Feb 17, 2010

பகிர்தல் (17.02.2010)

அடப்பாவிகளா!!!:

வழக்கம் போல் சாலையோரம் நடப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்தான் என அலட்சியத்தோடு அந்த மண்டபத்தின் முன் கடந்து கொண்டிருந்தேன். ஒரு கட்சியின் தலைவர் தன் மனைவியோடு கையில் தாம்பூலத் தட்டுடன் நிற்கும் படம். குறு நகைப்போடு கடந்த எனக்கு அந்த வாசகம் சுறுக்கெனத் தைத்தது.

//எங்கள் தங்கத் தலைவன் XYZ-ன் நல்லாசியுடன்....
பூப்பெய்திய எங்கள் செல்ல மகளுக்கு
பூப்பு நன்னீராட்டு விழா... //
என்ற வாசகங்களோடு...

அடப்பாவிகளா.... இந்த குழந்தை பூப்பு அடைந்ததும், அந்த தலைவன் நல்லாசியோடுதானா!!!?

நல்லாக் காட்டுறீங்கய்யா... உங்க விசுவாசத்த!!!

பாவம் அந்தச் சிறுமி...

#######

வெ(ற்)றி நடை:

ஆதித்யா சேனல் மட்டும் தான் சன் குழுமத்தில் நகைச்சுவை சேனல் என்று நினைத்தால் அது தவறு. வெள்ளிக்கிழமை பதினொரு மணிக்கு சன் பிக்சர்ஸ் படம் வெளிவந்தால், 11.15 மணிக்கே தமிழகமெங்கும் வெற்றி(!!!) நடை போடும் என்று பந்தாவாக போட்டு எல்லாச் சேனலிலுல் தமாஷ் செய்கிறார்கள்

விளம்பரம் மூலம் வெறுப்பேற்றி, ஒரு படத்தைக் கூட பார்க்க விடாமல் செய்த சன் தொலைக்காட்சியின் அத்தனை சானல்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். ஒரு வேளை இத்தனை விளம்பரம் வராமல் இருந்திருந்தால், சில படங்களையாவது தியேட்டருக்குப் போய் பார்த்தாலும் பார்த்திருந்திருப்பேன்...

#######

பென்சில் நதி:

பெரும்பாலும் பத்து வார்த்தைக்குள் தான் இருக்கும் இவரின் கவிதைகள். ஆனால் நீண்ட நேரம் தனக்குள்ளே அமிழ்த்தி வைத்திருக்கும் படைப்பாளி. ஒவ்வொரு முறையும், ஆசையோடும் ஆச்சரியத்தோடும் இவர் தளத்திற்குச் செல்வேன். ஒரேயொருமுறை கூட ஏமாற்றியதில்லை இவரின் கவிதைகள்.

பென்சில் நதி என்ற வலைப்பூவில் எழுதிவரும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளை

நீங்களும் வாசித்துப்பாருங்கள்

#######

பள்ளிக் கட்டணம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வாகனங்களின் தரத்தை உறுதி செய்யுமாறு அரசாங்க உத்தரவாம். இது வரை மாதம் ரூ.400 (11x400=4400) கொடுத்துப் பள்ளி சென்று கொண்டிருந்த என் மகளின் அடுத்த ஆண்டு வாகனக் கட்டணம் மட்டும் வருடத்திற்கு ரூ. 10500. பெற்றோரே தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து விட வேண்டும் அல்லது பள்ளி நிர்ணயித்திருக்கும் வாகனத்தில் மட்டும் தான் அனுப்ப வேண்டும். இன்னும் அடுத்த ஆண்டு பள்ளிக் கட்டணத்திற்கான ஓலை வரவில்லை. மணியோசை மட்டும் வந்திருக்கிறது, யானை வரும் பின்னே!

#######

35 comments:

vasu balaji said...

நல்லாசியுடன் பூப்பு நன்னீராட்டு விழான்னு போட்டிருந்தாலே போதுமே! பூப்பெய்தாம நடத்தப் போறாங்களா? தந்தி ஆபீஸ் மாதிரி எழுத்துக்கு இத்தன காசுன்னு வாங்கினா சரியாயிரும்.

/சில படங்களையாவது தியேட்டருக்குப் போய் பார்த்தாலும் பார்த்திருந்திருப்பேன்.../

பல்லிருக்கிறவன் பகோடா திங்கிறான். நமக்கெதுக்கு வம்பு.

/நீங்களும் வாசித்துப்பாருங்கள்/

பகிர்தலுக்கு நன்றி.

/என் மகளின் அடுத்த ஆண்டு வாகனக் கட்டணம் மட்டும் வருடத்திற்கு ரூ. 10500. பெற்றோரே தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து விட வேண்டும் அல்லது பள்ளி நிர்ணயித்திருக்கும் வாகனத்தில் மட்டும் தான் அனுப்ப வேண்டும்./

அப்பச்சேரி. இனிமே ஓட்டு கேட்டு வந்த புள்ள கணக்கில வருசத்துக்கு 10,500x5 வாங்கிற வேண்டியதுதான்.:)) நல்லா கெளப்பராய்ங்கப்பா பீதிய. கேட்டா உங்க குழந்தை நலனை விட காசு பெரிசாம்பாய்ங்க.

பழமைபேசி said...

இஃகிஃகி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பகிர்தல் கதிர்..

ம்ம்.. நான் என் பொறியியல் கல்லூரிப் படிப்பிற்கான நாலு வருசக் கட்டணம் 24200/- தான்.

கலகலப்ரியா said...

நல்ல பகிர்வு... மஞ்சள் நீராட்டு விழா..ஹையோ ஹையோ... பள்ளிக்கூடம் ஐயையோ ஐயையோ...

க ரா said...

நம்ம ஊர்ல கல்வி இப்ப ஒரு நல்ல தொழில் ஆகிப் போச்சு இப்ப. கல்வி தொழில் பண்றது பெரும்பாலும் அரசியல்வாதிகளும் அவங்கள சார்ந்தவங்களும் தான். அதுனால எதுனாச்சும் பண்ணி வருமானத்த பெருக்கிறாங்க. என்னத்த சொல்ல.

சிநேகிதன் அக்பர் said...

பகிர்தலுக்கு நன்றி பாஸ்.

பிரபாகர் said...

கதிர்,

நல்லாவே பகிர்றீங்க அப்பு!

நல்லவேளை, xyz நல்லாசியுடன் இயற்கை எய்தினார்னு போடாம இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்....

சன்னில வர விளம்பரத்த பாக்கும்போது எவ்வளவு டென்ஷன் ஆ சேனல மாத்துவேன் தெரியுமா? உங்கள மாதிரித்தான், விளம்பரத்தாலையே படத்த பாக்கிறதில்ல...

பிரபாகர்.

அமர பாரதி said...

பகிர்தல் நன்றாக இருந்தது கதிர். ஓட்டுக்கு மக்கள் வாங்கும் பணம் போகும் வழி இது. என்ன செய்வது.

Romeoboy said...

போகுற போக்கை பார்த்தா குழந்தைகள் 5 வது தாண்டுறதுக்குள்ள நம்ம சொத்தை வித்தட்டனும் தலைவரே .. அநியாயம் பண்ணுறாங்க.

Chitra said...

பூப்புனித நீராட்டுக்கும் போஸ்டர் .................?????
மக்கள் முன்னேறி விட்டார்கள் என்று நினைத்தேன்.
சன் டி.வி. - ஓவர் பில்ட்-அப். என்று மாறுமோ?
பள்ளி கூட விவாகரம் - கஷ்டம் தான்.
எல்லா விஷயங்களையும், நீங்கள் சொல்லிய விதம் நல்லா இருந்தது.

தாராபுரத்தான் said...

பள்ளிக் கட்டணம்..அப்பப்பா.. நாங்க எல்லா தப்பித்தோம்...அனுபவ சித்தனின் குறிப்புக்களை காண வழி காட்டியமைக்கு நன்றி.

ரோஸ்விக் said...

நல்ல பகிர்தல் கதிர்.

பள்ளி கட்டணங்கள் வீட்டுமனை விலைகளை விட பல மடங்கு உயர்ந்துகொண்டே இருக்கிறது. போகிற போக்கில் நம்ம சொந்தகாரங்கவுட்டு புள்ளைகளை எல்லாம் ஒண்ணா சேர்த்து ஒரு வாத்தியார நமக்குள்ளே தயார்பண்ணி படிப்பு சொல்லி கொடுக்க வேண்டியது தான். நம்ம அரசியல் வியாதிகளை நம்ம்பவே நம்பாதீங்க...

இப்புடி பிளக்ஸ் பேனர் வச்சா... நாடு எப்புடி உருப்புடும்.

அறிமுகத்திற்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு

புலவன் புலிகேசி said...

அடப்பாவிங்களா..இப்புடில்லாமா போஸ்டர் ஒட்டுவாங்கே...?

அதெதான் தல சன் பிக்ஸர்ஸ் படங்களை நானும் தவிர்த்து கொண்டிருக்கிறென்.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்தல்

Unknown said...

ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றதுக்கு மட்டும் வருசத்துக்கு 10,500/- எனக்கு எம்.சி.ஏவுக்கு மூணு வருச ஃபீஸே அம்புட்டுத்தான்.

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க.

Anonymous said...

மிக கேவலமான ஒரு செயல் இந்த பூப்பு நன்னீராடு விழா.. அந்த சின்ன குழந்தையின் மன நிலை எப்படி இருக்கும் என்று யாரும் கவலைப்படுவதில்லை. :(

ஆதித்யா சேனல் :)) நோ கமெண்ட்ஸ்

பள்ளிக்கட்டணம் .. ம்ம் இது பற்றி என்னத்த சொல்ல.. என் குழந்தைகள் படிக்கும் பள்ளி எந்த வித முன்னறிவுப்பும் இன்றி 50% கட்டணம் அதிகபடுத்தி விட்டார்கள் :(( வேற வழி..

அகல்விளக்கு said...

அஃகா.......

பகிர்வு அருமை அண்ணா....

அன்புடன் நான் said...

பகிர்வு நல்லாயிருந்தது..... முதல் பகிர்வுபடித்ததும் சினம்தான் வந்தது.

Jerry Eshananda said...

பகிர்தலில் பதிவர்கள் அறிமுகம் நன்றாக இருக்கிறது.

Baiju said...

Thanks for Introducing "Pencil Nathi"
Nalla pakirthal

க.பாலாசி said...

//அடப்பாவிகளா!!!://

இங்கணத்தான் இந்தமாதிரி விழாக்களுக்கு போஸ்டர்லாம் அடிச்சு மண்டபத்துல வைக்கிறத பார்க்கிறேன்...

//வெ(ற்)றி நடை://
//ஆதித்யா சேனல் மட்டும் தான் சன் குழுமத்தில் நகைச்சுவை சேனல் என்று நினைத்தால் அது தவறு.//

ரொம்ப லேட்டா தெரிஞ்சிகிட்டீங்க...ஹா..ஹா...

//பென்சில் நதி://

பகிர்ந்தமைக்கு நன்றி...

//பள்ளிக் கட்டணம்//

அடப்பாவிங்களா?????

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ //எங்கள் தங்கத் தலைவன் XYZ-ன் நல்லாசியுடன்....
பூப்பெய்திய எங்கள் செல்ல மகளுக்கு
பூப்பு நன்னீராட்டு விழா... //
என்ற வாசகங்களோடு… }}}}}}}}}}}

நல்ல முன்னேற்றம் .

விரைவில் முதல் இரவை தொடங்கி வைப்பதற்கும் ஏதேனும் ஒரு தலைவனின் உதவியுடன் விளம்பரம் செய்யும் நிலை வந்தாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை .

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Unknown said...

உங்களது சென்ற இடுகையை விட இந்த இடுகை(கள்) அருமை!

சீமான்கனி said...

பைத்தியகார தொண்டர்கள்...
நல்ல பகிர்வு அண்ணே......

Anonymous said...

//எங்கள் தங்கத் தலைவன் XYZ-ன் நல்லாசியுடன்....
பூப்பெய்திய எங்கள் செல்ல மகளுக்கு
பூப்பு நன்னீராட்டு விழா

இவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?

//குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வாகனங்களின் தரத்தை உறுதி செய்யுமாறு அரசாங்க உத்தரவாம். இது வரை மாதம் ரூ.400 (11x400=4400) கொடுத்துப் பள்ளி சென்று கொண்டிருந்த என் மகளின் அடுத்த ஆண்டு வாகனக் கட்டணம் மட்டும் வருடத்திற்கு ரூ. 10500.//

அதனால் என்ன கதிர் நீங்க வினையோகம் செய்யும் பொருளின் விலையை உயர்த்திடுங்க.... வேற வழி....

//இன்னும் அடுத்த ஆண்டு பள்ளிக் கட்டணத்திற்கான ஓலை வரவில்லை. //

என்ன அவசரம் அது இன்னும் ரெண்டு மாசத்தில் வரும் அதுக்குள்ள சேர்த்து வையுங்க....

மங்குனி அமைச்சர் said...

//ஒரு வேளை இத்தனை விளம்பரம் வராமல் இருந்திருந்தால், சில படங்களையாவது தியேட்டருக்குப் போய் பார்த்தாலும் பார்த்திருந்திருப்பேன்...//

தல நானும் உங்க கட்சிதேன் இப்படிஎல்லாம் விளம்பரம் போட்டு நம்மள காப்பாத்துராக அத கெடுத்துபுடாதிக்க

நான் காலேஜ்ல படிக்குபோது U.G & P.G (5 years) மொத்த பீசே 4500 அதுல 2100 காலர்ஷிப்னு திருப்பி கொடுத்திட்டாங்க

பரிசல்காரன் said...

இந்த பள்ளிக் கட்டணம் பெரிய கொடுமை கதிர். காலைல நான் கொண்டு வந்து விடறேன்.. ஒரு ட்ரிப்தான்”ன்னேன். அப்பவும் அதே காசுதான். டீசல் விலை அது இதுன்னாங்க. நான் கேட்டேன்... என்னோட ரெண்டு மகள்களும் வர, ரெண்டு டீசல் டேங்காடா வெச்சிருக்கீங்க? ரெண்டு பேர் வந்தா கம்மி பண்ணலாம்லன்னா கிகிகிங்கறாங்க.

ச்சே!

priyamudanprabu said...

//எங்கள் தங்கத் தலைவன் XYZ-ன் நல்லாசியுடன்....
பூப்பெய்திய எங்கள் செல்ல மகளுக்கு
பூப்பு நன்னீராட்டு விழா... //
என்ற வாசகங்களோடு...
//////

கொடுமை

Sanjai Gandhi said...

மொத மேட்டரு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thenammai Lakshmanan said...

கதிர் உங்க தளத்துக்கு இப்பத்தான் வர்றேன் நல்ல பகிர்வு பள்ளிக்கட்டணம் கல்லூரிக்கட்டணத்தைவிட சில பள்ளிகளில் அதிகம்

வெள்ளிநிலா said...

அப்ப அதித்யா சானல் SPECIAL காமெடி சேனல்!

மாதேவி said...

"நல்லவேளை, xyz நல்லாசியுடன் இயற்கை எய்தினார்னு போடாம இருக்காங்கன்னு" :)))

"என்னோட ரெண்டு மகள்களும் வர, ரெண்டு டீசல் டேங்காடா வெச்சிருக்கீங்க?":)))

பூப்புனித நீராட்டு :(((((((((((

Erode Nagaraj... said...

அரசியல்வ்யாதிகளுக்கு poop-நீராட்டு விழா செய்தால் சரியாகுமோ?

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...