கடிதம் எழுதி எத்தனை நாள் இருக்கும்?
.... ம்ஹூம்....... சத்தியமாய் மறந்துவிட்டது. ஏன் இப்போதெல்லாம் கடிதமே எழுதவே முடிவதில்லை.....
அது ஒரு காலம்......பையன் படித்து பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கையோடு (மூட நம்பிக்கைக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்) எங்கப்பா என்னை உடுமலைப்பேட்டை அருகே கரட்டு மடத்தில் உள்ள காந்தி கலா நிலையம் ஹாஸ்டலில் தங்க வைச்சு படிக்க வைச்சாரு..... அப்போவெல்லாம் இப்போ மாதிரி செல் போன் கிடையாது, ஒரே ஒரு கருப்பு போன் வார்டன் ரூம் ஜன்னல் பக்கம் இருக்கும்...... நெருங்கின சொந்தத்திலே யாராவது செத்துட்டா மட்டும் அந்த போனுக்கு தகவல் வரும், அதுவும் பியூன் தான் சொல்லுவார்.....
மற்றபடி பதினைந்து நாளுக்கு ஒருமுறைதான் அப்பாவிடம் இருந்து கடிதம் வரும். அன்புள்ள மகனுக்கு அப்பா எழுவது என்று ஆரம்பிக்கும்..... என்ன செய்வது நமக்கெல்லாம் கடிதம் எழுதுவதற்கென்றே "நலம் நலம் அறிய ஆவல்" என்ற பார்முலா உண்டு...... அதுவும் அப்படிதான் ஆரம்பித்து, வீட்டில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டுக்காரர், கொஞ்சம் தூரத்து உறவு ஆகியோர் நலம், மழை பெய்த விபரம், தோட்டத்தில் நடந்த அறுவடை, விதைப்பு பற்றி கொட்டை எழுத்தில் கடிதம் முழுவதும் வரிகளாக நிறைந்து இருக்கும்.... கடைசியாக "நன்றாக படிக்கவும், உடம்பை பார்த்துக்கொள்ளவும்" போல் இருக்கும்.....
சிலசமயம் ஹாஸ்டல் வார்டன் பிரித்து படிக்கும் ஆபத்தும் உண்டு. எனவே சம்பிராதய வரிகள் தான் அதிகம் இருக்கும். பெரும்பாலும் எல்லா கடிதங்களுமே மேலே சொன்ன மாதிரி தான் இருக்கும்..... ஆனாலும் ஒவ்வொரு கடிதமும் இனம் புரியாத சிலிர்ப்பினை மனதில் உருவாக்கியது சத்தியம்..... கடிதம் இன்றைக்கு வந்து விடாதா என்று சில நேரம் ஏக்கமாக இருக்கும்.
வகுப்பு முடிந்து விடுதிக்கு வரும்போது முன்பக்க பலகையில் அன்று வந்த கடிதங்கள் சொருகப்பட்டிருக்கும், போகிற போக்கில் "டேய் உனக்கு லட்டர்" என்ற குரல் கேட்கும்..... உடனே மனசு மத்தாப்பு போல பூக்கும்..... நீல நிற இன்லேன்ட் லட்டர் தபால் பலகையில் செருகப்பட்டிருக்கும்... கடிதத்தை எடுக்கும் போதே மனசு சிலிர்க்கும்.... முகவரி பகுதியில் அப்பாவின் கையெழுத்து அழுத்தமாக, அடர்த்தியாக தெரியும்..... மனசு பட்டாம் பூச்சியாய் குதூகலிக்கும்....
ஒட்டிய பகுதியை விரல் வேகமாய் பிரிக்கும்....ஒரே மூச்சில் படித்தால்தான் நிம்மதி. ஆனால் வரிகள் வழக்கமாகவே இருக்கும்..... லேசாக சப்பென்றிருக்கும்... என்ன செய்வது... நம்ம அப்பா என்ன ஜவஹர்லால் நேருவா..... கடிதம் எழுதுவதில் நிபுணத்துவம் காண்பிக்க.....ஆனாலும் முறையாக வெளிப்படுத்தத் தெரியாவிட்டாலும், ஒவ்வொரு வார்த்தையும் அன்பையும், அக்கறையையும் அற்புதமாக காட்டிக்கொடுக்கும்...உடனே பதிலுக்கு ஒரு கடிதம் எழுதாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.....(ஏங்க இதுவரைக்கும் யாருக்காவது மண்டை வெடித்திருக்கிறதா?). ஹாஸ்டல் ரூமில் கடிதம் எழுதுவதே பெரிய தவமாக நடக்கும். பெரும்பாலும் சுவர் பக்கம் பார்த்து உட்கார்ந்துதான் எழுதுவது வழக்கம். கடிதம் எழுதும் வரை அப்பா அம்மாவுடன் பேசுவது போன்றே ஒரு உணர்வு மனது முழுதும் ஆட்டிப்படைக்கும்.
கசங்கி கிழியும் வரை சட்டைப்பைக்குளேயே கடிதம் கிடக்கும். இரண்டு நாட்களில் கடிதத்தின் பாதிப்பு பெரிதும் குறையும்....ஒவ்வொரு 15 நாள்களுக்கொரு முறையும் கடிதம் வருவதும், போவதும் வழக்கமாய் நடக்கும்....
காலம் நகர நகர நானும் வளர்ந்தேன்.... ஹாஸ்டல் லைப் முடிந்தது. கடிதம் தேய்ந்தது..... டெலிபோன் வந்தது, கேபிள் டிவி வந்தது...... கடைசியாய் செல்போன் வந்தது..... காலப்போக்கில் கடிதத்தில் ஒளிந்திருந்த கண்ணுக்கு தெரியாத பாசமும் தேய்ந்தது......
................................................ நானும் எப்படியாவது ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்.......
குறிப்பு: மீள் இடுகை
-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
38 comments:
//உடனே பதிலுக்கு ஒரு கடிதம் எழுதாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.....(ஏங்க இதுவரைக்கும் யாருக்காவது மண்டை வெடித்திருக்கிறதா?)//
ப்ச்....இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. நான் விடுதியில் தங்கி படிக்கவில்லை.
//கடிதம் எழுதும் வரை அப்பா அம்மாவுடன் பேசுவது போன்றே ஒரு உணர்வு மனது முழுதும் ஆட்டிப்படைக்கும்.//
இதுவரையில் எனது அப்பா அம்மாவிற்கு கடிதம் எழுதியதில்லை. (இப்போதுதான் நினைத்துப்பார்க்கிறேன்)
நான் வளர்ந்து படிச்சு முடிச்சி வேலைக்கு போறதுக்குள்ள எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு காரர் தொலைப்பேசி இணைப்பு வாங்கிட்டார். அவருக்கு என்ன அவசரமோ. ஆனா பயன்படுத்துனது நாங்கதான்.
அதுக்கப்புறம் செல்லிடபேசியும் வந்துட்டுது. அப்பறம் என்ன பேச்சிலேயே உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறோம்.
//நானும் எப்படியாவது ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்....... //
எங்கம்மா இப்ப இந்த வேலையதான் செய்றாங்க... தினமும் பேசினாலும்.
உங்கள் இடுகையால்...நான் எதிர் வீட்டு அக்காவுக்காக அவங்க வெளிநாட்டுக்கார புருஷனுக்கு எழுதின கடிதங்கள்தான் ஞாபகம் வருகிறது.
உண்மையில் கடிதங்களை படித்து பார்க்க இருக்கும் ஆர்வம், தொலைபேசியில் பேசுவதினால் கிடைப்பதில்லை.
//காலப்போக்கில் கடிதத்தில் ஒளிந்திருந்த கண்ணுக்கு தெரியாத பாசமும் தேய்ந்தது......//
அழகான பகிர்வு நண்பா
அருமை கதிர். எல்லாம் நேரக்கொடுங்க.
கல்லூரி, பள்ளி விடுதிகளென்றால் சொல்ல வேண்டியதில்லை. கடிதங்களை மட்டுமா நாம் இழந்திருக்கிறோம், நம் கையெழுத்தையும் தான்.
மூன்றாவது வரை மட்டுமே படித்த என் தாத்தாவின் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அவரது கடிதங்களை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
நல்ல நினைவுகூறல் :)
ரசித்தேன்! நல்லதொரு இடுகை!! இப்போல்லாம் ஒரு எஸ் எம் எஸ் இல்லேன்னா அழைப்பு...மெயில்...தான்! அப்படியே வந்தாலும் குரியர்லே டாக்குமெண்ட்ஸ்தான்! ஹ்ம்ம்..நினைவுகளை கிளப்பிவிட்டது தங்கள் இடுகை!!
சோகம்தான்.
அருமை கதிர். எனக்கும் அப்பாவிடமிருந்து கடிதத்துக்கு வாய்ப்பில்லை. ஆனால், அழகழகான அவரின் கையெழுத்து எத்தனை நாள் தடவிப் பார்த்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறேன். ஆனால் ஒரு வருடம் ஹாசன் அருகில் வேலை செய்ய நேர்ந்து அம்மாவுக்கு கடிதம் எழுதி இப்படி ஏங்கி இருக்கிறேன்.
கதிர்...
இன்று ஒரளவிற்கு எழுத படிக்க ஆர்மாயிருப்பதன் காரணமே சிறு வயதில் கடிதங்களில் பேசியதால்தான். நீங்கள் கூறுவது போல், கடிதம் எழுதுவது என்பது வழக்கொழிந்த ஒன்றாய் ஆகிவிட்டது. அருமையான பதிவு கதிர்...
பிரபாகர்.
ஆமாம் கதிர்,இதுவும் நம் இழப்புகளில் ஒன்று.நானும் இங்கு வந்த புதிதில் தொலைபேசிக் கண்டணங்கள் அதிகமாதலால் கட்டுக் கட்டாய்க் கடிதங்கள்தான்.சேமித்து வைத்திருக்கிறேன்.
அப்பா நிறைவாய் எழுதுவார்.அம்மா அதற்குக் கீழே என் செல்வத்துக்கு என்று நாலு வரியிலாயினும்...
இப்போ இல்லவே இல்லை
யென்றாகிவிட்டது.அப்பாவிடம் கேட்டு ஒரு கடிதம் கேட்டு வாங்கி அதை ஆல்பத்தில் போட்டு வைத்திருக்கிறேன்.
//அது ஒரு காலம்......பையன் படித்து பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கையோடு (மூட நம்பிக்கைக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்) //
ச்சே ச்சே.. மூட நம்பிக்கை என்று மரியாதைக் குறைவாகச் சொல்லலாகாது.. அது வெறும் கனவு சாமியோ..
//வீட்டில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டுக்காரர், கொஞ்சம் தூரத்து உறவு ஆகியோர் நலம்//
அவங்க எல்லாம் ரொம்ப கிரேட்..
//காலம் நகர நகர நானும் வளர்ந்தேன்//
அட..
// நானும் எப்படியாவது ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்.......//
நல்ல சாக்கு.. ஒரு இடுகை எழுதறாப்ல எழுதி.. இங்கயும் போட்டு அப்பாவுக்கும் அனுப்ப வேண்டியதுதானே.. மிஸ்ட் கால் தானே.. கை இல்லையே.. போன்ல பேசிக்கிட்டே கூட எழுதலாமே.. யாரு கிட்ட.. எஸ்கேப்பு...
நன்றி @@ பாலாஜி
(பேச்சிலே உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கும், எழுத்தில் பகிர்ந்து கொள்வதற்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கிறது.
ஓ... உங்க அம்மாவும் மிஸ்டுகால் தான் கொடுக்கிறாங்களா)
நன்றி @@ ஞானசேகரன்
நன்றி @@ செந்தில்
(ஆமாங்க... கையெழுத்தையெல்லாம் நானும் சுத்தமாக தொலைத்துவிட்டேன்)
நன்றி @@ சந்தனமுல்லை
(குரியர் வந்தாலும் வாங்கி உடனே பிரிக்கும் ஆர்வம் இப்பொது இருப்பதில்லைங்க, என்ன வரும் என்பதும் நமக்கு தெரிந்தேயிருக்கிறது )
நன்றி @@ மாதவராஜ்
(ஆமாங்க, சோகம் என்பதைவிட ஏக்கம்)
நன்றி @@ வானம்பாடிகள்
(பார்த்தீங்களா..பார்த்தீங்களா..நீங்களும்
ஏங்கியிருக்கீங்க தானே)
நன்றி @@ பிரபாகர்
(நிறைய வழக்கொழிந்து போச்சு போங்க)
நன்றி @@ ஹேமா
(சேமித்து வைத்திருக்கும் கடிதங்களுக்கு ஆயிரம் ஆயிரம் கதைகள் ஒளிந்திருக்குமே)
//அப்பா நிறைவாய் எழுதுவார்.அம்மா அதற்குக் கீழே என் செல்வத்துக்கு என்று நாலு வரியிலாயினும்...//
ச்சோ...ஸ்வீட்
நன்றி @@ கலகலப்ரியா
//மிஸ்ட் கால் தானே.. கை இல்லையே.. போன்ல பேசிக்கிட்டே கூட எழுதலாமே.. யாரு கிட்ட.. எஸ்கேப்பு...//
(வாங்க பிரியா, நேத்துதான் உங்க லகலக எழுத்து பற்றி பிரபாகரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பார்த்தீங்களா நான் சொன்னமாதிரியே இன்னிக்கு பின்னி எடுத்துட்டீங்க என்னை)
கடுதாசி நல்லாயிருக்குங்க
ஊருக்குப் போறதுன்னா, அப்பா கையெழுத்து போட்டா மாதிரி கள்ளக் கடிதம் எழுதுவமே, அதைச் சொல்லலை?!
ச்சிட்டி ஆயிஹே....
ஆயிஹே.......ச்சிட்டி ஆயிஹே...
சூப்பர் கதிர்.....
நானும் எங்கப்பாவுக்கு கடுதாசு எழுதியிருக்கேன்...எப்புடின்னா
அப்பாவுக்கு,
நலம், நலத்துக்கு பணம், உடன் அனுப்பவும்.
ஆரூரன்.
இனிஷியலக்கூட போடமாட்டேன்றான் இவனயெல்லாம் படிக்கவச்சு....ன்னு திட்டிகிட்டே படிக்க வச்சாருன்னு வச்சுங்கோங்க..
ம்ம்....அதெல்லாம் ஒரு காலம்....
//................................................ நானும் எப்படியாவது ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம்.... அப்பா மிஸ்டு கால் கொடுத்து விடுகிறார்.......//
இது அதவுட சூப்பருங்கோ....
//காலப்போக்கில் கடிதத்தில் ஒளிந்திருந்த கண்ணுக்கு தெரியாத பாசமும் தேய்ந்தது......//
உண்மைதான் நண்பரே!
நல்ல இடுகை .கடிதம் எழுதும் வழக்கம் முற்றிலுமாக குறைந்து விட்டது வருந்தக் கூடிய விஷயம்தான்.
என் அப்பாவின் ஞாபகமாய் ஒரு கடிதம் இன்றும் என்போடோ அல்பத்தில் அவரின் படத்துக்கு பின் ஒளிந்து இருக்கிறது அவரின் அவரின் கை எழுத்துடன். மீண்டும் தொலைந்து போன காலத்தை நினைக்க வைத்ததில் உங்களுக்கு நன்றி .........
//(வாங்க பிரியா, நேத்துதான் உங்க லகலக எழுத்து பற்றி பிரபாகரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பார்த்தீங்களா நான் சொன்னமாதிரியே இன்னிக்கு பின்னி எடுத்துட்டீங்க என்னை)//
ஓஹோ.. இது வேறயா.. நல்லா பொழுது போகுதுன்னு சொல்லுங்க..
நடக்கட்டு நடக்கட்டு.. நம்மாளுங்களுக்கு நான் இடுகை போடுறதே தெரியாது.. நீங்க ஊரெல்லாம் இடுகை பரப்பிட்டிருக்கீங்க.. வாழ்க உங்கள் தொண்டு..
படிச்ச பிறகு மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குண்ணே..
நெகிழ்ச்சியா இருக்கு கதிர்...
எங்க பக்கத்தூட்டுக்காராரு டெல்லில(10 வருசத்துக்கு முன்னாடி) இருந்தாரு, அவருக்கு எழுதின கடுதாசியெல்லாம் நினைவுக்கு வருது..
ஒவ்வொரு கடிதத்திலும் ஒரு துணுக்கு(டிஸ்கி) எழுதியனுப்புவோம்..
ஹும், எல்லோரும் கடிதம் எழுதிய.. பெற்ற.. பொற்காலங்களை, அந்த அற்புத உணர்வுகளைத் தொலைத்து விட்டு பொட்டியைத் தட்டிக் கொண்டிருக்கிறோம். அருமையான பதிவு.
கடிதங்கள் மனதைச் சுமந்து சென்றதெல்லாம் ஒரு காலம், தொழில் நுட்பங்கள் நம் மனதை எந்திரமயமாக்கி விட்டன.
கண்ணகி ,திருப்பூர்
// காலம் நகர நகர நானும் வளர்ந்தேன்.... ஹாஸ்டல் லைப் முடிந்தது. கடிதம் தேய்ந்தது..... டெலிபோன் வந்தது, கேபிள் டிவி வந்தது...... கடைசியாய் செல்போன் வந்தது..... காலப்போக்கில் கடிதத்தில் ஒளிந்திருந்த கண்ணுக்கு தெரியாத பாசமும் தேய்ந்தது.....//
சத்தியமான வார்த்தைகள் நாகரிகம் வளர வளர வசதிகளும் கூடக் கூடக் உறவுமுறைகளுக்கான பாசமும் குறைகின்றது. தேவைகளின் அடிப்படையில் வளர்ந்த பந்தங்களும் நட்புக்களும் கூட குறைந்துவிடுகின்றன.
ரசித்துப்படித்த பதிவு.
ஒரு கம்பியை வளைத்து அதில், வருகின்ற கடிதங்களை படித்தவுடன் சொருகி வைப்பதும் அது சேர்ந்துபேவதும்...
ஹும்.
நன்றி @@ Ashok
நன்றி @@ பழமை
(மாப்பு, மடத்துகுளத்துகாரர்தானுங்க வார்டன் கண்டு பிடிச்சா தோல உறிச்சிப்பிடுவாரு, அதனால பயம்ங்க)
நன்றி @@ ஆரூரன்
(அப்பா காசு அனுப்பிச்சாருங்களா)
நன்றி @@ தேவன் மாயம்
நன்றி @@ ஸ்ரீ
(இது போல் இழந்தது நிறைய இருக்குங்க)
நன்றி @@ நிலா
(அருமை)
ப்ரியா
(ஏதோ நம்மாள முடிஞ்சது)
நன்றி @@ அவிய்ங்க ராசா
நன்றி @@ வசந்த்
நன்றி @@ பட்டிக்காட்டான்
(ஓ. கடிதத்திலேயே டிஸ்கியா!!)
நன்றி @@ ராமலக்ஷ்மி
(வேற என்னங்க பண்றது, இந்த பொட்டியெல்லாம் வந்ததினாலதான் கடிதமே இல்லை)
நன்றி @@ vattukozhi
நன்றி @@ பித்தனின் வாக்கு
(மிகச் சரியாக சொன்னீர்கள்)
நன்றி @@ நர்சிம்
//அது சேர்ந்துபோவதும்...//
(ஆஹா.. அற்புதமான நினைவூட்டல்)
அருமையான ஒரு கொசுவர்த்தி இடுகையின் மூலம் நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். :-)
கடிதமெல்லாம் நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் தல!
நன்றி @@ உழவன்
நன்றி @@ வால்பையன்
(மகிழ்ச்சி)
மனதுக்கு இதமான நிறைய சந்தோஷங்களை இப்படி நாகரீக வளர்ச்சியால் இழந்தோம் என்பதை மறுக்கமுடியாது தான்....
”மிஸ்டு கால்” அப்பாதான் எனக்கில்லை.
எனக்கும் உங்களுக்கிருக்கும் ஏக்கம் வருவதுண்டு.
நன்றி @@ தமிழ்
நன்றி @@ செல்வகுமார்
உங்களுக்கு விருது இங்கே!
http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html
தாளில் நிரப்பப்பட்ட எழுத்துக்கள்...என் அம்மாவின் எழுத்துக்கள்..
அம்மா நினைவு வரும்போதெல்லாம் எடுத்து படிப்பேன். சரியாக படிக்கும் நேரமெல்லாம் அம்மாவிடமிருந்து போன் (டெலிபதியோ ?) . "கண்ணு நாளைக்கு நாங்கலாம் திருப்பதி போறோம்". "கண்ணு நாளைக்கு விழுப்புரத்துல கல்யாணத்துக்கு போறோம்.."
அற்புதமான பதிவுங்க கதிர்
முல்லை குடுத்த விருதுல இருந்து படிச்சேன்.
Fantastic..
Post a Comment