அசையும் சிறகு

உயிர்...
கோணல்மாணல் கோடுகள்
வட்டங்கள் வர்ணங்கள்
அழகோ அழகாம் படத்தில்....

யாருக்கும் தெரியவில்லை
வேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சி

%%%%%%

வாசனை..
பழைய துணி வாசத்தில்
பாட்டியின் முந்தானையில்
உயிர்வாழ்ந்த கதைகள்....

அழகான படுக்கை விரிப்புகளில்
பாட்டிகளோடு செத்துக்கிடக்கிறது
சுத்தத்தின் வாசத்தோடு...

%%%%%%

41 comments:

வெள்ளிநிலா said...

நாந்தாங்க முதல்ல ,,,,

Anonymous said...

வாசனை வண்ணம் வண்ணத்துப்பூச்சி வாசம்...ரெண்டும் இரண்டு விதமாய் அழகு..

தேவன் மாயம் said...

வாசனை தூக்கலா இருக்குங்க!!

நேசமித்ரன் said...

கவிதைகள் இரண்டும் நல்லா இருக்குங்க கதிர்

வானம்பாடிகள் said...

உயிர் அழகு..வாசனை ஏக்கம்:) அருமை கதிர்.

Sangkavi said...

//பழைய துணி வாசத்தில்
பாட்டியின் முந்தானையில்
உயிர்வாழ்ந்த கதைகள்....//

அழகான வரிகள்... கூடவே அழுத்தமாகவும் இருக்கிறது...

butterfly Surya said...

அழகு + அழுத்தம் = அருமை.

சந்தனமுல்லை said...

:-)

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு கதிர்.

ரசித்தேன்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட ..நல்லாருக்கே

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

'வாசனை' அருமைங்க..

ஷங்கர்.. said...

ரெண்டாவது சூப்பர்..:))

ஜெரி ஈசானந்தா. said...

வாசனை நெஞ்சை துளைக்குது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான வரிகள்

ராமலக்ஷ்மி said...

கவிதைகளோடு தலைப்பும் மிகப் பிடித்தது.

கலகலப்ரியா said...

அருமை கதிர்...

தண்டோரா ...... said...

உயிர் வாசனை உணர்ந்தேன்!!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சர்புதீன்
நன்றி @@ தமிழ்

நன்றி @@ Dr.தேவா

நன்றி @@ நேசா

நன்றி @@ பாலண்ணே

நன்றி @@ Sangkavi

நன்றி @@ சூர்யா

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ பாரி

நன்றி @@ சதீஷ்

நன்றி @@ திருஞானசம்பத்

நன்றி @@ ஷங்கர்

நன்றி @@ ஜெரி

நன்றி @@ T.V.R.

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ ப்ரியா

நன்றி @@ மணிஜி

||| Romeo ||| said...

சூப்பர் தலைவரே... பாட்டி அருமை !!!!

க.பாலாசி said...

//யாருக்கும் தெரியவில்லை
வேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சி//

//அழகான படுக்கை விரிப்புகளில்
பாட்டிகளோடு செத்துக்கிடக்கிறது
சுத்தத்தின் வாசத்தோடு...//

இயல்பு....உண்மை...கவிதைகள்....அருமை...

பா.ராஜாராம் said...

மூன்று கவிதைகள்!

தலைப்பு சேர்த்து...

தாராபுரத்தான் said...

அசையா சிறகு...அசைத்த சிறகு.

பிரேமா மகள் said...

இப்போதெல்லாம் பாட்டிக்கு மரியாதை கதைகளிலும் கவிதைகளிலும்தான் கிடைக்கிறது. கதிர் அங்கிள் அதை உணர்ந்திருக்கிறார்.

rohinisiva said...

சிறுமி மனதில் பட்டாம்பூச்சி !-அற்புதம் கதிர்

அன்புடன் அருணா said...

தலைப்பு கவிதையை ஓரம் கட்டியது!

காமராஜ் said...

பாட்டிகளின் முந்தானை வாசனைக்குள் தான் எத்தனை ஆலீஸின் அற்புதங்கள் புதைந்து கிடக்கிறது. அதுதானே இப்ப ஒர மோர்.

நிலாமதி said...

கருத்தான கவிதைகளுக்கு ...நன்றி .

இய‌ற்கை said...

mmm..as usual... .
.
.
.
.
.
.
.
.
super

முகிலன் said...

கவிதைகள் ரெண்டும் சூப்பர்.

இதுக்குக் கூட மைனஸ் ஓட்டா? படுபாவிகளா...

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

இயல்பு - எளிய சொற்கள் - கற்பனை வளம் - கருத்துச் செறிவு

கவிதைகள் அருமை - வாசம் - பட்டாம் பூச்சி

நல்வாழ்த்துகள் கதிர்

ஜீயெஸ்கே said...

'வாசனை' பாட்டியின் ஸ்பரிசங்களை நினைவிற்கு கொண்டு வருகிறது. அதோடு அவர்கள் மற(று)க்கப்பட்டு வருவதையும்.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

ஆஹா அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

உயிரும் வாசனையும் ஒவொரு விதத்தில் அழகாய்...

செ.சரவணக்குமார் said...

இரண்டு கவிதைகளுமே மிக அருமை கதிர் அண்ணா.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் கவிதை ரொம்பப் பிடித்து இருக்கிறது கதிர்..

ஜெகநாதன் said...

பால்யம் மணக்கிறது இரு கவிதைகளிலும். வாழ்த்துகள் கதிர்!

உயிரோடை said...

இர‌ண்டும் அருமை

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Romeo

நன்றி @@ பாலாசி

நன்றி @@ பா.ரா

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ பிரேமா மகள்

நன்றி @@ rohini

நன்றி @@ அருணா மேடம்

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ நிலா

நன்றி @@ ராஜி(இய‌ற்கை)

நன்றி @@ முகிலன்
(அதுல நாம கொஞ்சம் பிரபலம்ங்க)

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ ஜீயெஸ்கே

நன்றி @@ சங்கர்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ சரவணக்குமார்

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ ஜெகநாதன்

நன்றி @@ உயிரோடை

நன்றி @@ உழவன்

சி. கருணாகரசு said...

வாசனை உயிரோட்டமான உணர்வுள்ள கவிதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு