நாங்க யாருன்னு...

அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ஒரு வருடம் தமிழகம் முழுதும் இருக்கும் மகளிர் காவல் துறையினர்க்கு பயிற்சி வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மகளிர் காவல் பிரிவினர், அதாவது கிரேட் 1, 2 காவலர்கள், எழுத்தர், தலைமைக் காவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களில் எல்லா நிலைகளிலும் இருந்து சுமார் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டனர்.

அதற்காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் வகுப்பெடுக்க வருவது வழக்கம். அப்படி ஒரு புதன்கிழமை, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வரிடம் பயிற்சி அறையின் இருக்கைகளை வேறு மாதிரி அமைத்துத் தருமாறு கேட்டோம்.

அடுத்த சில நிமிடங்களில் காக்கி அரைக்கால் சட்டையும், வெள்ளை பனியனுமாய் சில இளைஞர்கள் தடதடத்து வந்தனர். பரபரவென நாற்காலிகளை அகற்றி, மற்றொரு அறையில் இருந்து வேறு விதமான நாற்காலிகளை போட்டு நாங்கள் கேட்ட மாதிரி அமைத்துக் கொடுத்தனர்.

அந்த இளைஞர்களில் ஒரு முகம் மிகப் பழகியதாக இருந்தது. ஒட்ட வெட்டப் பட்ட முடி, பனியன், அரைக்கால் சட்டை என சட்டென அடையாளம் தெரியவில்லை. நான் உற்றுப் பார்த்த போது என்னைப் பார்த்து புன்னகைத்தார் அவர், நானும் புன்னகைத்தேன்.

சற்று நெருங்கி வந்து “என்னடா... மாப்ள, தெரியலையா?” என்ற போது

தெரிந்து விட்டது அது... அவன்... குமணன். நன்கு பழக்கப்பட்ட நண்பன். ஆனால் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்கும், அதே சமயம் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“ஏய் குமணனா... என்னடா இங்க... ட்ரெயினிங்லே இருக்கியா?”

“எஸ்.ஐ ட்ரெயினிங்ல இருக்கேன்டா மாப்ள” என்றான்.

அந்த இருக்கைகளை எடுத்துப் போட்டவர்கள் அனைவரும் உதவி ஆய்வாளருக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பவர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது,,

பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடி விட்டு கிளம்பும் போது உதிர்த்த வார்த்தைகள் தான் என்னவோ செய்தது.

“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...

மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.

29 comments:

வானம்பாடிகள் said...

/அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். /

இது தெரியாதே.

/நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” /

அரசியல் வாதி நாங்களும் ஆச்சிய புடிப்பம்ல. அப்ப நாங்க காட்டுவம்லங்கறதும் இப்படித்தானோ?

/மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது./

இதும் சரிதான்.

இராகவன் நைஜிரியா said...

// “என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...//

பதவியில் முறையாக சேரும் முன்னறே யாருன்னு காட்டணும் அப்படி நினைப்பு இருந்தா, பதவியில் வந்தவுடன் இவங்க என்ன செய்வாங்கன்னு புரியவேயில்லை.

உங்க பயிற்சியில் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கமாட்டாங்களா?

அண்ணன் வானம்பாடிகள் சொன்ன மாதிரி, அரசியல்வியாதிகளும் இப்படித்தான் சொல்லி திரிகின்றனர்.

அகல் விளக்கு said...

//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...//

என் நண்பன் ஒருவனும் டிரெயினிங் போவதற்கு முன்னால் அவனுக்கும டீ கடைக்காரருக்கும் நடந்த 'சில்லரையில்லை' சண்டையில் 'டியூட்டில சேர்ந்தப்புறம் பாருடா?' ன்னு ஒரு வார்த்தை விட்டான்.

க.பாலாசி said...

//அந்த இருக்கைகளை எடுத்துப் போட்டவர்கள் அனைவரும் உதவி ஆய்வாளருக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பவர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது,,//

பயிற்சியின் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான். என் நண்பன் ஒருவனும் என்னிடம் இதைப்போன்ற ’பயிற்சிகள்’ நடக்குமென்பதை சொல்லியிருக்கிறான்.

//நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” //

காலேஜ்ல பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ஸ்லாம் இப்டித்தான் நெனைச்சிகிட்டு இருப்பாங்க. அடுத்தவருசம் வருட்டும்டா....நாமளும் ஒரு கை பாக்கலாம்னு.

தேவன் மாயம் said...

/நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” /

இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் !! பொதுமக்களுக்கு அடி உதை!!

காமராஜ் said...

கடைசிவரை புரியவில்லை என்ன சொல்லவர்ராருன்னு,
முடித்த பிறகுதான் தெரிந்தது,... கதிர் க்ரேட்.
எதையும் உங்கள் டச்சோடு கடந்துபோகும்
கம்பீரம் இருக்கிறது. ரொம்ப ரொம்ப ரசித்தேன்.

நிகழ்காலத்தில்... said...

அடக்கப்பட்டது வெடித்தே தீரும் :))

வாழ்த்துக்கள் கதிர்..

பின்னோக்கி said...

//அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில்

அட..எங்க வீட்டுக்கு பின்னாடிதான் இருக்கு இது..

பயிற்சிகள் வன்மத்தை ஏற்படுத்துவது தவறு. அவர்களை கடினமான மனிதர்களாக ஆக்குவது பணிபுரியும் போது கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகத்தான்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கதிர்.. நீங்க சகலகலா வல்லவரா இருப்பீங்க போல..

நல்ல அனுபவப் பகிர்வு :)

கலகலப்ரியா said...

அப்போ நீங்க போலிஸா... ஐயோ நான் இல்ல... எதாவது தப்பா கிப்பா கலாய்ச்சிருந்தா மன்னிச்சிருங்க... மனசில ஒண்ணும் வச்சுக்கிடாதீய... யப்பே.. இதேது வம்பால்ல போச்சு... அப்புறம் அடுத்த இடுகைல நீங்க ஜெயா அம்மா செக்ரட்டரின்னு.. சொன்னா.. நாம என்ன பண்றது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பிரியமுடன்...வசந்த் said...

அமைதிப்படை படம் சத்யராஜ் மாதிரின்னு சொல்லுங்க.....

seemangani said...

/நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” /

''தவிர்க்க முடியாததாகிறது''...


அருமையான பகிர்வு அண்ணே...யோசிக்கணும்...

velji said...

police psychology!

the system exists as in british period.it needs refinement.rulers won't do any thing as they treat the department as servants.

till then kumanans would act like this and the last link, people will get affected.

your post regiters a real consern!

பிரபாகர் said...

பணிவு பம்முதல் எல்லாம் காரியம் ஆகும்வரைதான் கதிர். அதனால்தான் இன்னமும்...

என் நண்பரிடமிருந்து மற்றுமோர் நல்ல இடுகை.

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

//அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ஒரு வருடம் தமிழகம் முழுதும் இருக்கும் மகளிர் காவல் துறையினர்க்கு பயிற்சி வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.//

வணக்கம் கதிர்...

ஆ.ஞானசேகரன் said...

//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்..//


மிக எதார்தம்

ஷண்முகப்ரியன் said...

இது மனித இயல்புதானே,கதிர்.
மற்றவர்கள் மட்டும் மகாத்மாக்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நமது இயல்பைப் போல.

மாதவராஜ் said...

:-))))

புலவன் புலிகேசி said...

//“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல”//

இப்பிடித்தான் பலக்காவலர்கள் திரிகிறார்கள். என் நண்பன் ஒருவனும் சமீபத்தில் தான் எஸ். ஐ ட்ரய்னிங் முடித்தவன். அவன் ஒவ்வொரு முறையும் என்னை இனிமே எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறான்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் காவலராவதில்லை. இன்றைய நாட்களில்....

ஸ்ரீ said...

நல்ல இடுகை .

சி. கருணாகரசு said...

மிகக் கடுமையான காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது, கேள்விப்படும் போது ஏனோ குமணன் என் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.//

நினைவு பெட்டகம் நல்லயிருக்குங்க கதிரண்னா.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு கதிர்!மனசுக்கு நெருக்கமாகிகொண்டே இருக்கிறீர்கள்...ஒவ்வொரு அறையாக உடைத்துக்கொண்டு...உள் அறை நோக்கி!

நாஞ்சில் பிரதாப் said...

“என்னடா... இவன் சேர் எல்லாம் எடுத்துப் போடறானேனு நினைச்சியா, எப்படியிருந்தாலும் நாங்களும் எஸ்.ஐ யா டூட்டி ஜாயின் பண்ணிடுவோம்ல, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோம்ல” என்றான்...//

கதிர் அண்ணே,
காமராஜ் சொன்ன மாதிரி... அவரு என்ன அர்த்தத்துல சொன்னாருன்னு இன்னும் புரியல. நீங்க சொல்றீங்க, அவரு டுட்டில சேர்ந்தப்புறம் கண்டிப்பான அதிகாரியாக இருப்பாருன்னு, எனக்கு என்னவோ அவர் சொல்றது டுட்டில சேர்ந்தப்புறம் போலிஸ்கார புத்திய காண்பிக்கப்போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு.
மக்களுக்கு பாதுகாப்பு கிடைச்சா சர்தான்...

பகிர்வுக்கு நன்றிண்ணே...

பழமைபேசி said...

///அப்போது நான் சுயமுன்னேற்ற வகுப்பு பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். ///

சொல்லவே இல்லை! எங்களுக்குமு சேத்து வகுப்பு எடுங்க மாப்பு!!

கதிர் - ஈரோடு said...

@@ வானம்பாடிகள்
@@ இராகவன் நைஜிரியா
@@ அகல் விளக்கு
@@ க.பாலாசி
@@ தேவன் மாயம்
@@ காமராஜ்
@@ நிகழ்காலத்தில்
@@ பின்னோக்கி
@@ செந்தில்
@@ கலகலப்ரியா
@@ பிரியமுடன்...வசந்த்
@@ seemangani
@@ velji
@@ பிரபாகர்
@@ ஞானசேகரன்
@@ ஷண்முகப்ரியன்
@@ மாதவராஜ்
@@ புலவன் புலிகேசி
@@ ஸ்ரீ
@@ கருணாகரசு
@@ பா.ராஜாராம்
@@ நாஞ்சில் பிரதாப்
@@ பழமைபேசி

இனிய நண்பர்களே தங்கள்
பின்னூட்டங்களுக்கு நன்றி.

வி.என்.தங்கமணி, said...

பயிற்சியின் போது இப்படி தரக்குறைவாக நடத்தி மனதில் ரணம் ஏற்படுவதால் . பதவிக்கு வந்த பின் வக்கிரமாக நடக்கிறார்களோ !!!

கும்க்கி said...

கலகலப்ரியா said...

அப்போ நீங்க போலிஸா... ஐயோ நான் இல்ல... எதாவது தப்பா கிப்பா கலாய்ச்சிருந்தா மன்னிச்சிருங்க... மனசில ஒண்ணும் வச்சுக்கிடாதீய... யப்பே.. இதேது வம்பால்ல போச்சு... அப்புறம் அடுத்த இடுகைல நீங்க ஜெயா அம்மா செக்ரட்டரின்னு.. சொன்னா.. நாம என்ன பண்றது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


பதிவையும் பின்னூட்டங்களையும் லபக்கென முழுங்கிவிட்ட இந்த கலாய்ப்புக்கு ஒரு ரிப்பீட்........

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ வி.என்.தங்கமணி

நன்றி @@ கும்க்கி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லதொரு பகிர்வு கதிர்.!