புனைவு


உள்ளே புதைந்து கிடக்கும்
காமம் கோபம் கண்ணீர் வலி
மகிழ்ச்சி அன்பு பாசம் நேசம் 
எல்லாவற்றையும் எளிதாய்
இறக்கி வைத்தேன் எழுத்தில்.

என்னைப் பிரதியெடுத்ததை
இன்னுமொரு வாசித்தேன்
பிரதியின் நாற்றம் சகிக்காமல்
இற்று விழுந்தேன் எழுத்திற்குள்ளே!
நீந்திக்கொண்டிருந்த
எல்லாக் கசடுகளும் முட்டி மோதி
இன்னும் பயமுறுத்தின.

தட்டுத்தடுமாறி வெளியேறி
இன்னும் எழுத்துகளை இட்டேன்
புனைவு என…
போலி மாயத்திரையொன்று
தற்காலிகமாக
காத்துக் கொண்டிருக்கிறது
என்னை என்னிலிருந்து!

-0-

17 comments:

சே.குமார் said...

புனைவுக்கான உங்கள் புனைவு அருமையிலும் அருமை.

கே.ஆர்.பி.செந்தில் said...

புனைவுகளின் கரங்களில் உணர்வுகளின் கோரமுகம் ...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இதுல ஏதாவது உள்குத்து இருக்குதுங்களா..

அகல்விளக்கு said...

புனைவிற்கான புனைவு....

நல்லா இருக்கு அண்ணா...

ஸ்ரீராம். said...

அருமை.

புனைவு என்ற போர்வை..!

வானம்பாடிகள் said...

இது புனைவு இல்லீங்களே தலைவரே. ஜூப்பரு

பிரியமுடன் பிரபு said...

அருமை.

பழமைபேசி said...

கலிகாலம்டா சாமி... உள்ளதைச் சொல்றதுக்கு புனைவுன்னு ஒரு முகமூடி?!

cheena (சீனா) said...

பழமை பேசி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு

Chitra said...

தட்டுத்தடுமாறி வெளியேறி
இன்னும் எழுத்துகளை இட்டேன்
புனைவு என…
போலி மாயத்திரையொன்று
தற்காலிகமாக
காத்துக் கொண்டிருக்கிறது
என்னை என்னிலிருந்து!


......நச்!

VELU.G said...

நல்ல புணைந்திருக்கிறீர்கள் கதிர்

அருமை

க.பாலாசி said...

நேராச்சொல்றது வௌங்கவே நமக்கு நாலு நாள் ஆவுது.. இதுல புனைவுவேறயா....

செந்தில் சொன்னப்பறம்தான் உள்குத்து இருக்குமோன்னு ஒரு டவுட்டு..

Sethu said...

Nice.

ஹேமா said...

ஏதோ மனதின் தாக்கம் கவிதையாயிருக்கு !

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)

ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று.

பத்மா said...

எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளத்தான் வேண்டி இருக்கிறது..
மன விசாரம் கதிர் சார்
very nice