மௌனமாய்த் தேடுகிறேன்




இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கான
வெப்பத்தை நானே தேடுவேன்

போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்

நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்

மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டி
உன் கைகள் நீளமுடியாத தொலைவில்
தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய்

துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறது
அள்ளியெடுக்க நீ இல்லாமல்
பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறி
மனதில் மலையாய் குவிந்த காதல்

நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்
ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்
அடையாளம் சிதைந்த என்னை....

___________________________________________

34 comments:

vasu balaji said...

மிக மிக மெல்லிய உணர்வில் கனமான வலி சொல்லும் வரிகள். ஏங்கித் தவிக்கும் ஊமை வலிகள். இயலாமையின் பிரயத்தனம்.
classic.

கலகலப்ரியா said...

அடடா... அருமை கதிர்..! பிரம்மாதம்.. போங்க..!

க.பாலாசி said...

//போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்//

ஆமாங்க...அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க...என்னா குளிரு...

ஆமா...இதெல்லாம் நாஞ்சொல்லவேண்டியதுல்ல...

என்னமோ நடக்குது....மர்மமா இருக்குது....ஒண்ணுமே புரியல உலகத்திலே.....

//நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்//

வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?

//தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய்//

அடடா...அருமை...

எல்லாத்தையும் எடுத்துப்போட்டா மத்தவங்க என்னசொல்லுவாங்க...அதனால.....மிக ரசித்தேன்...

sathishsangkavi.blogspot.com said...

//நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்//

ஆழமான அழகான வரிகள்...

CS. Mohan Kumar said...

கமெண்ட் ஏதும் வரலை.. ஆனா ஓட்டு மட்டும் பத்து விழுந்திருக்கு எப்படி கதிர் அது?

ரோகிணிசிவா said...

நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்.....


உன்னத வரிகள்,கதிர்,...
அது சரி,ஈரோடு ல அவ்ளாவ் குளிரா சொல்லவேயில்லை........

பழமைபேசி said...

மாப்புவோட வலிமையின் வெளிப்பாடு!

மாதேவி said...

மெளனமாய் தேடும் விடியல் அருமை.

Paleo God said...

எனக்கென்னமோ ஆறு கவிதைகளும் ஒன்றாய் எழுதிவிட்டீங்களோன்னு தோணுது..

நான் தனி தனியா தான் படிச்சேன்.. அருமை..:))

ரோகிணிசிவா said...

மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டி
உன் கைகள் நீளமுடியாத தொலைவில்
தன்னந்தனியாய் வாடுகிறேன்
-அப்படி காட்ல போய் யார் இருக்க சொன்னா,அப்புறம் குளுருது,மழைபெய்யுதுணா என்ன பண்ண முடியும் ?

நர்சிம் said...

தலைப்புதான் பதில்.. தேடிக்கிட்டே இருக்கவேண்டியது தான் கதிர்.

வெள்ளிநிலா said...

மெருகேருகிறதே..!!

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

தாராபுரத்தான் said...

என்னமோ பண்னுது ,,ஒண்னுமே புரியலே.

Unknown said...

அருமைய்யா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தனிமையின் வலியை அழகாக வடித்துள்ளீர்கள். கதிர்..

செ.சரவணக்குமார் said...

அற்புதம் கதிர் அண்ணா.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமான வார்த்தைகளின் வழியே இதயத்தின் வலி கசிந்தோடுகிறது நண்பா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்
ஊமை வலிகள்... ஆமாம்

நன்றி @@ கலகலப்ரியா
அப்படியா!

நன்றி @@ க.பாலாசி
தம்பி சாக்ஸ் போட்டுக்கிட்டு தூங்கு ராசா

//வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?//
வீட்டுக்காரப்பாவ பத்தி அம்மா எழுதுனது பாலாசி

நன்றி @@ Sangkavi

நன்றி @@ மோகன் குமார்
கொசுத்தொல்லையால பின்னூட்ட மட்டறுத்தல் இருக்குங்க..

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ rohinisiva
ஈரோட்ல மட்டுமா குளிர்....
உங்க ஊர்ல குளிர் கொல்லுதுன்னு டிவில சொன்னாங்க


நன்றி @@ பழமைபேசி
இஃகிஃகி

நன்றி @@ மாதேவி
ஆஹா!

நன்றி @@ ஷங்கர்
அட...இது எனக்குத் தோணம போச்சே

நன்றி @@ நர்சிம்
சரிதான்

நன்றி @@ வெள்ளிநிலா

நன்றி @@ இய‌ற்கை
ஏன் ராஜி! பல்லைக் கடிக்கறீங்க

நன்றி @@ தாராபுரத்தான்
அண்ணா.. வாங்க இது சின்னப்புள்ளைக சமாச்சாரம்

நன்றி @@ முகிலன்
ஆஹா!

நன்றி @@ ச.செந்தில்வேலன்
தனிமையே வலிதானுங்க

நன்றி @@ செ.சரவணக்குமார்

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
ஆஹா.. பின்னூட்டம் கவிதையா இருக்கே

MJV said...

//நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்// - நல்ல உணர்வுப்பூர்வமான வரிகள். நல்ல வலியுணர்த்தும் வரிகள்., அனுபவமாய் இருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, இந்த பின்னூட்டம் இடுகிறேன். அற்புதமான கவிதை கதிர்.....

ஹேமா said...

முழுமையான ரசனையோடு ஒரு கவிதை.மெல்லிய பாராமாய் மனம்.

நிலாமதி said...

நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட..... வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய் தன்னந்தனியாய் வாடுகிறேன்.

ஊமை வலிகள்.

புலவன் புலிகேசி said...

//போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்//

அருமையா காதல் வலி சொட்ட சொட்ட சொல்லிருக்கீங்க நண்பா..

Sanjai Gandhi said...

நல்ல கவிதை.. நல்ல கவிதை

Kumky said...

சிங்கத்துக்கு வயசாகிருச்சுடோய்......

ஆ.ஞானசேகரன் said...

அருமையான வரிகள் கதிர்...

அடியே ராசாத்தி said...

தோற்ற காதலில் வலி மிக அதிகம். அதை உணர்வு பூர்வமாய் எழுதியிருக்கிறீர்கள்.

(அது சரி, அந்த ஆன்டி-யின் பெயரை சொல்ல வில்லையே?

.

பிரேமா மகள் said...

அங்கிள் அங்கிள், இன்னும் இது மாதிரி நிறைய லவ் பெயிலியர் கதை சொல்லுவீங்களா?

பனித்துளி சங்கர் said...

தோற்ற காதலில் வலி இங்கு வார்த்தைகளாக வந்துள்ளது . அற்புதம் வாழ்த்துக்கள் !

Deepa said...

நல்லா இருக்கு. குறிப்பாகக் கடைசி நான்கு வரிகள் ரொம்ப.

Anonymous said...

மெளனமாய் தேடியதில் மெல்லமாய் பேசியது மெளனம்....எப்படிங்க இப்படியெல்லாம் எழுதமுடியுது மன உணர்வுகளை..

ராகவன் said...

அன்பு கதிர்,

எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட நாட்காளாகி விட்டது, உங்களுக்கு பின்னூட்டம் எழுதி...

அழகான கவிதை, வலியில் அரற்றும் குரலின் தொனியை உங்களுடையது என்று பிரிக்க முடியவில்லை, எல்லோருக்கும் வாய்க்கிறது இது மாதிரி ஒரு காதலும், அதன் பின்னும்.

வாழ்த்துக்கள்,

அன்புடன்
ராகவன்

ராமநாதன் said...

சார் நான் உங்க எல்லா இடுகைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் புதிய இடுகை ஏதேனும் இருக்கிறதா என பார்த்து, இல்லை என்றால் மிகவும் ஏமாற்றம் அடைந்து போகிறேன். சார் தயவு செய்து 2 நாளுக்கு 1 முறையாவது எழுதவும். அன்புடன் ராமநாதன்

Unknown said...

சொல்லில் அடங்காத தனிமையின் வலியை சொல்லால் செதுக்கி இருக்கீங்க....