தேன்.. அப்படியொரு நெருக்கடியான இடம், கட்டிடம்.. எந்த கோணமுட்டிப்பய இந்தமாரி இடத்துல பள்ளிக்கூடம் நடத்த அனுமதித்தான்னு தெரியல... இன்னும் திருந்தலையே இந்த நாசமாப்போறவனுங்க... வௌங்காதவன் வீட்டுக்கு வௌக்கமாறுதான் ஒரு கேடாங்கற மாதிரி நமக்கு ஒரு சட்டம்...
இன்னும் நமக்கு சுரணை வரவில்லை என்பது கசப்பான உண்மை... :(
டேய்ய்ய்......ஒரு நாள் வெடிப்போம் டா....அன்னைக்கு நீங்க எல்லாம் எரிய போரீங்க....
Post a Comment