ஒரு கலயக் கள்ளும் ஓவர் சீனும்!


நம்மாளுக எப்பத்தான் உருப்படுவாங்களோ தெரியல!

சத்தமில்லாம பண்ண வேண்டிய சோலிக்கு செமையா சவுண்டு குடுத்துடறாங்க!

பாருங்க பின்ன!


கண்ட கருமத்தக் குடிச்சு, காசும், ஒடம்பும் வீணாப்போகுதேன்னு இயற்கையா கெடைக்கிற கள்ள குடிச்சுட்டு தெம்பா இருக்கட்டுமேங்குற நல்லெண்ணத்துல (!) காட்டுல இருக்குற தென்ன மரம், பன மரத்துல கலயத்தக் கட்டி கள் எறக்கி சமூக சேவையாத்தாலாம்னு(!) நம்ம குடியானவங்க நெனைச்சாங்க சரி, ஆனா அத ஒரு தன்னடக்கமா பண்ணனும்ல…

அட தன்னடக்கம்ன்னா என்னங்க்றீங்ளா… நம்ம அரசியல்வாதிக பத்து, நூறு, ஆயிரம் எல்லாம் தாண்டி இப்போ லட்சம் கோடின்னு கூட கொள்ளையடிக்றாங்களே, அவங்கல்ல ஒரே ஒருத்தராவது “இதாப் பாருய்யா, நான் கொள்ளையடிக்கப்போறேன்”னு ஒரு நாளாச்சும் சவால் வுட்டாங்ளா? எவ்வளவு அடக்க ஒடுக்கமா, கட்சிக்குள்ள இருக்கிறவிகளுக்குக் கூடத் தெரியாமா நெதனாம அடிக்கிறாங்க… அதப்பார்த்தாவது தெரிஞ்சுக்கவேணாமா? அந்த தன்னடக்கம் இவிங்களுக்கு தெரிய வேணாமா?

சொட்டத் தலையில இருக்குற மசுரு மாதிரி, காட்டுக்குள்ளெ அங்கொன்னு, இங்கொன்னுன்னு மரம் வச்சுக்கிட்டு, ஒருபடி ஒன்றப்படின்னு சீசனுக்குச் சொரக்குற கள்ள எறக்கறதுக்கும் விக்கிறதுக்கும், குடியானவமூட்டுக்கும், மரமேறரவங்களுக்கும் எதுக்குய்யா நான் கள்ளு எறக்கப் போறேன் கள்ளு எறக்கப்போறேன்னு” வடிவேலு கணக்கா வெட்டி வெளம்பரம்?”

கடைசியா என்னாச்சுன்னு இப்ப பாத்தீங்ளா? கள்ளு எறக்கறம்னு வெளம்பரம் போட்டீங்க, பெரிய போலீசு சின்ன போலீசுன்னு மரத்தச் சுத்தி தெம்பா நிக்க, முக்கா டவுசர் போட்டுக்கிட்டு மரத்துல ஏறுறீங்க, ஒன்னே முக்கா லட்சம் கோடி ஊழலு கூட கண்ணுக்குத் தெரியாத, கலைஞர் டிவி, சன்னு டிவின்னு வளச்சு வளச்சு, லைட் அடிச்சு எப்பிடி படம் புடிச்சாங்க…

ஏறி எறங்கி இன்னொரு போசியில ஊத்துறப்போ, எப்பிடித் தெறமையா போலீசு புடிச்சாங்கன்னு பாத்தீங்கள்ள!!! நெசமாலுமே கேக்குறேன் இதெல்லாம் தேவையா நமக்கு…. அட நமக்குன்னு ஏன் சொல்றேன்னு பாத்தீங்ளா, நம்முளுதும், நம்ம சொந்த பந்தத்ததும் அங்கங்கே கொஞ்ச நஞ்சம் தென்ன, பன மரம் இருக்குதுல்ல…

மரம் இருக்குதுன்னு பெருமப் பட்டு என்ன பிரயோசனம், தென்ன மரத்துல காப்பு செரியில்ல, அப்படியே காய் வந்தாலும் மூனு ரூவாக்கு மேல யேவாரி எடுக்க மாட்டீங்றான்… எண்ணைக்குன்னு ஒடைச்சுப்போட்டாலும் ஒரு பிரயோசனும் இல்லன்னு என்ன சொல்லி என்ன!!!

இதுக்குமேல கள்-ளப் பத்தி பேசுனா, எதுனாச்சும் (இறையாண்மைக்கு எதிரான) சட்டம் பாஞ்சாலும் பாஞ்சுறுமப்போ!!! நான் போய் பொழப்பப் பாக்குறேன்.... போறதுக்கு முன்னால ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன்... நம்ம தலைவருக ’ஊழல் திட்டம்’ மாதிரி எல்லாத்துலயும் ஒரு ஒளிவு மறவு, நெழிவு சுளுவு இருக்கோனும்... இல்லீனாக்கா, அப்பு...... இப்பிடித்தான் ஆப்பு வந்து சேரும்...

செரி வரட்டுமா.....

ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொன்னு, 

ஏய்ய்ய்யா, இந்த வெவசாயிகதான் நாட்டு முதுவெலும்பாமே. மரம் கொடுக்குற நம்ம சரக்கு தப்புன்னு அரசாங்கம் சொல்லுதுல்ல.... செரி... அதுல என்னமோ நாயம் இருக்குட்டும்... அப்போ வெவசாயம் சம்பந்தமிருக்குற ஒரு பயலும் அரசாங்கம் விக்கிற டாஸ்மாக்ல போயி கோட்டர் பாட்லு வாங்கம மூடிட்டு இருக்குனும்ல!

இருக்கமாட்டம்ல, அப்பிடியிருந்தாத்தான் ஊருக்கு ஊரு கவர்மெண்ட் கட தொறந்து வச்சிருந்திருக்காதே! செரி வுடுங்க, ஒரு கோட்டர போட்டுட்டு தென்னமரத்தடிய கட்டல போட்டு அன்னாந்து பாத்துக்குட்டு படுத்தம்னா எல்லாஞ் செரியாப்போயிரும்... இனிமே மரம் செரையெடுக்குறதுன்னாக்கூட ஆருகிட்டயும் சொல்லாம செய்ங்கப்பா! செரையெடுக்காட்டி கீழ தூங்றப்போ காத்துக்கு தலமேல மட்ட வுழுந்துறும்னு தெரியாதா என்ன?
பொறுப்பி : படம் உதவி வால்பையன் பாஸ் (எ) கார்த்திக்
-0-

17 comments:

அகல்விளக்கு said...

நம்ம ஏரியாவுல எங்கயாவது கிடைக்குதா அண்ணா...??

சும்மா ஒரு GK க்கு தெரிஞ்சுக்கலாமுன்னுதாங்க... தப்பா நினைக்காதீங்க... :-)

ஈரோடு கதிர் said...

||நம்ம ஏரியாவுல எங்கயாவது கிடைக்குதா அண்ணா...??||
அடப்பாவி
அதுதான் போஸ்டரடிச்சு வெளம்பரம் பண்ணியிருந்தாங்களே! அரச்சலூர்லன்னு,

நீயும் ஒரு சொம்பத்தூக்கிட்டு கள்ளு வாங்கப் போயிருந்தா, இன்னிக்கு சன் டிவியில வந்திருக்கலாம், நாங்கள் (சன் டிவி புகழ்) பதிவர் ராஜா கைதுன்னு குழுமம் சார்புல போராட்டம் நடத்தியிரும்போம்ல :))

அடடா, நெசமாலுமே வட போச்சா!! (:

சேலம் தேவா said...

எதையும் ஒரு சூதானமா செய்யணும்ன்னு கரிக்கிட்டா சொன்னீங்ன்னா..!! :-)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹ்ம்ம் சுதேசியாக்கும்..:))

VELU.G said...

ராசா அரச்சலூர் நம்ம ஊர் தான் எப்ப வேனாலும் போலாம்

சேட்டைக்காரன் said...

அப்படிப்போடுங்க அருவாள...!

நானும் பாத்திட்டுத்தானிருக்கேன், அல்லாரும் ஓவரா சவுண்டு வுட்டே டகால்டி பண்ணிட்டுத் திரியுறாங்க!

நெத்தியடிங்கோ....!

விக்னேஷ்வரி said...

உங்களுக்கு நேரம் சரியில்லைங்கோ.

ஆகாயமனிதன்.. said...

ஒரு பானைக் கள்ள ஒரே மொடக்குல குடிச்ச மாதிரி இருக்கு மாப்ள பதிவு..
(களவும் கற்று மற)

பழமைபேசி said...

சொல்லிச் செய்தல் உரிமை கோருதல்!
சொல்லாமற் செய்தல் களவு!!

திருட்டுத்தனமாச் செய்யுறதுக்கு அங்கீகாரம்; முறையாச் செய்யுறது அகங்காரம்னு ஆனப்புறம் என்னத்தச் சொல்றது?! நடத்துங்க அப்பு!

சி. கருணாகரசு said...

நீங்க தொலை காட்சியில வரதுக்குகூட இப்ப வாய்ப்பிருக்குங்க கதிர்.

ஸ்ரீ said...

ஒருவேள கள்ளு ஏறக்குனா டாஸ்மாக்குல வியாபாரம் கொறஞ்சிடும்னு நெனக்கிறான்களோ?!!!!!!!

பத்மா said...

வருத்தமான பகடி
பிடிச்சிருக்கு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்... என்னத்த சொல்ல..

புத்தியை மழுங்கடிச்சுட்டு உட்கார்ந்திருக்கற நேரத்துல.. எத்தனவாட்டி சொன்னாலும் வெளாகாதப்பு

ராமலக்ஷ்மி said...

//நல்லெண்ணத்துல (!)
சமூக சேவையாத்தாலாம்னு(!)//

நல்லாயிருக்கே லாஜிக்:)!

சே.குமார் said...

நெத்தியடிங்கோ....!

ஜாபர் ஈரோடு said...

// அட நமக்குன்னு ஏன் சொல்றேன்னு பாத்தீங்ளா, நம்முளுதும், நம்ம சொந்த பந்தத்ததும் அங்கங்கே கொஞ்ச நஞ்சம் தென்ன, பன மரம் இருக்குதுல்ல… //

எனுங்க அதுல முட்டி எதாவது கட்டியிருக்கிங்களா?

பாத்து சொல்லுங்க

ரொம்பநாளாச்சுங்க...

Amudha Murugesan said...

ஹ ஹ ஹ...கதிரு உண்மையில் உனக்கு ஏதோ சைடு பிசினஸ் இருக்கற மாதிரி தெரியுது...பேச்சும் (எழுத்தும்) பக்காவா அப்படித்தான் இருக்குது....nice