கீச்சுகள் - 2

மற்றவர்கள் நம்மைக் கிண்டல் செய்வதற்கும், நம்மை நாமே கிண்டல் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? # டவுட்டு

-0-

பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டது போல் பெண் படைப்பாளிகள் ஆண் பெயரைக் கொண்டிருக்கிறார்களா?

-0-

தபால் ஓட்டுன்னா, இந்த பொத்தானை அமுக்குங்கன்னு கடுதாசியில் எழுதி அனுப்புவாங்களோ # கிங்லிமங்லி டவுட்டு

-0-

கடைசியாகஎன்பதை இறுதியாக எனக்கொள்ளவா? முன்னதாக எனக்கொள்ளவா? # டவுட்டு

-0-

மனைவி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம். தப்பிச்ச பிறகு ஏன் தப்பி ஓடனும்!!?? # டவுட்டு

-0-

குற்றம் புரியும் முன்னே, அதை மறுப்பது எப்படியென்று முதலில் ஒத்திகை பார்த்துக்கொள்வோம்!

-0-

வேண்டிய இடங்களில் தவறவிடும் ஒரு கேள்விஏன்?’

-0-

கதைசொல்லிகள் இல்லாத(!) தேசத்தில் தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதம்-’நீயாநானாகோபி #அட வெண்ணைகளா! கதை சொல்லிகளைக் கொன்றதே தொலைக்காட்சிதானே!

-0-

ஜோசியகாரன் எதிராளிக்கு கெடுதல் நடக்கும்னு சொல்லும்போது மட்டும், எங்கிருந்தோ நம்பிக்கை வந்து தொலைவதேன் # டவுட்டு

-0-

மரணத்திற்குப் பிறகு பிடித்தவர்கள் சொர்க்கத்திற்கும், பிடிக்காதவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள். நாம எங்கே போவோம்? # டவுட்டு

-0-

டீ ஆத்தும் ஒவ்வொரு மாஸ்டரின் கைகளிலும் ஒரு கலைத்துவம் குடியிருக்கிறது

-0-

அரிசி கிலோ 1 ரூவாதான், பஸ் ஸ்டேண்ட்ல ஒன்னுக்கு போறதுக்கு மட்டும் 3 ரூவா # வாழ்க தமிழகம்

-0-

பச்சை / காய்ந்தது / வறுத்தது / வேக வைத்தது என எல்லாப் பதங்களிலும் கடலை சுவையாகத்தான் இருக்கிறது # அவதானிப்பு

-0-

அதீத ஓய்வு சிலநேரங்களில் கூடுதல் களைப்பைத் தருகிறது # தத்துபித்து

-0-

கோபம் கொள்வதைவிட, அதை நசுக்கி வைப்பதற்குத்தான் அதிக வலிமை தேவைப்படுகிறது

-0-

மனிதர்களின் மிகப்பெரிய நண்பன் காடு. காடுகளின் மிகப்பெரிய எதிரி மனிதன்

-0-

மழை பெய்தாலும், பொய்த்தாலும்...... ஓட வேண்டும், அதுதான் ஆறு!!!!

-0-

சொந்தத் திறமையைவிட எதிராளியின் பலவீனம்தான் பலநேரம் வெற்றியைத் தருகிறது

-0-

நாம புடுங்க வேண்டிய ஆணிய நாமதான் புடுங்கணும்! # விதி வலியது

-0-

நூற்றாண்டுகளாய் நிர்மாணித்ததை, நிமிடநேரம் நீடிக்கும் பூகம்பத்தில் பிறக்கும் சுனாமி நிர்மூலமாக்கிவிட்டுபோகிறது # இயற்கை வலியது

-0-

சிலரை சிலரிடம் அறிமுகப்படுத்தி விட்டு தப்பித்துக் கொண்டதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது

-0-

பசியின் போது பிறக்கும் வார்த்தைகள், நிறைவாய் இருக்கும் போது பிறப்பதில்லை

-0-

மூடிய சக்கரை டப்பாவுக்குள் அடைபட்ட எறும்பாய் இணையத்தில் நகர்கிறது நாட்கள்!

-0-

பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் வழக்கம்போல் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)
-0-

12 comments:

Unknown said...

கதைசொல்லிகள் நீயாநானா கோபி #அட்டாகாசம்.!

ஊர்சுற்றி said...

///வேண்டிய இடங்களில் தவறவிடும் ஒரு கேள்வி ‘ஏன்?’///

சில இடங்களில்'' ஏன் ''என்று கேட்பதால் வேண்டாதவர் ஆகிவிடுகிறோம் அண்ணா....

☼ வெயிலான் said...

தன்னால பொலம்பிக்கிட்டது தானே இவ்வளவும் # கீச்சு :)

Thenammai Lakshmanan said...

பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொண்டது போல் பெண் படைப்பாளிகள் ஆண் பெயரைக் கொண்டிருக்கிறார்களா?//

ரொம்ப முக்கியம்..

Thenammai Lakshmanan said...

கதைசொல்லிகள் இல்லாத(!) தேசத்தில் தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதம்-’நீயாநானா’கோபி #அட வெண்ணைகளா! கதை சொல்லிகளைக் கொன்றதே தொலைக்காட்சிதானே!
///

ஹாஹாஹா முடியலை .. சிலசமயம் கதிர் உண்மைய பேசிடுறாரு..:)

Thenammai Lakshmanan said...

மனைவி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம். தப்பிச்ச பிறகு ஏன் தப்பி ஓடனும்!!?? # ///


என்ன ஒரு வில்லத்தனம்..

பனித்துளி சங்கர் said...

////டீ ஆத்தும் ஒவ்வொரு மாஸ்டரின் கைகளிலும் ஒரு கலைத்துவம் குடியிருக்கிறது//////

நானும் இதை ரசித்திருக்கிறேன் தலைவா

காமராஜ் said...

கோபி,வலை,டீமாஸ்டர்

உட்பட எல்லாமெ நறுக்.

ராமலக்ஷ்மி said...

மூடிய சர்க்கரை டப்பா:)!

vasu balaji said...

மொக்க போட கீச்சறமா? இல்ல கீச்சினத மொக்க போடுறமா?#எங்களுக்கும் டவுட்டு

Kumky said...

என்னமோ போங்கன்னே..

வர வர இந்த டிசுக்கி மட்டும்தான் பிடிச்சிருக்கிய்ய்ய்ய்.

நாடோடி இலக்கியன் said...

//கதைசொல்லிகள் இல்லாத(!) தேசத்தில் தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதம்-’நீயாநானா’கோபி #அட வெண்ணைகளா! கதை சொல்லிகளைக் கொன்றதே தொலைக்காட்சிதானே!//

:))))))))))))))))

அதேதான் நானும் சொல்லிக்கிறேன்.