(ச்)இறந்த காலம்


கொழைஞ்ச நெல்லஞ்சோத்துக்கு
பச்சப்பயிறுக் கொழம்போடு
நெய் கொஞ்சம் ஊத்தி
நெருக்கிப் பிசையும் போது
விரலிடுக்கில் பிதுங்கி வழியும்
கிராமத்து ருசியில் ஒரு போதும்
அலுப்பும் சலிப்பும் இருந்ததில்லை
”இன்னிக்கும் அதே சட்னிதானா?”

-0-

வேலாத்தா கடைப்பக்கம்
வெளியூரூ மாப்பிளைக
வறட்டு இருமலோடு
வாங்கிக் குடிப்பதில்
அவ்வப்போது வீசும்
காலி சிகரெட் பெட்டியில்
சீட்டுக்கட்டு விளையாட
நைந்து கிழிந்து போன
இரண்டு சீட்டுகளுக்கு
மாற்று கிடைப்பதுண்டு

-0-

எம்ஜிஆரா சிவாஜியா
பரம்பரைப் போட்டிகளின் நீட்சியாய்
புதிதாய் வரும் போஸ்டர்களுக்கு
போடும் பந்தயங்களில்
ஜெய்சங்கரின் குதிரை துப்பாக்கியில்
சிவகுமாரின் முருகன் மயிலில்
எப்போதும் இணையாத
ரஜினி கட்சியும் கமலு கட்சியும்
இணைந்தே தோற்றுப்போவதும் உண்டு

-0-

29 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

....

vasu balaji said...

முதல் கவிதை முதல். நாம இன்னும் முந்தின காலம். தீப்பெட்டி மேச்சஸ்.:)

ஸ்ரீராம். said...

மறந்த காலம்...

'பரிவை' சே.குமார் said...

ஞாபகம் வருதே
மறந்த (இறந்த) காலம்.
ச்...ச்....

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - உண்மையில் மறந்த காலம் தான் - சிகரெட் டப்பா நினைவில் இருக்கிறது - முதல் கவிதை இன்றும் பொருந்த வாய்ப்பு உண்டு - உண்மையில் முதல் கவிதை இறந்த காலம் அல்ல என்றே சொல்லலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பா.ராஜாராம் said...

மூன்றுமே அழகு கதிர்! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

மூன்றுமே அழகு

dheva said...

படித்து முடித்ததும் மனதில் ஒரு வித வெறுமை பரவியதை தவிர்க்க முடியலை..கதிர்!

காமராஜ் said...

விரலிடுக்கில் பிதுங்கி வழியும் ருசி.ஆஹா இது கவிதை ருசி.

பழமைபேசி said...

வயசாயிடிச்சின்னு எப்படியெல்லாம் சொல்லிக்கிறாய்ங்க மக்க?

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதைகள்.

முதல் மிகவும் அருமை. ஸ்ரீராம் பின்னூட்டமும்!

Unknown said...

அப்பிடி போடுங்க. Super.

இன்றைய நிகழ்காலம் நாளைய இறந்த காலம்.

நம்ம ஊருக்காரங்களுக்கு ஐம்பதை நெருங்கிட்டாலே வயசாயிடுச்சுன்னு பயம் வந்துடுது. Life starts at 50.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மூன்று முத்துக்கள்!!

மதுரை சரவணன் said...

சூப்பர்...வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மண(ன)ம் மறக்காத கிராமத்து வாசனை !

பழமைபேசி said...

//நம்ம ஊருக்காரங்களுக்கு ஐம்பதை நெருங்கிட்டாலே வயசாயிடுச்சுன்னு பயம் வந்துடுது. //

அஃகஃகா!!

Unknown said...

அண்ணே!!!!

ஆ.ஞானசேகரன் said...

அருமை

க.பாலாசி said...

அட ஏங்க... இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போவுல வீட்லப்போயி பழயச்சோத்துல மோர் ஊத்தி ஒரு உறிஞ்சி உறிஞ்சிப்பாருங்க...கூடவே புளிமிளகாயோ, வெங்காயமோ... அப்பறம் இட்லியக்கண்டாவே சத்ராவியாத்தான் தெரியும்.. ம்ம்ம்...

க.பாலாசி said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
....

(இங்க உபயம்: ச.செந்தில்வேலன்)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை,அருமை.

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்லாயிருக்குங்க‌ க‌திர்.

தாராபுரத்தான் said...

பழைய நெனைப்புத்தான்....

அன்புடன் நான் said...

கவிதை மனதின் சுவர்களில் சாட்டையை வீசுகிறது....

அன்புடன் நான் said...

உங்களுக்கு இனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ரவிஉதயன் said...

தமிழ் மண விருது பெற்ற தங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

ரவிஉதயன் said...

தமிழ் மண விருது பெற்ற தங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

பிரதீபா said...

//1.வவுனியாவுக்குப் போயிருந்தேன் - ஈரோடு கதிர்--முதல் பரிசு//


வாழ்த்துக்கள் !!

பிரதீபா said...

//அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்-.கோடியில் இருவர் - ஈரோடு கதிர்--இரண்டாம் பரிசு//

இதற்கும் வாழ்த்துக்கள் !!