கசக்கும் இனிப்பு

தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாய் கரும்புச் சர்க்கரை மாறிவிட்ட நேரத்தில். சடசடவென உயரும் சர்க்கரை விலை மிகப் பெரிய கசப்பு அனுபவமாக மாறியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மூன்று ரூபாய்க்கு இருந்த தேநீர் விலை இப்போது ஆறு ரூபாய்.

யாரிடம் முறையிட....
தேநீர்க் கடை நடத்துவோரையா, சர்க்கரை மண்டி வியாபாரிகளையா, சர்க்கரை ஆலைகளையா அல்லது கரும்பு விவசாயிகளையா..... அல்லது நம்மை வழிநடத்தும்(!!!) மந்திரிகளையா? யாரை நோக்கி விரல் சுட்ட!!!?

மனதின் ஓரத்தில் ஒரு ஈனக்குரல் எழும்புகிறது... கரும்பு விளைச்சல் இல்லாததற்கு அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளை எப்படிக் குறை சொல்வது.... ஆனால் அதுதான் நிஜமா?

நடுத்தர குடும்ப அலட்சியம் மிக இயல்பாக இதைக் கடந்து போகிறது, எல்லாம் விலையேறுகிறது, நம் கையில் என்ன இருக்கு? நாம் என்ன செய்ய முடியும் என தாராளமான சகிப்புத் தன்மையோடு.

ஓராண்டுக்கு முன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சர்க்கரை இறக்குமதி குறித்த செய்தியில், வெளிநாட்டு விவசாயி ஒருவர் “இரண்டு வருடமாக நாங்கள் எத்தனால் தயாரிப்பை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். 2009 பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தேவை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து இதைச் செய்கிறோம்” என்று பேட்டியளித்தார்.

(*சென்ற வருடம் தான்... கரும்பிலிருந்து வரும் மொலாசிஸ் மூலம் கிடைக்கும் எத்தனால் எரிபொருளை 10% மற்ற எரிபொருட்களுடன் கலந்து இந்தியாவில் பயன்படுத்த நமது அரசாங்கம் அனுமதியளித்தது. மனிதர்களின் உணவுப்பொருளை எரிசக்திக்கு மாற்றாக பயன்படுத்த ஆரம்பித்தால் மிகப் பெரிய தவறாக முடியும் என்ற கருத்தும் உண்டு.)

மூன்று வருடங்களுக்கு முன்பு, கரும்பைக் கொள்முதல் செய்ய யாரும் வராததால் அப்படியே காட்டில் தீ வைத்து கொளுத்திய கொடுமையும் நடந்த காலகட்டத்தில்தான் வெளிநாட்டு விவசாயத்துறை தங்கள் விவசாயிகளை எத்தனால் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு சர்க்கரையை தயார் செய் என்று அறிவுரை வழங்குகிறது.

இங்கே கொள்முதல் செய்யப்படாமல் கொளுத்தப்பட்ட கரும்புக்கு வெறும் 1000 நாட்களில் வேறு நாடுகளில் கையேந்தும் அவல நிலையில் இருக்கிறோம். ஏன் இத்தனை முரண்பாடு... விவாசாயிகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் வேளாண்மைத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

மத்திய வேளாண்துறை மந்திரி, இதற்கு பிரதமரும், மத்திய அமைச்சரவையும் தான் காரணம் என்கிறார். அவர் சார்ந்துள்ள கட்சிப் பத்திரிக்கை அவரை ஆதரித்து செருப்பில் அடிப்பது போல் ஒரு அறிக்கை விடுகிறது ”சர்க்கரை சாப்பிடாவிட்டால் செத்தா போய்விடுவார்கள்” என்று.... அதோடு மட்டுமா... மிகுந்த அறிவுபூர்வமாக அறிவுரை வழங்குகிறார்கள் சர்க்கரை சாப்பிடுவதால்தான் நீரிழிவு நோய் வருகிறதாம்.

இன்னொரு புதிய கண்டுபிடிப்பு, ஆறாவது ஊதியக் கமிசன் பரிந்துறையின் பேரில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை ஒப்பிடும் போது, இந்த விலைவாசி உயர்வு குடும்பங்களின் பட்ஜெட்டில் மிகப் பெரிதாக ஒன்றும் செய்துவிடாதாம் ....

கேட்க நியாயமாகத் தோன்றுகிறது, ஆனால் சொன்னவர்கள் மிக அநியாயமானவர்கள்.

ஊதியக் கமிசன் பரிந்துறையில் ஊதிய உயர்வு பெற்று பட்ஜெட் போடும் குடும்பம் இந்த தேசத்தில் 1% இருக்குமா... தினம் தினம் சில்லரைக் காசு பொறுக்கி கொஞ்சம் சர்க்கரையும், டீத்தூள் பொட்டலமும் வாங்கி டீ போட்டுக் குடிச்சு வயித்தை நிரப்புகிற மக்கள் தானே இந்த தேசத்தில் 50% பேர் இருக்கின்றனர். கூலி வேலைக்குப் போகின்றவர்களில் முக்காவாசிப் பேர் டீத் தண்ணியில் தானே பசியாருகிறார்கள். மூனு ரூபாக்கு விற்ற டீ இன்னிக்கு ஆறு ரூபாய். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறவர்களுக்கு எந்த ஊதியக் கமிசனின் பரிந்துறை உதவப்போகின்றது.

தேசத்தின் வேளாண் உற்பத்தியை விட, இந்த தேசத்தின் 110 கோடி மக்களை பசியில் இருந்து மின்னல் போல் மீட்டெடுக்கும் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவதிலும், அது குறித்து சிந்திப்பதுமே முக்கியமாக இருக்கும் மத்திய உணவுத்துறை அமைச்சருக்கு எதையும் சொல்ல உரிமை இருக்கிறது.

மாண்புமிகு மத்திய வேளாண்துறை மந்திரி இந்திய கிரிக்கெட் போர்டு பதவியில் உழைத்து (!!!) திழைத்துக் கொண்டுருந்த போது, உலக வரை படத்தின் ஏதோ ஒரு மூலையில் குட்டி குட்டியாய் இருக்கும் தேசத்தினர் நமக்கு விற்க சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

அந்த இனிப்பு நாவில் அழுத்தமாகக் கசக்கிறது....

விவசாயத்திற்கு நல்லவழி காட்டாத அரசாங்கம்
மக்களின் பசி பற்றி அறியாத அரசாங்கம்...
அதை வழி(லி) நடத்தி வரும் அரசியல் கட்சிகள்....

....... அடுத்து தங்களை தயார் படுத்தி வருகின்றனர்

* அரிசிக்கும் தட்டுப்பாடு வரும் போது, அரிசி தின்றால் கார்போஹைட்ரேட் அதிகமாகும், பசியாற மண்ணை சாப்பிடுங்கள் எனச்சொல்லவும்

* பால் தட்டுப்பாடு வரும்போது கால்நடைகளின் பாலை குடிப்பது பாவம், கள்ளிப்பால் குடியுங்கள் எனச்சொல்லவும்....

நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக....

________________________________________________________________

34 comments:

vasu balaji said...

/அரிசிக்கும் தட்டுப்பாடு வரும் போது, அரிசி தின்றால் கார்போஹைட்ரேட் அதிகமாகும், பசியாற மண்ணை சாப்பிடுங்கள் எனச்சொல்லவும்//

ஹி ஹி. அரிசிபஞ்சம் வந்தப்ப நம்ம சி.சு. அய்யா எலியில ப்ரோட்டீன் இருக்குன்னு நக்கலா சொல்லி நாறிப்போனது வரலாறு அமைச்சரே:))

மிக மிக அருமையான அலசல். நீண்ட நாளுக்குப் பின் அசல் அக்மார்க் கதிர் இடுகை:)

Unknown said...

இதில் நமது பங்கு
என்னவாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..?

Anonymous said...

ரொம்ப வேதனை.. 16 ரூபாய் இருந்த சர்க்கரை இப்ப 42 ரூபாய் :((

கார்த்திகைப் பாண்டியன் said...

மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமாவது அக்கறை கொள்ளக்கொட்டிய அரசியல்வாதிகள் நமக்கு கிடைக்கவே மாட்டார்களா?

ரோகிணிசிவா said...

சூதில் தன்னை இழந்த தருமன் பேசும் வாய்ப்பை இழக்கிறான், அது போல இலவச தொலைகாட்சிக்கு நம்மை விற்ற நாம் பேசும் தகுதியை இழக்கிறோம்!
அரசியல் விபச்சாரத்திற்கு போது மக்கள் ஆகிய நாம் தான் காரணம்!
அவன் பேசுறது பண்றது எல்லாமே தப்பு தான் , ஆனா அவனை மாலை போட்டு அனுப்பியது நாம் அன்றோ!

கலகலப்ரியா said...

தேவையான பதிவு...!! அருமை கதிர்..!

பழமைபேசி said...

Mappu,

Back to the form... Way to go!

பழமைபேசி said...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
இதில் நமது பங்கு
என்னவாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..?
//

கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பார்த்துகிடணும்... என்ன இது? சின்ன புள்ளத்தனமா??

தாராபுரத்தான் said...

இந்த நாட்டில் எதை எவனிடம் சொல்லி என்ன நடக்க போகிறது.இலவச சக்கரை போட்டு தள்ளிட்டா போகுது.

காமராஜ் said...

கதிர் இந்தமுறை வேகமாக வந்துட்டென்.

அடிச்சு நொறுக்குறீங்கப்பா.இன்னும் ஊரைத்திரும்பிப் பார்க்க கூச்சப்படுகிற தேசத்தில்.போய் உட்கார்ந்து மண்ணை முத்தமிட்டுத்திரும்பும் ஆசாமி நீங்கள்.

பத்துவருடங்களுக்கு முன்னாலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அலறிச்சொன்னவைகள் இதோ நிஜமாக இறங்குகிறது.வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட்டும்.பொட்டலக் கலாச்சாரமும்.வளர்ச்சி போலத்தெரிந்தாலும் அது நூறுகோடி இந்தியர்களின் சோத்தில் மண்போடுகிற வேலை.

குறைந்தது ரெண்டு மூனு பேரிடமாவது இதைப்பகிர்ந்துகொள்ளவேண்டும்.இந்தவலையில் நீங்கள் அதிகப்படியான படிக்கிறவர்கலிடம் கொண்டுபோகிறீர்கள்.

வாழ்த்துக்கள் தோழா

Paleo God said...

ஏதோ, ரோடு, கட்டிடம்ன்னா போஸ்டர் அடிச்சி நான் நான் ன்னு மார் தட்டிக்கிலாம், இதெல்லாம் அவங்க கண்ணுக்கே தெரியாது, இருக்கே இருக்கு இலவசமா கொடுத்தது, கடிச்சி திங்க வேண்டியதுதான்.

இனிக்கும்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. முடிவாய் தெறித்திருக்கும் கோபம் மிகச் சரி.

Anonymous said...

வானம் பார்த்த பூமி போல...அரசாங்க சட்ட திட்டங்களை மட்டுமே நம்பி நம்முள் பெரும்பாலோர் என்ன செய்ய போகிறோம்...அரசு நமக்கு என்றும் செவி சாய்த்ததில்லை நாமும் எப்பவும் போல இதற்கும் மிகச்சில சொற்பமாய் குரல் எழுப்பி விட்டு இதோ அவரிடம் சொல்கிறேன் சர்க்கரை வாங்கிட்டு வாங்க சாயங்காலம் எனக்கு டீக்கு இல்லைன்னு........

அகல்விளக்கு said...

சரியான சாடல்....

நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான அலசல் பதிவு...

BALACHANDAR said...

enna

BALACHANDAR said...

Neenga solluvadu....unmai..unmai...unmai...... neengal, naan enna seiya mudiyum.....ennal mudintha varai intha seithiyai palaridam pakirkeren.....enna seivadu....nam nattu makkalai.....ootu poduvadarkku kaasu koduppanunga endra mananilai eppothu vanthuvettadu.....eni entha nattai kappattra mudiyathu....entha nattu makkal kettu kuttisuvaraga povadarkku thaneee oru karanam endru purikiradoo appozhuthu thirunduvadarkku vaippu erukkadu...eranthu viduvan....

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாண்ணே
//ஹி ஹி. அரிசிபஞ்சம் வந்தப்ப நம்ம சி.சு. அய்யா எலியில ப்ரோட்டீன் இருக்குன்னு நக்கலா சொல்லி நாறிப்போனது வரலாறு அமைச்சரே://

இதுவேற நடந்திருக்கா!

நன்றி @@ திருஞானசம்பத்
அருமையான கேள்வி

நன்றி @@ மயில்
ஆனாலும் இனிப்பு அதே அளவுதானுங்க விஜி

நன்றி @@ கா.பா
மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் நமக்கும் இன்னும் கூடுதல் கவனம் வரவேணும்

நன்றி @@ rohini
உண்மைதான்

நன்றி @@ ப்ரியா

நன்றி @@ பழமைபேசி
இஃகிஃகி

//கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பார்த்துகிடணும்... என்ன இது? சின்ன புள்ளத்தனமா??//

அது சரி!!! கொஞ்ச நாளவே பின்னூட்டத்தில எல்லாரும் கலக்குறாங்கப்பா

நன்றி @@ தாராபுரத்தான்
ஆஹா..

நன்றி @@ காமராஜ்
அண்ணா... சாப்பிடும் பொருள், நிலத்தில் விளைகிறதா அல்லது ஷாப்பிங்மால்-களில் ரெடிமேடாய் கிடக்கிறதா எனக் கேட்கும் நிலையில்தானே குழந்தைகளை வைத்திருக்கிறோம்

நன்றி @@ ஷங்கர்
ம்ம்ம்ம்..

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ தமிழ்
//அரசாங்க சட்ட திட்டங்களை மட்டுமே நம்பி நம்முள் பெரும்பாலோர் என்ன செய்ய போகிறோம்...அரசு நமக்கு என்றும் செவி சாய்த்ததில்லை நாமும் எப்பவும் போல இதற்கும் மிகச்சில சொற்பமாய் குரல் எழுப்பி விட்டு இதோ அவரிடம் சொல்கிறேன் சர்க்கரை வாங்கிட்டு வாங்க சாயங்காலம் எனக்கு டீக்கு இல்லைன்னு........//

அதுசரி.... நடக்கட்டும்

நன்றி @@ அகல்விளக்கு
//நீண்ட நாட்களுக்குப்பின்//
சரி...சரி....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

"சுளீர் சுளீர் சுளீர்"னு அடிச்சிருக்கீங்க கதிர்.. சாட்டையெடுத்து.

உண்மைதான்.. இதைத் தான் "Farmer's Misery" என்று கூறுவர்.

தவறு நம்மிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறோம்?

இந்த வருட ஐ.பி.எல்லைப் புறக்கனிக்கப் போகிறோம் என்று நாடு முழுக்க, அல்லது மாநிலம் முழுக்க அல்லது ஊர் முழுக்க குறைந்தது தெரு முழுக்க முடிவெடுப்போமா?

தன் துறை விட ஐ.பி.எல் தான் முக்கியம் என்று கூறுவதற்குக் காரணம் நாம் தான். நீங்க எடுத்திருக்கற சாட்டைய வச்சு முதல்ல நம்மளத்தான் அடிக்கனும்

க.பாலாசி said...

மிக வருத்தப்படவைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நமது விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் உண்டாகிறது. ஒவ்வொருமுறையும் விளைச்சல் அதிகமாகும்போது அதை முறையே கொள்முதல் செய்யாத அரசாங்கம், விலைவாசியுயர்வின்போது விளைச்சல் குறைந்துவிட்டது என்று விவசாயிகள் மீது பழிசுமத்துகிறது. தும்பைவிட்டு வாலைபிடிக்கும் கதையாக...

//கேட்க நியாயமாகத் தோன்றுகிறது, ஆனால் சொன்னவர்கள் மிக அநியாயமானவர்கள். //

என் நாவில் கெட்டவார்த்தைகள் வருகிறது... பரதேசிங்க...

நல்ல இடுகை...

// வானம்பாடிகள் said...
மிக மிக அருமையான அலசல். நீண்ட நாளுக்குப் பின் அசல் அக்மார்க் கதிர் இடுகை:)//

நானும் சொல்லணுமா என்ன??

Chitra said...

நடுத்தர குடும்ப அலட்சியம் மிக இயல்பாக இதைக் கடந்து போகிறது, எல்லாம் விலையேறுகிறது, நம் கையில் என்ன இருக்கு? நாம் என்ன செய்ய முடியும் என தாராளமான சகிப்புத் தன்மையோடு.

............... கசப்பான உண்மை. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

Venkat M said...

Kathir... Nice Write-up....I agree with Senthil...

Unknown said...

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"
இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுதுதான் தான் தெரிகிறது.
திட்டமிட்டு செயல்படாத மந்திரி இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன.
நல்ல பதிவு.பகிர்வு.

Unknown said...

@@பழமைபேசி

//.. கிடைக்கிற சர்க்கரைய வீணாக்காம பார்த்துகிடணும்... என்ன இது? சின்ன புள்ளத்தனமா? ..//

அப்போ என்னைய பத்தரமா பாத்துகனுமா..??!!

சரி.. சரி..

Kumky said...

கவலை வேண்டாம் கதிர்..

சுகராம் என்ற ஒரு மத்திம அமைச்சர் இருந்தார்..

அவரிடம் பல அற்புதமான திட்டங்கள் இருந்தன...

இப்படித்தான் விவசாயிகள் அதிகப்படியான கரும்பை உற்பத்திசெய்து
அதனை நமது அரசுத்துறை (கவனிக்க தனியார் மில்கள் அல்ல) மில்கள் அதிவேகமாக அரைத்து கரும்பை உற்பத்தி செய்யவும் அவருக்கு கோபம் வந்துவிட்டது...

என்ன எல்லோரையும் சர்க்கரை வியாதிக்காரர்களாக மாற்ற முயற்சிக்கிறார்களா..?
என்று அரசு மில்களில் இருப்பிலிருந்த எல்லா சர்க்கரை மூட்டைகளையும் விற்பனைக்கு விடக்கூடாது என ஆணை பிறப்பித்துவிட்டு,
நமது நன்மைக்காக க்யூபாவிலிருந்து நமது சர்க்கரையை விட இனிப்பு குறைந்த ஒரு மாதிரி வெள்ளையும் காபியும் கலந்த நிறத்திலான சர்க்கரையை இறக்குமதி செய்து நம்மையும் நாட்டையும் காப்பாற்றினார்...

கடைசியில் அவருக்கு ஒரு சர்க்கரை கோணிப்பைகூட முழுதாக கிடைக்கவில்லை என்று புலம்பியதாக கேள்வி...

Kumky said...

விவசாயத்தை காப்பாற்ற நீங்களும் நம்மைப்போன்ற பதிவர்களும் அப்புறம் இந்த வீணாபோகப்போகின்ற விவசாயிகளும் கவலைப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில்தான்...
நமது நிலத்தை அரசு நிர்ணயிக்கும் அபாரமான(?) விலைக்கு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், சில காலம் கழித்து பண்ணாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவிட்டு குஜாலாக அவர்களிடத்திலேயே வேலைக்கும் போய் விடலாமாம்...
லகரங்களில் சம்பளம் வாங்கிய மென் பொருள் துறையினருக்கு கூட மெயிலேயே கேட்டுக்கு வெளியே போகச்சொல்லி அனபான அழைப்பிதழ் அனுப்பும் கம்பெணிகள் நிறைந்த நாடு இது...
விவசாயிகளுக்கு தமது நிலங்களை இழந்தப்பின் கொஞ்ச நாள் வேலை பார்த்துவிட்டு கூர்க்கா சொல்லும்போது வெளியே செல்லும் நிலைதான் வரப்போகுமென்று தோன்றுகிறது...

புலவன் புலிகேசி said...

//தினம் தினம் சில்லரைக் காசு பொறுக்கி கொஞ்சம் சர்க்கரையும், டீத்தூள் பொட்டலமும் வாங்கி டீ போட்டுக் குடிச்சு வயித்தை நிரப்புகிற மக்கள் தானே இந்த தேசத்தில் 50% பேர் இருக்கின்றனர்//

இதெல்லாம் அவனுங்க எங்கப் பாக்கப் போறானுங்க...அவனுங்களுக்கு அவனவன் குடும்பத்துக்கு வாங்க காசிருந்தா போதும். அடுத்தவன் எப்புடி போனா என்ன? கேடுகெட்ட அரசியல்

மாதவராஜ் said...

//நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக..//

இப்படிச் சொன்ன்னாலும், அதில் பெருங்கோபம் புதைந்திருப்பதை புரிந்து கொள்கிறேன்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ BALACHANDAR

நன்றி @@ செந்தில்வேலன்
//நீங்க எடுத்திருக்கற சாட்டைய வச்சு முதல்ல நம்மளத்தான் அடிக்கனும்//

திரும்ப திரும்ம நமக்குத்தான் அடிவிழுகுதுங்க

நன்றி @@ க.பாலாசிமிக
//என் நாவில் கெட்டவார்த்தைகள் வருகிறது... பரதேசிங்க... //
இஃகிஃகி

நன்றி @@ Chitra

நன்றி @@ Venkatesan

நன்றி @@ அபுல் பசர்

நன்றி @@ கும்க்கி
//விவசாயத்தை காப்பாற்ற நீங்களும் நம்மைப்போன்ற பதிவர்களும் அப்புறம் இந்த வீணாபோகப்போகின்ற விவசாயிகளும் கவலைப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில்தான்...
நமது நிலத்தை அரசு நிர்ணயிக்கும் அபாரமான(?) விலைக்கு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், சில காலம் கழித்து பண்ணாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவிட்டு குஜாலாக அவர்களிடத்திலேயே வேலைக்கும் போய் விடலாமாம்...//

நிஜம்....! நிஜம்....!! நிஜம்...!!!

நன்றி @@ புலவன் புலிகேசி
...ம்ம்ம்ம்

நன்றி @@ மாதவராஜ்
பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்

நன்றி @@ அன்புடன் அருணா

Anandi said...

//பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்//very true hmmmmmmmmm

*இயற்கை ராஜி* said...

சுடும் உண்மைகள்.. ஆனால் சுட வேண்டியவர்களுக்கு சுடமாட்டேங்குதே

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான அலசல்

CM ரகு said...

அருமையான அலசல் பதிவு...
உண்மைதான்..
//பெரும் கோபமும், கையாலாகாத்தனத்தின் வலியும்//
எனக்கும் தான்...
சர்க்கரை இப்ப 44 ரூபாய்....

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Amrutha
நன்றி @@ ரகு

நன்றி @@ இய‌ற்கை
(நமக்கு சுடுகிறதா)

நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்

கமலேஷ் said...

///நம்மை தயார்படுத்திக் கொள்வோம், எல்லாவற்றையும் அடர் மவுனத்தோடு கடந்துபோக///

இதெல்லாம் பட்டு பட்டு மரத்து போட்சுங்கன்னா...(நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்..)