மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

கொல்லப்படும் மீனவர்களைக் காக்க, சிங்கள இனவாதத்திற்கு எதிராக, இந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக காலையில் இருந்து ஒட்டுமொத்த ட்விட்டர் தளம் தகிக்கிறது.

அந்தக்குரல் இன்னும் வலைப்பக்கம் உட்பட மற்ற தளங்களில் ஓங்கி ஒலிக்கவில்லையென்றே தோன்றுகிறது. கொஞ்சம் உங்கள் குரலை உயர்த்துங்கள்..... ஒரு மாற்றத்துக்கான சிறு தீ ட்விட்டர் தளத்தில் சுடர்விட்டிருக்கிறது.

உங்கள் குரல்களை ட்விட்டரில் பதிந்து #tnfisherman என இணைத்திடுங்கள். கணக்கு இல்லாதோர் ட்விட்டரில் கணக்குத் துவங்கி குரல் கொடுங்கள்.
-------------------------------------
மீனவர் பிரச்சனைக்காக தமிழ்மணம் ஜன்னல் திறந்தது போல் மற்ற தளங்களும் திறக்க வேண்டும். #tnfisherman

மீனவர்களுக்காக ட்விட்டர் மட்டும்தானா facebook/ buzz / blog எல்லாம் தூங்குகிறதே! (((: #tnfisherman

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கவில்லை - இலங்கை. அப்போ கூட்டிவந்து குடிவெச்சிருக்கிற சீனாக்காரன் தாக்கியிருப்பானோ!!? #tnfisherman

வெளியுறவுத்துறை செயலர் நிருபமா கொழும்பு பயணம்-எஸ்.எம்.கிருஷ்ணா # இராஜபக்ஷேவை நலம் விசாரிக்கத்தானே!!!! #tnfisherman

மீனவர் கொலைகளைத் தடுக்க ரசிகர்களை பிரதமருக்கு போஸ்ட்கார்டு போடச்சொல்லிட்டாரா சுனாமியில் மீண்டு வந்த மீனவன்சுறாவிஜய்!!!! #tnfisherman

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!! இணைந்து இன்னும் பல கொலைகளை சகித்துக்கொல்வோம் #tnfisherman

நாகையில் வைகோ 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போறாராம்! ஏன் அதுவரைக்கும் நல்ல நாள் இல்லையோ #tnfisherman

இப்படி ட்வீட்-டி என்ன கிழிச்சுடப்போறீங்கன்னு கேக்குது ட்வீட் படிக்கிற ஒரு சோனியா அடிமை! # எதாவது கிழியும் வரை ட்வீட்வோம் #tnfisherman

குடிசைகளே இல்லாத கிராமங்கள்! # கருணாநிதி மீனவனே இல்லாத கடற்கரைகள் # சிங்கள ராணுவம் # நல்ல டீல்! #tnfisherman

மறைந்த போளூர் வரதன் எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு கிடாவெட்டிய காங்கிரஸார்! # கூடவே மீனவனையும் #tnfisherman

தமிழா! தமிழா!! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும், மீன் பிடிக்க மட்டும் போகமாட்டேன் # கலைஞர் டிவி # #tnfisherman

பெண்கள், வயசானவங்க - இத படிக்காதீங்க... http://tinyurl.com/458wwyu

தோழா..... வானம் தூரம் இல்லை # இளைஞன் தமிழ் மீனவா மரணம் தூரம் இல்லை # ஆளும்கட்சி #tnfisherman

ஆறுதல் கூறப்போன இடத்திலும் ஓட்டு கேட்கிறார் ஜெ: முதல்வர் புகார் # அப்படியே தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க தலைவரே

மீனவனை சிங்களன் கொல்லுமபோது அமைதிகாக்கும் இறையாண்மை, சிங்களனை அடிப்பேன் எனும்போது மட்டும் விழித்துக்கொல்வது ஏன்? #tnfisherman

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா: அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து # தமிழக மீனவர்கள் என்னா குலம்? # #tnfisherman

இனிய நண்பர் இராஜபச்ஷே-ன் நோய் குணமாக, இந்தியா சார்பில் மீனவர்களைக் காவுகொடுக்கச்சொல்லி இத்தாலிய சாமியார் சொல்லியிருப்பாரோ? #tnfisherman

புதுவை காங்கிரஸில் பதவி கொடுக்கலைனு .சி ஆட்கள் தீக்குளிக்கறாங்களாம். உப்புப்போட்ட 2 மீன்துண்டு தின்னுட்டு தீக்குளிக்கபோங்க #tnfisherman

1991-96ஜெயலலிதா ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் #நோட் திஸ் ராஜபக்ஷே!

மீனவர் ஜெயக்குமார்மறைந்தசெய்தி கேள்வியுற்றதும் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு ரூ.5 லட்சம் தந்தது #கொலையில்லையாம் #tnfisherman

மீனவர்களுக்காக சினிமாக்காரங்க கருப்புத் துணியோட இன்னும் சீன் காட்டலையே! .. அடுத்த படம் ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காதோ #tnfisherman

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி # நாசமாப்போச்சு! ? #tnfisherman

மத்திய/மாநில ஆட்சி(!) புரியும் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்த ஒரு வாரமா தின்ன மீன்ல ஒரு முள்ளுகூட குத்தலையா? #tnfisherman

இணைந்து குரல் கொடுப்போம் http://www.savetnfisherman.org/

----------------------------------------------

தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman -0-

15 comments:

கும்மி said...

பகிர்வுக்கு நன்றி.

நேற்று இரவு நடைபெற்றதுபோல், இன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இடையிடையே கிடைக்கும் நேரத்திலும் ட்வீட் அனுப்புவோம்.

----
5 லட்சமும் அங்கன்வாடி வேலையும் யாருக்கு வேண்டும்? இறந்த என் கணவனை திருப்பித்தா. save #tnfisherman

கே.ஆர்.பி.செந்தில் said...

ஆத்தாடி, ரெண்டுநாளா இணையப்பக்கம் வரல... ட்விட்டர் நெருப்பு திசையெங்கும் பரவட்டும்!

ஈரோடு கதிர் said...

Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls

அகல்விளக்கு said...

நமைத்துப்போய்க் கிடக்கும் ஒரு குளிர்மண் தரையில்...

அதிசயமாய் ஒரு தீ பற்றிக் கொண்டிருக்கிறது...

இயன்ற வரையில் அதை அணையாமல் ஊதிப்பெருக்க முயற்சி செய்வோம்...

நன்றி அண்ணா...

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி.

பாரத்... பாரதி... said...

நாங்களும் டிவீட்டி இருக்கிறோம் எனபதால், உங்களின் அழைப்பு புரிகிறது.. தொடரட்டும் டிவிட்டரின் நெருப்பு, அதன் ஒளியிலாவது, அரசியல் கண்கள் திறக்கட்டும்..

பாரத்... பாரதி... said...

ராஜபக்சே மனைவி கோவில்களில் வேண்டுதல் # உம் புருசன் உசுரு மட்டும் உசத்தி ? #tnfishermen #tnfisherman :

நாகராஜ் said...

நல்ல பகிர்வு நன்றிகள் பல

நாகராஜ் said...

நல்ல பகிர்வு நன்றிகள் பல

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி அண்ணா. அனைவரும் இணைந்து குரல் கொடுப்போம்.

தாராபுரத்தான் said...

பதிவுக்கு பாராட்டுக்கள்ங்க.

Gopi Ramamoorthy said...

I am retweeting yours. Thanks

sakthistudycentre-கருன் said...

2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,
நமக்கென்ன என்றே அமைதி காத்தோம் .
ஈழத் தமிழர்களுக்குத் தான் ரெட்டை முகம் காட்டிவிட்டோம்.தாய்த் தமிழக மீனவர்களுக்காவது ,நிஜமான உணர்வைக் காட்டுவோம் #tnfisherman//

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

ஜெரி ஈசானந்தன். said...

Bravo..

Sethu said...

Nice work. Join the hands for the rights of fishermen.